தேசிய விருது பெற்ற இயக்குனரின் அடுத்த படத்தில் யோகிபாபு!

யோகி பாபு…

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக நடித்து வரும் யோகி பாபு தேசிய விருது பெற்ற இயக்குனரின் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘பாவக்கதைகள்’ என்ற ஆந்தாலஜி திரைப்படம் வெளியானது என்பதும் 5 இணை இயக்குநர்களின் படைப்புகள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக மணி ரத்னம் தயாரிக்கும் அடுத்த ஆந்தாலஜி திரைப்படம் ’நவரசா’ என்பதும் இந்த திரைப்படத்தில் 9 இயக்குனர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இவற்றில் ஒரு பகுதியை இயக்குனர் பொன்ராம் இயக்குவதாக இருந்தது. ஆனால் தற்போது அவருக்கு பதிலாக தேசிய விருது பெற்ற இயக்குனர் பிரியதர்ஷன் அந்த பகுதியை இயக்க இருப்பதாகவும் அவர் இயக்க இயக்கும் பகுதியில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

தற்போதைய காலகட்டத்தில் நடக்கும் ஒரு முக்கிய பிரச்சினையை மையமாக வைத்து பிரியதர்ஷன் இயக்கும் இந்த படம் பெரும் வரவேற்பை பெறும் என்றும் யோகிபாபுவின் காமெடி கலந்த நடிப்பு அந்த படத்தை சுவராசியமாக மாற்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ’நவரசா’ ஆந்தாலஜி படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

என் தோல்விக்கான காரணம் இதுதான்: பாலாஜி முருகதாஸ்!!

பாலாஜி…

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரி வின்னராகவும் பாலாஜி ரன்னராகவும் தேர்வு பெற்றனர் என்பதும் இருவருக்குமே வாழ்த்துக்கள் குவிந்தது என்பதும் தெரிந்ததே.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 105 நாட்களில் பெரும்பாலான நாட்களில் ஆரியும் பாலாஜியும் சண்டை போட்டுக்கொண்டு இருந்த நிலையில் சண்டைக் கோழிகள் என பெற்ற இருவரும் வின்னராகவும், ரன்னராகவும் வந்து இருப்பது ஆச்சரியம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் ரன்னராக தேர்வு பெற்ற பின் பாலாஜி முதல் முறையாக தனது சமூக வலைத்தளத்தில் செய்துள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

அதில் ’இந்த அற்புதமான பயணத்தில் எனக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. அதேபோல் என் மீது சந்தேகம் வைத்திருந்து என்னை கடினமாகவும் நன்றாக வேலை செய்ய வைத்தவர்களுக்கும் நன்றி’ என்று கூறியுள்ளார்.

அதேபோல் இன்னொரு பதிவில் ’மச்சான் தம்பி தங்கச்சி எல்லாருக்கும் நன்றி. நான் பிக்பாஸ் உள்ளே இருக்கும் போது வெளியே இருந்த என்னுடைய நண்பர்கள் மற்றும் நெருக்கமானவர்களே எனக்கு துரோகம் செய்தனர்.

ஆனாலும் நீங்கள் தான் எனக்கு தூணாக இருந்தீர்கள் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். எனக்கு எந்த வருத்தமும் இல்லை. சந்தோஷத்துடன் இந்த 105 நாட்களை அனுபவித்தேன்’ என்று பதிவு செய்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பாலாஜி பதிவு செய்த முதல் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

விஷ்ணு விஷாலின் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் தொடக்கம்!

