வெற்றிப்பட இயக்குனருடன் மூன்றாவது முறையாக இணையும் நயன்தாரா?

நயன்தாரா…

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ விக்னேஷ் சிவன் இயக்கிவரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ மற்றும் ’நெற்றிக்கண்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும், மலையாளத்தில் ’நிழல்கள்’ மற்றும் ’பாட்டு’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது அவர் தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற மோகன்லாலின் ’லூசிபர்’ என்ற திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தை பிரபல இயக்குனர் மோகன் ராஜா இயக்க இருக்கிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

மோகன்லால் கேரக்டரில் சிரஞ்சீவி நடிக்கும் இந்த படத்தில் மஞ்சு வாரியர் கேரக்டரில் நடிக்க நயன்தாரா தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் விரைவில் இது குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது

சமீபத்தில் சிரஞ்சீவியுடன் ’சைரா நரசிம்ம ரெட்டி’ என்ற திரைப்படத்தில் நடித்த நயன்தாரா மீண்டும் அவருடன் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி மோகன் ராஜாவின் இயக்கத்தில் ’தனி ஒருவன்’ மற்றும் ’வேலைக்காரன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்த நயன்தாரா மூன்றாவது முறையாக இணைகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லூசிபர் திரைப்படத்தில் மஞ்சு வாரியரின் கேரக்டர் மோகன்லாலின் தங்கை கேரக்டராக வரும் என்பதால், சிரஞ்சீவிக்கு தங்கையாக தான் நயன்தாரா நடிக்க உள்ளதாக தெரிகிறது.

இந்த கேரக்டருக்கு ஏற்கனவே சுகாசினி, ரம்யா கிருஷ்ணன், குஷ்பு, நதியா உள்பட பலர் பரிசீலிக்கப்பட்டு இறுதியில் நயன்தாரா தான் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கண் தெரியாத தனது மகனுடன் மாஸ்டர் படம் பார்க்க வந்த வயதான பாட்டி.. மிகவும் கண்கலங்க வைக்கும் வீடியோ..!

வயதான பாட்டி…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் பொங்கல் விருந்தாக மாஸ்டர் திரைப்படம் வெளியானது.

இப்படம் வெளியாகி தற்போது உலகளவில் சுமார் ரூ. 80 கோடி வரை வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை புரிந்துள்ளது.

தளபதி விஜய்யின் படம் என்றாலே 6 வயது முதல் 60 வயது வரை அனைத்து தரப்பு மக்களும் படத்தை பார்க்க ஆர்வமாக காத்து கொண்டு இருப்பார்கள்.

அந்த வகையில் வயதான பாட்டி ஒருவர் தனது கண் தெரியாத மாற்றுத்திறனாளி மகனுடன் மாஸ்டர் படத்தை பார்க்க வந்துள்ளார்.

தான் சேர்த்து வைத்த 120 ரூபாய் மட்டும் கொடுத்து டிக்கெட் தாருங்கள், நான் விஜய்யின் ரசிகை, எனக்கு விஜய்யை ரொம்ப பிடிக்கும் என்று கேட்டுள்ளார்.

இதற்கு அந்த திரையரகத்தில் டிக்கெட் கொடுப்பவர் காசு வேண்டாம் என்று கூறி, அவர்களை திரையரகத்திற்குள் படம் பார்க்க அழைத்து செல்லுகிறார்.

பிறந்தநாளில் ஏற்பட்ட சோகம், எழுந்த சர்ச்சை- மன்னிப்பு கேட்ட நடிகர் விஜய் சேதுபதி!!

விஜய் சேதுபதி…

நேற்று நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாள். அனைவரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார்கள்.

அவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலர் வாங்கிய கேக் வெட்டி கொண்டாட்டத்தில் இருந்துள்ளார். அவர் புதிதாக பொன்ராம் அவர்களின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறாராம்.

அந்த கதையில் பட்டக்கத்தி முக்கிய பங்கு வகிக்கிறதாம். எனவே அப்படக்குழுவினர் வைத்த கேக்கை பட்டக்கத்தி வைத்து விஜய் சேதுபதி வெட்டியுள்ளார்.

அப்புகைப்படம் வெளியாகி சர்ச்சையாக, அதற்கு தற்போது விஜய் சேதுபதி விளக்கம் கொடுத்து மன்னிப்பு கேட்டுள்ளார்.

‘மாஸ்டர்’ இந்தி ரீமேக்: விஜய், விஜய் சேதுபதி கேரக்டர்களில் நடிப்பது யார்?

