மும்பையில் மாஸ் காட்டிய விஜய்யின் ரசிகர்கள்- மாஸ்டர் படம் பார்க்க வந்தவர்களுக்கு என்ன கொடுத்துள்ளார்கள் பாருங்க!

விஜய் ரசிகர்கள்…

எல்லோரும் கடந்த சில மாதங்களாக காத்துக் கொண்டிருந்த நாள் வந்துவிட்டது. விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் படு மாஸாக நேற்று உலகம் முழுவதும் வெளியாகி விட்டது.

படத்தை படு மாஸாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். முதல் ஷோ முடிந்த நிலையில் விமர்சனங்கள் நிறைந்ததாக டுவிட்டர் பக்கம் உள்ளது.

தமிழ்நாட்டை தாண்டி மும்பையில் உள்ள விஜய் ரசிகர்கள், படம் காண வருபவர்களுக்கு சானிடைசர் மற்றும் மரக் கன்றுகள் கொடுத்து வரவேற்றுள்ளனர்.

அந்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி மற்றவர்கள் மும்பை ரசிகர்களை பாராட்டி வருகிறார்கள்.

எல்லாரையும் டிஸ்டர்ப் பண்ணிகிட்டு இருக்கேன்: விக்னேஷ் சிவனின் வைரல் வீடியோ!

விக்னேஷ் சிவன்…

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் தற்போது விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடித்துவரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கிட்டார் வாசிப்பது போன்ற காட்சிகள் உள்ளன. இது குறித்து அவர் கூறிய போது, ‘எனக்கு கிட்டார் வாசிக்க எல்லாம் தெரியாது, எப்பொழுதும் டிரம்ஸ் தான் வாசித்துக் கொண்டிருப்பேன்.

திடீரென புதுசாக ஒரு இன்ஸ்ட்ருமென்ட் எடுத்து வாசிக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அதனால் தான் இந்த கிட்டாரை வாங்கி நான் வாசிக்க கற்றுக் கொள்வதற்காக வாங்கி வைத்துள்ளேன். இதை வாசித்து நான் எல்லாரையும் டிஸ்டர்ப் செய்து கொண்டிருக்கின்றேன்.

ஒவ்வொருவரின் வாழ்க்கையில் ஒரு சின்ன சின்ன விஷயங்கள் இருந்து, அதன்பின் வேலை காரணமாக அதிலிருந்து தூரமாகப் போய் விடுவோம். ஆனால் அந்த சின்ன சின்ன விஷயங்கள் திரும்பி வரும்போது வாழ்க்கை நமக்கு மிகவும் சுவராசியமாக இருக்கும். அந்த மாதிரி ஒரு அனுபவம் தான் இது’ என்று அவர் கூறி உள்ளார். விக்னேஷ் சிவனின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

‘பத்து தல’ படத்தில் இணைந்த மூன்றாவது ஹீரோ!

பத்து தல…

சிம்புவின் ’ஈஸ்வரன்’ திரைப்படம் இன்று வெளியாகி ஓடி கொண்டிருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படத்தின் டைட்டில் ’பத்து தல’ என்றும் இந்தப் படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ’முஃப்தி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்றும் சமீபத்தில் அறிவிப்புகள் வெளிவந்தது தெரிந்ததே.

கிருஷ்ணா என்பவர் இயக்க உள்ள இந்த படத்தில் சிம்புவுடன், கௌதம் கார்த்திக் ஆகிய இரண்டு ஹீரோக்கள் நடிக்கவுள்ள நிலையில் தற்போது மூன்றாவதாக இன்னொரு ஹீரோ இந்த படத்தில் இணைந்துள்ள தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி என்ற படத்தில் அறிமுகமாகி அதன்பின் ‘மெட்ராஸ்’,கபாலி, அதே கண்கள், காலக்கூத்து உள்ளிட்ட பல திரைப்படங்களில் நாயகனாகவும் முக்கிய கேரக்டர்களிலும் நடித்த கலையரசன் தற்போது ‘பத்து தல’ படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இந்த படத்தில் ‘அமீர்’ என்ற கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

ற்கன்வே ’பத்து தல’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகை பிரியாபவானிசங்கர் நடிக்கவுள்ளார் என்றும்,

அசுரன்’ படத்தில் வேல்முருகன் என்ற கேரக்டரில் நடித்த தீஜே அருணாச்சலம் நடிக்கவுள்ளார் என்றும் செய்தி வெளியான நிலையில் தற்போது கலையரசனும் இந்த படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சொற்களால் என்னை ரொம்பவே அடித்துவிட்டார்கள் – ராகவா லாரன்ஸ்!

