இரவு பார்ட்டியில் நடிகை நயன்தாராவுடன், நடிகர் சிலம்பரசன்..!

சிம்பு – நயன்தாரா…

வல்லவன் திரைப்படத்தின் மூலம் ஜோடியாக இணைந்து நடிக்க துவங்கியவர்கள் நடிகர் சிம்பு மற்றும் நடிகை நயன்தாரா.

படப்பிடிப்பு போது காதல் ஏற்பட்டதால், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்து ச ர் ச்சையில் சிக்கியது.

இதன்பின் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் இருவரும் பிரிந்துவிட்டோம் என்று தெரிவித்தனர். காதல் பிரிவிற்கு பின்பும் இருவரும் இணைந்து படம் நடித்தனர்.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் இருவரும் இரவு பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

“எனக்கு உடல்நிலை சரியில்ல”… ஆரி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

ஆரி….

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ஆரி நேர்மையாக விளையாடி மக்கள் மனதை வென்று முதல் இடத்தை பிடித்து டைட்டில் வென்றார். இதில் 16.5 கோடி வாக்குகள் பெற்ற ஆரி பாலாவை விட 10 கோடி வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்துள்ளார்.

அவரது வெற்றியை கொண்டாடிய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களையும் , பாராட்டுக்களையும் தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது ஆரி தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” உங்களை எல்லோரையும் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என காத்திருக்கின்றேன்.

எனக்கு உடல் நிலை சரியில்லை… டிக்கெட் டூ பினாலேவில் இருந்து எனக்கு உடம்பு முடியல… எனவே வெகு விரைவில் உங்களை சந்தித்து நீங்கள் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் நேரலையில் பதிலளிக்கிறேன் என கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதை அடுத்து அவரது ரசிகர்கள் அனைவரும் ” ஒன்னும் அவசரமில்லை தலைவா நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க ” என ஆறுதல் கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Aari Arujunan (@aariarujunanactor)

கமல் பிராண்டை விமர்சனம் செய்த சுசித்ரா: பதிலடி கொடுத்த நெட்டிசன்!

சுசித்ரா…

பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சியில் கமல்ஹாசன் ஹவுஸ் ஆப் கதர் என்ற ஒரு பிராண்டை அறிமுகப்படுத்தினார் என்பது தெரிந்ததே. இந்த பிராண்டை மோசமாக விமர்சனம் செய்த பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சுசித்ராவுக்கு பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவ்வப்போது கதர் ஆடை குறித்து கமலஹாசன் பேசி வந்தார் என்பது தெரிந்ததே. அவர் ஏன் கதராடை குறித்து பேசினார் என்பது இறுதி நிகழ்ச்சியில் தான் அனைவருக்கும் புரிந்தது.

கமல்ஹாசன் ’ஹவுஸ் ஆஃப் கதர்’ என்ற ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து உள்ளதாகவும் அதற்கான லோகோவை வெளியிடுவதாகவும் இறுதி நிகழ்ச்சியில் தெரிவித்தார். இந்த நிறுவனத்தின் மூலம் நெசவாளர்களுக்கு உதவி செய்யும் வகையில் அனைவருக்கும் கதராடை கிடைக்கும் வகையில் வழி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதுமட்டுமின்றி இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவருக்கும் கதர் ஆடையே கொடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சுசித்ரா இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் மோசமான விமர்சனம் ஒன்றை செய்திருந்தார். கமல்ஹாசன் கொடுத்த துணி கதர் இல்லை என்றும் அதுவொரு சிந்தடிக் துணி என்றும் கமல்ஹாசனின் முட்டாள்தனமான பிராண்ட் மற்றும் கேவலமான ரசனையுடன் கூடிய டிசைன் தனக்கு கொடுக்கப்பட்டது என்றும் சிந்தடிக் என தெரிந்தும் அதனை கதர் என்று காண்பிக்க சொன்னார்கள் என்றும், இந்த ஹவுஸ் ஆப் கதர் நிறுவனத்திற்காக அவர் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்றும் தெரிவித்திருந்தார்

