ஏன் இப்படி? பிக்பாஸ் லாஸ்லியா புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!

லாஸ்லியா…

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா அந்த சீசனில் மிகப்பெரிய புகழ் பெற்றார் என்பதும் அவருக்கு சமூக வலைதளங்களில் மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் குவிந்தது என்பதும் தெரிந்ததே.

இதன் காரணமாக அவர் தற்போது தமிழ் திரையுலகில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படங்களின் படப்பிடிப்புகள் இறுதிகட்டத்தில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலைகளில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சமூகவலைதளங்களில் லாஸ்லியா ஆக்டிவாக இருந்த நிலையில் திடீரென அவரது தந்தையின் மறைவு காரணமாக கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் காணாமல் இருந்தார்

இதனை அடுத்து இம் மாதம் மூன்றாம் தேதி அவர் மீண்டும் சமூக வலைதளங்களில் எண்ட்ரி ஆகி தனது இன்ஸ்டாவில் கருப்பு வெள்ளை புகைப்படத்தை வெளியிட்டார் என்பதும், இந்த புகைப்படம் இந்திய அளவில் வைரலானது என்பதும் தெரிந்ததே.

அதன் பின் பொங்கல் தினத்தில் பாவாடை தாவணியில் அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தான் தந்தை மறைவின் சோகத்தில் இருந்து மீண்டு விட்டதை அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டு இருந்தார்

இந்த நிலையில் தற்போது அவர் லாஸ்லியா மாடர்ன் உடையில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். சற்றே கவர்ச்சியுடன் கூடிய இந்த புகைப்படம் பார்ப்பதற்கு சூப்பராக இருந்தாலும் அவரது முகம் சோகமாக இருப்பதை பார்த்து ’லாஸ்லியா ஏன் இப்படி? இன்னும் தந்தையின் சோகத்தில் இருந்து மீண்டு வர வில்லையா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இருப்பினும் இந்த புகைப்படமும் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

பிக்பாஸ் ஆரியின் அடுத்த படத்தில் சரத்குமார் வில்லனா?

ஆரி…

பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி ஏற்கனவே ’அலேகா’, ‘பகவான்’ மற்றும் ’எல்லாம் மேல இருக்குறவன் பாத்துக்குவான்’ ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது ஆரிக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொ ண் டிருக்கின்றன.

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வெற்றி பெற்ற ஒரு சில நாட்களிலேயே ஒரு புதிய படத்தில் நடிக்க ஆரி ஒப்பந்தமானார். பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாசின் உதவியாளர் ஹரிஹரன் என்பவர் இயக்கும் இந்த படத்தில் முதல் முறையாக போ லீ ஸ் அ திகாரி வேடத்தில் ஆரி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் மலையாள நடிகர் சரத்குமார் என்பவர் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

‘அங்கமாலி டைரீஸ்’ என்னும் மலையாளப் படத்தில் நடித்து அனைவரின் கவனத்தை பெற்ற இவர், விஷாலின் ’சண்டக்கோழி’ மணிரத்னம் இயக்கிய ’செக்கச் சிவந்த வானம்’ மற்றும் ’ஆட்டோ சங்கர்’ வெப் சீரிஸ் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் தனுஷுடன் மோத தயாராகும் சந்தானம்!

தனுஷ் – சந்தானம்..

தமிழ் திரையுலகில் பிசியான நடிகர்களாக வலம்வரும் தனுஷ், சந்தானம் ஆகியோரின் படங்கள் ஒரே நாளில் ரிலீசாக உள்ளதாம்.

மாஸ்டர் படத்திற்கு திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பால், முன்னணி நடிகர்களின் படங்கள் வரிசையாக ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

அதன்படி கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் காதலர் தினத்தையொட்டி வருகிற பிப்ரவரி மாதம் 12-ந் தேதி ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அதற்கு போ ட் டியாக அதே நாளில் சந்தானம் நடித்துள்ள பாரிஸ் ஜெயராஜ் படமும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏ1 படத்தை இயக்கிய ஜான்சன் கே இப்படத்தை இயக்கி உள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி இருக்கும் இதில் சந்தானம் தாதாவாக நடித்துள்ளார்.

தனுஷ், சந்தானம் படம் ஒரே நாளில் ரிலீசாக உள்ளதால் ரசிகர்களிடையே எ தி ர் பா ர் ப்பு அதிகரித்துள்ளது.

சினிமாவில் எண்ட்ரியாகும் பிக்பாஸ் பாலா… ரசிகருக்கு கூறிய குட்நியூஸ்!

பாலாஜி…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி இறுதிப்போட்டியில் ரன்னர் ஆகத் தேர்வு செய்யப்பட்டார். அவரது ரசிகர்கள் அவர் ஜெயிக்கவில்லையே என வ ரு த்தப்பட்டனர்.

ஆனால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு ஏராளனமான ரசிகர்கள் உலகமெங்கிலும் உருவாகியுள்ளனர்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சுவாரஸ்யமான பதிலை அளித்துள்ளார்.

