இந்த குட்டி பாப்பாவா இவங்க : அட இத்தன நாளா தெரியாம போச்சே : வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள் : வைரலாகும் புகைப்படம்!!

பிரபல நடிகை……

இணையத்தில் ஒரு குழந்தையின் புகைப்படம் வைரலாகிவருகிறது. அந்தக்குழந்தை இப்போது பிரபல நடிகை. அது யார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது நாயகியாக வலம்வருபவர் ஸ்ரீதிவ்யா. தெலுங்கானாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் தெலுங்குத்திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 2013ம் ஆண்டு வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் லதா பாண்டி கேரக்டரில் நடித்தார். அந்தப்படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது. ஜீவா, கக்கிச்சட்டை, மருது, வெள்ளைக்காரத்துரை என தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்து நடித்தார்.

ஸ்ரீதிவ்யா துளியும் கவர்ச்சி காட்டாமல் ஹோம்லி கேரக்டரில் நடிப்பதால் கவனத்துக்கு உள்ளானார்.

அதனால் சில ஹோம்லி சப்ஜெட் திரைப்படங்கள் தேடிவந்தன. அண்மைக்காலமாக சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீதிவ்யா, தன் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஸ்ரீதிவ்யாவின் குழந்தைப்பருவ புகைப்படத்தை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். ஆம்..இந்தக் குழந்தை நடிகை ஸ்ரீதிவ்யா தான். ஸ்ரீதிவ்யா இப்போது அதர்வாவுக்கு ஜோடியாக ‘ஒத்தைக்கு ஒத்தை’ என்னும் படத்தில் நடித்துவருகிறார்.

 

விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு வந்த ஷேர் மட்டும் இத்தனை கோடியா?

மாஸ்டர்……….

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்தது மாஸ்டர். படத்தை எதிர்ப்பார்த்தது போல் ரசிகர்கள் கொண்டாடிவிட்டார்கள்.

திரையரங்கில் வெளியானதை தொடர்ந்து மாஸ்டர் வரும் ஜனவரி 29 அதாவது நாளை OTT தளத்தில் வெளியாக இருக்கிறது. அதற்கான விளம்பரங்கள் எல்லாம் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் மாஸ்டர் படத்திற்கு வந்த ஷேர் குறித்து பிரபல பத்திரிக்கையாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 60 கோடிக்கு ஷேர் வந்துள்ளதாம்.

பிக்பாஸ் யாஷிகாவிற்கும் பாலாஜிக்கும் என்ன தொடர்பு தெரியுமா…? என்னம்மா நீங்க இப்படி பல்டி அ.டி.சிற்றிங்களே…!!

யாஷிகா ஆனந்த்……….

பிக்பாஸ் 4 சீசன் முடிந்து வெற்றியாளர் ஆரி ரூ. 50,00,000 பரிசு தொகையோடு டைட்டிலை கைப்பற்றினார். அவருக்கு அடுத்ததாக பாலாஜி முருகதாஸ் இரண்டாம் இடத்தினை பிடித்தார்.

பாலாஜி பிக்பாஸ் நிகழ்ச்சி முன்பாக அறியப்படாதவர் என்று இருந்த நிலையில் நடிகை யாஷிகாவுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படங்களும் அதே தொலைக்காட்சி நடத்தி வந்த கனக்‌ஷன்ஸ் நிகழ்ச்சியிலும் ஜோடியாக பங்கேற்று இருப்பதும் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், யாஷிகா ஆனந்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் சாட்டில் இருக்கும் போது ரசிகர் ஒரு ‘பாலாஜி முருகதாஸ் உங்கள் நண்பரா ? ஆனால், முருகதாஸ் நீங்கள் இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் பின் தொடரவில்லை’ என்று கேள்வியை கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த யாஷிகா’நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக தான் இருந்தோம்.

ஆனால், அவரை நினைத்து தற்போது நான் சந்தோசப்படுகிறேன். ஏனென்றால், இவர் இந்த நாட்களுக்காக எத்தனை ஆண்டுகள் ஆசைப்பட்டார் என்பது தெரியும். ‘ இதன் மூலம் இவர்கள் இருவரும் தற்போது பேசுவது இல்லை என்பது போலத்தான் தோன்றுகிறது.

