செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு மீண்டும் சிம்பு, AR ரஹ்மான் கூட்டணி – தெறிக்கவிடும் ‘பத்து தல’ போஸ்டர் !

சிம்பு…

Talk Of The Town என்னன்னா சிம்பு உடம்பை குறைத்து, ஷூட்டிங்கில் சரியான நேரத்திற்கு போய் ஈஸ்வரன் ரீலீஸ் ஆனதுதான். 30 நாட்களில் சுசீந்திரனின் ஈஸ்வரன் படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கிறார் சிலம்பரசன்.

Chart போட்டு பெண்டிங்கில் இருக்கும் எல்லாம் படங்களையும் முடிக்க வேண்டும் என்று முடிவெடுத்த இவர், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் மூன்று வருடங்களுக்கு முன்பாக நடிக்க ஒற்றுகொண்ட மப்டி படத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் சிம்பு.

கன்னட Blockbuster ஆன இந்த படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த படம். இதில் சிம்புடன் கௌதம் கார்த்திக் நடிக்கிறார். இந்த படத்திற்கு ‘பத்து தல’ என்று மாஸ் Title வைத்துள்ளார்கள்.

“இனி சிம்பு Time- தான்” என்று Comment அடிக்கும் சிம்பு ரசிகர்களுக்கு இப்போது அவர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட்டாக வந்து இறங்கியிருக்கிறது பத்துதல படத்தின் போஸ்டர்.

பாதி ஷூட்டிங்கில் நின்ற இந்த படம், மீண்டும் படு ஸ்பீடாக துவங்க காத்திருக்கிறார்கள். இந்த படத்தை சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்குகிறார். மேலும் செக்கச்சிவந்த வானம் படத்திற்கு பிறகு மீண்டும் சிம்பு AR ரஹ்மான் கூட்டணி இதில் இணைகிறது என்பது கூடுதல் தகவல்.

கானா பாடகர் சந்தானம் – வெளியானது பாரிஸ் ஜெயராஜ் படத்தின் டிரைலர்!

சந்தானம்…

விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் சக்கபோடு போட்டுக்கொண்டிருந்தார் சந்தானம். அவரின் திறமையை அடையாளம் கண்டு கொண்ட சிம்பு மன்மதன் படத்தில் நடிக்க வாய்ப்பளித்தார்.

அதன்பின் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பின்னிப் பெடல் எடுத்து கொண்டிருந்தார் சந்தானம். இவர் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி, சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், கலகலப்பு என காமெடி பட்டாசுகள் படங்கள் வெற்றியடைய காரணமாக இருந்தார்.

ஒரு கட்டத்திற்கு மேல் காமெடி ரோலை விட்டுவிட்டு ஹீரோவாக நடிக்க வந்த சந்தானம், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்தார். அதன் பின் தில்லுக்கு துட்டு, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் சக்க போடு போடு ராஜா, ஏ1 என பல படங்களில் நடித்துவிட்டார்.

அதில் பாதி படங்கள் சுமாராக ஓடினாலும் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வரும் சந்தானம் சமீபத்தில் டகால்டி, டிக்கிலோனா போன்ற படங்கள் நடித்திருக்கிறார். இந்நிலையில் தான் நடித்துள்ள அடுத்த படத்தின் டிரைலரை நேற்று ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

பாரிஸ் ஜெயராஜ் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கதைப்படி சந்தானம் கானா பாடகர் என்பதால் அதகளமான கானா பாடல்களை வழங்கி வரும் சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைப்பது சரியான தேர்வு என பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் கதாநாயகியாக காவியத்தலைவன் படத்தில் நடித்த அனைகா சோதி நடிக்கிறார். இந்த படத்தின் டிரைலரை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

பிக்பாஸ் 4வது சீசன் பிரபலங்களின் பார்ட்டியில் கலந்துகொண்ட லாஸ்லியா!

பிக்பாஸ் சீசன் 4…

பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் ஆரி தான் இந்த சீசனின் வெற்றியாளர்.

சிலருக்கு பாலாஜி வந்திருக்க வேண்டும் என்ற மாற்று கருத்தும் உள்ளது.

எல்லாம் முடிந்து பிக்பாஸ் 4வது சீசன் போட்டியாளர் பார்ட்டியில் கொண்டாடியுள்ளனர்.

அந்த புகைப்படங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றனர். 4வது சீசன் போட்டியாளர்களின் கொண்டாட்டத்தில் முன்னாள் பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவும் கலந்து கொண்டிருக்கிறார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பைக்கிலேயே அஜித் அங்கு வரை சென்றுள்ளாரா?- எப்போது சென்னை ரிடர்ன் தெரியுமா?

அஜித்…

விஜய் ரசிகர்கள் மாஸ்டர் திரைப்படம் வெளிவந்ததால் கொண்டாட்டத்தில் உள்ளனர். நாளுக்கு நாள் வசூலிலும் படம் கலக்கி வருகிறது.

ஆனால் தல ரசிகர்கள் வலிமை பட அப்டேட்டிற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அஜித்தும் படப்பிடிப்பில் காயங்கள் ஏற்பட்டாலும் அதை பொறுட்படுத்தாமல் நடித்து வருகிறார்.

இதனால் ரசிகர்கள் கொஞ்சம் அமைதி காத்து வருகின்றனர். இந்த நேரத்தில் தான் அஜித் குறித்து ஒரு தகவல். அவர் தனது பைக்கிலேயே பல இடங்களில் சென்று வருவது நாம் கேள்விப்படுகிறோம்.

அண்மையில் அவர் தனது பைக்கிலேயே சிக்கிம் வரை சென்றுள்ளாராம். விரைவில் சென்னை திரும்புவார் என்கின்றனர்.