மாஸ்டர்…

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ‘மாஸ்டர்’ திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாகவும் இதன் ரீமேக் உரிமையை பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் Endemol என்ற நிறுவனம் பெற்றுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய் நடித்த ஜேடி என்ற பேராசிரியர் கேரக்டரில் ஹிருத்திக் ரோஷன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதேபோல் விஜய் சேதுபதி நடித்த கேரக்டரில் அவரே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதி ஏற்கனவே ஒரு சில ஹிந்திப் படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் அவரது கேரக்டரை அவரே நடிப்பது தான் பொருத்தமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்த இறுதி கட்ட பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த மெகா பட்ஜெட் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் பாலிவுட் திரையுலகில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாநகரம்’ திரைப்படம் ஏற்கனவே பாலிவுட்டில் தயாராகி வரும் நிலையில் தற்போது ‘மாஸ்டர்’ திரைப்படமும் இந்தியில் தயாராகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

6 மொழிகளில் தயாராகும் விஜய் சேதுபதியின் அடுத்த படம்: டைட்டில் அறிவிப்பு!

விஜய் சேதுபதி…

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தளபதி விஜய்யுடன் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் அன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

மேலும் விஜய் சேதுபதி தற்போது பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவற்றில் நான்கு திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் சேதுபதி நடிக்க உள்ள அடுத்த திரைப்படம் ஆறு மொழிகளில் தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘காந்தி டாக்ஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் ஹிந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஆறு மொழிகளில் தயாராக உள்ளது. இந்த தகவலை விஜய்சேதுபதி தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

என்னுடைய பிறந்த நாளில் இந்த புதிய திரைப்படத்தின் டைட்டிலை அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன் என்றும் இந்த படம் விரைவில் உங்களது ஆசியுடன் தொடங்க இருப்பதாகவும் விஜய்சேதுபதி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திரைப்படத்தை கிஷோர் பண்டுரங் பெலேகர் என்பவர் இயக்க இருப்பதாகவும் மூவி மில் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ள போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விஜய் சேதுபதி பாலிவுட்டில் இரண்டு திரைப்படங்கள் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இது அவருடைய மூன்றாவது பாலிவுட் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் படத்தை இயக்க போட்டி போடும் இயக்குனர்கள்!!

விஜய்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யின் அடுத்த படத்தை இயக்க இரண்டு இயக்குனர்கள் இடையே போட்டி நிலவி வருகிறது.

மாஸ்டர் திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து இருக்கிறார்.

இந்த படம் கடந்த வருடம் வெளியாக இருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக இந்த வருடம் வெளியானது.

இந்நிலையில் நீண்ட தாமதத்தால் தயாரிப்பாளர் லலித் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்காக அடுத்த படத்தை நடித்துக் கொடுக்க விஜய் முடிவு செய்து இருக்கிறாராம்.

இந்த படத்தை இயக்க சிவா மற்றும் ஹெச் வினோத் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரையில் இருக்கிறதாம்.

இதில் யார் விஜய் படத்தை இயக்குவார்கள் என்று விரைவில் தெரிய வரும் என்கிறார்கள்.

பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் சிம்பு!

சிம்பு…

சினிமாவில் நடிகராக இருக்கும் சிம்பு மாநாடு பத்து தல படங்களைத் தொடர்ந்து பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க இருக்கிறார்.

சிம்பு நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கிய இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார்.

இப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

இப்படத்தை அடுத்து மாநாடு, பத்து தல ஆகிய படங்களில் சிம்பு நடித்து வருகிறார்.

இதையடுத்து சுதாகொங்கரா இயக்கவிருக்கும் படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சுதாகொங்கரா இதற்கு முன் துரோகி, இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார்.

புத்தகம் புது காலை, பாவ கதைகள் ஆகியவற்றில் ஒரு கதையையும் இயக்கி இருக்கிறார்.

யாஷிகாவின் திடீர் மாற்றம்… ரசிகர்கள் வரவேற்பு!

யாஷிகா ஆனந்த்…

நடிகையும் பிக்பாஸ் பிரபலமான யாஷிகா ஆனந்தின் தி.டீர் மாற்றம் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக ரசிகர் மத்தியில் பிரபலமான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவர் மத்தியிலும் இடம் பிடித்தார்.

மேலும் சமூக வலைதளங்களில் எப்போதும் க.வ.ர்.ச்.சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் யாஷிகா ஆனந்த்,

பொங்கல் சிறப்பு போட்டோ சூட்டாக புடவையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

தனுஷுடன் மூன்றாவது முறையாக இணையும் பிரபல நடிகை!

தனுஷ்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷுடன் பிரபல நடிகை மூன்றாவது முறையாக இணைய இருக்கிறார்.

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் டி43 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்துக்கொண்டிருக்கிறது. டி 43 படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார்.