நடிகை பிரகதியின் மகளா இது…? அம்மாடியோவ் தாயும் மகளும் வெற லெவல் : புகைப்படம் உள்ளே!!

நடிகை பிரகதி மகாவதி..…

சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்திற்கென்ற சில நடிகர் நடிகைகள் நடித்து விருது மற்றும் புகழை பெறுவார்கள். அந்தவகையில் அம்மா அண்ணி கதாபாத்திரத்தில் நடித்தும் சில படங்களில் நடிகையாகவும் நடித்து வந்தவர் நடிகை பிரகதி மகாவதி.

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி பின் தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானார். இதையடுத்து தொலைக்காட்சி சீரியலிலும் நடித்து வருகிறார்.

தற்போது 44 வயதான் பிரகதி உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க உடற்பயிற்சி, நடனம் என செய்து வருகிறார். அதை இணையத்தில் வெளியிட்டும் வருவார்.

சமீபத்தில் தன் மகளின் 16வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் டாப் ஆங்கிளில் எடுத்து கொண்ட புகைப்படம் ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது.

நடிகை சரண்யா பொண்வண்ணன் மகளுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது- இதோ புகைப்படங்கள்….

சரண்யா பொண்வண்ணன்……….

தமிழ் சினிமாவில் இருக்கும் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்தவர் நடிகை சரண்யா பொண்வண்ணன்.

இவர் நடுவில் தமிழ் சினிமாவில் எக்கச்சக்க படங்கள் நடித்து வந்தார். இப்போது அவர் பார்த்து பார்த்து தேர்வு செய்து தான் நடித்து வருகிறார்.

நடிகர் பொண்வண்ணனை திருமணம் செய்த சரண்யா அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள், பிரியதர்ஷினி, சாந்தினி.

தற்போது பிரியதர்ஷினி என்பவருக்கு சென்னையில் அண்மையில் பெரியோர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

ஆனால் மாப்பிள்ளை பற்றிய விவரங்கள் எதுவும் சரியாக தெரியவில்லை.

கதாநாயகியாக நடிக்கும் வனிதா: யார் இயக்கத்தில் தெரியுமா?

வனிதா………

தளபதி விஜய் நடித்த ’சந்திரலேகா’ என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். அதன்பின்னர் ராஜ்கிரணின் ’மாணிக்கம்’ உள்பட ஒருசில படங்களில் நடித்த வனிதா, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடம் ப ர பரப்பை ஏற்படுத்தி புகழ் பெற்றார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ‘குக் வித் கோமாளி’ சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வனிதாவுக்கு தொடர்ந்து தொலைக்காட்சியில் பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது மீண்டும் கதாநாயகியாக ஒரு திரைப்படத்தில் நடிகை வனிதா விஜயகுமார் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

பாபி சிம்ஹா நடித்த ’பா ம் பு சட்டை’ என்ற படத்தை இயக்கிய ஆதம்தாஸன் என்பவர் தான் இந்த படத்தை இயக்க உள்ளார். நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையம்சம் கொண்ட இந்த படத்தில் வனிதா நாயகியாகவும், முக்கிய வேடத்தில் கருணாகரனும் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்காக வனிதா தனது உடல் எடையை குறைத்து ஹேர்ஸ்டைலையும் மாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1995ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமாகிய வனிதா விஜயகுமார் தற்போது 25 வருடம் கழித்து மீண்டும் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் மாஸ் டைட்டில் அறிவிப்பு!!

சிவகார்த்திகேயன்………..

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என நேற்றே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி சற்று முன்னர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் இயக்குனர், இசையமைப்பாளர் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் மாஸ் டைட்டில் ’டான்’ என வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்க உள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரோடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் அறிவிப்பு சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ’டாக்டர்’ மற்றும் ’அயலான்’ படங்களின் படப்பிடிப்புகள் முடிவடைந்து என்பதும் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் ’டாக்டர்’ படமும் அதன் பின்னர் ஒரு சில மாதங்கள் கழித்து ’அயலான்’ திரைப்படமும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது

 

மாஸ்டர் விஜய்யுடன் செம்பருத்தி நடிகை ஷபானா..! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்..

