மீண்டும் Big Boss வீட்டுக்குள் நுழைந்த அனிதா சம்பத் !

அனிதா…

Big Boss 4 நிகழ்ச்சி இருப்பதிலேயே பெரிய TRP ரேடிங் வாங்கி வருகிறது. குறிப்பாக உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் வார கடைசி விறுவிறுப்பாக இருக்கும் என்னும் நம்பிக்கையில் ஒவ்வொரு வாரம் டிவி முன்னாடி உட்க்கர்ந்தால் ஏமாற்றமே மிஞ்சும். யாரிடமும் அவரின் தப்பை சுட்டி காட்டாமல் குழந்தைக்கு சொல்லி தருவது சொல்லி கொடுத்து கொண்டிருப்பார்.

இந்தநிலையில், இந்த நிகழ்ச்சி முடியபோகும் தருவாயில், எவிக்சன் செய்யப்பட்ட போட்டியாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று அனிதா வந்துள்ளார்.

மிக சமீபத்தில் தான் தந்தையை இழந்த அனிதாவுக்கு அங்கிருக்கும் ஹவுஸ்மேட்ஸ் அவருக்கு ஆறுதல் கூறினார்கள்.

குறிப்பாக வேல்முருகன் “நாங்கள் இனி உனக்கு அப்பாவாக இருக்கிறோம்” என்று ஆறுதல் கூறுகிறார். மற்ற சக போட்டியாளர்களும் அனிதாவுக்கு ஆறுதல் கூறுகிறார்கள்.

FDFS பாத்து விஜய்யின் மாஸ்டரை கொண்டாடி தீர்த்த பிரபலங்கள்!

மாஸ்டர்…

விஜய் நடித்த மாஸ்டர் படம் இன்று பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள் பலரும் முதல் நாள் முதல் ஷோ பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

விஜய் நடித்த மாஸ்டர் படம் 10 மாதங்களுக்குப் பிறகு இன்று வெளியாகியுள்ளது. அதுவும், திரையரங்கில் வெளியாகியுள்ளது. இதுவே ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், 50 சதவிகித இருக்கைகளுடன் இயங்கும் திரையரங்கில் ஒரு மாஸ் ஹீரோவின் படம் வெளியாவது இதுவே முதல் முறை. இதற்கு முன்னதாக எந்த மாஸ் நடிகரின் படமும் திரையரங்கில் வெளியாகவில்லை.

மாஸ்டர் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், பட்டாசு வெடித்தும், மேள தாளத்துடனும், விஜய் பேனர், கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும், ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சி கொண்டாடி வருகின்றனர். திரையரங்கு முழுவதும் விசில் சத்தம் காதை கிழிக்கும் அளவிற்கு ரசிகர்கள் விஜய்யின் மாஸ்டரை பார்த்து ரசிக்கின்றனர்.

சரி ரசிகர்கள் தான் இப்படி இருக்கிறார்கள் என்றால், சினிமா பிரபலங்கள் இவர்களை மிஞ்சும் அளவிற்கு இருக்கிறார்கள். ஆம் இசையமைப்பாளர் அனிருத், நடிகை கீர்த்தி, நடிகை மாளவிகா மோகனன், சுரேஷ், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் சாந்தணு, அர்ஜூன் தாஸ் ஆகியோர் உள்பட சினிமா பிரபலங்கள் பலரும் விஜய் மாஸ்டர் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

இது மாஸ்டர் பொங்கல் டா: FDFS பார்த்து வியந்த கீர்த்தி சுரேஷ்!

கீர்த்தி சுரேஷ்..

விஜய் நடித்த மாஸ்டர் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் உள்பட சினிமா பிரபலங்கள் பலரும் முதல் நாள் முதல் ஷோ பார்த்து மகிழ்ந்துள்ளதை டுவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில், இன்று பிரமாண்டமாக வெளியாகியுள்ள படம் மாஸ்டர். கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு பிறகு திரையரங்கில் மாஸ் காட்டிய படம் என்றால் அது மாஸ்டர் தான்.

திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளித்திருந்த நிலையிலும், மாஸ்டர் படம் வெற்றிகரமாக இன்று வெளியாகியுள்ளது என்றாலே பெருமை கொள்ள வேண்டிய விஷயம் தான்.

எப்போது மாஸ்டர் படம் திரைக்கு வரும் என்று ஏங்கித்தவித்த ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களுக்கும் இன்று திருவிழா தான். உலகம் முழுவதும் வெளியான மாஸ்டருக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

மாஸ்டர் படக்குழுவைச் சேர்ந்த லோகேஷ் கனகராஜ், அனிருத், சாந்தணு, மாளவிகா மோகனன், அர்ஜூன் தாஸ் ஆகியோர் முதல் நாள் முதல் காட்சி பார்த்து மகிழ்ந்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து நடிகர் உதயா தனது குடும்பத்துடன் இணைந்து மாஸ்டர் படத்தை பார்த்து மகிழ்ந்ததை புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷும் தன் பக்கங்கிற்கு டுவிட்டரில் மாஸ்டர் படம் முதல் நாள் முதல் ஷோ பார்த்ததாக பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஒரு வருடம் முழுவதும் காத்திருந்து ஒரு தியேட்டருக்கு திரும்பி வருவது என்பது எவ்வளவு பரவசமாக இருக்கிறது என்பதை விவரிக்கக் கூட முடியாது. இன்னும் இதை விட சிறந்தது என்ன? இது தான் என்று பதிவிட்டதோடு இது மாஸ்டர் பொங்கல் டா என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பைரவா படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனம் பெற்றது. கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு மேல் ஓடிய இந்தப் படம் ரூ.115 கோடி வரையில் வசூலிலும் கல்லா கட்டியுள்ளது.

மாஸ்டர் ரிசல்ட் – லோகேஷ் கனகராஜை திட்டும் விஜய் வெறியர்கள்..!

மாஸ்டர்…

இப்போ வந்துரும், தீபாவளிக்கு வரும், மே மாசம் வந்துரும், என்று அப்படி இப்படின்னு சொல்லி பல மாதங்களுக்கு பிறகு திரையரங்குகளில் இன்று முதல் ரிலீஸானது விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்.

படத்திற்கு ஓகே, சுமார், Average என்று விமர்சனங்கள் வர எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் ஒரு தரப்பு ரசிகர்கள் 50% இருக்கைகளுடன் ரசிகர்கள் உற்சாகமாக படம் பார்க்க வந்தனர்.

படத்தில் இரண்டு ஹீரோ என்பதால், எதாவது ஒரு கதாபாத்திரத்துக்கு , கதை ஆசிரியருக்கு தெரியாமலே அந்த கேரக்டருக்கு Weight ஏறிவிடும். அப்படித்தான் இந்த படத்தில் வில்லனாக நடித்த நடிகர் விஜய்சேதுபதி விஜயை விட ஸ்கோர் செய்துவிட்டார் என்றும் பரவலாக பேசப்படுகின்றது.

விஜயின் தீவிர ரசிகர்கள் யாரும் நிச்சயம் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்ற ரீதியில் பலரும் லோகேஷ் கனகராஜை திட்டி அவர்களது கருத்துகளை சமூக வலைதளங்கள் வாயிலாக பதிவு செய்து வருவதை பார்க்க முடிகின்றது.

மாஸ்டர் விமர்சனம் : விஜய் சேதுபதிக்காக விட்டுக்கொடுத்தாரா விஜய்? ரசிகர்கள் கருத்து..!

மாஸ்டர் விமர்சனம்….

ஓடிடி, கொரோனா தாக்கம், லீக்கான காட்சிகள் என பல தடைகைளை தாண்டி, கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு தமிழ் திரையுலகமே உயிர்பெற திரையரங்குகளில் வெளியாகியுள்ளது மாஸ்டர் திரைப்படம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதன் முறையாக விஜய் மற்றும் விஜய் சேதுபதி இப்படத்தில் இணைந்து நடித்துள்ளதால் மாஸ்டர் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய உச்சத்தில் உள்ள, மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரின் எதிர்பார்ப்பைபும் பூர்த்தி செய்ததா? இல்லையா? பார்ப்போம்.

