தன்னுடைய வசீகரிக்கும் சிரிப்பால் புன்னகை அரசி என்று பெயர் பெற்றவர் நடிகை சினேகா.
‘புன்னகை அரசி’ என்றும் குடும்ப பாங்கான கதாபாத்திரங்ளுக்கு பொருத்தமானவர் என்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை சினேகா 2001 ஆம் ஆண்டு வெளியான என்னவளே என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.
அதன் பின்னர், விஜய், மாதவன், கமலஹாசன் என்று பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக மாறி விட்டார். இவர் தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு, உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கின்றார்.
பின்னர், நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்டார். நட்சத்திர தம்பதிகளாக தமிழ் திரையுலகில் இருவரும் வலம் வந்தனர். அதன் பின்னர், சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி இருக்கின்றார்.
அவரது உடல் எடை அதிகரித்தது. இவர்களுக்கு விஹான் என்ற ஆண்குழந்தை உள்ளது. திருமணத்துக்கு பிறகு கதாநாயகி வாய்ப்பு அமையாததால் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில், சிவகார்த்திகேயனுடன் ‘வேலைக்காரன்’ படத்தில் வந்தார். அதில், தான் நடித்த காட்சிகளை வெட்டி குறைத்து விட்டதாக அவர் அதிருப்தி வெளியிட்டது பரபரப்பானது.
இந்நிலையில் கடந்த வருடம் சினேகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. தங்களது 2-வது குழந்தைக்கு ஆத்யந்தா என்று பெயர் சூட்டியிருப்பதாக நடிகர் பிரசன்னா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
தற்போது, உடல் எடை குறைத்துள்ள சினேகா மீண்டும் ஒல்லியாகி சிக்கென மாறியுள்ளார். இந்நிலையில், உடலோடு ஒட்டிய மஞ்சள் நிற உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள்,, வயசு வெறும் நம்பர் தான் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வந்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகும் இப்படத்தை அனைவரும் பெரியளவில் எதிர்பார்த்து வருகின்றனர்.
மேலும் கொரோனா காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் இருந்து புதிய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியாகியுள்ளது, அதில் அருள்மொழிவர்மன் வடத்தில் ஜெயம் ரவி, குந்தவை தேவி வேடத்தில் த்ரிஷாவும் உள்ளனர்.
தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் தற்போது வரை நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது.
ஆம் தற்போது வரை இப்படம் இந்தியாவில் மட்டும் சுமார் 180 கோடியும், வெளிநாடுகளில் 42 கோடியும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் வெளிநாட்டு வசூல் மூலம் சுமார் 25 கோடி வரை லாபம் கிடைத்திருக்கும் என்கிறார்கள்.
அது மட்டுமின்றி படத்தின் சாட்டிலைட் உரிமம் மூலம் 30 கோடி, ஓடிடி தளங்கள் மற்றும் இணையதளங்கள் 50 கோடி, இசை மற்றும் மற்ற உரிமைகள் 5 கோடி கிடைக்க உள்ளதாக தெரிகிறது.
மொத்த வருமானம் 332 கோடி ரூபாயில் படத்தின் பட்ஜெட் 150 கோடி போக தியேட்டர் வருமானம், மேலே குறிப்பிட்ட மற்ற வருவாய் என 100 கோடி முதல் 120 கோடி வரை மாஸ்டர் படத்தின் வசூல் கண்டிப்பாகக் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
வர வர தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பெண் குழந்தைகள் தற்போது ஹீரோயின்களை மிஞ்சும் அளவுக்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் அனிகா, ராட்சசன் படத்தில் நடித்த அம்மு அபிராமி ஆகியோர் வரிசையில் தற்போது தனுஷ் ஸ்ருதிஹாசன் அடுத்த 3 படத்தில் ஸ்ருதிஹாசன் தங்கையாக நடித்த கேப்ரில்லாவும் சேர்ந்துள்ளார்.
இடையில், கொஞ்ச காலம் இதையெல்லாம் ஓரம் கட்டி வைத்து தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்திக் கொண்டு வருகிறார். இதனால் பல நாட்களாக சினிமா துறையில் இவர் காணாமல் போயிருந்தார்.
அவ்வப்போது டீசர்ட் ஜீன்ஸ் அணிந்துகொண்டு மிகவும் உணர்ச்சிபூர்வமாக புகைப்படங்களை வெளியிட்டு வந்த கேப்ரியலா தற்போது அதையும் மீறி கவர்ச்சியில் இறங்கியுள்ளார்.
அது என்னமோ தெரியவில்லை, இளம் பெண்களுக்கு மட்டும் எப்படி கரெக்டாக இடுப்பு வரை மட்டுமே மறைக்கும் டீசர்ட் கிடைத்ததோ தெரியவில்லை. குட்டியான கவர்ச்சி உடையில் தனது இடுப்பை காட்டி புகைப்படம் வெளியிட்டுள்ளார் கேப்ரியலா.