இதில் தனுஷுக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருப்பதாகவும் அதில் ஒன்று தமன்னா என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே நடிகை தமன்னா தனுஷுடன் படிக்காதவன், வேங்கை படத்தில் இணைந்து நடித்திருக்கிறார். நானே வருவேன் படத்தின் மூலம் மூன்றாவது முறையாக தனுஷுடன் இணைகிறார் தமன்னா.

விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பூமி படத்தின் விமர்சனம் – ஜெயம் ரவியின் சிறப்பான சம்பவம் !

பூமி..

நாசாவில் வேலை பார்க்கும் நம்ம தமிழ் விஞ்ஞானி ஜெயம் ரவி, 1 மாச லீவுக்கு நம்ம ஊருக்கு வந்து நாசமா போன படமே பூமி. கைய கால்ல வெச்சுக்கிட்டு சும்மா இல்லாமல், செவ்வாய் கிரகத்துல கூட நம்ம ஆளுங்க சர்வ சாதாரணமாக வாழலாம் , அங்கயும் மரம், செடி, கொடின்னு நட்டு விவசாயம் பண்ணலாம்னு அதற்கான முயற்சியில் இறங்குகிறார் நம்ம பூமிநாதன் ( ஜெயம் ரவி பெயராம்).

திடீரென கதையை மேலும் நகர்த்த நம்ம ஊர பார்த்துட்டு போவோம்னு தன் சொந்த மண்ணுக்குத் திரும்புகிறார். அங்க தான் Director ஒரு Twist வைக்கிறார். தன் மண்ணுக்கு திரும்பிய ஜெயம் ரவிக்கு அதிர்ச்சியோ, அதிர்ச்சி.

ஏன் என்றால், விவசாயிகளும் விவசாயமும் படும் கஷ்டத்தை கண்டு விஜய், ஐஷ்வர்யா ராஜேஷ், சூர்யா, மற்றும் பல ஹீரோக்கள் போல கண் கலங்குகுறார் ரவி. உடனே இதை மாற்ற வேண்டும் என, தனது வேலையைக் கைவிட்டு, இதான் சாக்குனு சொந்த ஊருக்குத் திரும்புகிறார்.

எல்லா படத்துக்கும் வில்லனா யாரை போடலாம்னு யோசிக்கும்போது Ready-made கதாபாத்திரமாக நம்ம இயக்குனர்களின் மைண்டுக்கு வருவது Corporate நிறுவன முதலாளி. இதிலும் ஒரு Corporate நிறுவன முதலாளியுடன் நேரடியாக மோதி தன் நாட்டு வளத்தை அந்நிய சக்த்தியிடம் காப்பாற்றுகிறார்.

ஆழமான ஷங்கர் படங்களும், ஆவேசமான சீமான் மேடை பேச்சும் பார்த்து Inspire ஆகி Overnight-இல் ஸ்கிரிப்ட் எழுதி முடித்துள்ளார் இயக்குநர் லக்‌ஷ்மண். மருந்துக்கு கூட ஒரு கை தட்ட வைக்கும் காட்சி இல்லை. அப்போ அப்போ காதல், அப்போ அப்போ நாட்டு மக்கள், அப்போ அப்போ Corporate வில்லன்னு அங்கும் இங்கும் Confuse ஆகி அலைபாகிறார் ரவி.

கதை என்ன என்றால், வழக்கம் போல் கோலா, கார், ஜீன்ஸ் ஃபேக்டரிகள் தண்ணீரை உறிஞ்சுவதால் நிலத்தடியில் நீர் தண்ணீர் இல்லை, அதனால் விவசாயம் செய்யமுடியவில்லை. அதனால் விவசாயிகள் வாங்கிய கடனை கட்ட முடியவில்லை. அதனால் அவர்கள் தற்கொலை செய்கிறார்கள், இதனால் ஜெயம் ரவிக்கு கோபம் கண்ணுல கனலா வந்து எதிரியை துவம்சம் செய்வதே கதை.

பாதி படம் வில்லனும், ஜெயம் ரவியும் போனிலேயே சவால் விடுவதிலியே காட்சிகள் போகிறது. வில்லன் என்ன தடை போட்டாலும் அதை தனது நாசா விஞ்ஞானி மூளையால் உடைத்துக் தகர்க்கிறார் ஜெயம் ரவி. இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, சதீஷ் எனப் பலர் இருந்தும் No comments. D. இமான் இசை என்று Title Card-இல் தான் இருக்கிறது.

இன்னும் தனி ஒருவன் மித்ரன் IPS கதாபாத்திரத்தில் இருந்து ஜெயம் ரவி வெளியில் வராதது வருத்தமே. ஆக, இப்படி Corporate நிறுவனத்தை எதிர்த்து கார்பரேட் நிறுவனமான Hotstar-லியே ரீலிஸ் பண்ணார் பாரு அதான்லே ஜெயம் ரவி.