கதைக்களம்

கல்லூரி பேராசிரியராக வரும் JD(விஜய்). எந்நேரமும் பாட்டிலும் கையுமாக தான் உள்ளார். இதனாலேயே இவர் மீது பெரும் குற்றச்சாட்டுக்கள் வருகிறது.

இதனால் ஒரு கட்டத்தில் பெரிய பிரச்சனை வர அங்கிருந்து வெளியேறி ஒரு சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு ஆசிரியராக செல்கிறார்.

அங்கு ஆரம்பத்திலிருந்தே விஜய்க்கு உரசல் ஆரம்பிக்கிறது மாணவர்களுடன். இதற்கு முக்கிய காரணம் பவானி(விஜய் சேதுபதி).

ஏனெனில் அந்த சிறுவர் சீர்த்திருத்த பள்ளி அவர் கண்ட்ரோலில் தான் உள்ளது. விஜய் பவானியிடமிருந்த அந்த சிறுவர்களை மீட்க போராடுகிறார்.

ஒரு கட்டத்தில் சண்டை JD Vs பவானியாக மாற, இருவருக்குமான யுத்தத்தில் கடைசியில் யார் வெற்றி, என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

விஜய் ஒரு குடிகார ஆசிரியராக முதல் காட்சியில் தொடங்கும் கைத்தட்டல் கண்டிப்பாக கிளைமேக்ஸ் வரைக்கு நிற்காது போல…ஒவ்வொரு காட்சியிலும் தன் புது வகைவகை மேனரிசத்தால் பட்டாசு தான். அதுவும் சிறுவர் சீர்த்திருத்த பள்ளி மாணவர்களுடம் அவர் நடந்துக்கொள்வது, விஜய் சேதுபதியிடம் சவால் விடுவது, சட்டையை கழட்டி கபடியில் இறங்கி போட்டி போடுவது என படம் முழுவதும் விஜய்க்கான காட்சி ரசிகர்களுக்கு ட்ரீட் தான்.

அதே நேரத்தில் விஜய் படம் என்றாலே அவரை சுற்றி மட்டுமே தான் மாஸ் பில்டப் இருக்கும், ஆனால், அதில் மாஸ்டர் விதிவிலக்கு தான், ஆம், பவானியாக வரும் விஜய் சேதுபதி மாஸ் பண்ணியுள்ளார். அதிலும் இடைவேளை காட்சி இரண்டு பேருக்குமான போட்டி ஹை பாயிண்ட்.

படத்தில் விஜய் ஆசிரியராக வரும் கல்லூரி காட்சிகள் தான் ஏதோ தேவையில்லாததாக தெரிந்தது. ஒரு இண்ட்ரோ போல் கொடுத்து நேராக சீர்த்திருத்த பள்ளி காட்சிகளுக்கு சென்றிருந்தால் இன்னமுமே படம் சுவரஸ்யம் கூடியிருக்கும்.

படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் உள்ளனர், சாந்தனு, மகேந்திரன், அர்ஜுன் தாஸ் என பலரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.

ஆனால், ஆண்ட்ரியா படத்தில் உள்ளார் என்றதும் ஏதோ முக்கியமான ரோல் தான் என்றால், ஏமாற்றம் தான், இதற்கு மாளவிகா ரோலே பரவாயில்லை என்று தோன்றுகிறது.

படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் சண்டைக்காட்சிகள் தான், ஸ்டெண்ட் காட்சிகள் தான், சில்வா மெட்ரோ சண்டையில் ஆரம்பித்து, சட்டையில்லாமல் வரும் சண்டை, கபடியை சண்டையாக மாற்றி சில மூமண்ட்ஸ் என தெறிக்க விட்டுள்ளார். அதுவும் விஜய்-விஜய் சேதுபதிக்கான சண்டைக்காட்சி சூப்பர்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு முதன் முதலாக லோகேஷ் படத்தில் பல காட்சிகள் வெளிச்சம் தெரிகிறது, அவரும் சிறப்பாக செய்துள்ளார், எடிட்டிங் மட்டும் இன்னும் சில காட்சிகளை வெட்டி இருக்கலாம்.