குறித்த ரசிகர் கேட்ட கேள்வி என்னவெனில், சினிமாவில் நடிக்க விருப்பமா என்று பாலாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பாலா அளித்த பதில், நீங்கள் என்னை விரைவில் திரையில் பார்க்கலாம் என்று கூறி ரசிகர்களுக்கு இன்ப அ தி ர்ச்சி கொடுத்துள்ளார்.

ருத்ரன் படப்பிடிப்பை தொடங்கிய ராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் கூட்டணி!

ருத்ரன்…

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் பேய் படங்களில் ஹிட் கொடுப்பதில் ராகவா லாரன்ஸூக்கு நிகர் யாருமில்லை. ஒரு நடிகர், இயக்குநர், நடன இயக்குநர், பின்னணி பாடகர், இசையமைப்பாளர் என்று பல திறமைகளை கொண்டுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸ் நடிப்பில் முனி 4: காஞ்சனா 3 படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது ருத்ரன் என்ற படத்தில் நடிக்கிறார்.

இதில், இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்
தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் ருத்ரன் படத்தின் மூலமாக இயக்குநராகவும் அவதாரம் எடுக்கிறார்.

இவர் இதற்கு முன்னதாக பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா ஆகிய படங்களை தயாரித்துள்ளார். தற்போது ருத்ரன் படத்தை இயக்குவதோடு அந்தப் படத்தை தயாரிக்கவும் செய்கிறார். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்த நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்ற பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதில், ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ்,

இயக்குநர் கதிரேசன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகியோர் பலர் கலந்து கொண்டனர். தற்போது இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில், ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்ததோடு, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது உயிரிழந்த சேலத்தைச் சேர்ந்த யோகேஸ்வரனின் நினைவாக அவன் பெயர் பொறித்த தங்க காசுகளை பரிசாக வழங்க முடிவு செய்துள்ளேன் என்று டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாற்று சாதனை படைத்த மாஸ்டர்: தமிழ் சினிமாவுக்கே கிடைத்த பெருமை!

மாஸ்டர்…

தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் இன்னும் ஓரிரு நாட்களில் ரூ.200 கோடி வசூல் அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆகியோரது நடிப்பில் உருவான படம் மாஸ்டர். மேலும், ஆண்ட்ரியா, சாந்தணு, சஞ்சீவ், ஸ்ரீமன், பிரேம்குமார், ரம்யா சுப்பிரமணியன், பிரிகிதா, கௌரி கிஷான் என்று ஏராளனமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.

விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தனது எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கொரோனா லாக்டவுன் காரணமாக வெளியாகாமல் இருந்த மாஸ்டர் படம் கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு கடந்த 13 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்தது. வெளியானது முதல் தொடர்ந்து வசூல் குவித்து வருகிறது.

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படம் திரைக்கு வந்து 3 நாட்கள் ஆன நிலையில் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வரையில் வசூல் செய்துள்ளது என்று சினிமா விமர்சகர்கள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் #Master100CRin3days என்ற ஹேஷ்டேக் பதிவிட்டு தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் தளபதியின் மாஸ்டர் படம் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மாஸ்டர் படம் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது.

அதோடு, உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலும் கொடுத்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஆம், குறைவான நாட்களில் ஒரு படம் இவ்வளவு வசூல் கொடுப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயமில்ல.

அதோடு, 50 சதவிகித இருக்கைகளுடன் கூடிய திரையரங்களுக்கு மட்டுமே அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. அப்படியிருக்கும் போது தளபதியின் மாஸ்டர் இப்படியொரு சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்னதாக விஜய் நடிப்பில் வந்த மெர்சல் படம் ரூ.250 கோடி, சர்கார் ரூ.250 கோடி மற்றும் பிகில் ரூ.300 கோடி என்று வசூல் கொடுத்துள்ளன. தற்போது மாஸ்டர் படமும் ரூ.200 கோடி கொடுத்த படங்களின் பட்டியலில் இணைந்துள்ளது.

இதன் மூலம் உலக அளவில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் கொடுத்த விஜய்யின் படங்களில் மாஸ்டர் படம் 4ஆவது இடம் பிடித்துள்ளது. அதோடு, மாஸ்டர் படம் உள்பட விஜய்யின் நடிப்பில் வந்த கடைசி 4 படங்கள் மொத்தமாக ரூ.1000 கோடி வரையில் வசூல் அள்ளியுள்ளது எனப்து குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வு குறித்து இளம் மருத்துவர் இயக்கி நடித்த திரைப்படம் : வெளியாவதற்கு முன்பே விருதுகளை குவித்து சாதனை!!

இபிகோ 306…

நீட் தேர்வு த.ற்.கொ.லை.யை திருச்சியில் இளம் மருத்துவர் தயாரித்து, இயக்கி நடித்த திரைப்படம் இபிகோ 306 வெளியானது.