விஷ்ணு விஷால்…

நடிகர் விஷ்ணு விஷால் நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு நேற்று சென்னையில் நடந்தது. இதனை அடுத்து விஷ்ணு விஷாலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’இன்று நேற்று நாளை’. தமிழில் முதல் முதலாக வெளிவந்த டைம் டிராவல் குறித்த இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பதும் இந்த படம் நல்ல வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்படும் என்று கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில்,

சற்று முன் வெளியான தகவலின்படி இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கியது. நேற்று நடைபெற்ற பூஜையில் நடிகர் விஷ்ணு விஷால், இசையமைப்பாளர் ஜிப்ரான், தயாரிப்பாளர் சிவி குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய ரவிக்குமாரின் உதவியாளர் பொன்ராஜ் என்பவர் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முதல் பாகத்தில் நடித்த நடிகர், நடிகைகள் கிட்டத்தட்ட அனைவருமே இந்த இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

விஷ்ணு விஷால் ஏற்கனவே ’காடன்’, ’ஜெகஜ்ஜால கில்லாடி’ ’எப்.ஐ.ஆர்’ ’மோகன்தாஸ்’ ஆகிய நான்கு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் போட்டியாளர்களின் வருமானம் எவ்வளவு? 106 நாட்கள் இருந்த பாலாவுக்கு இவ்வளவுதானா?

பிக்பாஸ்…

பிக்பாஸ் நிகழ்ச்சி 106 நாட்கள் நடந்து நேற்றுமுன்தினம் முடிவடைந்த நிலையில் ஆரி வின்னராகவும், பாலாஜி ரன்னராகவும் தேர்வு பெற்றார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த பிக்பாஸ் சீசனில் யார் யாருக்கு எவ்வளவு சம்பளம் என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

இதன்படி போட்டியாளர்களின் தினசரி சம்பளம் குறித்த தகவலை தற்போது பார்ப்போம்

ரேகா: ரூ.1 லட்சம் x 14 = 14 லட்சம்
சனம்ஷெட்டி: ரூ.1 லட்சம் x 63 = 63 லட்சம்
ஆரி: ரூ.85,000 x 105 + 50 லட்சம் = 1 கோடியே 35 லட்சம் 25 ஆயிரம்
சுசித்ரா: ரூ.80,000 x 49 = 39.20 லட்சம்
அர்ச்சனா: ரூ.75,000 x 77 = 57.75 லட்சம்
ரம்யா பாண்டியன்: ரூ.75,000 x 105 = 78.75 லட்சம்
கேப்ரில்லா: ரூ.70,000 x 102 + 5 லட்சம் = 76.40 லட்சம்
ஷிவானி: ரூ.60,000 x 98 = 58.80 லட்சம்
ரமேஷ்: ரூ.60,000 x 69 = 41.40 லட்சம்
வேல்முருகன்: ரூ.50,000 x 28 = 14 லட்சம்
நிஷா: ரூ.40,000 x 70 = 28 லட்சம்
சம்யுக்தா: ரூ.40,000 x 56 =22.40 லட்சம்
அனிதா சம்பத்: ரூ.40,000 x 84 = 33.60 லட்சம்
ரியோ: ரூ.35,000 x 105 = 36.75 லட்சம்
ஆஜித்: ரூ.15,000 x 91 =13.65 லட்சம்
சுரேஷ்: ரூ.10,000 x 35 =3.50 லட்சம்
சோம்: ரூ.10,000 x 105 = 10.50 லட்சம்
பாலா: ரூ.10,000 x 105 = 10.50 லட்சம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 106 நாட்கள் இருந்து ரன்னராக வெற்றி பெற்ற பாலாஜிக்கு தான் மிகவும் குறைவான சம்பளம் என்பதும் மேலும் இந்த தொகை அதிகாரபூர்வமற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாலாஜிக்கு எதிராக ஓட்டு போட சுசி கூறியதற்கு இதுதான் காரணமா?

