திடீரென்று திருவண்ணாமலை கோவிலுக்கு விசிட் அடித்த மாஸ்டர் பட குழுவினர், யார் யார் சென்றுள்ளனர் என பாருங்கள்..!

மாஸ்டர்…

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.

இப்படம் ரசிகர்களிடையே மிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் தினமும் ஒரு புதிய ப்ரோமோ வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி வரும் ஜனவரி 13 ஆம் தேதி முதல் 50% இருக்கைகளுடன் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது மாஸ்டர் திரைப்படம்.

இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ், அனிருத், அர்ஜுன் தாஸ், ரத்னகுமார், லாலு உள்ளிட்டோர் இன்று திருவண்ணாமலைக்கு சென்றுள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 4ன் இரண்டாம் பைனலிஸ்ட்.. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த போட்டியாளர்!

பிக்பாஸ் சீசன் 4…

டிக்கெட் டு பினாலே டாஸ்குகளை வென்று பிக் பாஸ் சீசன் 4 முதல் பைனலிஸ்ட் போட்டியாளராக சென்றுள்ளார் சோமசேகர்.

அவரை தொடர்ந்து அடுத்தது இரண்டாம் போட்டியாளராக யார் செல்லுவார் என்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்தோம்.

இந்நிலையில் சோமசேகரை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 4ன் இரண்டாம் பைனலிஸ்ட் போட்டியாளராக ஆரி மக்களின் வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்க பட்டுள்ளார்.

இதனை இன்று ஒளிபரப்பான எபிசோடில் கமல் ஹாசன் அறிவித்தது அவரின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தது.

இதனை ஆரியின் ரசிகர்கள் ஷார் செய்து சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

பிரபல மலையாள நடிகரின் மகனை சந்தித்த விஜய்- தளபதியின் லேட்டஸ்ட் லுக் சூப்பர்!

தளபதி விஜய்…

தளபதி விஜய் ரசிகர்கள் இப்போது அதிகமாக பேசும் ஒரு நபர்.

காரணம் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் வரும் ஜனவரி 13ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

தமிழ்நாடு, ஆஸ்திரேலியா, USA என எல்லா இடங்களிலும் படத்தின் முன்பதிவு அமோகமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் தளபதி பிரபல மலையாள நடிகரான ஜெயராமின் மகன் காளிதாஸை நேரில் சந்தித்துள்ளாராம்.

இந்த தகவலை ஜெயராமே தனது டுவிட்டரில் பதிவு செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இணையத்தை அசத்தும் ரோஜா சீரியல் நாயகியின் நடன வீடியோ !

ரோஜா.ப்ரியங்கா………

சன் டிவியில் TRP-யை அள்ளிக்குவித்து வரும் வரும் பிரபல தொடர்களில் ஒன்று ரோஜா.ப்ரியங்கா நல்காரி இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.சிபு சூரியன் இந்த தொடரின் நாயகனாக நடித்து வருகிறார்.வடிவுக்கரசி,ஷாமிலி சுகுமார்,பாண்டியன் ஸ்டோர்ஸ் வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த தொடரில் முன்னணி வேடங்களில் நடித்து வரும் ப்ரியங்கா மற்றும் சிபு சூரியன் இருவருக்கும் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.கொரோனாவுக்கு பிறகு இந்த தொடர் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக சென்று வருகிறது.யாஷிகா ஆனந்த் கொரோனாவுக்கு பிறகு வந்த சில எபிசோடுகளில் சிறப்பு தோற்றத்தில் வந்து சென்றார்.

ரசிகர்களின் ஆதரவோடு 600 எபிசோடுகளை கடந்து அமோக வரவேற்பை பெற்றுள்ளது.பல சுவாரசிய திருப்புமுனைகளுடன் இந்த தொடர் விறுவிறுப்பாக சென்று வருகிறது.கடந்த பல வாரங்களாக TRP-யில் முதல் இடத்தையும் பிடித்து அசத்தி வருகிறது.

