மரணத்தைக் கண்டு பயப்படும் நண்பர்கள் – வி விமர்சனம்!!

“வி” விமர்சனம்…

வசதியான ஐந்து நண்பர்கள் தனது காதலிகளுடன் பைக்கில் சுற்றுலா செல்கிறார்கள். இதில் நாயகன் ராகவ்வின் காதலி லூதியா, ஒரு புதிய ஆப் இருப்பதாகவும் அதில் பிறந்த தேதியை பதிவு செய்தால் இறப்பு தேதியை தெரிவிக்கும் என்றும் கூறுகிறார்.

இதை நம்ப மறுக்கும் நண்பர்கள் ஒரு கட்டத்தில் அனைவருடைய பிறந்த தேதியும் பதிவு செய்கிறார்கள். அப்போது அனைவரும் ஒரே நாளில் இறக்க இருப்பதாக அதில் காண்பிக்கிறது. இதைக் கண்டு அதிர்ச்சி அடையும் நண்பர்களுக்கு சில அமானுஷ்ய சம்பவங்களும், நண்பர்களின் இறப்புகளும் ஏற்படுகிறது.

இறுதியில் அந்த ஆப் – பில் இருப்பது போல் அனைவரும் இருந்தார்களா? இல்லையா? எதனால் அவர்களுக்கு இப்படி நடக்கிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.
சின்னத்திரையில் நடித்து வந்த ராகவ் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து பளிச்சிடுகிறார். நாயகியாக நடித்திருக்கும் லூதியா மற்றும் நண்பர்கள் அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

சஸ்பென்ஸ் திரில்லர் கதையை இயக்கியிருக்கிறார் இயக்குனர் டாவின்சி சரவணன். அடுத்தடுத்து என்ன நடக்கும், எப்படி நடக்கும், எதனால் நடக்கும் என்று விறுவிறுப்பை கூட்டி இருக்கிறார் இயக்குனர். முதல்பாதியில் பைக் ஓட்டும் காட்சியே அதிகம் இருப்பதால் படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளது. முதல் பாதியில் உள்ள பலவீனம் இரண்டாம்பாதியில் பலமாக அமைந்துள்ளது.

இளங்கோ கலைவாணன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணியில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார்கள். அனில் கே சாமியின் ஒளிப்பதிவு ரசிக்கும்படி உள்ளது.
மொத்தத்தில் ‘வி’ வித்தியாசம்.

யாமா படத்தின் முன்னோட்டம்!

யாமா..

ஸ்ரீ சிவன்யா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் விஜு, லட்சுமி பிரியா நடிப்பில் உருவாகி இருக்கும் யாமா படத்தின் முன்னோட்டம்.

ஸ்ரீ சிவன்யா கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பில் செந்தில் குமார் இராஜேந்திரன் வழங்கும் யாமா திரைப்படம் விறுவிறுப்பான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தை இயக்குனர் சையத் அவர்கள் இயக்கியுள்ளார். நாயகனாக விஜு இப்படத்தில் அறிமுகமாகிறார். கதாநாயகியாக லக்ஷ்மி பிரியா சந்திர மௌலி நடித்துள்ளார்.

“அங்காடித் தெரு” “அசுரன்” ஆகிய படங்களில் நடித்த இயக்குனர் ஏ.வெங்கடேஷ் எதிர்நாயகனாக நடித்துள்ளார். மேலும் எஸ்.சக்தி வேல் ஒளிப்பதிவில் எல்.வி.முத்து கணேஷ் இசையில் இப்படம் உருவாகியுள்ளது. “யாமா” திரைப்படத்தின் தலைப்பும் பர்ஸ்ட்லுக்கும் சமீபத்தில் வெளியாகவுள்ளது.

அரண்மனை 3 படத்தின் அப்டேட்டை வெளியிட்ட சாக்‌ஷி அகர்வால்!

சாக்‌ஷி அகர்வால்….

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வரும் சாக்‌ஷி அகர்வால், அரண்மனை 3 படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டிருக்கிறார்.

சுந்தர்.சி இயக்கிய அரண்மனை பேய் படம் 2 பாகங்கள் வந்துள்ளன. இந்த 2 பாகங்களும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில்,

தற்போது அரண்மனை படத்தின் 3-ம் பாகம் தயாராக உள்ளது. ஏற்கனவே 2 பாகங்களை இயக்கி வெற்றிகண்ட சுந்தர் சி தான் இந்த படத்தையும் இயக்குகிறார்.

இதில் கதாநாயகனாக ஆர்யாவும், அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர். விவேக், யோகிபாபு ஆகியோர் காமெடி வேடங்களில் வருகின்றனர்.