பிக்பாஸ்…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிலையில் இறுதி போட்டியில் ஆரி வின்னர் என்றும், பாலாஜி ரன்னர் என்றும் அறிவிக்கப்பட்டார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பாலாஜிக்கு நெருக்கமான போட்டியாளர்களில் ஒருவராக இருந்த சுசித்ரா, பாலாஜிக்கு ஓட்டு போட வேண்டாம், ஆரிக்கு ஓட்டு போடுங்கள் என தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிக்பாஸ் வீட்டிற்கு வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்த சுசித்ரா அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பாலாஜியுடன் நெருக்கமாகி அவருக்கு சேவை செய்யும் நபராக மாறியதை பார்த்த பார்வையாளர்கள் எரிச்சலடைந்து அவரை இரண்டே வாரத்தில் வெளியேற்றினார்கள்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரும் அவர் பாலாஜிக்கு ஆதரவாகவே பல பதிவுகளை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திடீரென ஒருநாள் அவர் அவர் தனது சமூக வலைத்தளத்தில் ஆரிக்கு ஓட்டு போடுங்கள், பாலாஜி மரியாதை தெரியாதவர் என்று பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

ஷிவானியை பாலாஜி ஆள் என்று நான் சொன்னதால், நான் திட்டு வாங்க சரியான நபர் தான் என்று பாலாஜியை என்னிடம் கூறினார். இது பாலாவின் ரசிகர்களுக்கு தான்.

மரியாதை என்றால் என்னவென்றே தெரியாத ஒருவர் தான் பாலாஜி. மற்றவர்களை பயன்படுத்திக் கொள்ளும் நபர். எனவே அனைவரும் ஆரிக்கு ஓட்டு போடுங்கள் என்று சுசித்ரா பதிவு செய்துள்ளார்

கடைசி நேரத்தில் திடீரென பாலாஜிக்கு நெருக்கமாக இருந்த சுசித்ராவே ஆரிக்கு ஆதரவளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ராஜமவுலியை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்!

ஷங்கர்…

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஷங்கர், அடுத்ததாக இயக்கும் பிரம்மாண்ட படத்தில் பிரபல நடிகர் நடிக்க உள்ளாராம்.

ஷங்கர் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பிடித்துள்ளது. இதனால், இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் ஷங்கர்.

இவர் இயக்கி வந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு லாக்டவுனுக்கு முன் நிறுத்தப்பட்டது. தற்போது படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையிலும் இன்னும் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில், இயக்குனர் ஷங்கர் அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ராம் சரண், ஷங்கரின் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் பவன் கல்யாணும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

தற்போது நடிகர் ராம் சரண் தெலுங்கில் ராஜமவுலி இயக்கும் ஆர் ஆர் ஆர் படத்தில் நடித்து வருகிறார்.

பிரம்மாண்டமாக உருவாகும் இப்படம் இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்தின் வலிமை பட டீஸர் வெளியாவது பற்றி வந்த தகவல்- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்!!

வலிமை….

அஜித்தின் வலிமை பட படப்பிடிப்பு கொரோனா லாக் டவுன் முடிந்ததில் இருந்து வேகமாக நடந்து வருகிறது. படக்குழுவினர் அவ்வளவாக இடைவேளையே இல்லாமல் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார்கள்.

வலிமை பட குழுவினர் அண்மையில் சில ச ண் டை காட்சிகளை படமாக்க குஜராத் சென்றதாக கூறப்பட்டது.

அண்மையில் வந்த தகவல் என்னவென்றால் அஜித் சின்ன இடைவேளையில் பைக்கிலேயே சிக்கிம் சென்றுள்ளதாக செய்திகள் வந்தன.

ரசிகர்கள் ஒன்றே ஒன்றை தான் அதிகம் எதிர்ப்பார்க்கிறார், அதாவது வலிமை பட அப்டேட். இந்த நேரத்தில் தான் வலிமை பட டீஸரை படக்குழு வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியிட முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

 

இந்த கு ழந்தை யாருன்னு தெரியுமா.? இன்று பி ரபல முன்னணி நடி கையாகி யுள்ளார்..!! யாருன்னு பாருங்க நீங்களே ஷா க் ஆகிடுவிங்க..!!

இந்திய நடிகை……..