ஷபானா……

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மெகா தொடர் தான் செம்பருத்தி, இந்த சீரியல் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம்.

இந்த சீரியலில் கதாநாயகி மற்றும் கதாநாயகனாக நடித்து ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானவர்கள் தான் கார்த்திக் ராஜ் மற்றும் ஷபானா.

மேலும் செம்பருத்தி சீரியலில் இருந்து கார்த்திக் ராஜ் விலகி கொண்டதால் தற்போது ஆதி கதாபாத்திரத்தில் அக்னி என்பர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது செம்பருத்தி ஷபானா மாஸ்டர் பட விஜய் சிலையுடன் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் அவரின் ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

டுவிட்டரில் டிரெண்ட் ஆகும் ‘வாத்தி கம்மிங்’ மற்றும் ‘வலிமை: அஜித், விஜய் ரசிகர்கள் குஷி!!

விட்டரில் டிரெண்ட் ‘வாத்தி கம்மிங்’ மற்றும் ‘வலிமை…….

விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் என்ற பாடலின் ஹேஷ்டேக் மற்றும் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் ஹேஷ்டேக் ஒரே நேரத்தில் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி உள்ளதால் பெரும் ப ர பரப்பு ஏற்பட்டுள்ளது

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டான நிலையில் வாத்தி கம்மிங் பாடல் இன்று மாலை 5 மணிக்கு தொலைக்காட்சியிலும் இணையதளங்களிலும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து வாத்தி கம்மிங் என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்

அதேபோல் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு தளத்தில் உள்ள ஒரு புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இயக்குனர் எச். வினோத் உள்பட படக்குழுவினர் பலர் உள்ளனர்.

இந்த புகைப்படமும் வைரல் ஆகி வரும் நிலையில் அஜித் ரசிகர்கள் ’வலிமை’ ஹேஷ்டேக்கை வைரல்லக்கி வருகின்றனர். விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு இரண்டு ஹேஷ்டேக்குகளை வைரலாகி வருவது பெரும் ப ரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது

10 வருட காதலருக்கு ப்ரியா பவானிசங்கரின் உருக்கமான வாழ்த்து!

பிரியா பவானி…….

நடிகை பிரியா பவானி சங்கர் பத்து வருடங்களாக ஒருவரை காதலித்து வரும் நிலையில் தனது காதலரின் பிறந்த நாளை அடுத்து உருக்கமான வாழ்த்து தெரிவித்துள்ளார்

தமிழ்த் திரையுலகில் ’கடைக்குட்டி சிங்கம்’ என்ற படத்தில் நாயகியாக அறிமுகமான ப்ரியாபவானி சங்கர் அதன்பின் ’மான்ஸ்டார்’ ’மாபியா’ உள்ளிட்ட படங்களில் நடித்தார் என்பதும் தற்போது அவரது கைவசம் 4 படங்கள் இருப்பதால் அவர் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த பத்து வருடமாக ராஜவேல் என்பவரை பிரியா பவானிசங்கர் காதலித்து வருகிறார். தனது காதலரின் புகைப்படத்தை அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த பிரியா பவானிசங்கர் இன்று தனது காதலரின் பிறந்தநாளை அடுத்து இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்

அதில் இருவரும் இணைந்து பத்து வருடத்திற்கு முன்பு எடுத்த புகைப்பமும் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படமும் இணைந்துள்ளது. அந்த புகைப்படத்தில் உருக்கமான பிறந்த நாள் வாழ்த்தும் அவர் கூறியுள்ளார

என்னுடைய தந்தைக்கு நிகராக என்னை பார்த்துக் கொள்ளக் கூடிய ஒருவர் இருக்கிறார் என்றால் அது நீங்கள் ஒருவர்தான். இந்த 10 ஆண்டுகளில் வாழ்க்கை முற்றிலும் மாறி விட்டது. ஆனால் நம் இருவருக்கும் உள்ள காதல் மட்டும் மாறவே இல்லை. உங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று உருக்கமாக பதிவுசெய்துள்ளார்