மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன்.
இதன்பின் தளபதி விஜய்யுடன் தெறி, விக்ரமுடன் தாண்டவம் மற்றும் ஐ, ரஜினியுடன் 2.0 என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து வந்தார்.
ஆனால் அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தீடீரென, தான் காதலித்து வந்த நபரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் சென்ற 2019ஆம் ஆண்டு அழகான மகன் பிறந்தான்.
இந்நிலையில் நடிகை எமி ஜாக்சன் முதன் முறையாக தனது மகன் 1 வயதை நிறைவடைந்த பின் நன்றாக வளர்ந்துள்ள தனது மகனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.
டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிகளில் பலரை கவர்ந்தவர் திவ்யதர்ஷினி.
டிடி அன அனைவரும் அழைக்கும் செல்லப்பெயருக்கு சொந்தகாரர் ஆகிவிட்டார். சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் உடன் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கில் Romantic என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.
தற்போது டிவியில் Speed Set Go என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதில் டிவி சானல் பிரபலங்கள் தான் அதிகம் கலந்து கொள்கின்றனர்.
அடுத்ததாக சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளாராம். தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவர் நீல நிற புடவை அணிந்து நன்றாக சிரித்தபடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Thaii pirandhal vazhi pirakum
Happy Pongal ,
Got back to the floors of @vijaytelevision after march2020 ,for SuperSinger8 Grand launch, glad to be a small part of it with my darling VijayStars, My Pongal at work was the best feelings .. pic.twitter.com/TdFbkfEB9q
உலகம் முழுவதும் மிக அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் ஜேம்ஸ்பாண்ட் நடித்த ’நோ டைம் டு டை’ என்ற திரைப்படம் என்பது தெரிந்ததே.
இந்த திரைப்படம் ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏப்ரல் 2ஆம் தேதிக்கு ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஐந்து மாதங்களுக்கு இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
’நோ டைம் டு டை’ என்ற திரைப்படம் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று இந்த படத்தின் குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர்.
250 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படத்தின் வியாபாரம் சுமாராக 600 மில்லியன் டாலர் அளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஆனால் இதுவரை இந்த படத்தின் வியாபாரம் தொடங்கப்படவில்லை என்பதும் இந்த படத்தின் விலை அதிகமாக இருப்பதாக விநியோகிஸ்தர்கள் சிலர் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் ரிலீஸ் நேரத்தில் இந்த படம் மிக அதிக விலைக்கு விற்பனையாகும் என்று படக்குழுவினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
சன் மியூசிக்கின் பிரபல தொகுப்பாளராக இருந்து சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மக்களிடம் பிரபலமானவர் ரியோ.இவர் தொகுத்து வழங்கிய நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம் உள்ளிட்ட தொடர்கள் ஹிட் அடித்தது.
இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து ரியோ ஹீரோவாக பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தை பாணா காத்தாடி,செம போத ஆகாத படங்களை இயக்கிய பத்ரி வெங்கடேசன் இயக்கியுள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.ரம்யா நம்பீசன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தின் ரிலீஸ் கொரோனா காரணாமாக தள்ளிப்போனது.தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார் ரியோ.
இந்நிலையில் பிளான் பண்ணி பண்ணணும் படத்தின் டைட்டில் பாடல் சில நாட்களுக்கு முன் வெளியானது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் கனவே உறவே பாடலின் வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
ஹாலிவுட் ரசிகர்கள் நீண்ட காலமாக ஆவலுடன் எதிர்பார்த்து வந்த மூன்று ஸ்பைடர்மேன் கதாப்பாத்திரங்களும் ஒரே படத்தில் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூப்பர்ஹீரோ படங்கள் ஏராளமாக வெளியாகி வந்தாலும், சூப்பர்ஹீரோக்களிலேயே உலகம் முழுவதும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள கதாபாத்திரம் ஸ்பைடர்மேன். சோனி வெளியிட்ட ஸ்பைடர்மேன் படங்கள் தொட்டு இன்று மார்வெல் ஸ்டுடியோஸின் ஸ்பைடர்மேன் வரை அனைத்தையும் கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள்.
இந்நிலையில் 2001ல் வெளியான ஸ்பைடர்மேனில் நடித்த டோபி மெக்குரே, அமேசிங் ஸ்பைடர்மேனில் நடித்த ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் மற்றும் தற்போதைய மார்வெல் ஸ்பைடர்மேனான டாம் ஹாலண்ட் மூவரையும் இணைத்து ஒரு ஸ்பைடர்மேன் படம் வர வேண்டும் என ரசிகர்கள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியாகி வரும் ஸ்பைடர்மேன் படத்தொடரின் மூன்றாவது படம் படப்பிடிப்பு நிலையில் உள்ளது. இந்த திரைப்படம் குறித்த பல தகவல்களை மார்வெல் கட்டி காத்து வந்தாலும் சில தகவல்கள் ரசிகர்களிடையே கசிந்து விடுகின்றன.
தற்போது படம்பிடிக்கப்பட்டு வரும் ஸ்பைடர்மேன் படத்தில் முந்தைய ஸ்பைடர்மேன்களான கார்பீல்ட் மற்றும் டோபி மெக்குரே ஆகிய இருவரும் நடிப்பதாக தகவல்கள் பரவியுள்ளது. மேலும் 2004ல் வெளியான ஸ்பைடர்மேன் படத்தில் டாக்டர் ஆக்டோபஸ் என்ற வில்லனாக தோன்றிய ஆல்ப்ரட் மொலினா இந்த படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால் இதிலும் டாக்டர் ஆக்டோபஸாக நடிக்கிறாரா என்பது குறித்து தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாவிட்டாலும் ரசிகர்கள் ட்விட்டர் முழுக்க ஸ்பைடர்மேன் குறித்த ஹேஷ்டேகுகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் ரசிகர்களை ஈர்க்க சின்ன கேமியோ ரோல்களில் மட்டுமே இவர்கள் இருவரும் வருவதாகவும் பேசிக்கொள்ளப்படுகிறது.