இன்று திரை உலகில் பிரபலமாக இருக்கும் நடிகைகள்,சிறு வயதில் இருக்கும்போது எப்படி இருந்திருப்பார்கள் என்று பார்க்க எல்லோரும் மிகவும் ஆவலாக இருக்கும்.அப்படி பார்க்கும்போது தான் எப்படி இருந்தவின்களா இப்போ இப்படி ஆகிடாங்க என ஆச்சரியப்பட வைக்கும்.அந்த வகையில் தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் டாப்சி பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.நடிகை டாப்ஸி பன்னு ஆகஸ்ட் 1, 1987ஆம் ஆண்டு அன்று பிறந்தார். இவர் ஒரு இந்திய நடிகை, இவர் முதன்மையாக இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் பணி புரி கிறார். அவரது பா ராட்டு க்களில் பிலிம்பேர் விருது அடங்கும், மேலும் அவர் 2018 முதல் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் செலிபிரிட்டி 100 பட்டியலில் தோன்றியுள்ளார்.

பன்னு 2010 ஆம் ஆண்டு தெலுங்கு தி ரைப் படமான ஜும்மண்டி நாடம் மற்றும் தமிழில் தி ரைப்பட த்துடன் அறி முகமா னார். நீதிமன்ற அறை நாடகம் பிங்க், போர் நாடகம் தி காசி தாக்குதல், அதிரடி நகைச்சுவை ஜூட்வா, மர்ம த்ரில்லர் பத்லா மற்றும் விண்வெளி நாடகம் மிஷன் மங்கல்.

தமிழில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய இயக்கி தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் கதா நாய கியாக அறி முகமான வர் நடிகை டாப்சி. கொஞ்சம் கொழு கொழுவென இருந்த டாப்ஸி இந்திக்கு போன பிறகு தன் உடம்பை மிகவும் ஸ் லிம் மாக மாற் றிக்கொ ண்டார். ஹிந்தியில் நடிகர் அமிதாப்புடன் இவர் நடித்த பிங்க் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதற்கடுத்து இவர் க தாநாய கிக்கு முக் கியத் துவம் உள்ள வேடங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான தப்பாட் தி ரைப் படம் மிகப்பெரிய அளவில் வெற் றியைப் பெற்றுத் தந்தது. தமிழில் இவர் இறுதியாக காஞ்சனா என்ற படத்தில் நடித்து இருந்தார். அந்த படத்தில் மிகவும் தை ரி யசா லியான பெ ண் ணாக, புதுமைப் பெ ண்ணி ன் அவதாரமாக நடித்திருப்பார்.

என்னதான் இவர் தமிழ் தி ரையுல கில் பல வருடங்களாக தி ரைப்ப டங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை. கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது. தற்போது அவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று .

 

நடிகர் சிபி ராஜின் ம னைவி மற்றும் மகன் யார் தெரியுமா.? இவ்வளவு அ ழகாக இருக்கிறார்களே புகைப்படம் இதோ..!!

சிபி ராஜின்………

சினிமாவில் ஒரு காலத்தில் ரஜினி, கமல், கார்த்திக், பிரபு போல ஹீரோவாக கலக்கியவர் நடிகர் சத்யராஜ். நடிகர் சத்யராஜ் என்று தொழில் ரீதியாக அறி யப் பட்ட ரங்கராஜ் சுப்பையா அக்டோபர் 3, 1954ஆம் ஆன்று அன்று பிறந்தார். இவர் ஒரு இந்திய நடிகர், தயா ரிப்பாளர், இயக்குனர், ஊடக ஆளுமை மற்றும் முன்னாள் அரசியல்வாதி ஆவார், அவர் முக்கியமாக தமிழ் சினிமாவில் தோன்றினார். இவரது 200 படங்களில் தெலுங்கு, மலையாளம், கன்னடந்தி இந்தி ஆகிய படைப்புகளும் அடங்கும்.

வேதம் புதித்து, நாடிகன், அமிதி படாய், பெரியார் மற்றும் ஒன்பாது ரூபாய் நோட்டு ஆகிய படங்களில் முன்னணி நிகழ்ச்சிகளின் மூலம் வெற்றியை சந்தித்தார்.சமீபகால வருடமாக முக்கியமான வேடங்களில் மட்டும் படங்களில் நடித்து வருகிறார். பாகுபலி, கனா ஆகிய படங்களில் அவரின் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது.

