திருமணத்திற்கு பின் இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா நடிகை காஜல் அகர்வால்.!

காஜல் அகர்வால்…

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர் நடிகர் காஜல் அகர்வால்.

இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் முடிந்தது. ஆம் பிரபல தொழிலதிபர் கவுதம் என்பவருடன் காதல் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின் இருவரும் தங்களது தேன் நிலவிற்காக மாலத்தீவிற்கு சென்று வந்தனர்.

இதன்பின் உடனடியாக மீண்டும் படங்களில் நடிக்க துவங்கிவிட்டார் நடிகை காஜல் அகர்வால்.

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு மீண்டும் காவல் துறை அதிகாரியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் நடிகை காஜல் அகர்வால்.

அவருடன் இணைந்து நடிக்கும் காமெடி நடிகர் மனோபாலா அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் சனம் ஷெட்டி நடித்த வெப் தொடர்… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சனம் ஷெட்டி…

பிக்பாஸ் பிரபலம் சனம் ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ள ‘குருதிக்களம்’ என்கிற வெப்தொடரின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் சனம் ஷெட்டி. தற்போது இவர் நடித்துள்ள ‘குருதிக்களம்’ என்கிற வெப் தொடர் வருகிற ஜனவரி 22-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இதில் நடிகர் சந்தோஷ் பிரதாப் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை சனம் ஷெட்டி நடித்துள்ளார்.

மேலும் அசோக், செளந்தரராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த வெப் தொடரை இயக்குனர்கள் ராஜபாண்டி மற்றும் தனுஷ் இணைந்து இயக்கி உள்ளனர்.

கிரைம் திரில்லர் கதையம்சத்தில் இந்த வெப் தொடர் உருவாகி இருக்கிறது. நேற்று வெளியான ‘குருதிக்களம்’ வெப் தொடரின் டிரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

சூர்யாவுக்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன் பட நடிகை?

சூர்யா 40…

சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த இளம் நடிகை, அடுத்ததாக ‘சூர்யா 40’ படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யா நடிப்பில் கடந்தாண்டு வெளியான சூரரைப் போற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து நவரசா எனும் ஆந்தாலஜி படத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்த சூர்யா,

அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கு, கன்னடம் போன்ற பிறமொழி படங்களில் நடித்துள்ள இவர்,

தமிழில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். இப்படம் இன்னும் ரிலீசாகவில்லை.

நடிகை பிரியங்கா ‘சூர்யா 40’ படத்தில் நடிப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘தளபதி 65’ல் விஜய்க்கு வில்லனா? – அருண் விஜய் தரப்பு விளக்கம்!

தளபதி 65…

தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக அருண் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் பரவிய நிலையில் இதுகுறித்து அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

தற்போது இந்த படத்தின் முதற்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் அஜித்தின் என்னை அறிந்தால், பிரபாஸின் சாஹோ போன்ற படங்களில் வில்லனாக நடித்த அருண் விஜய், அடுத்ததாக தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க உள்ளதாக சில தினங்களுக்கு முன் செய்திகள் வெளியாகின.

இதனை அருண் விஜய் தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும் இது வெறும் வதந்தி எனக்கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

சோழநாட்டின் இளவரசி வேடத்தில் த்ரிஷா?

த்ரிஷா..

லைகா புரடக்‌ஷன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘பொன்னியின் செல்வன்’. மணிரத்னம் இயக்கத்தில் சுமார் 800 கோடி செலவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது.

இப்படத்தில் சரத்குமார், விக்ரம், பார்த்திபன், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், நிழல்கள் ரவி, மோகன் ராமன் ஆகியோருடன் ‘ஜெகமே தந்திரம்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோர் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர்.

த்ரிஷா, முதல் கட்ட படப்பிடிப்பில் சில நாட்கள் கலந்து கொண்டு நடித்தார். தற்போது ஹைதராபாத்தில் நடந்துவரும் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் மீண்டும் த்ரிஷா கலந்து கொண்டுள்ளார்.

இப்படத்தில் சோழநாட்டின் இளவரசி குந்தவையாக த்ரிஷா நடித்து வருகிறார்.

பாலாவிற்காக கண்ணீர் விடும் சுட்டிக் குழந்தைகள்..நெகிழ்ச்சி தருணம்!

பாலாஜி முருகதாஸ்…

மீண்டும் இணைந்த கவின் மற்றும் லாஸ்லியா, பிக்பாஸ் சக்ஸஸ் பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படம்..!