ராகவா லாரன்ஸ்…

இயக்குனராகவும், நடிகராகவும் இருக்கும் ராகவா லாரன்ஸ், சொற்களால் என்னை ரொம்பவே அடித்துவிட்டார்கள் என்று கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மருத்துவர்களின் அறுவுறுத்தலைத் தொடர்ந்து ரஜினிகாந்த், தான் அ.ர.சி.யல் க.ட்.சி ஆ.ர.ம்பிக்கும் முடிவை திரும்பப் பெறுவதாக நீண்ட அறிக்கை மூலமாகத் தெரிவித்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ரஜினி ரசிகர்களும், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் தங்களின் அ.தி.ரு.ப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.

இதற்காக வள்ளுவர் கோட்டத்தில் ஒரு போ.ரா.ட்.ட.ம் நடந்தது. இதில் ரஜினி ரசிகரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் பங்கேற்கவில்லை. இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், ராகவா லாரன்ஸ் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: இனிமேல், எனது அனைத்து பதிவுகளும் அறிக்கைகளும் எனது தனிப்பட்ட கருத்துகளாகவே இருக்கும்.

அதில், எனது குரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்புபடுத்தவே மாட்டேன். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், நல்லதோ கெட்டதோ என்னுடன் மட்டுமே இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். ஒரு சில குழுவினர் சொற்களால் ரொம்பவே அடித்துவிட்டார்கள். நானே மன்னிக்க மறக்க நினைத்தாலும் சில வார்த்தைகளை மறக்க இயலவில்லை. யார் மறந்தாலும் அவற்றை நான் மறக்க மாட்டேன்.

காலம் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும். வள்ளுவர் கோட்டத்தில் நடந்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு என்னை நிறைய பேர் வற்புறுத்தினீர்கள். இயக்குநர் சாய் ரமணி வாயிலாக நிறைய வாய்ஸ் நோட்டை நான் கேட்டேன். இன்றளவும் நிறைய பேர் நான் தலைவரிடம் அவருடைய முடிவை மாற்றிக் கொள்ள வற்புறுத்துகிறார்கள். அதனாலேயே இன்று இந்த அறிக்கையை நான் வெளியிடுகிறேன். தலைவரின் முடிவால் நீங்கள் அனைவரும் கொண்ட வேதனையையே நானும் எதிர்கொள்கிறேன்.

தலைவர் வேறேதும் காரணம் சொல்லியிருந்தால் நான் அவரிடம் முடிவை மாற்றிக் கொள்ள கெஞ்சியிருப்பேன். ஆனால், அவரோ உடல்நிலையைக் காரணமாகக் கூறிவிட்டாரே. இப்போது நாம் அவரை நிர்பந்தித்து அதனால் அவரும் மாறி பின்னர் அவரின் உடல்நிலைக்கு ஏதாவது நேர்ந்தால், வாழ்நாளுக்கும் நாம் கு.ற்.ற உணர்வோடு அல்லவா இருக்க வேண்டும்.

அ.ர.சி.யலில் பிரவேசிக்காவிட்டாலும் அவர் என்றுமே எனது குரு தான். அவருடன் நெருங்கிப் பேசுவதால் எனக்கு அவரின் உடல்நிலை பற்றி நன்றாகத் தெரியும். இப்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம், அவருடைய உடல் நலனுக்கும் உள அமைதிக்கும் பிரார்த்தனை செய்வது மட்டுமே. அவர் என்றும் நமது பிரார்த்தனையில் இருப்பார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காஞ்சனா பட நடிகைக்கு கொரோனா!!

ராய் லட்சுமி…

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் ராய் லட்சுமி. இவர் தமிழில் லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் தற்போது சிண்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை ராய் லட்சுமிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கடந்த ஒரு வாரமாக அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாராம்.

தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் பூரண குணமடைந்து விடுவார் என்றும் கூறப்படுகிறது.

நேற்று இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்த ராய் லட்சுமி, “காலம் மாறிவிட்டது. நாம் அனைவரும் பாசிடிவ்-க்கு பதிலாக நெகட்டிவ் முடிவுகளை தான் எதிர்பார்க்கிறோம்” என குறிப்பிட்டிருந்தார்.

கொரோனா பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பதை தான் அவர் இவ்வாறு சூசகமாக பதிவிட்டுள்ளார் போல தெரிகிறது.