இந்த தொடரின் நாயகி பிரியங்கா அவ்வப்போது புகைப்படங்களையும்,வீடியோக்களையும் பதிவிட்டு வருவார்.தற்போது இந்த தொடரின் நாயகி ப்ரியங்கா நல்காரி தனது புதிய நடன வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

 

View this post on Instagram

 

A post shared by PRIYANKA NALKARI (@nalkarpriyanka)

பு லிக்கு த்தி பாண்டி படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர் வெளியீடு !

பு லிக்கு த்தி பாண்டி……….

2020-ல் கொரோனா வைரஸ் காரணமாக நிலவி வரும் அசாதாரண நிலை காரணமாக பல திரைப்படங்கள் நேரடியாக முன்னணி OTT தளங்களில் வெளியாகி வருகின்றன.சில முன்னணி நடிகர்களின் படங்களும் OTT தளங்களின் வழியாக வெளியாகின.தொடர்ந்து பொங்கலுக்கும் இந்த ரூட்டை சில படங்கள் பின்பற்றி ரிலீஸிற்கு தயாராக உள்ளன.

எப்போதும் புதுமையாக எதையாவது செய்யும் சன் டிவி இதிலும் புதுமையாக ஒரு ரூட்டை தேர்வு செய்தது.படங்களை OTT-யில் வெளியிடாமல் நேரடியாக டிவியில் படங்களை முதல் முறையாக ஒளிபரப்ப தொடங்கினர்.தீபாவளிக்கு நேரடியாக சன் டிவியில் நாங்க ரொம்ப பிஸி படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.சில நாட்களுக்கு பிறகு இந்த படம் சன் NXT தளத்திலும் வெளியிடப்பட்டது.

தற்போது தங்கள் அடுத்த ரிலீஸிற்கு சன் டிவி தயாராகி வருகின்றனர்.கொம்பன்,குட்டி புலி,மருது உள்ளிட்ட கிராமத்து ஆக்ஷன் படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் முத்தையா.விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கும் புலிக்குத்தி பாண்டி படத்தை முத்தையா இயக்கியுள்ளார் இந்த படம் நேரடியாக பொங்கலுக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது

லட்சுமி மேனன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.சமுத்திரக்கனி இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.சன் டிவி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் ஜனவரி 15ஆம் தேதி 6.30 மணிக்கு நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.அதிரடி ஆக்ஷன் கலந்த விறுவிறுப்பான இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இதனை கீழே உள்ள லிங்கில் காணலாம்

விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு USAவில் இப்படி ஒரு வரவேற்பா?- கொண்டாடும் ரசிகர்கள்!

மாஸ்டர்…

லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய மாஸ்டர் படத்திற்கு பெரிய வரவேற்பு உள்ளது.

படமும் கொரோனா முடிந்து வெளியாவதால் படம் செம ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளார்கள்.

கடந்த சில நாட்களாகவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கொடுத்துள்ள பேட்டிகளும் வைரலாகி வருகின்றன.

எல்லா இடங்களிலும் படத்திற்கான முன்பதிவு அமோகமாக நடந்து வருகிறது. USAவில் படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

58 இடங்களில் 3000க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாம்.

24 மணி நேரத்தில் மிரட்டலான சாதனை! எந்த நடிகரும் செய்யாதது! ராக் ஸ்டார் கலக்கல்!

KGF 2…

கன்னட சினிமாவின் பிரபல நடிகர் யஷ் தற்போது KGF 2 படத்தில் நடித்து வருகிறார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் ரூ 80 கோடி பட்ஜெட்டில் இப்படத்தின் முதல் பாகம் டிசம்பர் 2018 ல் வெளியாகி ரூ 250 கோடி வசூல் செய்தது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் K.G.F: Chapter 2 என எடுக்கப்பட்டு வருகிறது. ரூ 100 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருகிறது. ஹீரோ யஷ் நேற்று முன்தினம் தன் பிறந்த நாளை கொண்டாடினார். இந்த முக்கிய நாளை முன்னிட்டு படக்குழு நேற்று டீசரை வெளியிட்டது.