அவரின் ம கன் சிபி ராஜ் ஸ்டூடண்ட் நம்பர் ஒன் படம் மூலம் ஹீரோவாக அறி முகமா னார். ஜோர், வெற்றி வேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ், லீ என படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

அவரின் நடிப்பில் வந்த நாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன் துரை ஆகிய படங்கள் பலருக்கும் பிடித்து போனது. கடைசியாக வந்த வால்டர் படம் கல வை யான விம ர்சன ங்க ளையே பெற்றது. தற்போது மாயோன், ரங்கா, வட்டம், கபடதாறி ஆகிய படங்கள் கையில் இருக்கின்றன. முழுமையான வெற்றிக்காக அவரும் தொடர்ந்து போராடி வருகிறார்.

2008 ல் ரேவதி என்ற பெ ண்ணை தி ரும ணம் செய்து கொண்டார். தி ரு மணத் திற்கு முன்வே இருவரும் 10 வருடமாக கா தலில் இருந்ததனர். இவர்களுக்கு இரண்டு ஆ ண்குழ ந்தைக ளும் பிறந்தன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ம னைவி மற்றும் மகன்களுடன் சிபிராஜ் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் ரசிகர்கள் அவரின் மகன்கள் வள ர்ந்துவி ட்டதை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

தனுஷ் நடிக்கும் D43 திரைப்படத்தின் அசத்தலான அறிவிப்பு ! 

D43…….

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிக்கிறார் தனுஷ். D43 என அறிவிக்கப்பட்ட இந்த படத்தில் டைட்டில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் பூஜையுடன் சென்னையில் படப்பிடிப்பை துவங்கியது படக்குழு. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. க்ரைம் திரில்லரான இந்த படத்தில் தனுஷ் பத்திரிகையாளர் ரோலில் நடிக்கவுள்ளார் என பேசப்படுகிறது.

படத்தின் நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். படத்தின் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனத்துக்கான பொறுப்பைப் பாடலாசிரியர் விவேக் ஏற்றுள்ளார். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார். இந்தப் படத்துக்காக 3 பாடல்களின் பணிகளை கொரோனா ஊரடங்கு சமயத்திலேயே ஜி.வி.பிரகாஷ் முடித்துக் கொடுத்துவிட்டார்.

D43 ஆல்பம் நன்றாக உருவாகி வருவதாகவும், சாலிட்டான ஆல்பமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் ஜிவி பிரகாஷ். தனுஷ் பாடிய பாடலுடன் படப்பிடிப்பை துவங்கினர் படக்குழுவினர். கடந்த வாரம் இந்த படத்தின் முதல் பாடலை படமாக்கி முடித்துவிட்டனர். இந்த சுவையூட்டும் செய்தியை டான்ஸ் மாஸ்டர் ஜானி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் படக்குழுவினரின் புதிய அறிவிப்பு தனுஷ் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. சூரரைப் போற்று படத்தில் நடித்த கிருஷ்ணகுமார் D43 படத்தில் இணைந்துள்ளார். இந்த அறிவிப்பை ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர் தனுஷ் ரசிகர்கள்.

சுதா கொங்கரா இயக்கத்தில் தீபாவளி விருந்தாய் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. அமேசான் பிரைமில் வெளியான இந்த படத்தில் நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, பரேஷ் ராவல், காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருந்தார். ஜாக்கி ஆர்ட் டைரக்ஷன் பணிகளை செய்திருந்தார். இந்த படத்தில் சூர்யாவின் நண்பராக நடித்தவர் கிருஷ்ணகுமார். பைலட் பாத்திரத்தில் படம் முழுக்க வலம் வந்திருப்பார். தற்போது இவர் தனுஷுடன் இணைந்திருப்பது படத்திற்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அத்ரங்கி ரே இந்திப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார் தனுஷ். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி அசத்தியது குறிப்பிடத்தக்கது.