எஸ்.ஜெ.சூர்யாவை தொடர்ந்து சிம்புவிற்கு வி ல் லனாகும் முக்கிய இயக்குனர்..! யார் தெரியுமா?

நடிகர் சிம்பு……..

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம், குடும்ப ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தில் அவருக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார்.

மேலும் அடுத்ததாக சிம்பு பத்து தல என்ற படத்தில் நடிக்கவுள்ளார், கன்னட படத்தின் ரீமேக்கான இப்படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ஆம் இப்படத்தில் சிம்புவுடன் கவுதம் கார்த்திக், பிரியா பவானி உள்ளிட்டோர் நடிக்கும் நிலையில், அவருக்கு வி ல் லனாக இயக்குனர் கவுதம் மேனன் நடிப்பதாக தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

பிக்பாஸ் ரைசாவை கண்கலங்கும் படி செய்த நடிகர் விவேக், என்ன காரணம் தெரியுமா?

ரைசா வில்சன்…

பிக்பாஸ் சீசன் 1 மூலமாக தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் ரைசா வில்சன், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே VIP 2, வர்மா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து இவர் பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார், மேலும் தற்போது The Chase, F.I.R உள்ளிட்ட திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் அவரின் ட்விட்டர் பக்கத்தில் “தன்னை கண் கலங்க வைக்கும் ஒரு படத்தை தனக்கு பரிந்துரைக்கும் படி” கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள நடிகர் விவேக் சிவாஜி கணேசனின் ‘பாபு’ படத்தை பரிந்துரை செய்துள்ளார், பின்னர் தான் அந்த படத்தை இன்றே பார்க்க போவதாக கூறியுள்ளார் ரைசா.

வித்யா பிரதீப் இன் பவுடர் டீஸர் வெளியானது!!

பவுடர் டீஸர்…

தனது புகைப்படங்களை இணையத்தில் இருந்து டெலிட் செய்த பிக்பாஸ் ஷிவானி, என்ன காரணம் தெரியுமா?

ஷிவானி…

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று முடிவடைந்துள்ளது,

இதில் அனைவரும் எதிர்பார்த்தது போலவே ஆரி பிக்பாஸ் டைட்டிலை வென்றுள்ளார்.

அவரை தொடர்ந்து பாலாஜி முருகதாஸ், ரியோ ராஜ் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர், மேலும் ஆரிக்கு பரிசு தொகையாக 50 லட்சம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் தங்களின் அன்றாட வேலைகளில் பிஸியாக உள்ள நிலையில் இந்த பிக்பாஸ் சீசன் 4 மூலம் பிரபலமான ஷிவானி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ஒரு செயலை செய்துள்ளார்.

ஆம், அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள கிளாமர் புகைப்படங்களை டெலிட் செய்துள்ளார், இதனால் அவரின் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் தற்போது அவர் ஒரு சில புதிய புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங்கில் நடிகை ஐஸ்வர்யா ராய், ரசிகருடன் எடுத்துக்கொண்ட செல்பி..!

ஐஸ்வர்யா ராய்…

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வந்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகும் இப்படத்தை அனைவரும் பெரியளவில் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் கொரோனா காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராய்,

மேலும் தற்போது ராமோஜி சிட்டிக்கு நடிகை ஐஸ்வர்யா ராய் சென்று கொண்டிருந்த போது ரசிகர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

தற்போது மாஸ்டர் படத்தின் டிரெய்லரை அமேசான் ப்ரைம் வெளியிட்டுள்ளது. இதோ இந்த டிரெய்லர்….!

மாஸ்டர் டிரெய்ல..!

அதுக்குள்ள அவசர அவசரமா ஓடிடி ரிலீஸ் ஏன்? – நடிகர் விஜய் விளக்கம்!

விஜய்…

நடிகர் விஜய் நடித்து வெளியான மாஸ்டர் திரைப்படம் நாளை மறுநாள் ஓடிடியில் வெளியாக உள்ளது குறித்து நடிகர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் மாஸ்டர். பொங்கலையொட்டி ஜனவரி 13 வெளியான இந்த படம் மூடப்பட்டிருந்த திரையரங்குகளுக்கு மக்களை மீண்டும் குவித்த நிலையில், வசூலையும் வாரி குவித்துள்ளது.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் வரும் 29ம் தேதி ஓடிடியில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நடிகர் விஜய் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் ‘மாஸ்டர் படம் கொரோனா காரணமாக மற்ற நாடுகளில் வெளியாகவில்லை.

அங்குள்ள ரசிகர்களும் பார்ப்பதற்கு வசதியாக ஓடிடியில் வெளியாகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரசிகர்களும் மாஸ்டரை கண்டுகளிக்க முடியும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் கொண்டாட்டம்: மீண்டும் கூடிய போட்டியாளர்கள்!!

பிக்பாஸ் கொண்டாட்டம்…

105 நாட்களில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவு பெற்றது என்பதும் இந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரி வெற்றி பெற்றார் என்பதும் இரண்டாவது இடத்தை பாலாஜி பிடித்தார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் ஒவ்வொரு சீசன் முடிந்த பிறகும் பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தி வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று முடிந்துள்ளது

வின்னர் ஆரி, ரன்னர் பாலாஜி உட்பட அனைத்து போட்டியாளர்களும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பின் இடையே போட்டியாளர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர் என்பதும் அந்த பதிவுகள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

குறிப்பாக ஆரி, அனிதா மற்றும் சனம்ஷெட்டி ஆகிய மூவரும் உள்ள புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது இந்தப் படத்துக்கு இரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்

அஜித்தின் மகன் ஆத்விக்கா இது, இவ்வளவு பெரியவராக வளர்ந்துவிட்டாரே- லேட்டஸ்ட் புகைப்படம்!!

ஆத்விக்…

அஜித் படங்களில் நடிப்பதை தாண்டி கேமரா முன் தோன்றுவதை முற்றிலும் தவிர்ப்பார். அவ்வளவு எளிதாக அவரை வெளியே காண முடியாது.

அவரை தான் அவர் குடும்பத்தில் இருப்பவர்களும் அப்படி தான். இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு ஒரு புகைப்படம் வந்துள்ளது.

தல மகன் ஆத்விக் ஷாலினியுடன் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.

அங்கு எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

விஜய் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ், இதற்குள் இப்படி ஒரு தகவலா- கொண்டாடும் ரசிகர்கள்!!

மாஸ்டர்…

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரி 13ம் தேதி வெளியானது. ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்து படத்தின் வசூலுக்கு எந்த குறையும் இல்லை.

தமிழ்நாட்டை தாண்டி வெளிநாடுகளிலும் படத்திற்கு அமோக வரவேற்பு. 4 நாட்களிலேயே ரூ. 100 கோடி வசூலித்து சாதனை செய்தது.

திரையரங்குகளில் மட்டுமே நாம் இதுவரை பார்த்து வந்த மாஸ்டர் திரைப்படம் OTT தளமான பிரைம் வீடியோவில் வெளியாகிவுள்ளதாம்.

வரும் ஜனவரி 29ம் தேதி முதல் நாம் எப்போது வேண்டுமானாலும் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் பார்க்கலாம், இதனால் செம கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள் உள்ளார்கள்.