இதுகுறித்து நெட்டிசன் ஒருவர் ஹவுஸ் ஆஃப் கதர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்வி எழுப்பிய நிலையில், ‘சுசித்ரா அணிந்தது கதர் ஆடை தான் என்றும் ஆனால் அவர் விரும்பியவாறு அவர் அணிந்த சட்டை மட்டும் கதர் ஆடையான அவர் அணிந்து இருந்தார் என்றும் பதிலளிக்கப்பட்டது. இதன்மூலம் சுசித்ராவின் பொய் அம்பலமானது என்று நெட்டிசன்கள் சுசித்ராவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இணையத்தில் பரவும் மோசமான வீடியோ – மன வருத்தத்தில் விஸ்வாசம் அனிகா வெளியிட்ட வீடியோ பதிவு..!

அனிகா…

தல அஜித் நடிப்பில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் என்னை அறிந்தால்.

இப்படத்தில் தல அஜித்திற்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் அனிகா.

இவர் தொடர்ந்து நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானார்.

இந்நிலையில் இணையத்தில் நடிகைகள் குறித்து பலவிதமான மோ ச மான பதிவுகள் ப ரவி வருகின்றன. அந்த வகையில் தற்போது அனிகாவின் முகத்தை Morphing செய்து மிக மோசமான வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வந்தது.

இதனால் மனமுடைந்து போன அனிகா தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மகாபாரத கதையில் சமந்தா: இளம் நடிகருக்கு ஜோடியாகிறார்!

சமந்தா…

மகாபாரத காவியத்தில் உள்ள சகுந்தலை என்ற கதையில் சமந்தா நடிக்க இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக இளம் நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

மகாபாரதத்தில் உள்ள சாகுந்தலம் என்ற புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் குணசேகர் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்த ‘ருத்ரமாதேவி’ உள்பட ஒருசில படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் சகுந்தலை கேரக்டரில் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அவருக்கு ஜோடியாக துஷ்யந்தன் கேரக்டரில் நடிக்க மலையாள இளம் நடிகர் தேவ் மோகன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

துஷ்யந்தன் என்ற மன்னனை காதலிக்கும் சகுந்தலை விசுவாமித்திர முனிவர் சாபம் காரணமாக கணவனை பிரிகிறார். துஷ்யந்தன் சகுந்தலையை மறக்கும் நிலை ஏற்படுகிறது. இதன் பின் பல துன்பங்களைக் கடந்து கணவருடன் எப்படி இணைகிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

இந்த படத்தில் சகுந்தலையாக நடிக்க பல முன்னணி நடிகைகளிடம் இயக்குனர் குணசேகர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க யாரும் முன்வராத நிலையில் தற்போது சமந்தா ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.

அதேபோல் துஷ்யந்தன் கேரக்டருக்கும் முன்னணி தெலுங்கு நடிகர்களிடம் குணசேகர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஆனால் தற்போது மலையாள நடிகர் தேவ் மோகன் ஒப்பந்தமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தெரிகிறது.

தளபதி விஜயுடன் ஹாட்ரிக் அடிக்கும் சூப்பர் சிங்கர்!

தளபதி விஜய்…

தளபதி விஜய் நடித்த ’பிகில்’ மற்றும் ’மாஸ்டர்’ படத்தில் நடித்த சூப்பர் சிங்கர் தற்போது ’தளபதி 65’ படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இல் கலந்துகொண்டு மக்களின் மனதில் இடம் பிடித்தவர் பூவையார். கானா பாடல்களை பாடி அசத்திய இவர் விஜய்யுடன் பிகில் என்ற படத்தில் நடித்தார் என்பதும் அந்த படத்தில் ஒரு பாடலையும் விஜய்யுடன் பாடி இருந்தார் என்பதும் தெரிந்ததே.

அதேபோல் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படத்திலும் ஒரு சிறிய கேரக்டரில் பூவையார் நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிகில், மாஸ்டர் படங்களை அடுத்து விஜய் நடிப்பில் நெல்சன் இயக்க இருக்கும் ’தளபதி 65’ படத்திலும் ஒரு சிறிய கேரக்டரில் பூவையார் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

விஜய்யுடன் அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்கும் பூவையாருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ’தளபதி 65’ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பதும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

போல்ட் அண்ட் பியூட்டிபுல் தோழியுடன் நான்: பிக்பாஸ் அனிதாவின் வைரல் பதிவு!

