பாரதி கண்ணம்மா கதாநாயகி ரோஷினிக்கு என்ன நடந்தது.. இது தான் உண்மை தகவல்..!

ரோஷினி…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்கள் மத்தியில் பிரபலமான ஒன்று பாரதி கண்ணம்மா.

இதில் கதாநாயகியாக நடித்து வருபவரின் பெயர் ரோஷினி. இவர் இந்த சீரியலின் மூலமாக தமிழ் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார்.

தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் இரு குழந்தைகளுக்கு தாயாக நடித்து வரும் நடிகை ரோஷினி,

கதாபாத்திரத்துடன் ஒன்றிணைந்து போனதனால், மனநிலை மாறி, நிஜ வாழ்க்கையிலும் என் குழந்தை எங்கே,

என் குழந்தையை பார்க்க வேண்டும் என்று கூறி வருவதாக சில தகவல்கள் இணையத்தில் பரவியது.

ஆனால் அவரை விசாரித்தபோது, இதனை முற்றிலும் மறுத்துள்ளார்.

மேலும் அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அச்சச்சோ…அங்கேயா! வேணாம் வேணாம்…இந்தியாவிலேயே இருக்கட்டும்: வலிமை ஆக்‌ஷன் காட்சி!

வலிமை…

வலிமை படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சுவிட்சர்லாந்து நாட்டில் நடக்க இருந்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அது ரத்து செய்யப்பட்டுள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. இந்தப் படத்தையும் ஹெச் வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார்.

வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து ஹூமா குரேஸி, கார்த்திகேய கும்மகோண்டா, பவல் நவகீதன், யோகி பாபு, புகழ் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். கொரோனா லாக்டவுன் காரணமாக வலிமை படத்தின் படப்பிடிப்பை அஜித் நிறுத்தியிருந்தார்.

தற்போது மீண்டும் வலிமை படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. போலீஸ் கதையை மையப்படுத்திய வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இதையடுத்து, வலிமை படத்தின் ஆக்‌ஷன் காட்சிக்காக படக்குழுவினர் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், உருமாறி வரும் கொரோனா காரணமாக சுவிட்சர்லாந்து நாட்டு படப்பிடிப்பை படக்குழுவினர் ரத்து செய்துள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டில் நடக்க இருந்த படப்பிடிப்பை டெல்லி அல்லது ராஜஸ்தானில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வரும் பிப்ரவரி மாதத்தில் படப்பிடிப்பை முடித்து, அஜித்தின் 50ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தல அஜித் தனது வலிமை படக்குழுவினருடன் இணைந்து ஆங்கில புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற நடிகர், நடிகைகளின் படம் குறித்து தொடர்ந்து அப்டேட் வந்த வண்ணம் இருக்கும் நிலையில்,

வலிமை படத்தின் அப்டேட் கேட்டு தல ரசிகர்கள் தொடர்ந்து டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது கூட, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வலிமை அப்டேட் கேட்டுள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட போஸ்டர் – ஆனா இது வேற மாஸ்டர் படம்!

சாண்டி…

கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட எனும் நடன நிகழ்ச்சியின் மூலம் பெரிதும் புகழடைந்தவர் சாண்டி. சாண்டி மாஸ்டர் என அழைக்கப்படும் இவர், போட்டியாளராக இருந்து நடன இயக்குனராக் உயர்ந்தவர்.

மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலா மாஸ்டரின் செல்லமாக இருந்தவர். பிக் பாஸ் 3வது சீசனில் போட்டியாளராக இருந்தவர் கவின், தர்ஷன், லாஸ்லியாவுடன் சேர்ந்து we are the boys என ரகளை செய்துகொண்டிருந்தார்.

மிகவும் ஜாலியாக விளையாடிக்கொண்டிருந்ததால் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். வாலு, காதலும் கடந்து போகும், கெத்து, காலா, சண்டக்கோழி 2 போன்ற படங்களுக்கு நடன இயக்குனராக இருந்துள்ளார்.

வெளியே வந்த பிறகும் எல்லோருடனும் நட்பில் உள்ள சாண்டி, 3.33 என்ற படத்தில் நடித்து வருகிறார். ஹீரோவாக அறிமுகமாக இருக்கும் இந்த படம் நேரம் அடிப்படையிலான ஒரு திகில் திரைப்படமாக உருவாகிறது.

இந்த படத்தின் போஸ்டரை கைதி, ,மாஸ்டர் திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

திரை பிரபலங்கள் பலரும் சாண்டி மாஸ்டருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகை சி த்ரா த.ற்.கொ.லை.யு.ம் செ.ய்.யவில்லை, கொ.லை.யு.ம் செ.ய்.ய.ப்படவில்லை.. வெ ளிவந்த தி டு க்கிடும் தகவல்..!

சித்ரா…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் புகழ் பெற்றவர் நடிகை சித்ரா. இவர் கடந்த 9-ஆம் தேதி 2.30 மணிக்கு சொகுசு ஹோட்டல் ஒன்றில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டா.ர்.

