அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது இந்த இளம் இயக்குனரா?

கார்த்திக் நரேன்………

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் உள்பட பலர் தற்போது இளம் இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து ஆரம்பித்துவிட்டனர் என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் கமல்ஹாசன், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கவிருப்பதும் ஒரு இளம் இயக்குனர் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

அஜீத் தற்போது இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் ’வலிமை’ படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க இருப்பவர் இயக்குனர் கார்த்திக் நரேன் என்று கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே ’துருவங்கள் 16’, ‘மாஃபியா’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பதும், தற்போது அவர் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தை இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனுஷ் படத்தை இயக்கிய முடித்துவிட்டு அவர் அஜித்தின் 61வது படத்தை இயக்குவார் என்றும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இளம் இயக்குனர்களின் இயக்கத்தில் அஜித், விஜய் போன்ற மாஸ் நடிகர்கள் நடிப்பது கோலிவுட் திரையுலகில் மிகப்பெரிய பாசிட்டிவ் ஆக பார்க்கப்படுகிறது.

‘ஆயிரத்தில் ஒருவன்’ இரண்டாம் பாகத்தில் ஒரு சர்ப்ரைஸ்: ஆர்வாமாக ரசிகர்கள்!!

கார்த்தி………

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடித்த சோழப்பேரரசின் கதை ’ஆயிரத்தில் ஒருவன்’ என்பதும் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

குறிப்பாக பார்த்திபன், ரீமாசென், ஆன்ட்ரியா ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார்கள் என்பதும், அனைவருடைய நடிப்பும் பாராட்டும் வகையில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் கிளைமாக்ஸே இரண்டாம் பாகத்தை தொடரும் வகையில் இருந்தது என்பது இந்த படம் பார்த்த அனைவரும் அறிந்த ஒன்று

இந்த நிலையில் ’ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வந்து கொண்டிருந்தன என்பதும் ரசிகர்களும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் எதிர்நோக்கி ஒருசில ஆண்டுகளாக காத்திருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன்னர் இயக்குனர் செல்வராகவன் ’ஆயிரத்தில் ஒருவன்’ இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். முதல் பாகத்தில் கார்த்தி முக்கிய வேடத்தில் நடித்த நிலையில் இரண்டாம் பாகத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக செல்வராகவன் அறிவித்துள்ளது மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஆகவுள்ளது. இந்த படம் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

தனுஷ் மற்றும் செல்வராகவன் மீண்டும் இணைவது எப்போது என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைய உள்ளனர் என்ற தகவல் இருதரப்பு ரசிகர்களின் உச்சகட்ட உற்சாகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மகளுக்காக சைக்கோ மனிதனை பழிவாங்கத் துடிக்கும் தந்தை – தி கிரேட் ஃபாதர் விமர்சனம்!

தி கிரேட் ஃபாதர்….

மம்முட்டி, ஆர்யா நடிப்பில் மலையாளத்தில் வெளியான தி கிரேட் ஃபாதர் திரைப்படம் தற்போது தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது.

நாயகன் மம்முட்டி பில்டராக இருக்கிறார். இவர் மனைவி சினேகா, மகள் அனிகா ஆகியோருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சைக்கோ மனிதன் ஒருவன் ஊரில் உள்ள சிறுமிகளை கற்பழித்து கொலை செய்து வருகிறான். இதை போலீஸ் அதிகாரியாக இருக்கும் ஆர்யா, விசாரித்து வருகிறார்.

இந்நிலையில், மம்முட்டியின் மகளான அனிகாவை சைக்கோ மனிதன் கற்பழித்து விடுகிறான். இதை அறிந்த மம்முட்டி சைக்கோ மனிதனை கண்டுபிடித்து கொலை செய்ய நினைக்கிறார். அதே சமயம் ஆர்யாவும் சைக்கோ மனிதனை தேடுகிறார்.