ஆரி வேற மாறி… பிக்பாஸ் ஆரிக்காக ஒரு பாடல்… நட்பு ரீதியில் வெளியான அசத்தல் டிராக்!!!

ஆரி வேற மாறி…

இசையமைப்பாளர் சி.சத்யா பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு ரசிகர்களின் பேராதரவைப் பெற்றிருக்கும் ஆரிக்காக ஒரு லிரிக்கல் இசை ஆல்பத்தை வெளியிட்டு உள்ளார். இவர் ஆரி நடித்த “நெடுஞ்சாலை” “உன்னோடு கா” படத்திற்கும் இசையமைத்தவர்.

தற்போது இந்தக் கூட்டணி “அலேகா“ படத்திலும் தொடருகிறது. இந்நிலையில் நட்பு அடிப்படையில் சி.சத்யா “ஆரி வேற மாறி“ என்ற பாடலை இசையமைத்து நேற்று வெளியிட்டு உள்ளார்.

“தனியொரு ஆளாய் சென்றாய் அங்கே, தனக்கொரு பேரை வென்றாய் இங்கே..“ எனத் தொடங்கும் அந்தப் பாடல் “நேர்மை என்றால் ஆரி, உனை விரும்பும் நெஞ்சம் கோடி, மக்கள் இதயம் தேடி… நீ வருவாய் வாகைசூடி” என்ற ஹைலட்டோடு இருக்கிறது.

மேலும் தனி ஒருவனாய், தன்னம்பிக்கை மிக்கவனாய், தன்னிலை மாறாதவனாய் என ஆரியின் பல குணங்களையும் இந்தப் பாடல் பிரதிபலித்து இருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கிய பிக்பாஸ் 4 ஆவது சீசன் தற்போது 100 ஆவது நாளை கடந்து உள்ளது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்தப் போட்டியில் 12 பேர் வெளியேறி உள்ளனர். தற்போது ஆரி, ரியோ, பாலாஜி, கேபி, சோம், ரம்யா ஆகிய 6 பேர் வீட்டில் மட்டுமே உள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் டைட்டில் ஆரிக்குத்தான் என பல ரசிர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர். இத்தருணத்தில் ஆரிக்காக அவரது நண்பர்கள் ஒரு இசை ஆல்பத்தை வெளியிட்டு இருப்பது மேலும் ரசிகர்கள் மத்தியில் பூரிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மாஸ்டர் தளபதிக்காக சென்னை வந்த ஓ மை கடவுளே பட இயக்குநர்!

அஸ்வத் மாரிமுத்து…

மாஸ்டர் மற்றும் தளபதிக்காக மட்டுமே ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்ததாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கூறியுள்ளார்.

பல பிரச்சனைகளுக்குப் பிறகு தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படம் இன்று திரைக்கு வந்துள்ளது. அதிகாலை முதலே தளபதியின் திவீர ரசிகர்கள் மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் பார்த்து மகிழ்ந்தனர். குடும்ப பெண்களும் கூட்டம் கூட்டமாக வந்து விஜய்யின் மாஸ்டர் படத்தை கண்டு ரசித்துள்ளனர். சரி ரசிகர்கள் தான் இப்படி இருக்கிறார்கள் என்று பார்த்தால் சினிமா பிரபலங்கள் அதுக்கும் மேலாக இருக்கிறார்கள்.

லோகேஷ் கனகராஜ், அனிருத், அர்ஜூன் தாஸ், சாந்தணு, மாளவிகா மோகனன், கீர்த்தி சுரேஷ், உதயா ஆகியோர் மாஸ்டர் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்து ரசித்துள்ளனர்.மாஸ்டர் படத்தை திரையில் பார்த்து நடிகை கீர்த்தி சுரேஷ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ஒரு வருடம் முழுவதும் காத்திருந்து ஒரு தியேட்டருக்கு திரும்பி வருவது என்பது எவ்வளவு பரவசமாக இருக்கிறது என்பதை விவரிக்கக் கூட முடியாது. இன்னும் இதை விட சிறந்தது என்ன? இது தான் என்று பதிவிட்டதோடு இது மாஸ்டர் பொங்கல் டா என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மாஸ்டர் படத்திற்காகவே ஒருவர் ஹைதராபாத்திலிருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்துள்ளார். அந்தளவிற்கு தளபதி விஜய்யின் தீவிர ரசிகராக இருக்கிறார். ஆம், அவர் வேறு யாருமில்லை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தான். இவர், விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்த ஓ மை கடவுளே படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்வத் மாரிமுத்து டுவிட்டரில் கூறியிருப்பதாவது: மாஸ்டர் மற்றும் தளபதிக்காக மட்டுமே ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு என்று தெரிவித்துள்ளார். இவர் மட்டுமல்லாமல், இவரைப் போன்று இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் வெளியில் சொல்லிக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.