24 மணி நேரத்தில் இது 78 மில்லியன் பார்வைகளை அள்ளி பெரும் சாதனை படைத்துள்ளது.

மேலும் 42 மில்லியன் லைக்குகளையும் வாங்கி குவித்துள்ளது. வரலாற்றில் எழுதப்பட்ட சரித்திரமாக இந்த சாதனையை கொண்டாடி வருகின்றனர்.

சஞ்சய் தத், ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் என முக்கிய பிரபலங்களும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

முக்கிய நபர் கை து! நடிகைக்கு கோடிக்கணக்கில் பணம்! ச ர் ச் சையில் பிரபலத்தின் மனைவி! வி சா ரணை யில் வந்த தி டு க் கிடும் தகவல்!

நடிகை குட்டி ராதிகா….

நடிகை குட்டி ராதிகாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமார சாமியை 2 ம் திருமணம் செ ய் துகொண்டார்.

தற்போது அவர் ச.ர்.ச்.சை.யில் சி.க்.கி.யு.ள்ளார். பெங்களூரில் அ ரசு  வே லை வாங்கி தருவதாக கூறி  யுவராஜ் என்பவரை பலரிடம் ப ண மோ சடி செ ய் துள்ளா ர். மேலும் ஜோதிடரான அவர் தன்னை பாஜக நிர்வாகி என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் அவரை கு.ற்.ற.ப்.பி.ரிவு போ லி சார்  கை.து செ.ய்.து வி சா ர ணை ந ட த் தி வந்தனர். அவரின் வ ங் கி க ண க் கை சோ த னை செ ய் த போது நடிகை குட்டி ராதிகாவின் வங்கி கணக்கிற்கு ஆன்லைன் ப ரி மா ற்றம் மூலம் ரூ ஒன்றரை கோடி பணம் செ லு த்த ப் ப ட்டது தெரியவந்தது.

மேலும் குட்டி ராதிகாவின் சகோதரர் வங்கி கணக்கிற்கும் பணம் சென்றது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் அவர்களுக்கு ச ம் மன் அனுப்பப்பட்டு வி சா ரணை க்கு ஆ ஜ ராகு மாறு கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய குட்டி ராதிகா படத்தில் நடிப்பதற்காக தன்னை ஒப்பந்தம் செய்த யுவராக் ரூ 15 லட்சம் பணம் அனுப்பியதாகவும், பின்னர் உறவினர் மூலம் ரூ 60 லட்சம் அனுப்பியதாகவும் கூறியுள்ளார்.

மேலும் ஜோதிடருக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை, குடும்ப ஜோதிடர் என்ற முறையில் மட்டுமே அவருடன் ப ழ க்க ம் இருந்தது என கூறியுள்ளார், இந்நிலையில் யுவராஜின் வீட்டில் இருந்து 2 சொ கு சு கா ர் களை போ லி சார்  ப றி முத ல் செ ய்து ள் ள னராம்.

கண்ணீர் விட்டு அழுத பாலா! போட்டுடத்த கமல்! நடந்தது என்ன? பிக்பாஸ் சீசன் 4 இறுதி கட்ட ப ரபரப்பு!

பிக்பாஸ்……….

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 தற்போது 96 நாட்களை ஓடிவிட்டது.

இறுதி கட்டத்திற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் வெற்றியாளர் யார் என்ற ப ரபரப்பு எழுந்துள்ளது.

கடைசி Eviction ல் ஷிவானி வெளியேற்றப்பட்டார் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது பாலா காப்பாற்றப்பட்டுள்ளார்.

கமல் இதை நேரடியாகவே அறிவித்துவிட்டார்.

பலரின் வாழ்வில் சந்தோஷத்தை ஏற்படுத்தும் ஓவியரின் கதை – மாறா விமர்சனம் பலரின் வாழ்வில் சந்தோஷத்தை ஏற்படுத்தும் ஓவியரின் கதை – மாறா விமர்சனம்!

