ஈஸ்வரன் பட இயக்குனர் சுசீந்திரனின் அம்மா நேற்று காலமானார், வெளியான அதிர்ச்சி தகவல்..!

சுசீந்திரனின் அம்மா…

நடிகர் சிம்பு நடிப்பில் இயகனுங்ற சுசீந்திரன் இயக்கத்தில் நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான திரைப்படம் தான் ஈஸ்வரன்.

இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் இயக்குனர் சுசீந்திரனின் அம்மா ஜெயலட்சுமி நேற்று காலை காலமானார்.

மாரடைப்பு காரணமாக நேற்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மரணமடைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

கமலின் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை ரீமேக் செய்ய விரும்பும் கார்த்திக் நரேன்!

கார்த்திக் நரேன்…

கமல் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படத்தை ரீமேக் செய்ய விரும்புவதாக இயக்குனர் கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.

‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இதையடுத்து அவர் இயக்கிய ‘நரகாசூரன்’ படம் சில காரணங்களால் ரிலீசாகவில்லை.

பின்னர் அருண்விஜய் நடித்த ‘மாஃபியா’ படத்தை இயக்கினார். தற்போது தனுஷின் 43-வது படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் இன்ஸ்டாகிராம் வாயிலாக இயக்குனர் கார்த்திக் நரேன் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது ரசிகர் ஒருவர், “ஒரு படத்தை ரீமேக் செய்யும் வாய்ப்பு கிடைத்தால் எந்த படத்தை ரீமேக் செய்வீர்கள் என கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த கார்த்திக் நரேன், பாரதிராஜா இயக்கத்தில் கமல் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தை ரீமேக் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

அடுத்த படத்திற்கு பூஜை போட்ட நடிகர் பிரபாஸ்!

பிரபாஸ்…

தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்துக்கான பூஜை நேற்று போடப்பட்டுள்ளது.

கே.ஜி.எஃப் 1′ படத்தைத் தொடர்ந்து, ‘கே.ஜி.எஃப் 2’ படத்தை இயக்கியுள்ளார் பிரசாந்த் நீல். இந்தப் படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

‘கே.ஜி.எஃப்’ படங்களைத் தயாரித்த ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தையும் இயக்கவுள்ளார் பிரசாந்த் நீல்.

இதில் பிரபாஸ் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘சலார்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், ‘சலார்’ படத்தின் பூஜை நேற்று (ஜனவரி 15) ஐதராபாத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக ‘கே.ஜி.எஃப்’ நாயகன் யஷ் கலந்து கொண்டார்.

நேற்று படப்பூஜையுடன் பணிகளைத் தொடங்கியுள்ள படக்குழு, இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் ‘சலார்’ படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளார்கள்.

அப்பா ஆனார் வலிமை பட இயக்குனர் ஹெச்.வினோத்!!

ஹெச்.வினோத்…

அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களின் இயக்குனர் ஹெச்.வினோத்திற்கு குழந்தை பிறந்துள்ளது.

‘சதுரங்க வேட்டை’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஹெச்.வினோத். சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படம், மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதையடுத்து இவர் இயக்கிய ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அடுத்தடுத்து ஹிட் கொடுத்த ஹெச்.வினோத்திற்கு அடுத்ததாக அஜித் பட வாய்ப்பு தேடி வந்தது.

அதன்படி அஜித்தை வைத்து இவர் இயக்கிய ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனால் தனது அடுத்தபடத்தையும் இயக்கும் வாய்ப்பை அஜித் கொடுத்தார். இயக்குனர் ஹெச்.வினோத் தற்போது அஜித்தின் ‘வலிமை’ படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், இயக்குனர் ஹெச்.வினோத் தந்தை ஆகி உள்ளார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையறிந்த அஜித் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை?

பவானி ஸ்ரீ…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் பகுதியில் நடைபெற்று வருகிறது.

இதில் முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதியும் நடித்து வரும் நிலையில் இப்போது நாயகியாக ஜிவி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

சமீபத்தில் ஒடிடியில் வெளியான ஆந்தாலாஜி படமான பாவக்கதைகள்-ல் தங்கம் பகுதியில் இவர் நடித்திருந்தார்.

அதேப்போன்று க/பெ.ரணசிங்கம் படத்திலும் இவர் நடித்தார்.

