காலை அதிகாலை பாடல்…
மகளின் கியூட் வீடீயோவை வெளியிட்ட ஆல்யா மானசா !
ஆல்யா மானசா…

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான தொடர்களில் ஒன்று ராஜா ராணி. இந்த தொடரின் மூலம் பிரபலமானவர் மிகவும் பிரபலமானவர் ஹீரோயினாக நடித்த ஆல்யா மானசா.குறுகிய காலத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் இதயங்களில் இடம்பிடித்துவிட்டார்.

இந்த தொடரில் ஹீரோவாக சஞ்சீவ் நடித்து வந்தார்.இவரும் இந்த தொடரின் மூலம் மிகவும் பிரபாலமானவராக மாறினார்,இவருக்கும் தனியொரு ரசிகர் பட்டாளமே இருந்தது.இவர்கள் ஜோடியாக மக்கள் மனதில் இடம்பிடிக்க இருவரும் நிஜத்திலும் ஜோடியாக மாறினர்.

இந்த தொடரில் ஹீரோவாக நடிக்கும் சஞ்சீவுக்கும் மானசாவுக்கும் காதல் மலர்ந்தது.இதனை அடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.சஞ்சீவ் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றின் மொழி என்ற தொடரில் நடித்து வருகிறார்.ஆல்யா மானசா சஞ்சீவ் தம்பதிக்கு சில மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.இந்த குழந்தைக்கு ஐலா சையத் பெயரிட்டிருந்தனர்.

மகளின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சஞ்சீவ் மற்றும் ஆலியா இருவரும் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து வந்தனர்.ராஜா ராணி தொடரை அடுத்து கல்யாணம்,குழந்தை என்று பிஸியாக இருந்தார் ஆல்யா.

ஒரு சிறிய இடைவேளைக்கு பின் ராஜா ராணி 2 தொடரின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார் ஆல்யா.இந்த தொடரில் திருமணம் சீரியல் புகழ் சித்து ஹீரோவாக நடித்துள்ளார்.இந்த தொடர் தற்போது ஒளிபரப்பாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தற்போது தனது மகளின் கியூட்டான வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் ஆல்யா மானசா.குழந்தையின் செம கியூட்டான இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சமூகவலைத்தளங்களில் செம வைரலாக பரவி வருகிறது.
View this post on Instagram
சினம் படத்தின் என்னில் பாய்ந்திடும் காதலே பாடல் ப்ரோமோ !
சினம்…

தமிழ் சினிமாவில் தனது விடாமுயற்சியால் தடம் பதித்தவர் அருண் விஜய்.இவர் கடைசியாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தயாராகியிருந்த மாஃபியா படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தில் பிரசன்னா ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

ப்ரியா பவானி ஷங்கர் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

மாஃபியா படத்தின் ரிலீஸை தொடர்ந்து அருண்விஜய் சினம்,பாக்ஸர்,அக்னி சிறகுகள்,அருண் விஜய் 31 உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.கொரோனா பாதிப்பிற்கு முன் அறிவழகன் இயக்கத்தில் உருவாகி வந்த அருண் விஜய் 31 படத்தில் விறுவிறுப்பாக நடித்து வந்தார்.கொரோனா பாதிப்பு காரணாமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது.

சினம் படத்தை நினைத்தாலே இனிக்கும்,ஹரிதாஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய GNR குமரவேலன் இயக்குகிறார்.

குப்பத்து ராஜா,சிக்ஸர் உள்ளிட்ட படங்களில் நடித்த Palak Lalwani இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தில் அருண் விஜய் போலீசாக நடித்துள்ளார்.கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.

இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.இந்த படத்தின் டீஸர் பொங்கலை முன்னிட்டு வெளியாகிரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.தற்போது இந்த படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
சூரரைப் போற்று படத்தை பின்னுக்கு தள்ளிய புலிக்குத்தி பாண்டி!
புலிக்குத்தி பாண்டி…

விக்ரம் பிரபு நடிப்பில் உருவான புலிக்குத்தி பாண்டி நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், டிஆர்பியில் முதலிடம் பிடித்துள்ளது.
தமிழ் சினிமாவில் கும்கி படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகர் விக்ரம் பிரபு. இந்தப் படத்தைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் அவர் நடித்திருந்தாலும், அவருக்கு கும்கி மட்டுமே நல்லவொரு அடையாளத்தை கொடுத்துள்ளது.