மாறா…

நாயகி ஷ்ரத்தாவிற்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்கின்றனர். அது புடிக்காமல், தனக்கு வேலை இருப்பாதாக கூறிவிட்டு கேரளாவிற்கு செல்கிறார். செல்லும் இடத்தில், தங்க இடம் தேடி அலைகிறார். அப்போது சிறுவயதில் ஒருவர் தனக்கு சொன்ன கதை, அங்கு ஓவியமாக வரையப்பட்டுள்ளதை பார்த்து வியப்படைகிறார்.

இறுதியாக நாயகன் மாதவன் உபயோகித்து வந்த வீட்டில் தங்குகிறார் ஷ்ரத்தா. அந்த வீட்டில் இருந்த ஒரு நோட்டு புத்தகத்தில் உண்மை கதை ஒன்று சித்திரமாக வரையப்பட்டிருக்கிறது.

அதை ஷ்ரத்தா ஆவலுடன் படித்து வருகிறார். ஆனால் அந்த உண்மைக்கதை சித்திரம் ஓரிடத்தில் சஸ்பென்சாக நிற்க, அதன்பின் என்ன நடந்திருக்கும் என்கிற ஆவலில் மாதவனை கண்டுபிடிக்க கிளம்புகிறார் ஷ்ரத்தா.

மாதவன் தொடர்புடைய நபர்களை ஒவ்வொருவராக சந்திக்கும் ஷ்ரத்தா, அவர்கள் மூலம் கேள்விப்பட்ட விஷயங்களை வைத்து மாதவனின் மீது காதல் வயப்பட்டு இன்னும் தீவிரமாக தேடுகிறார். இறுதியில் ஷ்ரத்தா மாதவனை சந்தித்தாரா, அவரின் காதல் கைகூடியதா என்பதே படத்தின் மீதிக்கதை.

மலையாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சார்லி படத்தின் கதைக்கருவை கொண்டு மாறா படம் உருவாக்கப்பட்டுள்ளது.

மாறாவாக நாயகன் மாதவன், தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பலரின் வாழ்வில் சந்தோஷத்தை ஏற்படுத்தும் மாறா கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

நாயகி ஷ்ரத்தா அழகு, பதுமையுடன் நடிப்பில் மிளிர்கிறார். மாறாவின் சித்திரங்களை பார்க்கும்போது அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் அருமை. மற்றொரு கதாநாயகியான ஷிவதாவின் நடிப்பும் அற்புதம்.

அலெக்ஸாண்டரின் காமெடி ஒர்க் அவுட் ஆகி இருப்பது படத்திற்கு பிளஸ். எம்.எஸ்.பாஸ்கர், கிஷோர், அப்புக்குட்டி, மவுலி, அபிராமி என படத்தில் ஏராளமான அனுபவ நடிகர்கள் நடித்திருக்கிறார். அவர்களின் பங்களிப்பு கதையின் நகர்வுக்கு பெரிதும் உதவி இருக்கிறது. நேர்த்தியாக நடித்துள்ளனர்.

இயக்குனர் திலீப் குமார், சார்லி படத்தை அப்படியே ரீமேக் செய்யாமல் சில மாற்றங்களை செய்திருப்பதும் ரசிக்கும்படி உள்ளது. சார்லியை பார்த்து அசந்து போனவர்கள் கூட மாறாவை விரும்பி பார்க்கும் வகையில் படம் எடுத்திருக்கிறார். கதாபாத்திரங்களின் தேர்வு திறம்பட செய்திருக்கிறார்.

இரண்டாம் பாதியில் திரைக்கதையின் வேகத்தை கூட்டி இருக்கலாம். கலை இயக்குனர் அஜயனின் பங்களிப்பு ஒவ்வொரு காட்சியிலும் பிரதீபலிக்கிறது. இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு உயிரோட்டமாக அமைந்துள்ளது. தினேஷ் கிருஷ்ணன் மற்றும் கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் ‘மாறா’ மனதில் நிற்கிறார்.