Unseen Moments…
அந்தாதூன் மலையாள ரீமேக்: முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நாயகி!
அந்தாதூன்…

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ’அந்தாதூன்’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த் நடிக்க உள்ளார் என்பதும், ’அந்தகன்’ என்ற டைட்டிலில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

ஜேஜே பெடரிக் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகவுள்ள இந்த படத்தில் சிம்ரன், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இந்த நிலையில் தமிழை அடுத்து அந்தாதூன் மலையாள ரீமேக் படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

தமிழில் பிரசாந்த் நடிக்கும் முக்கிய வேடத்தில் மலையாளத்தில் பிரித்விராஜ் நடிக்கவுள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்கவுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ உள்பட பல படங்களில் நடித்த ராஷிகண்ணா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இவர் ஒரிஜினல் அந்தாதூன் படத்தில் ராதிகா ஆப்தே நடித்த வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் பட நாயகிக்கு இன்று திருமணம்: ரசிகர்கள் வாழ்த்து!
சிவகார்த்திகேயன்..

சிவகார்த்திகேயன் பட நடிகை ஒருவருக்கு இன்று திருமணம் நடைபெற இருப்பதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த திரைப்படங்களில் ஒன்று ‘மனம் கொத்தி பறவை’. இந்த படத்தில் ஹீரோயினியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மியா.

இவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது என்பதும் இது பெற்றோர்கள் பார்த்து முடிவு செய்த திருமணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை ஆத்மியாவை திருமணம் செய்ய இருப்பவர் சனூப் என்பவர் என்பதும் இவர் கப்பலில் பணி செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்களது திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு ஜனவரி 25ஆம் தேதி அதாவது இன்று கேரளாவில் உள்ள கண்ணூர் என்ற பகுதியில் நடைபெற உள்ளது.

ஜனவரி 25ஆம் தேதி நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் திருமண வரவேற்பு நடைபெற இருப்பதாகவும் அதில் திரையுலகைச் சேர்ந்த பலர் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

திருமணத்துக்கு பின்னரும் நல்ல வாய்ப்பு கிடைத்தால் நடிக்க சம்மதம் என்றும் தான் நடிக்க சனூப் சம்மதம் தெரிவித்து உள்ளதாகவும் கூறியுள்ள ஆத்மிகா தற்போது இரண்டு மலையாள படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘புதுப்பேட்டை 2’ படம் எப்போது? மனம் திறந்த செல்வராகவன்!
செல்வராகவன்…

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் கூட்டணியில் உருவான காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கமென்ன’ ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டானது என்பது தெரிந்ததே. குறிப்பாக ’புதுப்பேட்டை’ திரைப்படத்தை இன்றும் மக்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதும் இந்த படத்தின் அடுத்த பாகம் எப்போது என ரசிகர்கள் பல ஆண்டுகளாக கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது தனுஷ் நடிக்கும் ’நானே ஒருவன்’ படத்தை இயக்க உள்ள செல்வராகவன் அடுத்ததாக ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தையும் இயக்கவுள்ளார். தனுஷ் நடிப்பில் தொடர்ச்சியாக இரண்டு திரைப்படங்களை செல்வராகவன் இயக்க உள்ளார் என்பதும் அந்த படங்களின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டன என்பது குறித்த செய்திகள் வெளியானது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் ’நானே வருவேன்’ திரைப்படத்தை முடித்த பின்னர் ’ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்திற்கு முன்பே ’புதுக்கோட்டை 2’ படத்தை இயக்க தான் திட்டமிட்டு இருப்பதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் செல்வராகவன் தெரிவித்துள்ளார்

ஏற்கனவே ’ஆயிரத்தில் ஒருவன் 2’ திரைப்படம் 2024 ஆம் ஆண்டு தான் தொடங்க உள்ளதாக கூறி இருக்கும் நிலையில் அதற்கு முன்பே ’புதுக்கோட்டை 2’படத்தை அவர் இயக்க உள்ளதாக கூறி இருப்பது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