பிக்பாஸ் 4வது சீசனின் இறுதி நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரம், தேதி இதோ- வின்னர் இவர்தானா, ஓட்டிங் லிஸ்ட் விவரம்!

பிக்பாஸ் சீசன் 4..

பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட பிக்பாஸ் 4வது சீசன் 100 நாட்களை கடந்துவிட்டது. நாம் இன்னும் தெரிந்துகொள்ள வேண்டியது இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்பது தான்.

100 நாட்களை கடந்துள்ள நிலையில் போட்டியாளர்கள் படு கொண்டாட்டத்தில் உள்ளனர். எலிமினேட் ஆன பிரபலங்கள் ஒவ்வொருத்தராக வீட்டிற்குள் வந்த வண்ணம் உள்ளனர்.

இன்று காலை வந்த புரொமோவில் அனிதா வீட்டிற்குள் வர மற்றவர்கள் ஆறுதல் கூறுகின்றனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் 4வது சீசனின் இறுதி நிகழ்ச்சி வரும் ஜனவரி 17ம் தேதி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாக நிகழ்ச்சி குழுவினர் அறிவித்துள்ளனர்.

அதோடு தற்போதைய நிலவரப்படி பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிபெறும் போட்டியில் ஆரி மக்களிடம் அதிக ஓட்டிங் பெற்று முதல் இடத்தில் இருக்கிறார்.

எனவே இவர்தான் வெற்றியாளரா என நாம் நினைக்க முடியாது, பிக்பாஸ் கூறும்வரை பொறுமையாக காத்திருப்போம்.

பிக்பாஸ் கொடுத்த பணத்தை பெற்றுக்கொண்டு வெளியேறிவிட்டாரா இந்த பிக்பாஸ் பிரபலம்- செம டுவிஸ்ட், ரசிகர்கள் ஷாக்!

பிக்பாஸ் 4…

தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் 4வது சீசன் முடிவுக்கு வந்துவிட்டது. நேற்றோடு 100 நாட்கள் முடிந்துவிட்டது, வரும் ஜனவரி 17ம் தேதி இறுதி நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.

அந்நாளில் பிக்பாஸ் 4வது சீசனின் வெற்றியாளர் யார் என்பது மக்களுக்கு தெரிந்துவிடும். இந்த நிலையில் தான் நிகழ்ச்சி குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.

அதாவது பிக்பாஸில் இறுதி நாட்களுக்கு முன் குறிப்பிட்ட தொகை கொடுத்து இதை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற ஆசைப்படுவது யார் என பிக்பாஸ் கேட்பார்.

அதுபோல் அப்பணத்தை பெற்றுக்கொண்டு கடந்த சீசனில் கவின் வெளியேறியதை பார்த்தோம்.

அதேபோல் இம்முறை பிக்பாஸ் ஒரு தொகை கொடுத்து போட்டியாளர்களை கேட்க, அதை எடுத்துக்கொண்டு வெளியேற ரம்யா முடிவு செய்ததாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.

இந்த டுவிஸ்ட்டை ரசிகர்களும் எதிர்ப்பார்க்கவில்லை, ஆனால் இந்த தகவல் உண்மையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

விஜய்யின் 65வது படத்தில் இணைந்த சூப்பர் ஹிட் கொடுத்த பிரபலம்- அப்போ மாஸ் தான்!

விஜய்யின் 65…

பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் விஜய்யின் 65வது படம் குறித்த தகவல் வந்தது.

கோலமாவு கோகிலா, டாக்டர் பட புகழ் நெல்சன் திலீப்குமார் தான் விஜய்யின் புதிய படத்தை இயக்குகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். மற்றபடி படத்தை பற்றிய எந்த ஒரு விவரமும் வெளியாகாமல் இருந்தது.

இந்த நிலையில் விஜய்யின் 65வது படத்தில் நடன இயக்குனராக தான் கமிட்டாகி இருப்பதாக ஜானி மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

இவர் தெலுங்கில் சூப்பர் ஹிட்டடித்த Butta Bomma பாடலுக்கு நடனம் அமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.