இப்படத்திற்கு சத்யா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு குஜாரத்தில் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு போடப்பட்டதால் படப்பிடிப்பு பாதியிலேயே தடைபட்டது.

இந்நிலையில், இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது நடிகை சாக்‌ஷி அகர்வால் இப்படத்தின் டப்பிங் பணியை முடித்து விட்டதாக கூறியிருக்கிறார்.

சூதுகவ்வும் 2 வில் சத்யராஜ்?

சூது கவ்வும் 2….

7 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் சூது கவ்வும். விஜய்சேதுபதிக்கு அடையாளம் கொடுத்த படங்களில் ஒன்று.

இதில் பாபி சிம்ஹா, அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி, கருணாகரன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். நலன் குமாரசாமி இயக்கி இருந்தார். காமெடி திருடர்களின் கதை.

தற்போது இந்த படத்தின் 2ம் பாகம் தயாராகிறது. முதல் பாகத்தை தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயின் மெண்ட் சி.வி.குமாரே இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறார். பிரபுதேவா நடித்துள்ள யங் மங் சங் படத்தை இயக்கிய அர்ஜூன் இயக்குகிறார்.

இரண்டாம் பாகத்தில் நடிக்க விஜய்சேதுபதி மறுத்துவிட்ட நிலையில் முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அவருடன் முதல்பாகத்தில் நடித்த கருணாகரன், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கிறார்கள். விரைவில் முறைப்படியான அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

பெரிய திரையில் ஹீரோவாகும் சித்தார்த்!

சித்தார்த்…

சின்னத்திரையில் புகழ் பெறும் நடிகர்களும் வெள்ளித்திரையிலும் அறிமுகமாகமாகி வெற்றி பெற்று வருகிறார்கள்.

அந்த வரிசையில் தற்போது சின்னத்திரையில் வளர்ந்து வரும் நடிகர் சித்தார்த் குமரன் விரைவில் வெள்ளித்திரைக்கு வருகிறார்.

ஜோடி நம்பர் 1, டான்ஸ் ஜோடி டான்ஸ் என்று பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் சித்தார்த். அச்சமில்லை, அச்சமில்லை உள்ளிட்ட பல ரியாலிடி ஷோக்களில் கலந்து கொண்டிருக்கிறார்.

என் பெயர் மீனாட்சி, ஆபீஸ், சரவணன் மீனாட்சி என்று தொடர்ந்து பல சீரியல்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தார்.

ரெக்க கட்டி பறக்குது மனசு தொடரில் கதாநாயகனாக நடித்தார். தற்போது தேன்மொழி பிஏ தொடரில் ஜாக்குலினுடன் நடித்து வருகிறார்.

தற்போது புதிய தமிழ் படம் ஒன்றில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுபற்றி சித்தார்த் குமரன் கூறியதாவது: சினிமாவில் நடிப்பது தான் எனது லட்சியம். அதற்கான பாதைதான் சின்னத்திரை.

இப்போது அதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது. ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். படம் பற்றிய விபரங்களை தயாரிப்பு தரப்பு வெளியிடுவதுதான் முறையாக இருக்கும். விரைவில் வெளிவரும். என்கிறார் சித்தார்த் குமரன்.

ரம்பாவை மறைத்து வேறொரு நடிகையை ஆடவைத்த இயக்குநர்.. விஜய் படத்தில் ஏற்பட்ட ரகசியம்!

விஜய் படத்தில்..

தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறும் அளவிற்கு ரசிகர்கள் பட்டாளத்தை பெற்று வருபவர் நடிகை விஜய். தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் வரும் பொங்கல் அன்று 13ம் தேதி தியேட்டரில் 100 சதவீத இருக்கையுடன் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் அவர் நடிக்கும் படங்களில் ஏதாவது டிவிஸ்ட் இருக்கும். அந்தவகையில் விஜய்யின் நினைத்தேன் வந்தாய் படத்தில் பல மாற்றங்கள் நடைபெற்றுள்ளதாம். அதாவது அப்படத்தினை இயக்குநர் கே. செல்வ பாரதி இயக்கி இருந்தார்.

முதலில் இப்படத்தில் நவரச நாயகன் கார்த்தி தான் நடிக்க இருந்ததாம். கால்ஷீட் காரணமாக கார்த்தி நடிக்காமல் போக எஸ்.ஏ. சந்திரசேகர் வீட்டு வழியாக சென்ற செல்வ பாரதி அவரிடன் மகன் விஜய்யை நடிக்க கூற கேட்டுள்ளார். அப்படி கதையை கேட்டு நடிக்க ஆரம்பித்தார் விஜய்.

