வீட்டை காலி செய்து வெளியே போங்க.. தளபதி விஜய் போ லீ சில் பு கார்..!!

நடிகர் விஜய்…….

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர் விஜய் தீ டீ ரென கா வ ல் நி லை யில் பு கா ர் ஒன்றை அளித்துள்ளது வி ஷ யம் ப ர ப ர ப்பை ஏ ற் படு த் தியுள்ளது.

ஆம் நடிகர் விஜய்க்கு சொந்தமான அ டுக் குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கும் 2 நபர்களை வீட்டை கா லி செ ய் யும்படி, நடிகர் விஜய் விருகம்பாக்கம் கா வ ல் நிலையத்தில் பு கா ர் அ ளி த்துள்ளார்.

நடிகர் வி ஜய் யின் ம க் கள் இ ய க்க த் தில், அகில இ ந் திய செ ய லாள ராக இ ரு ந்து வந்த ரவிராஜா மா ற் றம் துணை செய லா ளராக பதவி இருந்த ஏ.சி.குமார் ஆகியோர் பொ று ப்பில் இருந்து நீ க் க ப்ப டுவதாக, அதன் இ ய க்க பொ று ப்பா ளர் ஆனந்த் அறிவித்தார்.

ப த வியில் இருந்து நீ க் கம் செ ய் யப் ப ட்ட இருவரும் சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய்க்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர்களிடம், நடிகர் விஜய் வீட்டை விட்டு கா லி செ ய்யு மாறு கூறியுள்ளார். ஆனால், அவர்கள் அ றை யை கா லி செய் யாமல் இருந்து வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் விருகம்பாக்கம் கா வ ல் நி லை ய த்தில், அவர்களை கா லி செ ய்து த ரு ம்ப டி, விஜய் தரப்பில் வ ழ க்க றிஞர்கள் பு கா ர் ம னு வை அளித்துள்ளனர்.

ரியோ கோமாளியா? நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த ஸ்ருதி ரவி!

ஸ்ருதி ரவி…

பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களில் ஒருவர் ரியோ என்பதும், அவர் ஆரம்பம் முதலே அசத்தலாக விளையாடி வருகிறார் என்பதும் பைனலுக்கு செல்லும் நான்கு பேர்களில் கண்டிப்பாக அவரும் ஒருவராக இருப்பார் என்றும் அவரது ஆர்மியினர் கூறி வருகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் ரியோ மீது ஒருசில கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. விஜய் டிவிக்கு வேண்டப்பட்டவர் என்றும் ஒரு குரூப்பில் இருந்து கொண்டு அந்த குரூப்பில் உள்ளவர்களுக்கு மட்டும் சாதகமாக செயல்படுவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ரியோ மீதான விமர்சனங்கள் கடுமையாகி வருகிறது. குறிப்பாக அவர் ஆரியுடன் சண்டை போட ஆரம்பத்ததில் இருந்து ரியோவை கோமாளி என்றும் அவர் செய்வது அனைத்துமே கோமாளித்தனமாக இருப்பதாகவும் ஒரு சிலர் விமர்சனம் செய்தனர்.

இந்த விமர்சனத்திற்கு ரியோவின் மனைவி ஸ்ருதிரவி பதிலடி கொடுத்துள்ளார். கோமாளி என்றால் மற்றவர்களை சிரிக்க வைப்பவர். தன் எதிரே உள்ளவர்களை சிரிக்க வைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. ஆனால் அதை கோமாளிகள் மிக எளிதாக செய்வார்கள்.

அந்த வகையில் ரியோவை மறைமுகமாக கோமாளி என விமர்சனம் செய்பவர்களை நான் அவரது நகைச்சுவை தன்மை குறித்து பேசுவதாக எடுத்துக்கொள்கிறேன். ரியோவை ஒரு நல்ல எண்டர்டெயினராகவே அவர்கள் பார்ப்பதாகவும் கருதுகிறேன். தயவு செய்து அன்பை பரப்புங்கள், பாசிட்டிவ் எண்ணங்களை பரப்புங்கள். எதிர்மறை விமர்சனங்களை தவிர்த்து விடுங்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் ரியோவை கோமாளி என்று கூறும் சில கருத்துக்களை பார்த்து நான் உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன். தனது வலியை மறைத்து, மற்றவர்களை தன்னால் முடிந்தவரை சிரிக்க வைப்பதுதான் கோமாளியின் குணம் என்பதை நினைத்து நான் பெருமை அடைகிறேன். என்னுடைய அன்புக்குரியவர் கோமாளியாகவே இருந்துவிட்டு போகட்டும், அவர் அப்படியே உத்வேகமாக இருக்கட்டும்’ என்று ஸ்ருதி ரவி தெரிவித்துள்ளார்

செல்வராகவன் வீட்டிற்கு புதிய விருந்தாளி: திரையுலகினர் வாழ்த்து!

கீதாஞ்சலி….