எனவே ’நானே வருவேன்’ ’புதுக்கோட்டை 2’ மற்றும் ’ஆயிரத்தில் ஒருவன் 2’ ஆகிய ஹாட்ரிக் வெற்றி படங்களை தனுஷ்-செல்வராகவன் ஜோடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்
ரம்யாவை திட்டிய நெட்டிசன்களுக்கு அனிதா சம்பத் பதிலடி!
ரம்யா பாண்டியன்…

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா பாண்டியனை நெட்டிசன்கள் இன்னும் விமர்சனம் செய்து வருகையில் அந்த விமர்சனம் குறித்து அனிதா சம்பத் தனது சமூக வளைதளத்தில் பதிலடி கொடுத்துள்ளார்

பிக்பாஸ் வின்னர் ஆரி குறித்து பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது ரம்யா கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். அவரை விமர்சனம் செய்ததால் ஆரியின் ஆதரவாளர்கள் ரம்யாவை பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதும் சரி, வெளியே வந்த பின்னரும் சரி கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்

இந்த விமர்சனத்திற்கு முதலில் ’அது அவர்களுடைய கருத்து’ என பதில் கூறிய ரம்யா, தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு பதிவை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார். அதில் ’பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து விட்டது, எனவே அந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களை குறிப்பாக பெண் போட்டியாளர்களை தயவுசெய்து திட்டாதீர்கள். நம்முடைய கடமை அனைத்து பெண்களையும் மதிக்க வேண்டும் என்பதுதான். ஆகையால் இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்

இந்த பதிவை பார்த்த அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராமில் பிக்பாஸ் போட்டியாளர்களை விமர்சனம் செய்யும் நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கூறியதாவது ’பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு விளையாட்டு. அது முடிந்துவிட்டது.

பிக்பாஸ் வீட்டில் 18 போட்டியாளர்களுடன் இருக்கும் போது மன அழுத்தம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அப்போது வெளிப்பட்ட சில குணங்கள் தினசரி வெளிப்படும் என்று எதிர்பார்க்க வேண்டாம். பிக்பாஸ் போட்டியாளர்களை குறிப்பாக பெண் போட்டியாளர்களையும் அவர்களுடைய குடும்பத்தை பற்றியும் நெகட்டிவ் கமெண்ட் செய்வதை தயவு செய்து நிறுத்துங்கள்.

இவ்வாறு விமர்சனம் செய்வதால் உங்களுக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது? ஒரு மெசேஜ் போட்டு விட்டு நீங்கள் உங்கள் வேலையை பார்க்க போய் விடுவீர்கள். ஆனால் அந்த மெசேஜை படிக்கும் சம்பந்தப்பட்டவர்கள் எவ்வளவு மனம் நொந்து போகும் என்பதை யோசித்துப் பாருங்கள். எல்லோரும் அவர்களுடைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள், தங்களை மாற்றிக் கொள்வார்கள்.

அனைத்து போட்டியாளர்களையும் ரசிக்க பிக்பாஸ் ஒன்றும் ’குக் வித் கோமாளி’ மாதிரி கிடையாது. பிக்பாஸில் இருக்கும் எல்லோரையும் நீங்கள் ரசிக்க முடியாது. இதை ஒரு விளையாட்டாக மட்டும் பாருங்கள். அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசாமல் அவர்களை நிம்மதியாக வாழ விடுங்கள்’ என்று அனிதா சம்பத் தெரிவித்துள்ளார். அனிதாவின் இந்த பதிலடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஷாலின் ‘சக்ரா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சக்ரா…

விஷால் நடித்து முடித்துள்ள ‘சக்ரா’ என்ற திரைப்படம் ரிலீஸ்க்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னரே தயாராகி விட்டது என்றாலும் இந்த படம் குறித்த வ ழக்கு ஒன்று நீதிமன்றத்தில் இருந்ததால் இந்த படத்தின் ரிலீஸ் தாமதம் ஆனது. தற்போது நீதிமன்றம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய அனுமதி அளித்துவிட்டதை அடுத்து இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