மேலும் அப்படத்தின் இரண்டாம் நாயகியாக நடிகை சிம்ரன் தான் நடிக்க கமிட்டாகினாராம். அதுவும் கால்ஷீட் காரணமாக சிம்ரன் விலகி நடிகை ரம்பாவை புக் செய்து நடிக்க வைத்துள்ளனர்.

இதையடுத்து வண்ண நிலவே பாடலுக்கு விஜய்யை ஒவ்வொரு நாளும் வேறு வேறு சட்டைகளை அணிய வரவழைத்து நடிக்க வைத்துள்ளார் இயக்குநர். ஆனால் எடிடிங்கில் நன்றாக இருந்தது என்று விஜய் பாரட்டினாராம்.

இது ஒரு பக்கம் இருக்க ஆரம்பத்தில் வண்ண நிலவே பாடலில் ரம்யா முகத்தினை மூடி மரத்தின் மேல் இடுப்பை ஆட்டி ஆடியிருப்பார்.

அக்காட்சி உள்பட மொத்தம் 48 ஷாட்கள் வேறொரு நடிகையை வைத்து ஆட வைத்திருக்கிறார்கள் படக்குழுவினர்.

இதற்கு காரணம், அப்பாடல் எடுக்கும் போது ரம்பா தெலுங்கு சினிமாவின் நடிகர் சிரஞ்சீவியின் படத்தில் நடிக்க சென்றதால் அக்காட்சியை நடிகையின் முகம் தெரியாமல் எடுத்தோம் என்று இயக்குநர் கே. செல்வ பாரதி கூறியிருந்தார்.

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் க டு ம் க ட் டுப்பாடுகள்!!

பொன்னியின் செல்வன்……..

ஷூட்டிங் முடிஞ்சா ஹோட்டல் ரூமுன்னுதான் இருக்கணும்: பொன்னியின் செல்வனின் க ட் டுப் பாடுகள்!

இய க்குநர் மணிரத்னம் இ  ய க்கத்தில் உ ரு வாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு த ள த்தில் க டு ம் க ட் டுப் பாடுகள் வி தி க்க ப் பட்டுள்ளது.

நாட்டையே உ லு க் கிய கொ ரோ னா இன்னும் முழுமையாக க் யூர் ஆ க வில்லை. மீண்டும் உ ரு மாறி அதிக தா க் கத் தோடு வருவதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது. ஏ ற் கனவே ஹைதராபாத்தில் நடந்த அண்ணாத்த படப்பிடிப்பின் போது படக்குழுவினருக்கு கொ ரோ னா பா தி ப்பு ஏ ற்பட் டதைத் தொடர்ந்து அண்ணாத்த படப்பிடிப்பு நி று த் தப் பட்டது என்பது கு றி ப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பும் ஹை த ராபா த்தில் உள்ள ரமோஜி பிலிம் சிட்டியில் தான் ப ட மாக் க ப்பட்டு வருகிறது. இதில், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி ஆகியோர் கலந்து கொ ண்டு ள்ளனர். ஆனால், படப்பிடிப்புக்கு முன்னதாகவே அவர்களுக்கு கொ ரோ னா ப ரி சோத னை மே ற் கொள் ள ப்பட்டுள்ளதாக கூ றப் படுகிறது.

அதோடு, ஹோட்டல் அ றை யிலிருந்து ப ட ப்பி டிப்புக்கு ம ட் டுமே செல்ல வேண்டும் என்றும், ப ட ப்பிடிப்பு முடிந்தவுடன் மீண்டும் ஹோட்டலுக்கு ம ட் டுமே செல்ல வேண்டும் என்றும் க டு ம் க ட் டு ப்பாடுகள் வி தி க்கப்பட்டுள்ளது. மேலும், ப ட ப்பிடிப்புக்கு வந்துவிட்டால் ப ட ப்பி டிப்பை முற்றிலும் மு டி த்த பி றகே  ஹோட்டலுக்கு செல்ல வேண்டும் என்றும் தெ ரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கொ ரோனா வால் நி று த்த ப்பட்ட அண்ணாத்த படத்தின் ப டப்பிடிப்பை ரஜினிகாந்தின் உ ட ல் நி லையை க ருத்தில் கொண்டு செ ன்னையில் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் தி ட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது போன்று பொன்னியின் செல்வன் படத்திற்கு வந் து விட க் கூடாது என்பதற்காக படக்குழுவினர் க வ னமு டன் ப டப்பிடிப்பை மே ற்கொண்டு வருகின்றனர்.

உதவி கேட்கும் தன்னுடைய பட ஹீரோவை பார்த்து கண்கலங்கிய பாரதிராஜா: வைரல் வீடியோ!