இவன் வேறமாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வாகா, வீர சிவாஜி, சத்ரியன், நெருப்புடா, பக்கா, 60 வயது மாநிறம், துப்பாக்கி முனை, வானம் கொட்டட்டும், அசுரகுரு என்று பல படங்களில் நடித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மாட்டுப் பொங்கல் தினத்தை முன்னிட்டு விக்ரம் பிரபு நடிப்பில் உருவான புலிக்குத்தி பாண்டி நேரடியாக தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது.

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் குடும்பக் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். மேலும், சமுத்திரக்கனி, சிங்கம்புலி, ஆர் கே சுரேஷ், ஆடுகளம் நரேன், KPY பாலா, KPY தீனா என்று ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தனர்.
கொம்பன், மருது, தேவராட்டம் ஆகிய படங்களின் வரிசையில் முத்தையா புலிக்குத்தி பாண்டி படத்தை இயக்கியிருந்தார். ஆனால், எந்தப் படத்திலும் இல்லாத வகையில் புலிக்குத்தி பாண்டி படத்திற்கு கிளைமேக்ஸ் அமைந்திருந்தார்.

ஆம், ஆரம்பம் முதலே அடிதடி என்று அமர்க்களப்படுத்தி வந்த நம்ம ஹீரோ விக்ரம் பிரபுவை திருமணத்திற்குப் பிறகு அப்படியே எந்த சண்டைக்கும் போகாத ஒரு வித்தியாசமான ஹீரோவாக காட்டி இறுதியில் அதுவே அவருக்கு எமனாக அமைவது போன்று காட்சியமைந்திருந்தார். அதாவது, ஹீரோவை வில்லன் கொலை செய்கிறார். இதையடுத்து, ஹீரோவின் மனைவியான லட்சுமி மேனன் வில்லனை பழிவாங்குகிறார்.
இது தான் படத்தின் கதை. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது. திரையரங்குகளில் மாஸ்டர், ஈஸ்வரன் ஆகிய படங்கள் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் நிலையில் புலிக்குத்தி பாண்டி நேரடியாக தொலைக்காட்சியில் வெளியானது. எனினும், இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மாட்டுப் பொங்கல் தினத்தன்று வெளியான புலிக்குத்தி பாண்டி படம் டிஆர்பியில் முதலிடம் பிடித்துள்ளது.
Pongal Television race Week 2, 2021 Top 5 Tamil Programme
WTP Impressions for #PulikuthiPandi – 13,284,000#SooraraiPottru – 10,988,000#Darbar (Repeat) – 8,127,000
Congrats @iamVikramPrabhu #LakshmiMenon👍 @SunTV pic.twitter.com/W83oipnYaV
— Mithun K Raman (@mithunraman) January 21, 2021
இதே போன்றுதான், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சூரரைப் போற்று படம் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால், புலிக்குத்தி பாண்டி படத்திற்கு கிடைத்த வரவேற்பை விட சூரரைப் போற்று படத்திற்கு போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் விக்ரம் பிரபு கூறியிருப்பதாவது: தொலைக்காட்சியில் தமிழ் மூவி புலிக்குத்தி பாண்டி படத்தை 1,32,84,000 இத்தனை பேர் பார்த்துள்ளனர். மேலும், TRP 17.05 என்று குறிப்பிட்டுள்ளார்.
3வது திருமண நாள், கணவருடன் எடுத்த அழகிய புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பாவனா!
நடிகை பாவனா…

நடிகை பாவனா மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பின் தமிழில் களமிறங்கிய அவர் சில படங்களே நடித்தார்.

அதன்பின் அவர் தமிழில் நடிக்க ஆர்வம் காட்டவில்லையா இல்லை பட வாய்ப்புகள் வரவில்லையா என்பது தெரியவில்லை. தமிழ் சினிமாவில் அதிகம் படங்கள் அவர் நடிக்கவில்லை.

