ஃபைனல் ஷூட்டிங்கிற்காக லோகேஷனை மாத்திய எ னிமி டீம்!

எனிமி……….

விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் எனிமி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு துபாயில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சக்ரா படம் வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இயக்குநர் எம் எஸ் ஆனந்தன் இ ய க்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கஸாண்ட்ரா, சிருஷ்டி டாங்கே, ரோபோ சங்கர், மனோபாலா, கே ஆர் விஜயா, ரவிகாந்த் ஆகியோர் பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் சக்ரா. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. மற்ற படங்களைப் போன்று இந்தப் படத்தையும் ஓ டி டி தளங்களில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

ஆனால், மாஸ்டர் படம் கொடுத்த தைரியத்தின் பலனாக சக்ரா படத்தை வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செ ய் து ள்ள னர். பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் என்பதால், இந்தப் படத்தை 12 ஆம் தேதி வெளியிடுகின்றனர். இந்தப் படத்தைத் தொடர்ந்து துப்பறிவாளன் 2 மற்றும் எனிமி ஆகிய படங்களில் விஷால் நடித்து வருகிறார். இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா, மிர்ணாளினி ரவி மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் எனிமி. இந்தப் படத்தில் விஷாலுக்கு வி ல் லனாக ஆர்யா நடித்து வருகிறார்.

அண்மையில் இருவருக்கும் இடையில் நடந்த ஆக்‌ஷன் காட்சியின் போது ஆர்யாவுக்கு அ டி ப ட்டு  அ று வை  சி கி ச்சை  செய்யும் நி லை ஏ ற் பட்டது. விளையாட்டு கதையை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் ஆரம்பத்தில் விஷால் மற்றும் ஆர்யா இருவரும் நண்பர்களாக இருக்கின்றனர். அதன் பிறகு ஒ ரு வரு க்கொருவர் எ திரி க ளா கின்றனர். இந்த நிலையில், இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை மலேசியாவில் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், மலேசியாவில் கொரோனா லாக்டவுன் காரணமாக அங்கு படப்பிடிப்புக்கு த டை வி தி க்க ப் பட் டு ள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இறுதிகட்ட படப்பிடிப்பிற்கு படக்குழுவினர் துபாய் செல்ல இருக்கின்றனர். அங்கு ஆர்யா மற்றும் விஷால் ஆகியோருக்கிடையிலான ஆக்‌ஷன் காட்சிகள் ப ட மாக் கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கர்ணன் படத்தை பார்த்து ரிவ்யூ சொன்ன சந்தோஷ் நாராயணன் – வைரலாகும் ட்வீட்!!

சந்தோஷ் நாராயணன்…….

தமிழ் சினிமாவில் அரை டஜனுக்கும் மேல் படம் எப்போதும் கைவசம் வைத்திருக்கும் முன்னணி ஹீரோக்கள் இரண்டே பேர்.

விஜய் சேதுபதி மற்றும் தனுஷ் ஆகியோர் படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கும் அதேசமயம் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் அளவு பிசியாக இருப்பார்கள்.

இதில் தனுஷ் கைவசம் ஹாலிவுட்டில் ஒரு படம், பாலிவுட்டில் ஒரு படம், ஆயிரத்தில் ஒருவன் 2, புதுப்பேட்டை 2, ஜகமே தந்திரம், கர்ணன் என பட்டியல் நீளமாக போய்க்கொண்டிருக்கிறது. இதில் கர்ணன் படத்தை சமீபத்தில் சந்தோஷ் நாராயணன் பார்த்துள்ளார்.

படத்தை பார்த்து சந்தோஷ நாராயணன் படத்தை பற்றி ட்வீட் போட்டுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிக்கும் படம்தான் கர்ணன்.

அதில் “கர்ணன் படத்தை பார்த்து வியந்து போனேன். தனுஷ், மாரி செல்வராஜ், வி கிரியேஷன்ஸ் ஆகியோரை நினைத்து பெருமைப்படுகிறேன். கர்ணன் அனைத்தும் கொடுப்பான்” என பதிவிட்டுள்ளார். சந்தோஷ் நாராயணன் ட்வீட்டை பலரும் ரீட்வீட் செய்து ஷேர் செய்து வருகின்றனர். வெயிட்டிங்லயே வெறி ஏறுது என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

தன் படத்தில் நடித்த நடிகையை திருமணம் செய்து கொள்ளும் இயக்குனர், இணையும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட ஜோடி..!

தேசிங்கு பெரியசாமி…

கடந்த 2020 ஆம் ஆண்டு இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது, மேலும் இப்படத்தின் மூலம் பிரபலமான அறிமுக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி.

இந்நிலையில் இப்படத்தில் நடித்த நிரஞ்சனிக்கும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கும் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நிரஞ்சனி பிரபல நடிகை விஜயலக்ஷ்மி மற்றும் குக் வித் கோமாளி கனியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

ஜன கண மன அதிகாரப்பூர்வ விளம்பர ப்ரோமோ!!

ஜன கண மன…

ட்ரெண்டிங் ஆகும் நடிகை கரீனா கபூரின் புதிய போட்டோ ஷூட் புகைப்படங்கள்..!

கரீனா கபூர்…

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் கரீனா கபூர், முன்னணி நடிகைகளில் இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் வட்டம் உள்ளது.

மேலும் கடந்த 2012 ஆம் ஆண்டு இவருக்கும் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான சைஃப் அலி கானுக்கும் திருமணம் ஆனது.

