வலிமை படத்தில் அமைந்துள்ள பைக் ரேஸ் காட்சிகள், செம்ம உற்சாகத்தில் ரசிகர்கள் புகைப்படத்துடன் இதோ..

வலிமை……

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை திரைப்படங்கள் பெரிய வசூல் சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது வலிமை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம் அதில் ஸ்போர்ட்ஸ் பைக்கில் தல அஜித் மற்றும் இன்னும் ஒருவர் பைக்கில் உள்ளார்.

இதை வைத்து ரசிகர்கள் வலிமை படத்தில் வேற லெவல் பைக் ரேஸிங் சீன் இருக்கும் என கூறிவருகின்றனர்.

இன்று OTT-யில் வெளியாகும் மாஸ்டர் படத்தில் மேலும் சில காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதா? முழு விவரம் இதோ…

மாஸ்டர்……

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.

இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று மக்கள் திரையரங்கிற்கு அலை மோதி வருகின்றனர். மேலும் இப்படம் ரூ.200 கோடியை வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே மாஸ்டர் படம் திரையரங்கில் வெற்றிநடை போட்டு வரும் நிலையில், இன்று நள்ளிரவு 12 மணிக்கு அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் அமேசானில் வெளியாகும் மாஸ்டர் திரைப்படம் சென்சார் கட் இல்லாத படமாக வெளியாகும் என்று கூறப்படுகிறது. மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற ஒரு சில சர்ச்சைக்குரிய காட்சிகள் சென்சாரில் கட் செய்யப்பட்ட நிலையில் அந்த காட்சிகள் உடன் கூடிய மாஸ்டர் திரைப்படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

துருவ் விக்ரமின் அடுத்த படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

துருவ் விக்ரம்……

இயக்குனர் பா.இரஞ்சித், தான் இயக்கும் படங்கள் மட்டுமல்லாமல் தனது நீலம் புரொடக்சன்ஸ் மூலம் காலம் கடந்து பேசப்படும் படங்களையும் வழங்கியுள்ளார். அந்த வகையில் அவரது தயாரிப்பில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு’ ஆகிய திரைப்படங்கள் விமர்சன மற்றும் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்தது.

இந்த வெற்றியைத்தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌சன்ஸ் நிறுவனம், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து புதிதாக ஐந்து திரைப்படங்களை தயாரிக்க உள்ளதாக, கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி அறிவித்திருந்தார். இதில் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ்,

‘மேற்கு தொடர்ச்சி மலை’ திரைப்படத்தின் இயக்குனர் லெனின் பாரதி, மற்றும் அறிமுக இயக்குனர்கள் சுரேஷ் மாரி, அகிரன் மோசஸ், பிராங்க்ளின் ஆகிய ஐந்து இயக்குனர்களும் புதிதாக தயாரிக்க உள்ள ஐந்து திரைப்படங்களையும் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இயக்குனர் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் ’ரைட்டர்’ என்ற படத்தில் சமுத்திரகனி நடிப்பில் அதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நீலம் புரொடக்‌சன்ஸ் நிறுவனம், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதலர் இவர் தான்.. கைகோர்த்து ஊர் சுற்றும் வீடியோ செம வைரல்!

ஸ்ருதிஹாசன்……..

கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் இந்திய சினிமாவின் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் காதல் தோல்வி அடைந்த ஸ்ருதிஹாசன் தற்போது மீண்டும் வேறு ஒருவரை காதலிப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஸ்ருதிகாசன் முன்னதாக வெளிநாட்டு புகைப்பட கலைஞர் ஒருவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். சமீபத்தில் கூட இருவரது திருமணம் பற்றி கமலஹாசன் ஓகே சொல்லியதாகவும், அந்த வெளிநாட்டு புகைப்பட கலைஞருக்கு தமிழ்நாட்டு பாரம்பரிய கலாச்சாரங்களை சொல்லிக்கொடுத்து வேட்டி கட்டி ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

ஆனால் யார் கண் பட்டதோ. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அடுத்த சில நாட்களிலேயே ஸ்ருதிஹாசனுக்கும் அந்த புகைப்பட கலைஞருக்கும் இடையில் பிரேக்கப் ஆனது. அதன்பிறகு ஸ்ருதிஹாசன் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டு தனிமையில் இருந்து வந்தார்.

