விஷ்ணு விஷால் நடிக்கும் இன்று நேற்று நாளை 2 திரைப்பட பணிகள் துவக்கம் !

இன்று நேற்று நாளை………

தமிழ் திரையுலகின் முதல் டைம் ட்ராவல் திரைப்படமான இன்று நேற்று நாளை திரைப்படம் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் முதல் பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த நடிகர் ஆர்யா தான் இரண்டாம் பாகத்தில் ஹீரோவாக நடிப்பார் என செய்திகள் வெளிவந்தன. ஆனால் முதல் பாகத்தில் நடித்த விஷ்ணு விஷாலே இந்த பாகத்திலும் கதாநயகனாக நடிக்க உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் முதல் பாகத்தில் நடித்த அனைவரும் அவர்களின் கதாபாத்திரத்திலேயே நடிக்க உள்ளனர்.

இரண்டாம் பாகத்தை, முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் ரவிகுமாரின் உதவியாளர் கார்த்திக் இயக்கவுள்ளார். திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் 25 ஆவது படமாக உள்ள இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

ம.து கடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. புகைப்படத்தை பார்த்து அ தி ர்ச்சியான மக்கள்..!!

ரஜினிகாந்த்……

 

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்தியளவில் முன்னணி நடிகராக கொண்டாடப்படுபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் சிலருக்கு கொரானா தோ ற் று ஏ ற் பட்டதால் படப்பிடிப்பு தள்ளிவைக்க பட்டுள்ளது.

மேலும் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய உ ட ல் நிலையை சரி செ ய் துகொ ள் ள வெளிநாடு சென்று இருக்கின்ற காரணத்தாலும் படப்பிடிப்பு ஒட்டிவைத்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் படத்தில் ம.து அ ரு ந் தியோ, அல்லது பு கை பு.டி.த்தோ பார்த்திருப்போம்.

ஆனால் நிஜத்தில் ஒரு ம.து க டை யில் உள்ளே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி ம க் க ளை அ.தி.ர்.ச்.சி.யில் ஆ.ழ்.த்.தி.யுள்ளது.

ஆம் தனது ரசிகரின் ம.து கடைக்கு தான் ரஜினி சென்று அவரை சந்தித்து வந்துள்ளார். அந்த புகைப்படம் தான் இது..

செம்ம மாடர்ன் உடையில் அனைவரின் மனதையும் கொ ள் ளைகொண்ட நடிகை சமந்தா..! ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ..

சமந்தா……..

நடிகை சமந்தா தமிழ் சினிமா மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார், இவருக்கு நடிகர்களுக்கு சமமான ரசிகர்கள் வட்டம் உள்ளது.

மேலும் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சமந்தா கடைசியாக தமிழில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த சமந்தா, அடுத்ததாக விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் சமந்தா தொடர்ந்து வித்தியாசமான உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது செம்ம மாடர்ன் உடையில் அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது என்று தான் கூறவேண்டும்.

இதோ அந்த புகைப்படங்கள்..

தளபதி 65 படத்தில் விஜய்க்கு வி ல்லனாக இவரா! அப்போ செம ச ண்டை உறுதி..!

65வது……

தளபதி விஜய் தற்போது மாஸ்டர் படத்தை தொடர்ந்து தனது 65வது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஒப்படைத்துள்ளார்.

ஆம் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய இளம் இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளார்.

இப்படத்தில் விஜய்க்கு வி ல் லனாக யார் நடிக்க போகிறார். விஜய்க்கு கதாநாயகியாக யார் நடிக்க போகிறார் என்று பல கேள்விகள் உள்ளன.

இந்நிலையில் தளபதி 65 படத்தில் விஜய்க்கு வி ல் லனாக அருண் விஜய் நடிக்க போகிறார் என்று கூறப்படுகிறது.

இதனால் படத்தில் செம ச ண் டை காட்சிகள் இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.

“விஷாலுக்கு இப்படி ஒரு அண்ணியா ?” திமிரு பட நடிகையின் Latest புகைப்படம் !

ஸ்ரேயா ரெட்டி…

தமிழில் விஷால் நடித்த திமிரு படத்தில் அதட்டலான ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ஸ்ரேயா ரெட்டி. இவர் விஷாலின் அண்ணன், விக்ரம் கிருஷ்ணாவின் மனைவி.