பாரதிராஜா………

தன்னுடைய படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் ஒருவர் உ ட ல் ந ல க் கு றைவு காரணமாக காரணமாக ம ரு த் துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததை அறிந்து அவரை நே ரில் பார்த்த பாரதிராஜா கண்கள் க ல ங்கும் வீ டியோ த ற் போது வை ர ல் ஆகி வருகிறது.

இயக்குனர் சிகரம் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த படங்களில் ஒன்று ’என்னுயிர் தோழன்’. கடந்த 1990ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நடிகர்கள் பாபு, தென்னவன் மற்றும் ரமா ஆகியோர் அறிமுகமானார்கள். இசைஞானி இளையராஜா இசையில் உருவான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் ‘என்னுயிர தோழன்’ திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் பாபு கடந்த சில நாட்களாக உ ட ல் ந ல க் குறை வு  கா ர ணமாக ம ரு த் துவ ம னையில் அனுமதிக்கப்பட்டு சி கி ச் சை பெற்று வருகிறார். இதுகுறித்து கேள்விப்பட்ட இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் பாபு சி கி ச் சைப் பெறும் ம ரு த் துவ மனை க்கு நேரில் சென்று அவரை பார்த்தார்.

அப்போது ’என் உ யி ர் தோ ழ ன்’ பாபு, பாரதிராஜாவை பார்த்து கண்கலங்கி தனது நிலையை எ டு த்துச் சொல்லி உதவி கேட்பதும் அதை பார்த்து பாரதிராஜா கண்கலங்குவதுமான காட்சிகள் உள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இதனை அடுத்து பாரதிராஜா உள்பட திரையுலகினர் விரைவில் பாபுவின் சி கி ச் சைக் கும் அவருடைய குடும்பத்தினர்களுக்கும் உதவி செ ய் வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இளம் நடிகரின் அடுத்த படத்தில் ‘பிக்பாஸ்’ சம்யுக்தா!!

சம்யுக்தா……….

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் திரையுலகில் வாய்ப்பை பெற்று வருகிறார்கள் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான சம்யுக்தா, கடந்த சில வாரங்களுக்கு முன் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில் சம்யுக்தாவுக்கு ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்து வரும் ‘துக்ளக் தர்பார் என்ற படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமானார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இளம் நடிகர் ஒருவரின் அடுத்த படத்தில் சம்யுக்தா நடிக்க உள்ளார்.

தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவரான கௌதம் கார்த்திக் நடிக்கும் அடுத்த படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்க உள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்க உள்ளார் என்பதும் நீண்ட டைவெளிக்குப் பின் ஸ்ரீதிவ்யா இந்த படத்தின் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் சம்யுக்தா நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடியும் முன்னரே அந்நிகழ்ச்சியின் போட்டியாளர் ஒருவர் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்கவிருப்பது பெரும் பாசிட்டிவிவாக பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் திருவல்லிக்கேணியை சேர்ந்த வாலிபராக கௌதம் கார்த்திக்கும் பிசியோதெரபி மருத்துவராக ஸ்ரீதிவ்யா நடித்து வருவதாக இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்கள் இவர்களா?

பிக்பாஸ்……..

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிகட்டத்தை அடைந்து உள்ளது என்பதும் இந்த வாரத்துடன் எவிக்சன் பிராசஸ் முடிவடைகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் ஏழு பேர்களும் நாமினேஷன் பட்டியலில் உள்ள நிலையில் இந்த வாரம் இரண்டு பேர் எவிக்சன் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு இருவர் எவிக்சன் செய்யப்பட்டால் நமது தரப்பில் சமூக வலைதளங்களில் எடுத்த கருத்துக் கணிப்பின்படி ஆரிக்கு தான் அதிகபட்ச வாக்குகள் கிடைத்துள்ளது. அதாவது ஆரி 4 லட்சத்து 72 ஆயிரத்து 285 வாக்குகளை பெற்று பெற்றுள்ளார்.

ஆரியை அடுத்து பாலாஜி ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 285 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். ரியோ மற்றும் கேபி ஆகிய இருவரும் மூன்றாம், நான்காம் இடங்களில் உள்ளனர். எனவே இந்த கருத்துக்கணிப்பின்படி இந்த வாரம் டபுள் எவிக்சன் இருந்தால் பிக் பாஸ் வீட்டில் இருந்து ரம்யா மற்றும் ஷிவானி ஆகிய இருவர் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஒருவேளை தற்போது நடைபெற்று வரும் ’டிக்கெட் டு பினாலே’ டாஸ்க்கில் ரம்யா வெற்றி பெற்றால் ஷிவானி மற்றும் சோம் வெளியேற்றப்படுவார்கள்.

மேலும் ஒருவர் மட்டுமே எவிக்சன் செய்யப்பட்டால் ஷிவானி வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.