தனிமையே தன்னை விழுங்கி விடும் போல என பயந்து கொண்டு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார். அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கில் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான கிராக் என்ற திரைப்படம் சூப்பர் வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் சலார் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

EX Lover

இந்நிலையில் தன்னுடைய 35வது பிறந்தநாளை கொண்டாடும் ஸ்ருதிஹாசன் தன்னுடைய இரண்டாவது காதலரை உலகுக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த டூடுல் கலைஞர் சாந்தனு ஹசாரிகாவுடன் பொதுவெளியில் கைகோர்த்து சென்றுள்ள வீடியோ வைரல் ஆனது.

அதனைத் தொடர்ந்து சாந்தனு ஸ்ருதிஹாசனை கட்டி அணைத்து பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சமீபத்தில்கூட ஸ்ருதிஹாசன் மீண்டும் காதலில் விழுந்துவிட்டதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

New Lover

கபாலி பட ஸ்டைலில் செம ஸ்டைலிஷாக மி ர ட்டும் சசிகுமார்.. வைரலாகும் கெ த் தான புகைப்படம்!!

சசிகுமார்……..

தமிழ் சினிமாவின் மினிமம் கியாரண்டி நடிகராக வலம் வருபவர் சசிகுமார். ஆனால் சமீபகாலமாக சசிகுமார் எதிர்பார்த்த அளவுக்கு அவரது படங்கள் வெற்றிகளை பெறவில்லை. இருந்தாலும் அவரது மார்க்கெட்டுக்கு எந்த ஒரு குறையும் இல்லாமல் கைவசம் படங்கள் உள்ளன.

அந்த வகையில் அடுத்ததாக சசிகுமார் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் எம்ஜிஆர் மகன் தான் வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயனுக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் தான் பொன்ராம்.

முன்னதாக எம்ஜிஆர் மகன் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து ராஜவம்சம் என்ற படத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்தின் டிரைலரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எம்ஜிஆர் மகன் படத்தின் வெற்றிதான் சசிகுமாரின் அடுத்தடுத்த படங்களுக்கான மார்க்கெட்டை நிரூபிக்கும் என்பதால் அந்த படத்தை சரியான நேரத்தில் ரிலீஸ் செய்ய வேண்டும் என கவனமாக உள்ளாராம்.

இதனால் கடந்த டிசம்பர் மாதமே வெளியாக வேண்டிய எம்ஜிஆர் மகன் திரைப்படம் தற்போது வரை சரியான ரிலீஸ் தேதிக்காக காத்துக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் அடுத்தடுத்த படங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் சசிகுமார்.

கிராமத்து கெட்டப்பில் பார்த்து பார்த்து பழகிப் போன சசிகுமார் தற்போது கொஞ்சம் சிட்டி கெட்டப்புக்கு மாற, தொடர்ந்து பல போட்டோ ஷூட் எடுத்து வருகிறார். அந்த வகையில் கபாலி ஸ்டைலில் கோட் சூட் போட்டு அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

ரெமோ படத்தில் நடித்த குட்டி பெண்ணா இவர்? இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா? வாயடைத்து போன ரசிகர்கள்!!

ரெமோ……..

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன்.

இவர் நடிப்பில் வெளியான ரெமோ திரைப்படத்தினை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.

2016 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்தில் சிவகார்திகேயனுடன் ஒரு குயூட்டான குழந்தை நடித்திருப்பார்.

அவர் தான் தற்போது பாரதி கண்ணம்மா சீரியலிலும் நடித்து வருகிறார். அவரின் தற்போதைய புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.

 

‘பஹிரா’ படபிடிப்பு முடிந்தது.. சம்மரில் ரிலீஸ்!

ஹிரா……..

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இ ய க் கியிருக்கு படத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடித்து வருகிறார்.

பிரபுதேவாவின் 50வது திரைப்படம் பொன்மாணிக்கவேல் ரிலீஸுக்கு த யா ராகி  தாமதமாகி வரும் நிலையில் இப்பொழுது பஹிரா படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துள்ளார்.