அதாவது விஷாலின் அண்ணி. 2002ஆம் ஆண்டு வெளியான சாமுராய் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார். இவர் நடிகை மட்டுமில்லாமல் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறார். சினிமாவிற்கு வருவதற்கு முன் எஸ் எஸ் மியூசிக் சேனலில் VJ ஆக வேலை செய்துள்ளார்.

திமிரு படத்திற்குப் பின் வெயில், பள்ளிக்கூடம், காஞ்சிவரம் போன்ற படங்களில் நடித்த இவர் அதன் பின் கொஞ்ச நாள் சினிமாவில் நடிக்காமல் காணாமல் போய்விட்டார்.

காஞ்சிவரம் படத்தில் நடித்ததற்காக பெரும் பாராட்டைப் பெற்றார். அதன்பின் சென்ற வருடம் வெளியான அண்டாவ காணோம் படத்தில் நடித்தார். நடிப்பில் சிறந்து விளங்கினாலும் அவ்வப்போது தனது புகைப்படங்கள் கவர்ச்சி காட்டியும் வருகிறார் ஸ்ரேயா ரெட்டி.

நீச்சல் குளம் அருகே இன்று எடுக்கப்பட்ட சமீபத்திய போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாயடைத்துப் போய் இருக்கிறார்கள். குட்டை frock அணிந்து தனது தொடை அழகு முழுவதும் தெரியுமாறு போஸ் கொடுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் இவரை நீண்ட நாள் கழித்து இந்த கோலத்தில் பார்ப்பதால் மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மகன் சஞ்சயோடு Play Station விளையாடிய தளபதி விஜய் ! வைரல் Photo !

விஜய் – ஜேசன் சஞ்சய்…

விஜய், தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் 6 நாட்களுக்கு முன் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது.

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது ஹீரோ ஆகிற வயசுக்கு வளர்ந்துவிட்டார். சில குறும்படங்களில் இவரே இயக்கி நடித்துள்ளார்.

இதை பார்த்து, சஞ்சையை ஹீரோவாக வைத்து படமெடுக்க இயக்குனர்கள் பலரும் படை எடுத்து வந்தனர்.

இந்நிலையில் தன் மகன் சஞ்சய் அவர்களோடு Play ஸ்டேஷன் விளையாடுவது போல புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், Share செய்து வருகிறார்கள்.

மௌனம் பேசியதே படத்திற்கு முன், திரிஷா வெளியிட்ட Photo-shoot புகைப்படம் ! செம்ம வைரல் !

திரிஷா…

ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.

என்னதான் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. பெண்கள் yellow சுடிதார், blue shawl போட்டா போதும் நம்ம பசங்களாம் வாழ்ந்தா இவ கூடத்தான் வாழனும்னு கெளம்பிடுவாங்க.

மேலும் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன், பரமபத விளையாட்டு ஆகும். அதை தவிர தற்போது ஹிந்தியில் வெற்றி பெற்ற பிக்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், இப்போது நாயகியாக இருக்கும் த்ரிஷாவின் ஆரம்ப கால புகைபடத்தை நாம் பார்த்திருக்க மாட்டோம் ? தற்போது அது எங்கிருந்தோ வெளியாகி இணையத்திலும் வைரலாகி வருகிறது.

கோடி கோடியாய் வசூல் குவித்த மாஸ்டர்: சென்னையில் மட்டும் இத்தனை கோடியா?

மாஸ்டர்…

விஜய் நடிப்பில் வந்த மாஸ்டர் படம் 4 நாட்கள் முடிவில் சென்னையில் மட்டும் ரூ.4.39 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. மாநகரம், கைதி ஆகிய படங்களைத் தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியத்தில் வெளியான படம் மாஸ்டர்.

இந்தப் படத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தணு, சஞ்சீவ், ஸ்ரீமன், பிரேம்குமார், பூவையார், ரம்யா சுப்பிரமணியன் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.

கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாஸ்டர் படம் திரைக்கு வந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. கைதி படத்தைப் போன்று இந்தப் படத்திலும் இருட்டு, லாரி, வாளி, போதைப் பொருள் அவரது சாராம்சம் இடம் பெற்றுள்ளது.

மாஸ்டர் படத்தை விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் பாதி, பாதியாகவே பிரித்துக் கொண்டுள்ளனர். ஆம், முதல் பாதியை விஜய்க்குரிய படமாகவே எடுத்துள்ளார். இரண்டாம் பாதியை லோகேஷ் கனகராஜ் தனக்குரிய படமாகவே எடுத்துள்ளார். அதில், கொஞ்சம் விஜய்யின் நக்கல், நய்யாண்டியை பாடலாக கொடுத்துள்ளார்.