அனிதா…

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது என்பதும், இந்த சீசனில் ஆரி வின்னர் ஆகவும் பாலாஜி ரன்னராகவும் வெற்றி பெற்றார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 4ல் மக்களின் மனம் கவர்ந்த போட்டியாளர்களில் அனிதா மற்றும் சனம்ஷெட்டி ஆகிய இருவரும் என்பதும், இருவருமே தங்கள் மனதில் தோன்றியதை தைரியமாக பேசியதால் சர்ச்சைக்கு உள்ளான போதிலும் பெரும்பாலான மக்களின் மனதில் இடம்பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் பிக்பாஸ் வீட்டில் இருவரும் சிறந்த தோழிகளாக இருந்தனர் என்பதும், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பின்னரும் தங்களது நட்பை அனிதா மற்றும் சனம்ஷெட்டி தொடர்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அனிதா தனது சமூக வலைத்தளத்தில் ’போல்ட் அண்ட் பியூட்டிஃபுல் தோழியுடன் நான்’ என்று சனம்ஷெட்டியுடன் உள்ள ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் அடித்த சனம்ஷெட்டி கூறியதாவது:

மிக்க நன்றி அனிதா. பிக் பாஸ் மூலம் ஒரு அன்பான தோழியை கண்டுபிடித்தது எனக்கு அதிர்ஷ்டம். நீங்கள் இங்கு செய்யும் எல்லாவற்றிலும் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். உங்களை பற்றிய அழகிய நினைவுகள் எப்போதும் எனக்கு இருக்கும். நீங்கள் பெற்ற விருதுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அந்த விருது உங்களுக்கு மிகவும் பொருத்தமானது’ என்று பதிவு செய்துள்ளார்.

அனிதாவின் இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் பல்வேறு கமெண்ட் அளித்து வரும் நிலையில் நீங்கள் இருவரும் தான் உண்மையான பிக் பாஸ் வின்னர்கள் என்றும், நிஜ சிங்கப்பெண்கள் என்றும், உங்கள் இருவரையும் நினைத்து பெருமைப்படுவதாகவும் பலர் பதிவு செய்து வருகின்றனர்.

கதாநாயகியாக களமிறங்கும் மறைந்த நடிகையின் மகள்!

குஷி…

தமிழ், இந்தி மொழிகளில் நடித்த பிரபலமான மறைந்த நடிகையின் இரண்டாவது மகள் கதாநாயகியாக புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

நடிகை ஸ்ரீதேவி-போனிகபூர் தம்பதிக்கு ஜான்வி, குஷி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். ஸ்ரீதேவி கடந்த 2018-ல் துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றபோது நட்சத்திர ஓட்டலில் குளியல் அறை தொட்டியில் மூழ்கி இறந்தார். போனிகபூர் பிரபல தயாரிப்பாளராக இருக்கிறார்.

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி ஏற்கனவே தடக் இந்தி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து குஞ்சன் சக்சேனா படத்திலும் கதாநாயகியாக நடித்தார்.

அடுத்து தோஸ்தானா 2, ரூஹி அப்ஸானா, குட்லக் ஜெர்ரி ஆகிய 3 படங்களில் நடித்து வருகிறார். குட்லக் ஜெர்ரி தமிழில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக் ஆகும்.

இந்த நிலையில் ஸ்ரீதேவியின் 2-வது மகள் குஷியும் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இதுகுறித்து போனிகபூர் கூறும்போது ‘குஷி சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார்.

இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்’ என்றார். பிரபல இயக்குனர் படத்தில் அவர் நடிக்க உள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

சிம்புவிடம் “ஐ அம் வெயிட்டிங்” சொன்ன பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி!