அஜித்தின் மச்சானுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை தர்ஷா!!

தர்ஷா குப்தா…

தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் வெள்ளித்திரைக்கு பல அறிமுகமாகி வருவார்கள். அந்தவகையில் சிறு கதாபாத்திரத்தின் மூலம் சில சீரியல்களில் நடித்து சீரியல் நடிகையாக வளம் வந்தவர் நடிகை தர்ஷா குப்தா.

இதையடுத்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக்கு வித் கோமாளியில் குக்காக பங்குபெற்று கடந்த வாரம் வெளியேறினார்.

இந்நிலையில், இதன்மூலம் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதில் தல அஜித்தின் மனைவியின் தம்பி ரிச்சர்ட் ரிஷியுடன் சேர்ந்து ருத்ரதாண்டவம் என்ற படத்தின் அறிமுகமாகவுள்ளார்.

அதில் சில படப்பிடிப்பு புகைப்படங்களை பகிர்ந்து கொண்ட தர்ஷாவை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்.

ரிச்சர்ட்டின் மனைவியாக அதுவும் கர்ப்பமாக இருக்கும் காட்சி புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார் நடிகை தர்ஷா குப்தா.

ஹவுஸ்மேட்ஸை இன்பதிர்ச்சியில் ஆழ்த்திய ஷிவானி !

ஷிவானி…

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. போட்டியாளர் ஷிவானி நாராயணன் கடந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேறினார். டிக்கெட் டு ஃபினாலே டாஸ்குகளில் அவர் மிக சிறப்பாக விளையாடிய நிலையிலும் அவர் எலிமினேட் செய்யப்பட்டது அவருக்கு சற்று ஏமாற்றம் அளித்தது.

இது பிக் பாஸின் இறுதி வாரம் என்பதால் இதற்கு முன்பு எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் பலரும் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து இருக்கிறார்கள். அர்ச்சனா தொடங்கி அனிதா சம்பத் வரை முன்னாள் போட்டியாளர்கள் பலரும் ரீஎன்ட்ரி கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் ஷிவானி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் மட்டுமே தற்போது வரை பிக் பாஸுக்கு வராமல் இருந்தார்கள்.

இந்நிலையில் இன்று அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக இன்று ஷிவானி ஸ்டோர் ரூம் வழியாக வீட்டுக்குள் வந்திருக்கிறார்கள். பாயை சுற்றி அவரை அனுப்பி இருக்கிறார்கள். அவரை பார்த்ததும் மற்றவர்கள் சர்ப்ரைஸ் ஆகி இருக்கிறார்கள். பாலாஜிஇடம் ஹாய் சொல்கிறார் ஷிவானி. அவருடன் பேச அருகில் சென்று நின்றார். ஆனால் ஷிவானியை கண்டுகொள்ளாமல் வேண்டுமென்றே ஒதுங்கிவிட்டு அந்த இடத்தில் இருந்து நடையை கட்டுகிறார் பாலாஜி.

இதனால் நெட்டிசன்கள் தற்போது பாலாஜியை கலாய்த்து வருகின்றனர். இது வரை யார் வந்தாலும் கண்டுகொள்ளாமல் தூங்கிக்கொண்டிருந்த பாலாஜி ஷிவானி வந்ததும் துள்ளிக்குதித்து எழுந்து வந்து நிற்கிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் இணையவாசிகள்.

நேற்றைய நாளில் முதலில் 1 லட்சம் ருபாய் பெட்டி வந்த நிலையில் அதை யாருமே எடுக்கவில்லை. அதற்கு பிறகு 5 லட்சம் ருபாய் பணத்துடன் பெட்டியை கொண்டு வந்து வைத்தார்கள். அதை யார் எடுப்பார்கள் என அனைவரும் பார்த்துகொண்டிருந்த நிலையில் உடனே கேபி அங்கு சென்று அதை எடுத்துக்கொண்டார். உடனே ரியோவும் வந்து தான் அதை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு போவதாக கூறினார். ஆனால் கேபி அதை கொடுக்க முன்வரவில்லை. அந்த பெட்டியை அவர் கீழே கூட வைக்கவில்லை. நான் எடுக்கவில்லை என்றால் ரியோ அதை எடுத்துக்கொள்வார் என கூறினார்.