ஆம், டி ராஜேந்தர் பாடும் வாடா என் மச்சி வாழக்கா பச்சி என்ற பாடலை பாடியுள்ளார். எப்போது மாஸ்டர் படம் திரைக்கு வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்த சினிமா ரசிகர்கள், பிரபலங்களுக்கு மாஸ்டர் படம் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

அனைவரிடமும் நல்ல வரவேற்பு பெற்ற மாஸ்டர் படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், கேரளா, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. வெறும் 50 சதவிகித இருக்கைகளுடன் கூடிய திரையரங்கில் மாஸ்டர் படம் வெளியாகியிருந்தாலும் வசூலில் சாதிக்க ஒன்றும் தவறவில்லை.

உலகம் முழுவதும் வெளியான மாஸ்டர் படம் 3 நாட்களிலேயே ரூ.100 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது என்று வர்த்தக ஆய்வாளர் கௌசிக் எல் எம் கூறியுள்ளார். இந்த நிலையில், சென்னையில் மட்டும் 4 நாட்கள் முடிவில் ரூ.4.39 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது என்று கௌசிக் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு நாளும் ரூ.1 கோடிக்கும் அதிகமாகவே வசூல் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குஷ்பு வீட்டில் நடிகர் விஜய் சேதுபதி..வெளியான புகைப்படம்!

விஜய் சேதுபதி…

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிகை குஷ்பு வீட்டிற்கு சென்று மதிய உணவு சாப்பிட்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ரசிகர்களை பக்கத்தில் நெருங்க விடாத சில நடிகர்களுக்கு மத்தியில், தன் ரசிகனை பக்கத்தில் அழைத்து அவனுக்கு கன்னத்தில் முத்தம் கொடுக்கும் அளவிற்கு உயர்ந்து நிற்பவர் நடிகர் விஜய் சேதுபதிதான்.

மிகவும், எளிமையான தோற்றம், நேர்மையான குணம், ரசிகர்களை மதிக்கும் மனம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அதனை மறுக்காமல் ஏற்று நடிப்பவர். உதாரணத்திற்கு, திருநங்கையாக நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தைச் சொல்லலாம்.

நானும் ரௌடி தான், சூப்பர் டீலக்ஸ், 96, சீதக்காதி, சைரா நரசிம்ஹா ரெட்டி, சங்கத்தமிழன், பேட்ட என்று மாஸ் படங்களில் நடித்து ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளார். மாஸ் ஹீரோ என்ற கெத்து, தெனாவட்டு இல்லாமல், சிறப்புத் தோற்றத்திலும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வெளியிடுவார். இவ்வளவு ஏன், ரஜினிகாந்திற்கு வில்லனாகவும் நடித்துள்ளார்.

தற்போது விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மாஸ்டர் படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மாஸ்டர் படத்தில் பவானி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விஜய்யை விட விஜய் சேதுபதிக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மாஸ்டர் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், விஜய் சேதுபதி நேற்று முன்தினம் தனது 43 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என்று அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அவர்து பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, படத்திற்கு காந்தி டாக்ஸ் (Gandhi Talks) என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விஜய் சேதுபதி இன்று நடிகை குஷ்புவின் வீட்டிற்கு மதிய உணவிற்கு சென்றுள்ளார். அப்போது குஷ்பு மற்றும் விஜய் சேதுபதி இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்தார். வீட்டு சாப்பாட்டுடன் நிறைய விஷயங்கள் பேசிக் கொண்டோம். ஒரு சாதாரண நாளை சிறப்பான நாளாக மாற்றியதற்கு நன்றி விஜய். நிறைய அன்பு, குட் லக் என்று வாழ்த்தியுள்ளார்.

தற்போது இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் சேதுபதி நடிப்பில் துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, உப்பென்னா, மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், காத்துவாக்குல ரெண்டு காதல், கொரோனா குமார், மும்பைகார், இடம் பொருள் ஏவல், தீபக் சுந்தர்ராஜனின் இன்னும் டைட்டில் வைக்கப்படாத படம், 19 (1) (a) என்று ஏராளமான படங்கள் உருவாகி வருகிறது.

