வசூல் மழையில் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிலம்பரசனின் ஈஸ்வரன்- இதுவரை தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் தெரியுமா?

மாஸ்டர் – ஈஸ்வரன்…

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் கடந்த 13ம் தேதியும், சிம்புவின் ஈஸ்வரன் 14ம் தேதியும் திரையரங்கில் வெளியானது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு படங்கள் திரையரங்கில் வெளியாவதால் மக்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.

ரிலீஸ் ஆனதில் இருந்து இரண்டு படங்களுக்குமே வசூலில் எந்த குறையும் இல்லை. சென்னையில் 6 நாட்கள் முடிவில் மொத்தமாக மாஸ்டர் படம் ரூ. 6.1 கோடி வசூலித்துள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தமாக மாஸ்டர் ரூ. 88 கோடியும், ஈஸ்வரன் ரூ. 7.8 கோடியும் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியளவில் NO.1 இடத்தை பிடித்த மாஸ்டர் திரைப்படம், இதுவரை எந்த திரைப்படமும் செய்யாத சாதனை..!

மாஸ்டர்…

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.

இப்படம் ரசிகர்களிடையே பேராதரவை பெற்று வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது,

மேலும் இப்படம் 3 நாட்களில் 100 கோடி வசூல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் பல நாடுகளில் வசூல் சாதனை நிகழ்த்தி வரும் நிலையில்,

சவூதி அரேபியாவில் வெறும் 5 நாட்களில் 20,000 க்கும் மேற்பட்ட சேர்க்கைகளுடன் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய திரைப்படமாக மாஸ்டர் திரைப்படம் சாதனை படைத்துள்ளது.

சிவகார்த்திகேயனை பிரிட்டிஷ் இங்கிலீஷ் பேச வைத்த பிரபல நடிகை!!

சிவகார்த்திகேயன்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனை பிரபல நடிகை ஒருவர் பிரிட்டிஷ் இங்கிலீஷ் பேச வைத்திருக்கிறார்.

இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ’அயலான்’. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் கடைசி மூன்று நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதம் இருப்பதாகவும் இயக்குனர் ரவிக்குமார் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோருடன்

இணைந்து பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவம் என்று நாயகி ரகுல் பிரீத் சிங் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள சிவகார்த்திகேயன், உங்களுடன் பணிபுரிந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி என்றும் குறிப்பாக நீங்கள் என்னை படப்பிடிப்பு நேரத்தில் ஆங்கிலத்தில் பேச வைத்ததற்கு மிகவும் நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நான் பேசியது பிரிட்டிஷ் இங்கிலீஷ் என்று நினைக்கின்றேன்’ என்றும் அவர் காமெடியாக குறிப்பிட்டுள்ளார்.

பிகினி உடையில் பிக்பாஸ் பிரபலம்…. வைரலாகும் புகைப்படம்!

ரைசா வில்சன்…

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை ஒருவர் பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். கல்லுாரியில் படிக்கும் போதே, ‘மாடலிங்’ துறையில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகையானார்.

ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக அவர் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்தது.

தற்போது அலைஸ், எப்.ஐ.ஆர், காதலிக்க நேரமில்லை, தி சேஸ் போன்ற படங்களை நடிகை ரைசா, கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில், மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை ரைசா, அங்கு பிகினி உடையில் தான் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இந்தப் புகைப்படத்திற்கு சமூக வலைதளத்தில் லைக்ஸ் குவிந்து வருகிறது.

வெளிநாடு செல்லும் வலிமை படக்குழு!

வலிமை படக்குழு…

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு வெளிநாடு செல்ல உள்ளதாம்.

அஜித்குமாரின் வலிமை படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஹூமா குரேசி அஜித்துக்கு ஜோடியாக நடிக்க, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தற்போது புனேவில் பைக் ரேஸ் காட்சியை படமாக்கி வருகின்றனர். இதையடுத்து முக்கிய சண்டைக் காட்சியை படமாக்க வலிமை படக்குழு அடுத்ததாக தென் ஆப்ரிக்காவிற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அத்துடன் வலிமை படப்பிடிப்பு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை அஜித்தின் பிறந்தநாளை ஒட்டி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த காட்சிகளில் நான் எப்போதும் நடிக்கமாட்டேன் – கீர்த்தி சுரேஷ் கோபம்!!