இதை எடுத்துக்கொள்வதால் என்னை நான் குறைவாக நினைக்கிறேன் என்று அர்த்தம் இல்லை. எனக்கு நம்பிக்கை இருக்கிறது, ஆனால் அதை தாண்டி ஒன்னு இருக்கிறது. அதனால் தான் இந்த முடிவை எடுத்ததற்கான காரணத்தை கேபி கூறியிருந்தார்.

விஜய்சேதுபதியின் UPPENA படத்தின் சூப்பரான டீஸர் இதோ !

UPPENA படத்தின் டீஸர்…

இன்றைய காலகட்டத்தில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்டாக அதை நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்தும் வல்லமை படைத்த நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

துணை நடிகராக தனது சினிமா பயணத்தை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கிறார்.இவரது வளர்ச்சி பல நடிகர்களுக்கும் எடுத்துக்காட்டாக இருந்துள்ளது.

சோலோ ஹீரோவாக பல படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி.தனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் கிடைத்தால் வயதான கேரக்டராக இருந்தாலும் சரி மற்ற பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிக்கவும் தயங்குவதில்லை.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,மெகாஸ்டார் சிரஞ்சீவி,மாதவன்,கெளதம் கார்த்திக்,STR,அரவிந்த் சுவாமி,ஜெயராம் என்று பல பெரிய நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்துள்ளார் விஜய் சேதுபதி.இதனை தொடர்ந்து அடுத்ததாக விஜயின் மாஸ்டர்,அமீர்கானுடன் ஒரு ஹிந்தி படம்,முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து புதிதாக உருவெடுத்துள்ள ஹீரோ Panja vaishnav tej. இவர் நடிக்கும் முதல் படத்தை Buchi Babu Sana இயக்குகிறார்.ஆக்ஷன் மற்றும் காதல் என colorfull ஆக இந்த படம் உருவாகி வருகிறது.மீனவர்கள் சமுதாயத்தில் நடப்பது போல் இந்த கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.இந்த படத்திற்கு உப்பெண்ணா என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

இந்த படத்தின் தமிழ் உரிமையை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கைப்பற்றியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.தற்போது இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மாநாடு திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு !

மாநாடு…

ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் நாளான நேற்று சிலம்பரசன் நடித்து திரைக்கு வந்திருக்கும் படம் ஈஸ்வரன். இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில் ரசிகர்களுக்கு இன்னொரு மகிழ்ச்சியான செய்தியும் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கி வரும் மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

அ.ர.சி.யல் மாநாடு நடைபெறும் கூ.ட்.ட.த்தில் கையில் து..ப்.பா.க்.கி.யோ.டு செ.ல்.கிறார் சிலம்பரசன். அதன் பின் க.ட்.சி கூ.ட்.ட.த்தில் கு..ண்.டு வெ..டி.ப்.ப.து போ ன்ற காட்சி மோஷன் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. மோஷன் போஸ்டரில் இடம்பெற்ற யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை ரசிகர்களின் இதயத்தை அ.தி.ர வைக்கிறது.

லாக்டவுன் பி.ர.ச்.சனை மு.டிந்து வெகு நாட்களுக்கு பிறகு மாநாடு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மாநாடு படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. புயல், மழை பாராமல் ஷூட்டிங் பணிகளில் சிலம்பரசன் ஆர்வம் காட்டியது ரசிகர்களை சிலிர்க்க வைத்தது.

கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்க SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

மாநாடு படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு பத்து தல படப்பிடிப்பில் சிம்பு இணைவார் என்று கூறப்படுகிறது. ஓபிலி என்.கிருஷ்ணா இயக்கவுள்ள இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, டீஜே அருணாச்சலம், மனுஷ்ய புத்திரன், கலையரசன் ஆகியோர் நடிக்கின்றனர்.

ஒருபுறம் ஈஸ்வரன் ரிலீஸ், மறுபுறம் மாநாடு மோஷன் போஸ்டர் என தொடர்ச்சியாக கொண்டாடி வருகின்றனர் சிலம்பரசன் ரசிகர்கள்.

பிக்பாஸ் வீட்டில் செல்போன் பயன்படுத்திய ரியோ..அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

ரியோ…