முதல் பாதியே கொஞ்சம் நீளம் என்றாலும், ஆட்டம், பாட்டம், சண்டை விஜய் – விஜய் சேதுபதி க்ளாஸ் தொடங்குவது என பரபரப்பாகவே செல்கிறது.

ஆனால், இரண்டாம் பாதி செம்ம பாசிட்டிவாக தொடங்கி அடுத்தடுத்த காட்சிகள் கொஞ்சம் சோர்வை தருகிறது படத்தின் நீளம்.

விஜய்-விஜய் சேதுபதி தாண்டி படத்தில் கண்களுக்கு தெரியாத ஹீரோ என்றால் அனிருத் தான், பின்னணி இசை, பாடல்கள் என ருத்ர தாண்டவம்.

க்ளாப்ஸ்

விஜய் மற்றும் விஜய் சேதுபதி.

பாடல்கள், ஒளிப்பதிவு

படத்தின் முதல் பாதி.

சண்டைக்காட்சிகள்

பல்ப்ஸ்

இரண்டாம் பாதி இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு கூட்டியிருக்கலாம்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் கனி இந்த பிரபல இயக்குனரின் மனைவியா?- இது எத்தனை பேருக்கு தெரியும், இதோ அவர்களது புகைப்படம்!

கனி..

குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மிகவும் அழகாக சமைத்து எல்லோரின் கவனத்திற்கும் வந்தவர் கனி.

இவர் பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான விஜய லட்சுமினின் அக்கா என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

கனி அவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அவர் தீராத விளையாட்டு பிள்ளை, மிஸ்டர் சந்திரமௌலி, சமர் போன்ற படங்களை இயக்கிய திருவை தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

இவர்களுக்கு இரண்டு மகள்களும் உள்ளனர், இதோ அவரது குடும்ப புகைப்படம்,

 

View this post on Instagram

 

A post shared by Kani Thiru (@kanithiru10)

மாஸ்டர் படத்தில் தல அஜித்தின் Refernce ஆ..! வெளியான செம்ம மாஸ் தகவல், கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

மாஸ்டர்…

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகி ஓடிக்கொண்டிருக்கின்றது.

மாஸ்டர் படத்தின் டிக்கெட் முன்பதிவு உலகம் முழுவதும் நடந்து வருகிறது, படம் வெளியாவதற்கு முன்பே பல சாதனைகள் செய்து வந்தது.

மேலும் நேற்று இப்படத்தில் இருந்து ஒரு சில காட்சிகள் இணையத்தில் வெளியாகி அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அந்த செயலில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது.

இந்நிலையில் மாஸ்டர் படம் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது செம்ம மாஸ் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், இப்படத்தில் தல அஜித்தின் Refernce இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, இதனால் இருதரப்பு ரசிகர்களும் இப்படத்தை காண ஆவலோடு உள்ளனர்.

நான் வராததற்கு ஒரு லேடி தான் காரணம்: சுரேஷ் குறிப்பிட்ட அந்த லேடி யார்?

சுரேஷ் சக்ரவர்த்தி…

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக எவிக்டான போட்டியாளர்கள் வருகை தந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் ஷிவானி, சுரேஷ் மற்றும் அனிதா ஆகிய மூவர் தவிர மற்ற அனைவரும் வந்து விட்டார்கள் என்பதும் தெரிந்ததே.

