வலிமை படப்பிடிப்பில் திடீர் மாற்றம்!

வலிமை…

வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பின் வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் அஜித் நடித்து வருகிறார். போனிகபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித் தவிர வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

அதிரடி சண்டை படமாக தயாராகும் இதில், அஜித்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுகின்றன.

வலிமை படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் இடம்பெறும் முக்கியமான பைக் ரேஸ் காட்சியை சுவிட்சர்லாந்தில் படமாக்க படக்குழு திட்டமிட்டிருந்தது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அங்கு படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அந்தக் காட்சிகளை டெல்லியில் படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வலிமை படத்தை அஜித்தின் பிறந்தநாளையொட்டி ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகராக களமிறங்கும் பிரபல நடிகரின் மகன்!

யோஹன்…

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகர் சாம்ஸின் மகன் கதாநாயகனாக களம் இறங்கியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் சாம்ஸ். இவருடைய மகன் தற்போது நடிகராக அறிமுகமாக இருக்கிறார்.

இது குறித்து சாம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஒரு இனிப்பான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எனது மகன் யோஹன் நடிப்பு பயிற்சியும், இயக்குனர் பயிற்சியையும் வெற்றிகரமாக முடித்துவிட்டார்.

தற்பொழுது இயக்குனர் திரு ராம் அவர்களிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றி வரும் யோஹன் நடிகனாக களமிறங்க தயாராகிவிட்டார்.

அவருக்கு உங்களது ஆசிகளையும் ஆதரவையும் வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

20 ஆண்டுகளுக்கு பின் சூர்யாவுடன் இணைந்த பிரபல நடிகர்?

சூர்யா…

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள ‘சூர்யா 40’ படத்தில் பிரபல நடிகர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சூர்யா நடிப்பில் கடந்தாண்டு வெளியான சூரரைப் போற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து நவரசா எனும் ஆந்தாலஜி படத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்த சூர்யா, அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘சூர்யா 40’ படத்தில் நடிகர் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர்கள் இருவரும் ஏற்கனவே பாலா இயக்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான நந்தா படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

இதன்மூலம் 20 ஆண்டுகளுக்கு பின் சூர்யா படத்தில் ராஜ்கிரண் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனுஷ்கா நடிக்க மறுத்த படத்தில் ஒப்பந்தமான சமந்தா!

சமந்தா…

அனுஷ்கா நடிக்க மறுத்த புராண கதையம்சம் கொண்ட படத்தில் நடிகை சமந்தா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

சரித்திர, புராண படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. புராண கதையம்சம் கொண்ட படங்கள் பாக்ஸ்ஆபிஸிலும் வசூலை வாரிக் குவிக்கின்றன. பாகுபலி வெற்றிக்கு பிறகு இந்த வகையான படங்கள் பக்கம் தயாரிப்பாளர்கள் பார்வை திரும்பி இருக்கிறது.

இந்நிலையில், சகுந்தலை புராண கதை சினிமா படமாக தயாராகிறது. படத்துக்கு சகுந்தலம் என்று பெயரிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை குணசேகர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான ருத்ரமா தேவி படத்தை இயக்கியவர்.

சகுந்தலம் படத்தில் சகுந்தலா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் அனுஷ்கா, பூஜா ஹெக்டே ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். அவர்கள் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இறுதியில் சகுந்தலையாக நடிக்க சமந்தாவை தேர்வு செய்து இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். இப்படத்திற்கு மணிசர்மா இசையமைக்க உள்ளார்.

சிம்பு பட இயக்குனருக்கு கொரோனா…. படப்பிடிப்பு ரத்து!

படப்பிடிப்பு ரத்து…

சிம்பு பட இயக்குனர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து படப்பிடிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

பிரபல தெலுங்கு இயக்குனர் கிரிஷ். இவர் தமிழில் சிம்பு, அனுஷ்கா நடிப்பில் வெளியான வானம் படத்தை இயக்கி உள்ளார்.

தெலுங்கில் அனுஷ்கா நடித்து வேதம் என்ற பெயரில் இவரது இயக்கத்திலேயே வெளியான படத்தின் தமிழ் ரீமேக்காக வானம் வந்தது.

பாலகிருஷ்ணா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான கவுதமி புத்ரா சதகர்னி என்ற சரித்திர படத்தையும் இயக்கி உள்ளார்.

மேலும் தெலுங்கில் ராணா, நயன்தாரா நடித்த கிரிஷ்ணம் வந்தே ஜகத்குரம், மறைந்த தெலுங்கு நடிகர் என்.டி.ராமராவ் வாழ்க்கை கதையான என்.டி.ஆர் கதாநாயகுடு, இந்தியில் கங்கனா ரணாவத் நடித்த மணிகர்னிகா உள்ளிட்ட படங்களையும் இயக்கி உள்ளார். அடுத்து பவன் கல்யாண் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

இதன் படப்பிடிப்பை இன்று தொடங்க தயாராகி வந்தார். முன்னதாக படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் இயக்குனர் கிரிஷுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. கிரிஷ் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கீர்த்தி சுரேஷின் ரூ.100 கோடி பட்ஜெட் படம்…. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கீர்த்தி சுரேஷ்….