புதுசா Green Cinemas என்ற தியேட்டர் ஓபன் செய்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா!

கே இ ஞானவேல்ராஜா…

தயாரிப்பாளர் கே இ ஞானவேல்ராஜா புதிதாக கிரீன் சினிமாஸ் என்ற திரையரங்கை திறந்துள்ளார். சிறு வயது முதலே படம் தயாரிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர் கே இ ஞானவேல்ராஜா. ஆதலால், தனது அன்றாட பள்ளி வகுப்புகளை கட் அடித்து வந்துள்ளார்.

அதோடு, தேவி மற்றும் சத்யம் திரையரங்குகளில் படம் பார்த்து பொழுதை கழித்து வந்துள்ளார். இவர், நடிகர் சிவக்குமாரின் குடும்பத்தாருக்கு தூரத்து உறவினர். அதன் பிறகு ஸ்டூடியோ கிரீன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

இதன் மூலமாக கடந்த 2006 ஆம் ஆண்டு சூர்யாவின் நடிப்பில் வந்த சில்லுனு ஒரு காதல் படத்தை தயாரித்துள்ளார். சூர்யாவின் படம் மட்டுமல்லாமல் கார்த்தியின் படங்களையும் தயாரித்துள்ளார். மேலும், இருவரது படங்களை தயாரிப்பதோடு 2012 ஆம் ஆண்டு வரை விநியோகஸ்தராகவும் இருந்துள்ளார்.

மேலும், அட்டகத்தி, கும்கி, சூது கவ்வும் ஆகிய படங்களுக்கு விநியோகஸ்தராகவும் இருந்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மட்டுமல்லாமல் ஆட்னா ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.

சில்லுனு ஒரு காதல், பருத்தி வீரன், சிங்கம், நான் மகான் அல்ல, சிறுத்தை, பிரியாணி, ஆள் இன் ஆள் அழகுராஜா, மெட்ராஸ், டார்லிங், கொம்பன், இறைவி, டார்லிங் 2, சி3, தானா சேர்ந்த கூட்டம், கஜினிகாந்த், நோட்டா, தேவராட்டம், மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்கள் உள்பட ஏராளமான படங்களை ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.

தற்போது சிம்பு நடிப்பில் உருவாகி வரும் பத்து தல படத்தை தயாரித்து வருகிறார். சகுனி, அட்டகத்தி, கும்கி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, ஓ காதல் கண்மணி, 24, ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து என்று பல படங்களுக்கு விநியோகஸ்தராகவும் இருந்துள்ளார்.

இந்த நிலையில், முதல் முறையாக திரையரங்கு உரிமையாளராகவும் திகழ்ந்துள்ளார். ஆம், கிரீன் சினிமாஸ் என்ற திரையரங்கை சென்னையில் உள்ள பாடி பகுதியில் திறந்துள்ளார். 2 ஸ்கிரீன்கள் மட்டுமே இந்த திரையரங்கு கொண்டுள்ளது என்றும், ஸ்கிரீன் ஒன்றில் 384 இருக்கைகளும், ஸ்கிரீன் 2ல் 142 இருக்கைகளும் இருக்கையில் வகையில், திரையரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

திரையரங்கு திறந்துள்ள ஞானவேல்ராஜாவிற்கு நடிகர் கார்த்தி, ஆர்யா என்று பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆர்யா கூறியிருப்பதாவது: இது உங்களது ஆரம்பம். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். இது போன்று இன்னும் நிறைய திரையரங்குகள் நீங்கள் திறக்க வேண்டும். இந்த பொங்கலுக்கு மாஸ்டர் படமும், ஈஸ்வரன் படமும் பாடியில் உள்ள கிரீன் சினிமாஸ்ல ரிலீசாகிறது.

படத்தை திரையரங்குகளில் பார்ப்பதை விட சிறந்த அனுபவமும் எங்கும் கிடைக்காது. இந்த கொரோனா காலத்திலேயும், ரசிகர்களாகிய உங்களுக்காக திரையரங்கு அனுபவம் இருக்க வேண்டும் என்பதறகாக துணிச்சலோடு மாஸ்டர், ஈஸ்வரன் ஆகிய படங்களை திரையரங்குகளில் வெளியிட்டுள்ளார்கள்.

அவர்களுக்கு எனது பாராட்டுகள். தயவு செய்து இந்த இரு படங்களையும் திரையரங்குகளில் பார்த்து உங்களது ஆதரவை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.