தமிழ் திரையுலகில் திறமையான இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன் என்பதும் அவருடைய ஒவ்வொரு படமும் பல ஆண்டுகள் பேச வைக்கும் அளவுக்கு இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் செல்வராகவன், கீதாஞ்சலி என்பவரை கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 2012ஆம் ஆண்டு லீலாவதி என்ற பெண் குழந்தையும் 2013 ஆம் தேதி ஓம்கார் ஆண் குழந்தையும் பிறந்தனர்.

இதனை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கீதாஞ்சலி மீண்டும் கர்ப்பமானார். இந்த நிலையில் அவருக்கு சற்று முன்னர் ஆண் குழந்தை பிறந்து உள்ளதாக தகவல் வெளிவந்ததை அடுத்து அவருக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

செல்வராகவன் குடும்பத்திற்கு வந்த புதிய விருந்தாளிக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குழந்தைக்கு செல்வராகவன்-கீதாஞ்சலி தம்பதியினர் ரிஷிகேஷ் என்று பெயர் வைத்துள்ளனர் என்பதையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரபல தமிழ் நடிகைக்கு நேற்று இரவு ரகசிய திருமணமா?

நடிகை ஆனந்தி…

பிரபுசாலமன் இயக்கிய ’கயல்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஆனந்தி. இந்த படத்தின் வெற்றியை அடுத்து இவர் ’கயல் ஆனந்தி’ என்றே அழைக்கப்பட்டு வருகிறார்.

மேலும் ’சண்டிவீரன்’, ’திரிஷா இல்லைனா நயன்தாரா’, ’விசாரணை’, ’கடவுள் இருக்கான் குமாரு’, ’மன்னார் வகையறா’, போன்ற படங்களில் நடித்த கயல் ஆனந்திக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் படமாக ’பரியேறும் பெருமாள்’ இருந்தது.

இதனை அடுத்து ’இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த கயல் ஆனந்தி, தற்போது இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு உள்பட 7 திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கயல் ஆனந்திக்கு நேற்று இரவு இரகசிய திருமணம் நடைபெற இருப்பதாகவும் இது பெற்றோர்கள் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம் என்றும் கூறப்படுகிறது.

சினிமா உலகினர் யாரையும் இந்த திருமணத்திற்கு அழைக்காமல் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் மட்டும் இந்த திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஆனந்தியை திருமணம் செய்ய இருப்பவர் சாக்ரடீஸ் என்றும் கூறப்படுகிறது. நேற்று இரவு தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் என்ற பகுதியில் உள்ள நட்சத்திரன் ஓட்டலில் தான் கயல் ஆனந்தி திருமணம் நடைபெறுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளதை அடுத்து திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேஜிஎப் 2-வை கைப்பற்றி விட்டாரா பிரித்விராஜ்?

கேஜிஎப் 2..

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், சஞ்சய் தத் நடிப்பில் உருவாகி இருக்கும் கேஜிஎப் 2 படத்தை பிரபல மலையாள நடிகர் கைப்பற்றி உள்ளார்.

2018-ஆம் ஆண்டு வெளியான படம் கேஜிஎப். இதில் நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படம் இந்தியளவில் பெரிய ஹிட் அடித்து, நடிகர் யாஷுக்கு பரவலான ரசிகர்களை உருவாக்கித் தந்தது.

இப்படத்தை இயக்கியவர் பிரசாந்த் நீல். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் கேரள வெளியீட்டு உரிமையை பிரபல மலையாள நடிகரான பிரித்விராஜ் கைப்பற்றி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “கேஜிஎப் படங்களின் தீவிர ரசிகன் நான். ராக்கியின் வரவுக்காக நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார். கேஜிஎப் 2 படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல்முறையாக ஹீரோவாக நடிக்கும் செந்தில்!

செந்தில்…

கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா அடுத்ததாக இயக்கும் படத்தில் செந்தில் ஹீரோவாக நடிக்க உள்ளாராம்.

முதல்முறையாக ஹீரோவாக நடிக்கும் செந்தில் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகர் செந்தில்.

இவர் கவுண்டமணி உடன் சேர்ந்து நடித்த காமெடிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

தற்போதும் அவர்களது காமெடியை ரசிப்பவர்கள் ஏராளம் உள்ளனர். நடிகர் கவுண்டமணி கூட சில படங்களில் ஹீரோவாக நடித்துவிட்டார். ஆனால் செந்தில் இதுவரை ஹீரோவாக நடித்ததில்லை.

இந்நிலையில், செந்தில் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா அடுத்ததாக இயக்கும் படத்தில் செந்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

இப்படத்தில் செந்தில் ஆ.யுள் த.ண்.ட.னை கை.தி.யாக நடிக்க உள்ளாராம். மேலும் இதில் செந்திலுக்கு ஜோடி யாரும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் மீது காதலில் விழுந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்!