ஆரி…

கிருஷ்ணா இயக்கத்தில் நெடுஞ்சாலை படத்தில் நடித்திருந்தார் ஆரி. திரைக்கதை விறுவிறுப்பாக இருந்ததால் நெடுஞ்சாலை படம் வெற்றி பெற்றது. தற்போது முடிந்த பிக் பாஸ் சீசன் 4 இல் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் ஆக வெற்றி பெற்றார் ஆரி . பல்வேறு அவமானங்களையும், சண்டைகளையும், சங்கடங்களையும் சந்தித்து ஆரி அதில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அவர் சிம்பு நடிப்பில் வெளியாகவிருக்கும் பத்து தல படத்துக்காக காத்திருப்பதாக ட்வீட் செய்துள்ளார்.

பத்துத்தலை படத்தை நெடுஞ்சாலை படத்தின் இயக்குனர் கிருஷ்ணாவே இருக்கிறார். கிருஷ்ணா இதற்கு முன் நெடுஞ்சாலை மற்றும் சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன் வெளியான பத்து தல படத்தின் போஸ்டரை பகிர்ந்து ட்வீட் செய்துள்ள ஆரி, ” எனது நெடுஞ்சாலை படத்தின் இயக்குனர் கிருஷ்ணாவுக்கு வாழ்த்துக்கள்.

சிம்பு, கௌதம் கார்த்திக், கிருஷ்ணா ஆகியோரின் ஆட்டத்தை பார்க்க காத்திருக்கிறேன்” என்று அதில் கூறியுள்ளார். இந்த ட்வீட்டை சிம்பு கௌதம் கார்த்திக் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

கலியுக முடிவில் பூமி மிஞ்சி இருக்குமா? இருக்காதா? ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் கலியுகம் பட பூஜை!

ஷ்ரத்தா ஸ்ரீநாத்…

ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகும் கலியுகம் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.

தல அஜித் நடிப்பில் வந்த நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் உலகம் முழுவதும் அறியும் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். அண்மையில், இவரது நடிப்பில் மாறா படம் வெளியானது. இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தமிழில், காற்று வெளியிடை, இவன் தந்திரன், விக்ரம் வேதா, ரிச்சி, கே-13 என்று பல படங்களில் நடித்துள்ளார். தற்போது விஷால் நடிப்பில் உருவாகி வரும் சக்ரா படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இது தவிர தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் கலியுகம் என்ற படத்திலும், ஆராட்டு என்ற மலையாள படத்திலும், ருத்ரப்ரயாக் மற்றும் கோத்ரா என்ற கன்னட படங்களிலும், நருடி ப்ரதுகு நடானா என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் கலியுகம் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் பிரமோத் ஷங்கர் இயக்குகிறார்.

ஹாரர் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படம் கலியுகம் என்றால் என்ன? கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமா? கலியுக முடிவில் பூமி மிஞ்சி இருக்குமா? இருக்காதா? என்பதையெல்லாம் சுட்டிக்காட்டும் விதமாக இந்தப் படம் உருவாக்கப்பட இருக்கிறது. அதோடு, 2050 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்த உலகம் எப்படியிருக்கும் என்பது போன்று செட் அமைக்கப்பட்டு படம் உருவாக்கப்பட இருக்கிறது. இதற்கு முன்னதாக இது போன்ற ஒரு கதையை இந்திய சினிமாவில் யாரும் கொடுத்திருக்க முடியாது.

சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு சித்தரிக்கப்பட்ட கலியுகத்தில் முன்னணி நடிகையாக நடிப்பதற்கு ஷ்ரத்தா ஸ்ரீநாத் எப்போதும் தயாராக இருந்துள்ளார். இந்த கொரோனா காலகட்டத்தை கலியுகத்துடன் தொடர்புபடுத்தி மக்களை எளிதாக புரிந்துகொள்ள வைக்க முடியும் என்பதற்காகவே கலியுகம் படம் தற்போது உருவாகிறது.

ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராமுக்கு உதவியாளராக பணியாற்றிய ராம்சரண் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். பிரைம் சினிமாஸ் நிறுவனம் சார்பில் கே எஸ் ராமகிருஷ்ணா இந்தப் படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விவரம் விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.