முதலில் இந்த படம் ஓடிடியில் ரிலீஸாகும் என்று கூறப்பட்டது என்பதும் முன்னணி ஓடிடி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது விஜய்யின் ’மாஸ்டர்’ மற்றும் சிம்புவின் ’ஈஸ்வரன்’ ஆகிய இரண்டு படங்களும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட விஷால் முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 12 என தகவல் வெளிவந்துள்ளது. மேலும் பிப்ரவரி 12 முதல் இந்த படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து விஷால் ரசிகர்கள் இந்த படத்தின் ரிலீஸை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால், ரெஜினா, ஷ்ராதா ஸ்ரீநாத், ஸ்ருஷ்டி டாங்கே, ரோபோ சங்கர், மனோபாலா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எம்எஸ் ஆனந்தன் இயக்கியுள்ள இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி- என்ன இப்படி ஆகிடுச்சு!
குக் வித் கோமாளி 2…

மற்றவர்களை சிரிக்க வைப்பது என்பது தான் உலகில் உள்ள மிக கஷ்டமான ஒரு விஷயம். அப்படி ஒரு விஷயத்தை அசால்ட்டாக செய்து வருகின்றனர் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி குழுவினர்.

கண்டிப்பாக ஷோவை இப்படி காமெடியாக கொண்டு செல்ல நிகழ்ச்சி குழுவினர் பெரிய உழைப்பை போட்டிருப்பார்கள்.

இப்போது ஷோ மிகப்பெரிய ஹிட், எப்போது அடுத்த ஷோ வருமோ என ரசிகர்கள் புலம்பும் அளவிற்கு செம ரீச். தற்போது இந்நிகழ்ச்சி ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி வந்துள்ளது.

அதாவது கடந்த வாரம் பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சி என்பதால் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி நின்றது. இந்த வாரம் சூப்பர் சிங்கர் என்பதால் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி இல்லையாம்.

இது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை கொடுத்துள்ளது என்று தான் கூற வேண்டும்.
மீண்டும் பிரபமாண்ட முறையில் துவங்க காத்திருக்கும் பிக் பாஸ்.. கலைகட்டப்போகும் நிகழ்ச்சி..!
பிக்பாஸ்…

உலகளவில் பிரபமாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாக கொண்டாடப்பட்டு வருவது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

ஆம் சமீபத்தில் தான் கமல் ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நல்ல முறையில் நடந்த முடிந்தது.

அதற்குள் மீண்டும் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 குறித்து பல விதமான தகவல்கள் வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கன்னட திரையுலகில் பிக் பாஸ் சீசன் 8 கூடி விரைவில் துவங்க இருக்கிறது என புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

ஆம் கன்னடத்தில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8ன் நிகழ்ச்சி தொகுப்பாளர் நடிகர் கிச்சா சுதீப் கையில் பிக் பாஸ் புகைப்படத்துடன் இருக்கும் கப் ஒன்றை வைத்துள்ள புகைப்படம் தான் அது.

போட்டிபோட்டு வசூல் வேட்டையில் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன்- பக்கா மாஸ்!
மாஸ்டர்-ஈஸ்வரன்…

கொ ரோ னா பி ர ச்சனை முடிந்து புதிய வருடத்தில் திரையரங்குகளில் வெளியான முதல் திரைப்படம் விஜய்யின் மாஸ்டர்.

இப்பட ரிலீஸின் அடுத்த நாளே சிம்பு நடித்த ஈஸ்வரன் படமும் வெளியானது.

அதன்பிறகு எந்த ஒரு பெரிய நடிகரின் படமும் வெளியாகவில்லை என்பதால் இந்த இரண்டு படங்களும் வசூலில் கலக்கி வருகிறது.

மாஸ்டர் உலகம் முழுவதும் ரூ. 200 கோடியை எப்போதோ தாண்டி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.