5 கதாநாயகிகள் நடிக்க சை க் கோ த் ரி ல்லர் தி ரை ப்படமாக உருவாகி வந்த பஹிரா படப்பிடிப்பு இப்போது மு டி வடை ந்துள்ள செய்தியை படக்குழு வெளியிட்டுள்ளது.

சுமாரான வெற்றியை

நடன இ ய க் குனராக அறிமுகமாகி வெற்றிகரமான நடிகராக பல திரைப்படங்களில் நடித்து வந்த பிரபுதேவா இப்போது பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களை இ ய க்கி  வெ ற் றிகரமான இ ய க் குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் போக்கிரி திரைப்படத்தை இ ய க் கி மா பெ ரும் வெற்றி படத்தை கொடுத்த பிரபு தேவா அதை தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து வி ல் லு திரைப்படத்தை  இ ய க்க அ ந்த திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்றது.

போ லீ ஸ் அதிகாரியாக

குலேபகாவலி, தேவி உள்ளிட்ட திரைப்படங்கள் இ வ ருக் கு அ டு த் தடுத்த வெ ற் றியை  கொ டு த்த நிலையில் இப்போது தமிழ் சினிமாவில் முழு வீ ச்சி ல் கதாநாயகனாக மட்டும் பல படங்களில் ஒ ப் பந் த மாகி நடித்து வரும் பிரபுதேவா தனது 50வது திரைப்படம் பொன் மாணிக்கவேல் ரிலீஸ் ஆக தாமதமாகிக் கொண்டிருக்கும் நிலையில் அதில் போ லீ ஸ் அ தி கா ரியா க ந டி த் துள் ளார். பிரபுதேவா முதல் முறையாக போ லீ ஸ் அ தி கா ரியாக ந டி த்த  தி ரை ப்ப டம் இதுவேயாகும்.

பஹிரா

திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அ ச ரா தவன் அ ட ங் காத வன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் மிஸ்டரி சைக்கோ த்ரில்லர் திரைப்படம் ஒன்றை இயக்கி வர அதற்கு பஹிரா என த லை ப் பிட ப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் ப ட ப் பிடி ப்பு தொ ட ங் கப் பட்டது. பல்வேறு க ட் ட ங்க ளாக நடைபெற்று வந்த திரைப்படத்தில் அனேகன் படத்தில் நடித்த நடிகை அமிரா தஸ்தூர் மற்றும் ந டு வு ல கொஞ்சம் ப க் கத் த காணோம் புகழ் காயத்ரி உள்ளிட்டோர் முதன்மை கதாநாயகியாக நடிக்க மேலும் 3 புதுமுக நடிகைகள் இதில் ந டி த் து ள்ளனர் மொத்தம் 5 கதாநாயகிகள் இந்த படத்தில்.

குழு புகைப்படம்

மி ர ட் டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு இப்பொழுது அதன் படப்பிடிப்பை மு டி த்த கை யோ டு படக்குழுவுடன் எ டு த் துக் கொ ண்ட குழு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு படப்பிடிப்பு மு டி ந் ததை ச ந் தோ சமா க  கேக் வெ.ட்.டி. கொ ண் டாடி யி ருக்க பஹிரா திரைப்படம் வரும் சம்மர் சீசனில் வெளியாகும் என எ தி ர் பார் க்கப்படுகிறது.

மீண்டும் ஒலித்த தேனிசை குரல்.. சிவகார்த்திகேயன் படத்திற்கு இன்னாம்மா “ஃபீல்” பண்ணியிருக்காரு தேவா!

வாழ்………

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘வாழ்’ படத்தில் தேனிசை தென்றல் தேவா பாடியுள்ள “Feel Song” ரசிகர்களை பிரம்மிக்க வைத்துள்ளது.

அருவி எனும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படத்தை இயக்கி ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன்.