ஷிவானி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் எவிக்ட் ஆனதால் அவர் கடைசியாக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அனிதா மற்றும் சுரேஷ் வராததற்கு என்ன காரணம் என்று தெரியாத நிலையில்,

சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த சுரேஷ் சக்கரவர்த்தி எனக்கு பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு அழைப்பு வரவில்லை என்றும் அழைக்காத போது நான் எப்படி வரமுடியும் என்றும் ஒருவேளை நான் தகுதியற்ற போட்டியாளராக கருதுகிறார்களோ என்றும் பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட சேனலை நெட்டிசன்கள் கடுமையாக தாக்கி வரும் நிலையில் இதற்கு பதிலளித்த சுரேஷ் சக்ரவர்த்தி ’இதற்கு சேனல் காரணம் இல்லை. ஒரு லேடி தான் இதற்கு காரணம் என்று சுரேஷ் கூறியுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுரேஷ் சக்கரவர்த்தியின் வரவை தடுத்த அந்த லேடி யார் என்பதே தற்போதைய நெட்டிசன்களின் கேள்வியாக உள்ளது.

“Master On Ghilli Mode” – பொரிபறக்கும் மாஸ்டர் Promo !

மாஸ்டர் Promo…

தமிழ் சினிமாவின் முன்னணி நிலையில் இருக்கும் விஜய்யின் லேட்டஸ்ட் படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், தீனா, என பல நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.

சோகம் என்ன என்றால் கடந்த வருடம் ஏப்ரல் மாதமே இந்த படம் ரிலீஸ் ஆக இருந்தது.

ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப் போய் வந்தது. தற்போது படத்தை பொங்கலுக்கு Release செய்யலாம் என முடிவு செய்தது.

இந்த நிலையில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இருந்து விஜய் கபடி ஆடுவது போல ஒரு மாஸ் Promo ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

இதனால் செம்ம Surprise-இல் இருக்கிறார்கள் நம்ம தளபதி ரசிகர்கள். வாத்தி On Ghilli Mode” என்று Tweet போட்டு கொண்டிருக்கிறார்கள் தளபதி ரசிகர்கள்.

விஜய் சேதுபதி பட இயக்குனருடன் இணையும் சசிகுமார்!

சசிகுமார்…

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் சசிகுமார், அடுத்ததாக விஜய் சேதுபதி பட இயக்குனருடன் கைகோர்க்க இருக்கிறார்.

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் பொங்கல் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் நடிகர் சசிகுமார் கலந்துக் கொண்டார். அதன்பின் பேசிய சசிகுமார், இந்த விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.

என்னைப் பொறுத்தவரை நான் கிராமத்தில் பிறந்து இப்போதும் அங்கேயே வாழ்ந்து வருவதால் அந்த மண் மணம் குறையாமல் இன்றளவும் அத்தனை பண்டிகைகளை கொண்டாடி வருகிறோம். இன்றைக்கும் கூட பொங்கல் பண்டிகை என்றால் எங்கள் வீட்டு மாட்டு தொழுவத்தில் தான் பொங்கல் வைத்து வணங்குவது வழக்கம். பரம்பரை பரம்பரையாக இன்னமும் அந்த பழக்கத்தை மாற்ற வில்லை.

கொரோனா பலரது வாழ்க்கையிலும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தி விட்டது அதை மறுக்க முடியாது. என்னைப் பொறுத்தவரை திரையரங்கில் பார்க்கும் சினிமா என்பது கோவிலில் இருக்கும் சாமியை பார்ப்பதற்கு சமம். ஓடிடி என்பது வீட்டில் இருக்கும் பூஜை அறை போல.

வீட்டில் இருக்கும் சுவாமியை தினம்தினம் பூஜித்தாலும் கோயிலுக்கு போகும் போது ஏற்படும் மகிழ்ச்யை போல சினிமாவை திரையரங்கில் கண்டு களிப்பது தான் ரசிகனாகவும் கலைஞனாகவும் நான் விரும்புகிறேன். எனது அடுத்த படங்களாக ராஜவம்சம், எம்ஜிஆர் மகன், பகைவனுக்கு அருள்வாய் உட்பட படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.

அடுத்ததாக தொரட்டி இயக்குனர் மாரிமுத்து இயக்கத்திலும், விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான ‘க/பெ.ரணசிங்கம் பட இயக்குனர் விருமாண்டி இயக்கத்திலும் நடிக்க இருக்கிறேன்.