மோகன்லால், கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்காயர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்காயர் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார்.

அவரது வாழ்க்கையை மையமாக வைத்து ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்ற படம் தயாராகி உள்ளது.

ரூ.100 கோடி செலவில் தயாராகியுள்ள இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். இதில் குஞ்சலி மரைக்காயர் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார்.

நடிகைகள் கீர்த்தி சுரேஷும், மஞ்சு வாரியரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் அர்ஜுன், சுனில் ஷெட்டி, அசோக் செல்வன்

ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் தயாராகி உள்ளது.

இப்படத்தை கடந்தாண்டு மார்ச் மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். இருப்பினும் கொரோனா லாக்டவுன் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

இந்நிலையில், இப்படத்தை வருகிற மார்ச் 26-ந் தேதி தியேட்டர்களில் வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நிறுத்தப்படுகிறது விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பாண்டியன் ஸ்டோர்ஸ்…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியலில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இதில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சித்ரா சமீபத்தில் தூ.க்..கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார்.

இதனால் இவருடைய கதாபாத்திரத்தில் மாற்றம் ஏற்பட்டு, தற்போது நடிகை காவ்யா இவரின் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வரும் பொங்கல் தினம் அன்று முடிவடைகிறது என்று தகவல்கள் கூறப்படுகிறது.

ஆம் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், ஒரே குடும்பமாக அனைவரும் இணைந்து விட்டதனால், சீரியல் முடிவடைகிறது என்று தெரிவிக்கின்றனர்.

ஆனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவடவில்லை, நிறுத்தப்படவில்லை என்றும் தகவல்கள் கிடைத்துள்ளது.

இதனால் ரசிகர்கள் யாரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவு வருகிறது என்று அதிர்ச்சியடைய தேவையில்லை என்று தெரிவிக்கிப்படுகிறது.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஆஜீத்.. மிஸ் யூ சொல்லி சப்ரைஸ் கொடுத்த பிக் பாஸ்!

பிக்பாஸ்..

பிக் பாஸ் விளையாட்டில் ஒவ்வொரு வாரமும், மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகள் பெரும் நபர் வீட்டை விட்டு வெளியேறுவார்.

இந்த வாரத்தின் இறுதியில் ஷிவானி அல்லது அஜீத் என இருவரில் ஒருவர் தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகிறார் என்று தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் அஜீத் தான் குறைந்த வாக்குகள் பெற்று, பிக் பாஸ் வீட்டை விட்டு நேற்று வெளியேறியுள்ளார்.

இதில் அஜீத் வீட்டை விட்டு வெளியேறும்போது, பிக் பாஸ் அவருக்கு மிஸ் யூ ஆஜீத் என கூறி வழியேனுப்பி வைத்துள்ளார்.

எப்படி இருந்த மாதவன் இப்படி மாறிட்டார் பாருங்க! பல வருடங்கள் கழித்து! புகைப்படம் இதோ!

மாதவன்…

நடிகர் மாதவனை மேடி எனவே பலரும் செல்லமாக அழைப்பதுண்டு. சாக்லேட் பையன், லவ்வர் பாயாகவே ஒரு காலத்தில் சினிமாவில் சுற்றி வந்தார். அலைபாயுதே, ரன் என அவரின் படங்கள் நீண்டு கொண்டே செல்வதுண்டு.

விக்ரம் வேதா படம் அவரின் படங்களில் திருப்புமுனையாக அமைந்தது. அவரின் கேரக்டர் மிகவும் பேசப்பட்டது. ஹிந்தி சினிமாவில் செட்டிலாகிவிட்ட அவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்ப் நாராயணின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து இயக்கி வந்தார்.

அண்மையில் அவரின் நடிப்பில் சைலென்ஸ் படம் ஓடிடியில் வெளியாகி வெற்றி பெற்றது. அடுத்ததாக மாறா படம் ஜனவரி 8 ல் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் 2021 ல் அவர் டும் டும் டும் படத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் 2021 ல் மாறா படத்தின் லுக்கையுடம் ஒப்பிட்டு 20 இயர்ஸ் சேலஞ்ச் என பகிர்ந்து வருகின்றனர்.

தல அஜித்துடன் வலிமை படத்தில் நடிக்கின்றாரா குக் வித் கோமாளி புகழ், இணையத்தில் வேகமாக பரவும் தகவல்..!

புகழ்…

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர், இவருக்கு தமிழகம் முழுவதிலும் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வகையில் சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய வசூல் செய்து சாதனை படைத்தது.

மேலும் தற்போது இவர் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் தல அஜித் வலிமை திரைப்படத்தில் இருந்து ஒரு குடும்ப புகைப்படம் வெளியாகி இணையத்தில் தீயாய் பரவியது.

இந்நிலையில் தற்போது தல அஜித்தின் வலிமை படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பெரிய அளவில் பிரபலமான புகழ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இது இணையத்தில் பரவி வரும் தகவல், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.