இருபது வயதிலேயே இப்படியா என அனைவருமே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தியுள்ளது அந்த புகைப்படம்.
கேப்ரியலாவும் கொஞ்சம் கொழுக் மொழுக் என இருப்பதால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.
இப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது, மேலும் கடந்த 29 ஆம் தேதி அமேசான் பிரைமில் மாஸ்டர் வெளியானது.
இந்நிலையில் இப்படம் வெளியாகி இத்தனை நாட்கள் ஆன பிறகும் கூட மாஸ்டர் குறித்து பலரும் பகிர்ந்து வருகின்றனர், அந்த அளவிற்கு இப்படம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் முலம் பிரபலமான கவின் தற்போது மாஸ்டர் படத்தில் JD விஜய் போல் கட்டம் போட்ட சட்டை, கையில் காப்பு, ஹெட் செட் உள்ளிட்டவை அணிந்திருக்கும் பேன் மேட் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை மஞ்சிமா மோகன்.
கேரளாவில் பிறந்தவரான நடடிகை மஞ்சிமா மோகன் சிறு வயது முதலே குழந்தை நட்சத்திரமாக பல மலையாள படங்களில் நடித்துள்ளார். பின்னர் 2015 ஆம் ஆண்டு முதல்முறையாக நிவின் பாலியுடன் மலையாள படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவர் மஞ்சிமா மோகன் உதயநிதி நடிப்பில் வெளியான இப்படை வெல்லும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். பின்னர் விக்ரம் புறப்புக்கு ஜோடியாக சத்ரியன் படத்தில் நடித்திருந்தார்.
தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம்வரும் மஞ்சிமா மோகனுக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் அவ்வளவாக இல்லை.
அதற்கு காரணம் உடல் எடை கூடி பார்ப்பதற்கு ஆன்ட்டி போல மாறியதாக ரசிகர்கள் அவரது சமீபத்திய புகைப்படங்களுக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர். இடையில் நடந்த ஒரு ஆக்சிடெண்ட் காரணமாக அவர் சிகிச்சையில் ஈடுபட வேண்டியிருந்ததால் உடல் எடையில் கவனம் செலுத்த முடியாமல் போனதாக தெரிவித்திருந்தார்.
இருந்தாலும் மஞ்சிமா மோகன் நடிப்பில் அடுத்தடுத்து துக்ளக் தர்பார், களத்தில் சந்திப்போம் என அடுத்தடுத்த படங்கள் தமிழில் இருக்கின்றன. இந்நிலையில் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரடியாக உரையாடிக்கொண்டிருந்தார்.
அப்போது ரசிகர் ஒருவர் மஞ்சிமா மோகனிடம் அவருடைய கவர்ச்சி புகைப்படத்தை அனுப்பு சொல்லி கேட்டுள்ளார். அதற்கு கொஞ்சமும் தாமதிக்காமல் மஞ்சிமா மோகன் தனது குழந்தை வயது புகைப்படத்தை அனுப்பி அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாரதி கண்ணம்மா, இந்த ஒரு சீரியலுக்கு ரசிகர்கள் வட்டம் அதிகம் என்றே கூறலாம்.
மேலும் பாரதி கண்ணம்மா தொடரில் தற்போதெல்லாம் அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது,
அந்த வகையில் தற்போது அந்த தொடரின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
ஆம், அதில் மயங்கிய நிலையில் உள்ள கண்ணம்மாவை பாரதி தூக்கி செல்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் அந்த வீடியோவை பார்த்துவிட்டு அவருக்கு என்ன ஆனது என கேட்டுவருகின்றனர்.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது தளபதி 65 படத்தை நடிக்கவுள்ளார்.
இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களுக்குள் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இளம் நடிகை ரஷ்மிகா மந்தானாவிடம் பேச்சு வார்த்தை சென்றுகொண்டிருக்கிறது.
இந்நிலையில் தளபதி 65 படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க கருப்பன் பட கதாநாயகி தான்யா ரவிச்சந்திரனிடம் நடிக்க முடியுமா என படக்குழு கேட்டுள்ளார்.
அதற்கு நடிகை தான்யா ரவிச்சந்திரனிடம் தளபதி 65 படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறி வாய்ப்பை மறுத்துவிட்டதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
பிரபாஸ் மற்றும் சயிப் அலிகான் நடிக்கும் ஆதிபுருஷ் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
ராமாயண கதையை மையமாகக் கொண்டு இந்தியாவின் பல மொழிகளில் ஆதிபுருஷ் என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக பிரபாஸ் நடிக்க இருக்கிறார்.
3 டியில் உருவாகும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் சாயிப் அலிகான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா சர்மாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதை இந்த படத்தின் இயக்குனர் ஓம் ராவத் சமூகவலைதளத்தில் அறிவித்துள்ளார்.
ஆதிபுருஷ்’ திரைப்படம் 2022, ஆகஸ்ட் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும்.