சில வருடங்களுக்கு முன் பெரிய பிரச்சனையில் சிக்கிய பாவனா பின் அதில் இருந்து மீண்டு தனது திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்து வருகிறார்.

நேற்று அவருக்கு 3வது வருட திருமண நாள், எனவே கணவருடன் எடுத்த அழகிய புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
View this post on Instagram
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் ரம்யா மற்றும் சோம் குறித்து பரவும் புகைப்படம்?
சோம் சேகர் – ரம்யா பாண்டியன்…

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று கடந்த ஞாற்றுக்கிழமை அன்று முடிவடைந்தது.

மேலும் இதில் அதிக வாக்குகளை பெற்று ஆரி பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை பெற்றார்,

அவருக்கு அடுத்தடுத்த இடத்தில் பாலா மற்றும் ரியோ இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்தனர்.

இதனிடையே பிக்பாஸ் போட்டியை முடித்துள்ள நட்சத்திரங்கள் பலரும் தங்களின் அன்றாட வேளையில் பிஸியாகி உள்ளனர்.

இந்நிலையில் தற்போது சோம் சேகர் மற்றும் ரம்யா பாண்டியனுடன் நடந்த சில கியூட்டான விஷயங்களை, ரசிகர் ஒருவர் கார்ட்டூனாக மாற்றியுள்ளார்.

இதை கண்ட சோம் மற்றும் ரம்யாவின் ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்.. எப்போது தெரியுமா..?
மாஸ்டர்…

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் மாஸ்டர்.

வெளியாகி தற்போது வரை உலகளவில் சுமார் 200 கோடியும், தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 100 கோடி வரையும் பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்துள்ளது என்று தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி அமேசான் பிரைமில் ஒளிபரப்பாக இருக்கிறது என்று தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று மாஸ்டர் திரைப்படம் சன் டிவியில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறதாம்.
ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாகும் பிகில் பட நடிகை!
ஜிவி பிரகாஷ்…

ராஜேஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க பிகில் பட நடிகை ஒப்பந்தமாகி உள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் ஜிவி பிரகாஷ், படங்கள் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், இவர் கைவசம் ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, ஜெயில், காதலிக்க நேரமில்லை, பேச்சிலர், 4ஜி, டிராப் சிட்டி என பத்துக்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன.

இந்நிலையில், இவர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. அதன்படி சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களை இயக்கிய ராஜேஷ் இப்படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் நடிக்க உள்ளார்.

மேலும் ஆனந்த்ராஜ், பிக்பாஸ் பிரபலங்கள் ரேஷ்மா, டேனியல் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். ஏற்கனவே இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் ‘கடவுள் இருக்கான் குமார்’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பா.இரஞ்சித் – யோகிபாபு இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!
பொம்மை நாயகி…

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வரும் யோகிபாபு அடுத்ததாக நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பா.ரஞ்சித், அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் இயக்கிய மெட்ராஸ் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின்னர் ரஜினியை வைத்து கபாலி, காலா என அடுத்தடுத்து படங்களை இயக்கி வெற்றி கண்டார்.

இவர் படம் இயக்குவது மட்டுமல்லாது தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய படங்கள் பாராட்டுகளை பெற்றன.

இந்நிலையில் இவர் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ‘பொம்மை நாயகி’ என பெயர் சூட்டப்பட்டுள்ள அப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

அறிமுக இயக்குனர் ஷான் இயக்கும் இப்படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.
நடிகர் சிம்புவுக்கு ஊட்டிவிடும் அவரின் அம்மா..! இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ, பதிவு..!!
சிம்பு…

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 14 ஆம் தேதி வெளியான திரைப்படம் ஈஸ்வரன்.

இப்படம் வெளியாகி குடும்ப ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது, மேலும் இப்படம் எதிர்பார்த்ததை விட நல்ல வசூல் செய்து வருகிறது எனவும் கூறப்படுகிறது.

இதனிடையே நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ட்ரெண்டானது.

இந்நிலையில் தற்போது நடிகர் சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் அம்மா தனக்கு ஊட்டிவிடும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவை சிம்புவின் ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ..
View this post on Instagram