இந்த நிலையில் அவரது ம.ர.ண.ம் கொ.லை என சித்ராவின் தாய் தெ ரிவித்திருந்தார். ஆனால் அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் சித்ரா த.ற்.கொ.லை.தான் செ.ய்.து கொ.ண்.டார் என்று உ றுதியாக கூ றப்பட்டு இருந்தது.

அதனால் இருவருக்கும் திருமணம் ஆகி ஒரு மாதமே ஆவதால் ஆர்டிஓ வி சா ர ணைக்கு உ த் தரவிடப்பட்டது. இந்த வி.சா.ர.ணையில் சித்ராவுடன் நடித்த நடிகர், நடிகைகள், நண்பர்களிடம் வி.சா.ர.ணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் இவரது இறப்பு குறித்து ஒரு பெண் ஜோதிடர் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

பெண் ஜோதிடர் ஜெயஸ்ரீ பாலன் கூறியுள்ளது :

” சித்ரா மே மாதம் 2-ஆம் தேதி 1992-ஆம் ஆண்டு மாலை 5.15 மணிக்கு பிறந்துள்ளார். அவர் இயல்பிலேயே திறமையையும், துணிச்சளையும் கொ.ண்.டு இருப்பவர். இவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த வீட்டை ஹேமந்த் அ.ப.கரிக்க தி.ட்.டமிடுவதாக சித்ராவின் தாய் கு.ற்.ற.ம்சா.ட்.டியிருந்தார்.”

” சி த்ராவின் ம.ர.ண.ம் த.ற்.கொ.லை.யும் அ ல்ல கொ.லை.யு.ம் அ ல்ல. இந்த வீடு தொடர்பாக கணவரை எப்படியாவது ப ய மு றுத்த வேண்டும் என சித்ரா நினைத்தே தூ.க்.கி.ல் தொ.ங்.கு.வ.து போல் மு.டி.வு செ.ய்.தி.ருக்கிறார். ஆனால் விளையாட்டு வி.ப.ரீ.த.மாக மு.டி.ந்துவி.ட்டது. “

” நடிகை சித்ரா விளையாட்டாக, அவரது கணவரை ப.ய.மு.று.த்த செ.ய்.த வி.ஷ.யம், அவரின் உ.யி.ரை ப.றி.த்.துவி.ட்.ட.து. அவரது ம.ர.ண.த்.திற்கு கணவர் ஹேமந்த் கா.ர.ணமாக இருக்க முடியாது ” என கூ.றியுள்ளார்.

வசந்த பாலனின் புதிய படம்…. ஹீரோவாக நடிக்கும் மாஸ்டர் பட நடிகர்?

வசந்தபாலன்…

ஜெயில் படத்தை தொடர்ந்து வசந்தபாலன் இயக்க உள்ள புதிய படத்தில் மாஸ்டர் பட நடிகர் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

2002-ல் வெளியான ஆல்பம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வசந்த பாலன். இதையடுத்து இவர் இயக்கிய ‘வெயில்,’ ‘அங்காடித்தெரு’, ‘காவியத் தலைவன்’ போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

குறிப்பாக இவர் இயக்கிய வெயில் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. தற்போது வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஜெயில்’. ஜி.வி.பிரகாஷ், அபர்னதி நடித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில், வசந்தபாலன் தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி இவர் அடுத்ததாக பாலிவுட்டில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான தி லிஃப்ட் பாய் என்கிற படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் கைதி, அந்தகாரம், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து பிரபலமான அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாலிவுட்டில் அறிமுக படத்திலேயே விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு வேடமா?

விஜய் சேதுபதி..

மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்காக உருவாகும் ‘மும்பைகார்’ படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் இமேஜ் பார்க்காமல் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த திருநங்கை கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன. சீதக்காதியில் வயதானவராக வந்தார். விக்ரம் வேதா, ரஜினிகாந்தின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர் போன்ற படங்களில் வில்லன் வேடம் ஏற்றார்.

இந்நிலையில், அவர் பாலிவுட்டில் அறிமுகமாகும் படத்தில் காமெடியனாக நடிக்க உள்ளார். ‘மும்பைகார்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்க உள்ளார்.

இது தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற மாநகரம் படத்தின் இந்தி ரீமேக் ஆகும். மாநகரம் படத்தில் முனீஸ்காந்த் நடித்த காமெடி வேடத்தில் தான் இந்தியில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் வளர்ச்சி அடைய திறமை மட்டும் போதாது…. அதுவும் வேண்டும் – சமந்தா சொல்கிறார்!

சமந்தா…

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, சினிமாவில் வளர்ச்சி அடைய திறமை மட்டும் போதாது என தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தா ஓ.டி.டி. தளத்தில் புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதில் தனது சினிமா வாழ்க்கை குறித்து அவர் கூறியதாவது: சினிமாவில் பிரபலமாக ஒரு பூசணிக்காய் அளவுக்கு திறமை இருந்தாலும் போதாது.