இந்நிலையில் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ள கரீனா கபூர் அவரின் புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் ஜூலியின் காதலர் இவர் தானா.. வீடியோவை பாருங்க!

ஜூலி…

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் சமூக வலைத்தளங்களில் போராட்ட பெண்மணியாக பிரபலமானவர் ஜூலி.

ஜல்லிக்கட்டு மூலம் பிரபலமான ஜூலி, விஜய் டிவி யில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசன் மூலம் சின்னத்திரையில் நட்சத்திரமாக அறிமுகமானார்.

இதன்பின் தற்போது சில படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதுமட்மின்றி அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களிடமிருந்து கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில் பிக் பாஸ் ஜூலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஆண் நபர் ஒருவருக்கு முத்தம் கொடுப்பது போல சென்று, அங்கு தும்மல் மட்டுமே வருவது போல வீடியோவை வெளியிட்டுள்ளார். ஜூலி பதிவு செய்த வீடியோவில் என் உயிருடன் என்று கேப்ஷன் செய்து குறிப்பிட்டு இருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர் உங்கள் காதலரா? என கேள்வி கேட்ட துவங்கிவிட்டனர்.

 

View this post on Instagram

 

A post shared by Julee (@mariajuliana_official)

மீண்டும் உருவாகும் சூப்பர் ஹிட் திரைப்படங்களின் இரண்டாம் பாகம்..! முக்கிய தயாரிப்பாளர் வெளியிட்ட பதிவு..!

திரைப்படங்கள்…

கடந்த 2013 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இன்று நேற்று நாளை.

இந்த இரண்டு திரைப்படங்களுமே ரசிகர்களிடையே பெரியளவில் வரவேற்பை பெற்ற திரைப்படங்கள்,

மேலும் தற்போது இந்த இரண்டு திரைப்படங்களின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம் பிரபல தயாரிப்பாளரான C.V.குமார், சூது கவ்வும் 2 மற்றும் இன்று நேற்று நாளை 2 ஆகிய இரண்டு திரைப்படங்களின் கதையை படித்துள்ளதாக புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

நடிகை ரம்யா பாண்டியனுக்கு இந்த பிக் பாஸ் பிரபலத்துடன் திருமணமா? அவரது தம்பி கூறிய தகவல்!

ரம்யா பாண்டியன்…

தமிழ் வெளியான ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.

இவர் சமீபத்தில் நடைபெற்ற பிரமாண்டமாக முடிந்த பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்று, 4ஆம் இடத்தை பிடித்தார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பொழுது, ரம்யா பாண்டியனுக்கு, சோம் சேகருக்கும் காதல் வந்துள்ளது என சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் ரம்யா பாண்டியனின் தம்பியிடம் ரசிகர் ஒருவர், ” சோம் சேகர் மற்றும் ரம்யா பாண்டியன் இருவரும் ஒன்றாக இணைவார்களா ” என்று கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த நடிகை ரம்யாவின் தம்பி ” அவர்கள் தான் அதனை முடிவு செய்யவேண்டும் ” என்று தனது முடிவை தெரிவித்துள்ளார்.

‘அண்ணாத்த’ ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு!!

அண்ணாத்த…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்று முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

இந்த படம் வரும் தீபாவளி அன்று அதாவது நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து ரஜினி ரசிகர்கள் இந்த அறிவிப்பை கொண்டாடி வருகின்றனர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்த போது படக்குழுவினர் ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியதை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து ரஜினிகாந்துக்கு ரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டது என்பதும் அதனால் அவர் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் ’அண்ணாத்த’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஒரு சில மாதங்களுக்குப் பின்னரே தொடங்கும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில் தற்போது ’அண்ணாத்த’ திரைப்படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த வருட தீபாவளி ’தலைவர் தீபாவளி’ என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்

ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

‘மாஸ்டர்’ படம் குறித்து சர்ச்சைக்குரிய கேள்விக்கு சாதுர்யமாக பதிலளித்த விஜய்சேதுபதி!

மாஸ்டர்…

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் ரூபாய் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் திரையரங்குகளுக்கு மக்கள் வருவதற்கே பயப்பட்ட நிலையில் விஜய்யின் ’மாஸ்டர்’ படம் மக்கள் மத்தியில் பயத்தை போக்கி உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் ’மாஸ்டர்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த விஜய் சேதுபதி இந்த படம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியபோது, ’மாஸ்டர்’ திரைப்படம் வெற்றி பெற காரணமாக இருந்த விஜய் சார் அவர்களுக்கும் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கும் மக்களுக்கும் மிகவும் நன்றி.

திரும்பவும் மக்கள் தியேட்டருக்கு வர ஆரம்பித்துள்ளார்கள். அதற்காக நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த படம் பல பேருக்கு வாழ்க்கையை தொடங்கி வைத்துள்ளது, நம்பிக்கையை தொடங்கி வைத்துள்ளது.

இந்த படம் முழுக்க முழுக்க நன்றாக வந்ததற்கு விஜய் அவர்கள் தான் காரணம் என்று கூறியுள்ளார். மேலும் ’மாஸ்டர்’ திரைப்படம் விஜய்சேதுபதி படம் என ரசிகர்கள் கூறி வருவது குறித்து உங்கள் கருத்து என்ன? என நிருபர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் கேட்ட கேள்விக்கு,

‘நான்தான் ஏற்கனவே இந்த படம் விஜய் சார் அவர்களால் தான் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்று சொல்லிவிட்டேனே, அதன் பிறகு இந்த கேள்வி அவசியமில்லாதது’ என்று சாதுர்யமாக கூறினார்.