கீர்த்தி சுரேஷ்…

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், அந்த காட்சிகளில் நான் எப்போதும் நடிக்கமாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் 2013ம் ஆண்டு கீதாஞ்சலி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

விக்ரம் பிரபுவுடன் நடித்த ‘இது என்ன மாயம்’ படம் மூலம் தமிழில் நடிக்க தொடங்கினார். சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் மூலம் ரசிகர்களிடையே புகழ் பெற்றார்.

பின்னர் விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், 2019ம் ஆண்டு வெளிவந்த மகாநதி படத்தின் சிறந்த நடிப்பிற்காக தேசிய விருது பெற்றார்.

கவர்ச்சி அல்லாமல் குடும்ப பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இந்நிலையில் மகேஷ் பாபு படத்தில் நீச்சல் உடையில் நடிப்பதாக தகவல் வெளியானது.

இதனை மறுத்த கீர்த்தி சுரேஷ், இதுபோன்ற காட்சிகளில் நான் எப்போதும் நடிக்கமாட்டேன். இந்த செய்தியை யாரும் நம்பவேண்டாம் என்று கோபமாக தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர்களை நஷ்டப்படுத்துவதாக நயன்தாரா, ஆண்ட்ரியா மீது புகார்!

நயன்தாரா – ஆண்ட்ரியா..

வெட்டி பசங்க படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கே.ராஜன், நடிகைகள் நயன்தாராவும், ஆண்ட்ரியாவும் தயாரிப்பாளர்களை நஷ்டப்படுத்துவதாக கூறியுள்ளார்.

மஸ்தான் இயக்கத்தில் அப்புக்குட்டி, வித்யூத் விஜய், கவுசிகா ஆகியோர் நடித்துள்ள படம் ‘வெட்டி பசங்க’. இந்தப் படத்தை பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி, இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், கவிஞர் சினேகன், ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர்கள் ராதா கிருஷ்ணன், சக்கரவர்த்தி, வாராகி, கே.ராஜன் இசையமைப்பாளர் அம்ரீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் தயாரிப்பாளரும், நடிகருமான கே.ராஜன் பேசியதாவது: “கொரோனா காலத்தில் தயாரிப்பு செலவுகளையும், நடிகர், நடிகைகள் சம்பளத்தையும் குறைக்க வேண்டும்.

சில நடிகர், நடிகைகள் அதிக செலவு வைக்கிறார்கள். நடிகை நயன்தாரா தனக்கு மும்பையில் இருந்து சிகை அலங்கார நிபுணரையும், ஆடை வடிவமைப்பாளரையும் வர வைக்கிறார்.

அவர்களுக்கு சம்பளம், விமான செலவு, ஓட்டலில் தங்கும் செலவுகளை தயாரிப்பாளர் கவனிக்க வேண்டி உள்ளது. அவரது மேக்கப் மேன் உதவியாளர்கள் உள்பட மொத்தம் 7 பேருக்கு தயாரிப்பாளர் ஒரு நாளைக்கு ரூ.1½ லட்சம் செலவிட வேண்டி உள்ளது. அவர் 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் உதவியாளர்களுக்கு சுமார் ரூ.60 லட்சம் செலவாகிறது.

தமிழ் நாட்டை சேர்ந்த நடிகை ஆண்ட்ரியாவும் மும்பை ஆடை வடிவமைப்பாளர், சிகை அலங்கார நிபுணர் வேண்டும் என்கிறார். நடிகர்களும் தங்களுக்கான பாடிகார்டுகளுக்கு தயாரிப்பாளர்கள் சம்பளம் கொடுக்க வேண்டும் என்கின்றனர்.

இதனால் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைகின்றனர். இப்படிப்பட்ட செலவுகள் குறைக்கப்பட்டால்தான் சினிமா வாழும். வெட்டி பசங்க படம் வெற்றி பெறும.” இவ்வாறு அவர் கூறினார்.

