ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மின்சாரம் தாக்கி இறந்த யோகேஸ்வரன் நினைவாக பரிசு.. ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு ராகவா லாரன்சின் பரிசு..!

ராகவா லாரன்ஸ்…

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் மிகவும் முக்கியமான ஒன்று ஜல்லிக்கட்டு. பொங்கல் விழாவில் தமிழக மக்களால் பெரிதும் கொண்டாடப்படுவது தான் ஜல்லிக்கட்டு.

இதில் சீறி பாயும் காளைகளை துணிச்சலாக முன் நின்று அடக்கி வரும் ஒவ்வொரு வீரர்களுக்கும் அந்தந்த கிராமத்தில் இருந்து பரிசுகள் வழங்கப்படும்.

தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சேலத்தைச் சேர்ந்த யோகேஷ்வரன் என்ற இளைஞர் ரெயிலில் ஏறி போராட்டம் செய்த போது எதிர்பாராத விதமாக மின்கம்பியைத் தொட்டதால் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியில் வெல்லும் வீரர்களுக்கு மறைந்த யோகேஸ்வரன் நினைவாக தங்க காசு பரிசாக வழங்க உள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

தன் குழந்தையின் முதல் பொங்கலை பாரம்பரியத்துடன் கொண்டாடிய ஆல்யா..!

ஆல்யா மனசா பொங்கல் கொண்டாட்டம்…

பிக் பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் ஆரி.. கோப்பையை கைப்பற்றிய மாபெரும் தருணம்..!

பிக் பாஸ் சீசன் 4…

ரியோ, ஆரி, சோம், பாலாஜி, ரம்யா என 5 போட்டியாளராக மக்களின் வாக்குகள் மூலம் பைனலிஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஆனால் இதில் 16 கோடி அதிக வாக்குகள் பெற்று பிக் பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னராகி இருக்கிறார் நடிகர் ஆரி.

கோப்பையை கைப்பற்றிய பிறகு, கமல் ஹாசனுக்கும், தனக்கும் ஓட்டு போட்டு வெற்றியாளராக மாற்றிய ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

மேலும் தனது தாய், தந்தைக்கும் கோப்பையை கைப்பற்றிய அந்த தருணத்தில் தனது நெகிழ்ச்சியான பேச்சை வெளிப்படுத்தினர்.

நயன்தாராவாக மாறிய பிரபல பாலிவுட் நடிகை.. நீங்களே பாருங்க அதை..!

நயன்தாரா…

தென்னிந்தியளவில் முன்னணி கதாநாயகியாகவும், இந்தியளவில் பிரபலமான நடிகையாகவும் விளங்கி வருபவர் நடிகை நயன்தாரா.

ஆம் ஹீரோக்களுடன் இணைந்து படங்கள் நடிப்பது மட்டுமல்லாமல், தனக்காக சிறந்த கதைக்களம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்.

அப்படி நயன்தாராவின் சோலோ நடிப்பில் வெளியான திரைப்படம் கோலமாவு கோகிலா. ஆம் நெல்சன் இயக்கத்தில் உருவான இப்படம் சூப்பர்ஹிட்டானது.

அதனை தொடர்ந்து தற்போது இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்து வருகின்றனர். ஹிந்தியில் ரீமேக்காகும் இப்படத்தில் நயன்தாராவாக, ஸ்ரீதேவியின் மகள் இளம் நடிகை ஜான்வி கபூர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நயன்தாராவாக மாறிய நடிகை ஜான்வி கபூரின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

மாஸ்டர் படத்தின் நெகட்டிவ் விமர்சனம் குறித்து பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்..!

லோகேஷ் கனகராஜ்…

மாநகரம் மற்றும் கைதி படத்தை தொடர்ந்து இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இப்படத்தில் முதல் முறையாக தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

இப்படம் பொங்கல் விருந்தாக வெளியாகி தற்போது வரை உலகளவில் பாக்ஸ் ஆபிசில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இருந்தாலும் மாஸ்டர் திரைப்படம் குறித்து பல நெகட்டிவ் விமர்சனங்கள் பல தரப்பில் இருந்து வெளியாகி வருகிறது.

இந்நிலையில் நெகட்டிவ் விமர்சனம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இதில் ” விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். பாசிட்டிவ், நெகட்டிவ் என எப்படி விமர்சனம் வந்தாலும் ஏற்க வேண்டும். அதுமட்டுமின்றி மாஸ்டர் திரைப்படம் பிடித்திருக்க போய் தான் மக்கள் திரையரங்கிற்கு வருகிறார்கள் ” என்று கூறியுள்ளார்.

டைட்டிலை வெல்லப்போவது இவர்தானா, அதுவும் இத்தனை கோடி வாக்குகளா?- வெளிவந்த சூப்பர் தகவல்!!