கவின் – லாஸ்லியா…

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மக்களின் பேராதரவை பெற்று நிறைவடைந்தது, மேலும் இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவில் ஆரி அதிக வாக்குகளை பெற்று வெற்றியடைந்துள்ளார்.

அதுமட்டுமின்றி ஆரி 16 கோடியே 50 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று பெரிய வெற்றியை அடைந்துள்ளார்.

அவருக்கு அடுத்தபடியான இடத்தில் இருக்கும் பாலாஜி முருகதாஸ் 6 கோடியே 14 லட்சம் வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிக்பாஸ் பைனல்ஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் போட்டியாளர்கள் மற்றும் பல நட்சத்திரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சக்ஸஸ் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களான லாஸ்லியா மற்றும் கவின் கலந்து கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளது.

நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் – பூமி இயக்குனர் கோபம்!

லக்‌ஷ்மண்…

நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்று பூமி பட இயக்குனர் லக்‌ஷ்மண் சமூக வலைத்தளத்தில் கோபமாக பதிவு செய்திருக்கிறார்.

லக்‌ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால் நடிப்பில் வெளியான படம் ‘பூமி’. இப்படம் ஜனவரி 14-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது. விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உருவாக்கப்பட்ட இந்தப் படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில், ‘பூமி’ படம் பார்த்துவிட்டு ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இதுவரை நான் பார்த்த படங்களில் ‘பூமி’ போன்ற ஒரு மோசமான படத்தைப் பார்த்ததில்லை. ‘சுறா’, ‘ஆழ்வார்’, ‘அஞ்சான்’, ‘ராஜபாட்டை’ வரிசையில் இந்த படம் அமைந்துள்ளது. இயக்குநர் லக்‌ஷ்மணுடன் பணிபுரிவதை நிறுத்துங்கள் ஜெயம் ரவி” என்று தெரிவித்தார்.

உடனடியாக அவரைப் பின்தொடர்பவர், “தற்போது இயக்குநர் லக்‌ஷ்மண் உங்களை பிளாக் செய்வார்” என்று தெரிவித்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இயக்குநர் லக்‌ஷ்மண் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“சார். நம்ம எதிர்காலத் தலைமுறை நல்லா இருக்க வேண்டும் என்று நினைத்துதான் இந்தப் படம் எடுத்தேன். உங்களுக்காகத்தான் எடுத்தேன். ‘ரோமியோ ஜூலியட்’ எடுத்த எனக்கு கமர்ஷியல் தெரியாதா? நம் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் ப்ரோ. நீங்க சூப்பர், ஜெயிச்சிட்டீங்க. நான் தோத்துட்டேன்” இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்.

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு பிரபல கிரிக்கெட் வீரருடன் திருமணமா?- பிரபலம் கூறிய விஷயம்!!

வரலட்சுமி…

தமிழ் சினிமாவில் தனக்கு என்ற தனி வழியில் படங்கள் நடித்து இப்போதும் மக்கள் மனதில் நிற்பவர் நடிகர் சரத்குமார்.

இவரின் மகள் வரலட்சுமி சரத்குமார் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து இப்போது பெயர் சொல்லும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.

இவரும், நடிகர் விஷாலும் காதலித்தார்கள், விரைவில் திருமணம் என்று வரை பேசப்பட்டது, ஆனால் அப்பேச்சு அப்படியே நின்றது.

தற்போது என்னவென்றால் நடிகை வரலட்சுமி பிரபல கிரிக்கெட் வீரரை காதலிக்கிறார் என்று

பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் மாஸ்டர் பட காட்சிகளை லீக் செய்தவர்களுக்கு தயாரிப்பாளர் வைத்த செக்!!

பிரிட்டோ…

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் கடந்த 13ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கொரோனா பிரச்சனைக்கு பிறகு படம் வெளியானதால் ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுத்தார்கள்.

வசூலிலும் படம் மாஸ் காட்டி வருகிறது. படம் ரிலீஸ் ஆகும் முந்தைய நாள் படத்தின் சில காட்சிகளை யாரோ சமூக வலைதளங்களில் லீக் செய்தனர்.

பின் சோனி நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவர் இப்படி ஒரு விஷயத்தை செய்தது தெரியவந்தது.

தற்போது தயாரிப்பாளர் பிரிட்டோ மாஸ்டர் பட காட்சிகளை லீக் செய்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் சட்ட விரோதமாக பட காட்சிகளை லீக் செய்ததால் ரூ. 25 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளார்.