மொத்தமாக அவர் 4500 கிலோ மீட்டர் பைக்கில் பயணம் செய்ய இருக்கிறாராம்.

மாடர்ன் உடையில் அனைவரின் மனதையும் கொள்ளைகொண்ட நடிகை சமந்தா..! ட்ரெண்டிங் புகைப்படங்கள்!!

சமந்தா…

நடிகை சமந்தா தமிழ் சினிமா மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார், இவருக்கு நடிகர்களுக்கு சமமான ரசிகர்கள் வட்டம் உள்ளது.

மேலும் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சமந்தா கடைசியாக தமிழில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த சமந்தா, அடுத்ததாக விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் சமந்தா தொடர்ந்து வித்தியாசமான உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது செம்ம மாடர்ன் உடையில் அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது என்று தான் கூறவேண்டும்.

உலகளவில் நம்ம தளபதி விஜய் தான் டாப்பு- படு கொண்டாட்டமான தகவல்!

விஜய்…

கொரோனா நோய் தொற்று காரணமாக எல்லா திரையரங்குகளும் மூடப்பட்டது.

அதன் தாக்கம் கொஞ்சம் குறையவே திரையரங்குகளில் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெளியானது.

படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது, வசூலிலும் செம கலெக்ஷன் தான். 5 நாட்களில் சென்னையில் மட்டுமே படம் ரூ. 5.43 கோடி வரை வசூலித்துள்ளது.

இந்த நிலையில் உலகளவில் இதுவரை வெளியான படங்களில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் அதிகம் வசூலித்து நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.

இதனால் ரசிகர்கள் #MasterTheGlobalTopper என்ற டாக்குகளை டிரண்ட் செய்து வருகின்றனர்.

சூப்பர் சிங்கர் சரித்திரத்திலேயே இல்லை, யாரும் செய்யாத ஒரு சாதனை- புத்தம் புதிய நிகழ்ச்சி, வெளிவந்த புரொமோ!

சூப்பர் சிங்கர்….

பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி பிரபலம்.

இந்நிகழ்ச்சியில் தங்களது திறமையை வெளிப்படுத்தி வெற்றிப்பெற்று இப்போது சினிமாவில் சாதித்து வரும் பலர் உள்ளார்கள்.

அப்படிபட்ட இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியின் புதிய ஷோ ஆரம்பமாக உள்ளது. அதற்காக அறிமுக விழாவிலேயே இந்நிகழ்ச்சி குழுவினர் புதுவிதமாக ஒன்றை செய்துள்ளனர்.

அதாவது இந்த புதிய நிகழ்ச்சியின் ஆரம்பம் 9 மணிநேரம் ஒளிபரப்பாகும் அளவிற்கு எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை யாரும் செய்யாத சாதனையோடு நிகழ்ச்சி ஆரம்பமாக இருப்பதாக அவர்களே ஒரு புரொமோ வெளியிட்டுள்ளனர்.

கடற்கரையில் முட்டி போட்டு போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் ஜூலி..!

ஜூலி…

பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டதன் மூலமாக புகழ் பெற்ற அவர் அதற்கு பிறகு பிக் பாஸ் ஷோவிற்கு வந்தார்.

அந்த சீசனில் ஓவியாவுக்கு அதிக ரசிகர்கள் கிடைத்த நிலையில், ஜூலியை வெறுப்பவர்களும் அதிகம் உருவானார்கள். அந்த ஷோ முடிந்து வெளியில் வந்த பிறகும் ஜூலியை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்வதை மட்டும் நெட்டிசன்கள் நிறுத்தவே இல்லை.

அதை எல்லாம் தான்டி ஜூலி தற்போது சினிமாவில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தின் போஸ்டர், ட்ரைலர் நீண்ட காலத்திற்கு முன் வெளியானது. ஆனால் அந்த படம் இன்னும் திரைக்கு வந்தபாடில்லை.

தற்போது ஜூலி விதவிதமான போட்டோக்களை எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். அவர் ட்விட்டரில் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்களை மிக வித்தியாசமாக இருப்பதால் அடிக்கடி வைரலும் ஆகின்றன.

அந்த வகையில், தற்போது கடற்கரையில் கவர்ச்சி உடையில் முட்டி போட்டு அமர்ந்து கொண்டு தனது அக்குள் அழகை காட்டும் விதமாக கைகளை தூக்கி கட்டிக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார் அம்மணி.

2020 ஆம் ஆண்டு TRP-ல் அதிக லாபத்தை கொடுத்த தளபதி விஜய்யின் திரைப்படங்கள், TRP கிங் இவர் தான்..!

தளபதி விஜய்…

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.

மேலும் இப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று, பல இடங்களில் நல்ல வசூல் செய்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் அதிக பார்வைகளை பெற்ற விவரங்களை தான் பார்க்கவுள்ளோம்.

ஆம், இதில் தளபதி விஜய்யின் திரைப்படங்கள் அதிக முறை ஒளிபரப்பாகி அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளது, அதற்கு அடுத்தடுத்த இடங்களில் ராகவா லாரன்ஸ், விஷால் உள்ளனர்.

தளபதி 65 திரைப்படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது தெரியுமா? வெளியான செம்ம மாஸ் தகவல்..!

தளபதி 65…

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.

இப்படம் ரசிகர்களிடையே பேராதரவை பெற்று வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது, மேலும் இப்படம் 3 நாட்களில் 100 கோடி வசூல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தளபதி விஜய் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படம் வரும் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, இப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியாக உள்ள டாக்டர் திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.