கடுகளவு அதிர்ஷ்டமும் வேண்டும் என்று சொல்வார்கள். எனக்கு இரண்டுமே பூசணிக்காய் அளவுக்கு இருந்தது. சினிமா துறையில் அடியெடுத்து வைத்த கொஞ்ச நாட்களிலேயே அற்புதமான கதைகள், கதாபாத்திரங்கள் கிடைத்தன.

என்னை விட திறமையானவர்கள், அழகானவர்கள் நிறைய பேர் இருந்தாலும் வாய்ப்புகள் என்னை தேடி வந்தன. அதற்கு காரணம் அதிர்ஷ்டம்.

திருமணத்துக்கு பிறகும் நல்ல படங்களில் நடித்து கொண்டு இருப்பதற்கு காரணம் நிச்சயம் அதிர்ஷ்டம்தான். அதிர்ஷ்டத்தை அதிகம் நம்புகிறேன்.

கதாநாயகிகள் திறமைக்கு திருமணம் ஒரு தடை இல்லை. திருமணத்துக்கு பிறகு வாய்ப்புகள் வராது என்று நம்பி அதற்கும் தயாராகி கொண்டுதான் திருமணம் செய்துகொண்டேன்.

ஆனால் அதிர்ஷ்டம் எனது பக்கம் இருப்பதால் திருமணத்துக்கு பிறகும் நல்ல படங்கள் எனக்கு அமைகின்றன. இவ்வாறு சமந்தா கூறினார்.

மீண்டும் சுசீந்திரன் உடன் கூட்டணி – உறுதி செய்த சிம்பு!

சிம்பு…

சிம்புவின் 46-வது படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கி உள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் ஒரே கட்டமாக நடத்தி 25 நாட்களில் முடிக்கப்பட்டது.

கிராமத்து பின்னணியில் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆகஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக ஈஸ்வரன் உருவாகி உள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய சிம்பு தான் அடுத்ததாக நடிக்கும் படங்கள் குறித்து தெரிவித்தார்.

ஈஸ்வரனுக்கு பின் மாநாடு, பத்து தல போன்ற படங்களில் நடிக்க உள்ள சிம்பு, அதன்பின் மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்தார்.

அப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்பதையும் அவர் கூறினார்.

இதுதவிர மேலும் மூன்று படங்களில் நடிக்க உள்ளதாக தெரிவித்த சிம்பு, அதை இயக்கப்போவது யார் யார் என்ற தகவலை வெளியிடவில்லை.

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’… முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

டாக்டர்…

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’ படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

சிவகார்த்திகேயனின் புதிய படம் ‘டாக்டர்’. ‘கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கிய நெல்சன் இப்படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, வில்லனாக வினய் நடித்துள்ளார்.

அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக தடைபட்டிருந்த இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மீண்டும் தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இப்படத்தின் இயக்குனர் நெல்சன் அடுத்ததாக விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேச ஒன்றுமில்லை.. இனிமேல் செயல்தான்… சிம்பு அதிரடி!

சிம்பு….

ஈஸ்வரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிம்பு, பேச ஒன்றுமில்லை.. இனிமேல் செயல்தான்… என்று கூறியுள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் ஈஸ்வரன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சுசீந்திரன், சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இதில் சிம்பு பேசும்போது, இத்தனை நாள் நான் எப்படி இருந்தேன், எப்படி இப்படி மாறினேன், இந்தப் படம் எப்படி உருவானது, எப்படி முடிந்தது என்று உண்மையிலேயே எனக்கும் தெரியவில்லை. அதான் உண்மை.

இறைவனுக்கு மட்டும் தான் தெரியும். எங்க பார்த்தாலும் நெகட்டிவ் ஆக இருக்கிறது. யாரைப் பார்த்தாலும் பொறாமை, போட்டி, குறை சொல்வது என்று இருக்கிறார்கள்.

அட்வைஸ் பண்றதை எல்லாரும் நிறுத்தவேண்டும். நம்மை சுற்றி இருப்பவர்களிடம் இருந்து அட்வைஸ் கேட்பதை நிறுத்திக்கொள்ளுங்கள். மனசு சுத்தமாய் இருந்தால் எல்லாம் நன்றாகவே நடக்கும்.

நான் வாழ்க்கையில் ஒரு சமயத்தில் கஷ்டப்பட்டேன் என்றால் மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டேன். அதனால் தான் உடல் எடை கூடியது. படப்பிடிப்புக்கு செல்ல முடியவில்லை.

இறைவன் எங்கேயும் இல்லை. உள்ளத்தில் தான் இருக்கிறார். உள்ளத்தை சரி செய்தேன். இப்போ எல்லாம் நன்றாகவே நடக்கிறது. எல்லோரிடமும் அன்பை செலுத்துங்கள். ரசிகர்களுக்கும் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்.

பேச ஒன்றுமில்லை இனிமேல் செயல்தான். அடுத்தடுத்து என்னுடைய நடிப்பில் பல படங்கள் வெளியாக இருக்கிறது. ஈஸ்வரன் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என்றார்.