அவர் இயக்கியுள்ள “வாழ்” படத்தில் தேனிசை தென்றல் தேவா இப்படியொரு அழகான பாடலை பாடி இருப்பது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் என்றே சொல்ல வேண்டும்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில்

அருவி படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாகி உள்ளது வாழ் திரைப்படம். கடந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் கொரோனா காரணமாக தள்ளிப் போனது. பயணத்தையும் பாலிடிக்ஸையும் இந்த படம் கையாண்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஃபீல் சாங்

விரைவில் திரையில் வெளியாகவுள்ள வாழ் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள Feel Song பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இசையமைப்பாளர் பிரதீப் குமார் இசையமைப்பில் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் பாடல் வரிகளை எழுத தேனிசை தென்றல் தேவா நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு அருமையான பாடலை பாடியுள்ளார்.

தேனிசை தென்றல் தேவா

ஹார்ட் டு ஃபீல் என ஆங்கில வரிகளில் தொடங்கும் இந்த ஃபீல் சாங்கை ரொம்பவே ஃபீல் பண்ணி பாடியுள்ளார். வீட்டுக்குள்ளத்தான் முகத்த மறைக்கிற, காசுக்காகத்தான் மனச ஒளிக்குற.. ஓடிடியில வாழ்க்கை ஓட்டுற.. மொபைலுக்குள்ள மாட்டிக்கிட்ட என வித்தியாசமான வரிகளை தனது காந்தக் குரலால் பாடி தெறிக்கவிட்டுள்ளார் தேவா.

டபுள் ட்ரீட்

அருவி படத்துக்கு அப்புறம் அந்த இயக்குநர் அடுத்து என்ன மாதிரியான படத்தை கொடுக்கப் போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், வாழ் படம் விரைவில் வெளியாக போகிறது என்கிற அறிவிப்புடன் தேவாவின் மாயக்குரலில் ஃபீல் சாங்கும் வெளியாகி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்துள்ளது.

 

நடிகர் சிம்புவுடன் அடுத்தடுத்து படம் பண்ண காத்திருக்கும் இயக்குனர்கள்..! ஆச்சர்யமளிக்கும் லிஸ்ட் இதோ..

நடிகர் சிம்பு……..

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம், குடும்ப ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தில் அவருக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார்.

மேலும் அடுத்ததாக சிம்பு பத்து தல என்ற படத்தில் நடிக்கவுள்ளார், கன்னட படத்தின் ரீமேக்கான இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில் தற்போது அடுத்தடுத்து சிம்புவுடன் திரைப்படம் பண்ண காத்திருக்கும் இயக்குனர்கள் குறித்த லிஸ்டை தான் பார்க்கவுள்ளோம்.

1. மிஷ்கின்

2. ராம்

3. சுசீந்திரன்

4. கவுதம் மேனன்

5. V.Z.துரை (தொட்டி ஜெயா)

சினிமா பக்கமே காணாமல் போன சீரியல் நடிகை ஸ்ரீஜா இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?- வீடியோவுடன் இதோ!!

ஸ்ரீஜாவை…………..

சரவணன்-மீனாட்சி என்ற சீரியல் மக்களிடம் பிரபலமாக ஓடியது. அதே பெயரில் பல கதைகள் வந்தாலும் முதலில் வந்த ஜோடிக்கு தான் ரசிகர்கள் அதிகம்.

செந்தில்-ஸ்ரீஜா இருவரும் நிஜத்தில் இணைய வேண்டும் என மக்கள் ஆசைப்பட அப்படியே நடந்தும் முடிந்தது. இருவரும் திருமணத்திற்கு பிறகும் ஒன்றாக இணைந்து சீரியல்கள் நடித்தார்கள்.

ஆனால் சில வருடங்களாக ஸ்ரீஜாவை சீரியல் பக்கமே காணவில்லை, அவரது கணவர் செந்தில் மட்டும் சீரியல்கள் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தான் ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது கல்யாணம் கண்டீஷன்ஸ் அப்ளை என்ற தொடரில் இருவரும் நடித்தது நமக்கு தெரியும்.

அதன் புதிய பாகம் இப்போது தயாராகி வருகிறதாம். படப்பிடிப்பு இருவரும் எடுத்த வீடியோ ஒன்றை செந்தில் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Mirchi Senthil (@mirchisenthil983)