பிக்பாஸ்…

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று பிரம்மாண்ட நிகழ்ச்சியுடன் முடிவுக்கு வர உள்ளது.

இந்த நாளுக்காக போட்டியாளர்களை தாண்டி மக்களும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிகழ்ச்சியின் வெற்றியாளர் இவர்தான், அவர்தான் என மக்கள் பெரிய கணக்கு போட்டு வருகின்றனர்.

ஆனால் உண்மையில் வெல்லப்போவது யார் என்பது பிக்பாஸ் குழுவினருக்கு மட்டுமே தெரியும்.

இந்த நிலையில் நிகழ்ச்சியை வெல்லப்போகும் அந்த போட்டியாளருக்கு இதுவரை 11.6 கோடி வாக்குகள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது, அது ஆரி தான் என்கின்றனர்.

அதற்கு அடுத்தடுத்து 4 கோடி, 89 லட்சம் என இரண்டாவது, மூன்றாவது இடங்களுக்கு கிடைத்துள்ளதாம்.

3 நாட்களில் படு வசூல் சாதனை செய்த விஜய்யின் மாஸ்டர்- ஈஸ்வரன் நிலவரம் என்ன தெரியுமா?

வசூல்..

பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் சினிமாவில் மாஸ்டர், ஈஸ்வரன் படங்கள் ரிலீஸ் ஆகின.

நீண்ட மாதங்களுக்கு பிறகு படங்கள் பெரிய அளவில் வெளியாவதால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

விஜய்யின் மாஸ்டர், சிம்புவின் ஈஸ்வரன் இரண்டு படங்களுக்கும் செம வரவேற்பு. 3 நாள் முடிவில் இப்படங்களின் சென்னை வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.

3 நாட்களில் விஜய்யின் மாஸ்டர் ரூ. 3.33 கோடி வசூலித்துள்ளது, சிம்புவின் ஈஸ்வரன் 2 நாட்களில் ரூ. 39 லட்சம் வசூலித்துள்ளது.

மாஸ்டர் படத்தின் வசூல்! இப்போதைய ஸ்டேட்டஸ் இதோ! பாக்ஸ் ஆஃபிஸ் லிஸ்ட்!

மாஸ்டர்…

மாஸ்டர் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தெலுங்கு சினிமா மலையாள சினிமா வட்டாரத்திலும் படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

தெலுங்கு வட்டாரத்தில் (ஆந்திரா & தெலுங்கானா) வசூல் விவரம்..

1 ம் நாள் : ரூ 5.74 கோடி

2 ம் நாள் : ரூ 1.67 கோடி

3 ம் நாள் : ரூ 1.55 கோடி

மொத்த வசூல் ரூ 8.96 கோடி..

தெலுங்கு ரைட்ஸ் + Expensens : ரூ 8.5 கோடி..

கேரளாவிலும் மாஸ்டர் 3 நாட்களில் ரூ 4.95 கோடி வசூலித்துள்ளதாம்.

வெளிநாட்டில் ஹாலிவுட் படங்களையே பின்னுக்கு தள்ளிய விஜய்யின் மாஸ்டர்- தரமான சம்பவம்!

மாஸ்டர்…

கடந்த ஜனவரி 13ம் தேதி தமிழ்நாட்டு மக்கள் கொண்டாடும் வகையில் வெளியான திரைப்படம் மாஸ்டர்.

படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிற அண்மையில் விஜய் பிரபல திரையரங்கிற்கு வந்து ரசிகர்களுடன் படம் பார்த்துவிட்டு சென்றுள்ளார்.

இப்போது ரசிகர்கள் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் விவரங்களை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

துபாயில் ஹாலிவுட் படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்து முதல் இடத்தில் உள்ளது.

‘வலிமை’ ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் எப்போது? படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்த தகவல்!

வலிமை…

தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் அடுத்த மாதம் நிறைவடைந்து விடும் என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் ’வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு கடந்த ஒரு வருடங்களாக அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் என்பதும் சமீபத்தில் அஜீத்தின் மேனேஜர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சரியான நேரத்தில் ’வலிமை’ படத்தின் அப்டேட்கள் வரும் என்று ரசிகர்களை சமாதானப்படுத்தினார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது கசிந்துள்ள தகவலின்படி ’வலிமை’ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்தவுடன் தான் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகும் என்றும் அதன் பின்னர் ரசிகர்களை தொடர்ந்து குஷிப்படுத்தும் விதமாக அடுத்தடுத்து அப்டேட்டுகள் தொடர்ந்து, படத்தின் ரிலீஸ் வரை வெளிவந்து கொண்டிருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அஜித் ஜோடியாக ஹூமா குரேஷி, அம்மாவாக சுமித்ரா மற்றும் வில்லனாக கார்த்திகேயா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தை மிகுந்த பொருட்செலவில் போனிகபூர் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.