ஜான்வி கபூர்…

நடிகை ஸ்ரீதேவியின் மகளும் நடிகையுமான ஜான்வி கபூர், பிரபல பாலிவுட் நடிகரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்விகபூர். நடிகையான இவர் 2018-ம் ஆண்டு இஷான் கட்டார் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இந்த படம் ‘கைராத்’ என்ற மராத்தி படத்தின் ரீமேக் ஆகும். அதன்பிறகு கோஸ்ட் ஸ்டோரிஸ் மற்றும் குன் ஜான் சக்சேனா: தி கார்கிள் கேர்ள் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது தோஸ்தானா 2, ரூஹி அப்ஸானா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தடக் படத்தில் நடித்தபோது அந்த படத்தின் கதாநாயகன் இஷான் கட்டாரை ஜான்வி காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன.

இருவரும் ஜோடியாகவும் சுற்றினார்கள். ஆனால் திடீரென்று பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு தோஸ்தானா 2 படத்தில் கார்த்திக் ஆர்யனுடன் ஜோடி சேர்ந்தார். ஜான்வியும், கார்த்திக் ஆர்யனும் அடிக்கடி ரகசியமாக சந்திப்பதாகவும், இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கள் வந்தன.

இதனை உறுதிப்படுத்துவதுபோல் கார்த்திக் ஆர்யனும், ஜான்வி கபூரும் கோவாவில் ஒரே நிறத்தில் டீ-சர்ட் அணிந்து ஜோடியாக சுற்றிய புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.

ஏற்கனவே கார்த்திக் ஆர்யன் பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான் மகள் சாரா அலிகானை காதலித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லேட்டஸ்ட் அஜித் படத்தில் சின்னத்திரை பிரபலம்!

வலிமை…

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை படத்தில் சின்னத்திரை பிரபலம் ஒருவர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் ஹூமா குரேசி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் அஜித்துடன் நடிப்பவர்கள் பற்றிய விபரங்களை படக்குழு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

இதனிடையே, தற்போது ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் ‘வலிமை’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. புகழ், இதனை ஒரு வீடியோ பதிவில் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பைத் தொடர்ந்து, அடுத்தகட்டப் படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் செல்லத் திட்டமிட்டது படக்குழு.

வெளிநாடுகளில் கொரோனா 2-வது அலை தீவிரமாகி வருவதால், வெளிநாட்டுப் படப்பிடிப்பே வேண்டாம் என்றும் உள்நாட்டிலேயே படமாக்கி விடலாம் ‘வலிமை’ படக்குழு முடிவு செய்துள்ளது.

போட்டோ சூட் எடுக்கும் போது விபரீதம்… ஆற்றில் விழுந்த பிரபல நடிகை!

ஹனி ரோஸ்…

தமிழ், மலையாளம் மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர் போட்டோ சூட் எடுக்கும் போது கீழே விழுந்து இருக்கிறார்.

தமிழில் ஜீவாவுடன் சிங்கம் புலி படத்தில் நடித்து பிரபலமானவர் ஹனிரோஸ், முதல் கனவே, மல்லுக்கட்டு, காந்தர்வன் ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார்.

கேரளாவை சேர்ந்த ஹனிரோஸ் மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார்.

இட்டிமானி, பிக்பிரதர்ஸ் படங்களில் மோகன்லாலுடன் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார்.

ஹனிரோஸ் கேரளாவில் ஆற்றங்கரையோரம் போட்டோ ஷூட்டில் பங்கேற்றார்.

புதிய பட்டுசேலை ஜாக்கெட் அணிந்து தலை நிறைய பூ வைத்துக்கொண்டு ஆற்றில் இருந்த ஒரு கல்லில் ஏறி போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காக சென்றார்.

ஒரு கல்லில் இருந்து இன்னொரு கல்லுக்கு காலை தூக்கி வைத்தபோது கால் இடறி தடுமாறி ஆற்றுக்குள் விழுந்தார்.

இதனால் கேமராமேன் உள்ளிட்ட படக்குழுவினர் பதறியபடி ஓடினார்கள். மேக்கப் கலைஞர் ஓடிச்சென்று ஹனிரோஸை தூக்கினார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் ஏற்படவில்லை. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.

தனுஷ் – மாளவிகா மோகனன் படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபல நடிகை!

நடிகை…

தனுஷ், மாளவிகா மோகனன் இணைந்து நடிக்கும் புதிய படத்தில் மேலும் ஒரு பிரபல நடிகை இணைந்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

கார்த்திக் சுப்புராஜின் ஜகமே தந்திரம், மாரி செல்வராஜின் கர்ணன், ஆனந்த் எல் ராயின் அத்ரங்கி ரே போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள தனுஷ்,

அடுத்ததாக துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க மாளவிகா மோகனன் ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில் ஸ்மிருதி வெங்கட் இப்படத்தில் இணைந்திருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஸ்மிருதி வெங்கட் இதற்கு முன் தடம், மௌன வலை, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

இப்படத்திற்கான ஆரம்பக் கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.