தமிழகத்தில் நீட் தேர்வுகளால் தோ.ல் வி அடையும் மாணவ மாணவிகள் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.ளு.ம் அ.வ.ல நிலை ஏற்பட்டது. இந்த கருத்தை மையமாக வைத்து இளம் மருத்துவர் ஒருவர் சினிமாவாக எடுத்துள்ளார்.

இபிகோ 306 என்ற தமிழ் திரைப்படத்திற்கு கதை எழுதி, லால்குடி பகுதியைச் சேர்ந்த 23 வயதான மருத்துவர் சாய் அரவிந்த் இந்த படத்தில் நடித்தும் உள்ளார். இந்தப்படம் வெளியாகும் முன்பே சிறந்த அறிமுக இயக்குநர் விருது உள்ளிட்ட மூன்று விருதுகளை பெற்றுள்ளது. இப்படம் இன்று ஓடிடியில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப்படம் இயக்கப்பட்டது குறித்து மருத்துவர் சாய் அரவிந்த் பெற்றோர்கள் அனுராதா சிவக்குமார், செய்தியாளர்களை சந்தித்தனர். பெற்றோர்கள் எண்ணங்களுக்கு ஏற்ப தங்களது பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர்.

ஆனால் எனது மகன் சாய் அரவிந்த் இளம் வயதிலேயே சினிமா மீது ஆர்வம் இருந்தது. ஆனால் எங்கள் எண்ணப்படி அவனை சிறந்த மருத்துவராக்க வேண்டும் என்ற கனவு இருந்தது.

பிளஸ் டூ படித்து முடித்ததும் பெற்றோரான எங்களுக்கும், எனது மகனுக்கும் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதாவது எங்கள் விருப்பதின் படி சிறந்த மருத்துவராக வேண்டுமெனவும், உனது விருப்பத்தின் படி சினமாத்துறையில் தடம் பதிக்க வேண்டுமென ஏற்பட்ட ஒப்பந்த த்தின்படி இரண்டையுமே என் மகன் நிறைவேற்றியுள்ளார் என பெற்றோர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் உள்ள சிறுமயங்குடி கிராமம், திருக்காட்டுப்பள்ளி, திருச்சி தில்லை நகர் ஆகிய பகுதிகளில் இப் படம் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலம் பவித்ராவிற்கு ஏற்பட்ட சோகம்- அவரே வெளியிட்ட வீடியோ!

பவித்ரா…

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பற்ற தெரியாத நபரே இல்லை. அந்த அளவிற்கு மக்களிடம் பிரபலமாகியுள்ளது இந்நிகழ்ச்சி.

இதில் வரும் ஒரு கியூட்டான பிரபலம் பவித்ரா. இவர் புகழுடன் இணைந்து அடிக்கும் லூட்டிகள் அனைத்தும் வைரலாகும்.

தற்போது இவரது பெயரில் ஒரு மோசமான விஷயம் நடக்கிறதாம். எல்லா நாயகிகளுக்கும் வரும் பிரச்சனை தான். பவித்ரா இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் அளவிற்கு டுவிட்டர் பக்கத்தில் இல்லையாம்.

ஆனால் அவரது பெயரில் நிறைய போலி அக்கவுண்ட் வந்துள்ளதாக அவரே தனது உண்மையான டுவிட்டர் பக்கத்தில் இருந்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிக் பாஸ் நடிகை.. ஹீரோ யார் தெரியுமா?

பிக் பாஸ் பிரபலம்…

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சன் பிக்சர்ஸ். தற்போது இந்த நிறுவனத்தின் கீழ் தளபதி விஜய் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த என முன்னை நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

அதே சன் பிக்சர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் மற்ற பல திரைப்படங்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு படத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரேஷ்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் கதாநாயகனாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் மற்றும் கதாநாயகியாக பிகில் பட நடிகை அமிர்தா அய்யர் நடித்து வருகிறார்.

இப்படத்தை ராஜேஷ் இயக்கி வருகிறாராம். இதுமட்டுமின்றி மற்றொரு பிக் பாஸ் பிரபலம காமெடி நடிகர் டேனியல் நடித்து வருகிறார்.

முதன்முதலாக அண்மையில் பிறந்த தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளர் விஜய்- கியூட் புகைப்படம்!

ஆர்.ஜே. விஜய்…

கொரோனா லாக் டவுன் காலத்தில் பல சினிமா பிரபலங்களுக்கு நல்ல விஷயம் நடந்துள்ளது.

கல்யாணம், நிச்சயதார்த்தம், குழந்தை பிறப்பு என பல நடந்துள்ளன.

அப்படி தொகுப்பாளர் ஆர்.ஜே. விஜய்க்கும் ஒரு ஸ்பெஷல் விஷயம் நடந்தது. அது என்னவென்றால் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இதுவரை தனது மகனின் புகைப்படத்தை வெளியிடாத அவர் முதன்முதலாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்

இதோ அவரது அழகிய குடும்பத்தின் புகைப்படம்,