கமல்ஹாசன் உடல்நிலை குறித்து ஸ்ருதிஹாசன்-அக்சராஹாசன் வெளியிட்ட அறிக்கை!

கமல்ஹாசன்…

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் நடத்தி கொண்டு தே ர் தல் பிரசாரமும் செய்து கொ ண் டிருந்த நிலையில் ஞாயிறு அன்று பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்.

இந்த நிலையில் ஏற்கனவே நடந்த வி ப த்து ஒன்றில் காலில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும் இதனால் தேர்தல் பிரசாரத்திற்கு தற்காலிக ஓய்வு எடுத்திருப்பதாகவும் அறிக்கை ஒன்றை கமல்ஹாசன் வெளியிட்டு இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் கமல்ஹாசன் உடல்நிலை குறித்து அவரது மகள்கள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

நேற்று காலையில் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் மருத்துவர் ஜே.எஸ்.என். மூர்த்தி அவர்களது ஒருங்கிணைப்பில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் மோகன் குமார் தலைமையில் எங்கள் அப்பாவிற்கு காலில் சர்ஜரி வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

அப்பா நலமாக உற்சாகத்துடன் இருக்கிறார். அப்பாவை மருத்துவர்களும் மருத்துவமனை நிர்வாகமும் நல்ல முறையில் பார்த்துக்கொள்கிறார்கள்.

நான்கைந்து நாட்களுக்கு பின் அப்பா வீடு திரும்புவார். சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் மக்களை சந்திப்பார், மகிழ்விப்பார். அனைவரது அன்பிற்கும் பிரார்த்தனைக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு சுருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் இணைந்து அறிக்கையை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தைப்பூசத்தன்று ‘களத்தில் சந்திப்போம்’ ரிலீஸ்!!

களத்தில் சந்திப்போம்…

ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா, அருள்நிதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்படம் தைப்பூசத்தன்று ரிலீசாக உள்ளது.

ஜீவாவின் குடும்ப தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய படம் ‘களத்தில் சந்திப்போம்’. ஜீவா, அருள்நிதி இணைந்து நடித்துள்ள இந்த படத்தை `மாப்ள சிங்கம்’ படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்கி உள்ளார்.

இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும், அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும் நடித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில் ரோபோ சங்கர், பாலசரவணன், ஆடுகளம் நரேன், ரேணுகா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு, அபிநந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார். நட்பை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் ஜீவா, அருள்நிதி இருவரும் நண்பர்களாக நடித்துள்ளனர்.

கொரோனா பிரச்சனையால் ரிலீசாகாமல் முடங்கியிருந்த இப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தைப்பூசத்தன்று (ஜனவரி 28) தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட உள்ளனர்.

நடிகர் விமல் மீது போ லீ சில் பு கா ர்!

விமல்…

நடிகரின் விமலின் சொந்த ஊர் மணப்பாறை அருகே உள்ள பண்ணாங்கொம்பு. விமலின் பூர்வீக வீடு இங்கு உள்ளது.

அவரது வீட்டுக்கு எதிரில் இருக்கும் காலி மைதானத்தில் விளக்குதூண் ஒன்று உள்ளது. இதனை ஊர் மக்கள் விளக்கேற்றி வழிபட்டு வந்தனர்.

சமீபத்தில் விளக்குதூணை சுற்றி சிறிய மேடை ஒன்றை ஊர்காரர்கள் அமைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத 7 பேர் கொண்ட கு ம் பல், விளக்கு தூண் மேடையை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தள்ளி உள்ளது.

இது விமல் குடும்பத்தினரின் வேலை என்று அதே ஊரைச் சேர்ந்த கோவில் பூசாரி செல்வம் புத்தாநத்தம் போ.லீ.சி.ல் விமல் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பு.கா.ர் அளித்தார்.

இது தொடர்பாக வி.சா.ர.ணை நடத்துமாறு மணப்பாறை டி.எஸ்.பி பிருந்தா உத்தரவிட்டுள்ளார்.