இறுதியில், சைக்கோ மனிதனை மம்முட்டி கண்டுபிடித்து கொலை செய்தாரா? ஆர்யா கைது செய்தாரா? சைக்கோ மனிதன் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் மம்முட்டி, முதல் பாதி பில்டராகவும், இரண்டாம் பாதி தாதாவாகவும் நடித்து அசத்தி இருக்கிறார். டாக்டராகவும் தாயாகவும் நடிப்பில் பளிச்சிடுகிறார் சினேகா. போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார் ஆர்யா. அனிகாவின் அலட்டல் இல்லாத நடிப்பு அருமை.

கிரைம் திரில்லர் பாணியில் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஹனீப் அடேனி. அடுத்து என்ன நடக்கும், யார் குற்றத்தை செய்திருப்பார்கள் என்று திரைக்கதையில் சுவாரஸ்யத்தை கொடுத்திருக்கிறார். ஸ்லோ மோசன் காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஸ்லோ மோசன் காட்சிகளை வைத்திருப்பது படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளது. மலையாளத்தில் வெளியான இப்படத்தை தமிழில் டப் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள். கோபி சுந்தர் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ரோபி வர்கீஸ் ராஜின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

மொத்தத்தில் தி கிரேட் ஃபாதர் விறுவிறுப்பு.

ஆரம்பமே காப்பியா… ஆயிரத்தில் ஒருவன் 2 போஸ்டரை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

ஆயிரத்தில் ஒருவன் 2..

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படத்தின் போஸ்டரை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதை செல்வராகவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

இந்த தகவல் பல ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் முன்னதாக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்திருந்த கார்த்தி மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகியோர் இந்த படத்தில் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் ஆயிரத்தில் ஒருவன் 2 போஸ்டர் ஒரு குறிப்பிட்ட நாவலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளதை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

பிரெஞ்சு ஓவியக் கலைஞர் மேத்யூ லாப்ரே என்ற ஆர்ட் புத்தகத்திலிருந்து அந்த போஸ்டர் காப்பியடிக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அஜித், தனுஷ், ஜோதிகாவுக்கு விருது- தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் முழு விவரம்!

தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருது…

அஜித், தனுஷ், ஜோதிகா ஆகியோர் 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.

அஜித், தனுஷ், ஜோதிகா ஆகியோர் 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகின் சிறந்த, திறமையான கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் வழங்கப்படுகின்றன. அவ்வகையில், 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில், தமிழ் சினிமா பிரிவில் சிறந்த படத்துக்கான விருது டூ லெட் படத்திற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான விருது தனுஷ்-க்கு வழங்கப்படுகிறது.

அசுரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தனுஷ் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதேபோல், பன்முகத்தன்மை வாய்ந்த நடிப்பாற்றலுக்காக அஜித் குமாருக்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது.

தமிழ் சினிமா விருதுகள்:
பன்முகத்தன்மை வாய்ந்த நடிகர் -அஜித்குமார்
சிறந்த நடிகர் – தனுஷ் (அசுரன்)
சிறந்த நடிகை – ஜோதிகா (ராட்சசி)
சிறந்த இயக்குனர் – ஆர்.பார்த்திபன் (ஒத்தசெருப்பு சைஸ் 7)
சிறந்த படம் – டூ லெட்
சிறந்த இசையமைப்பாளர் – அனிருத்
ஜோதிகா

மலையாளம்:
பன்முகத்தன்மை வாய்ந்த நடிகர் -மோகன்லால்
சிறந்த நடிகர் – சுராஜ் வெஞ்சரமூடு (ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்சன் 5.25)
சிறந்த நடிகை – பார்வதி திருவோத்து (உயரே)
சிறந்த இயக்குனர் – மது சி.நாராயணன் (கும்பளங்கி நைட்ஸ்)
சிறந்த படம் – உயரே
சிறந்த இசையமைப்பாளர் – தீபக் தேவ்

தெலுங்கு
பன்முகத்தன்மை வாய்ந்த நடிகர் -நாகார்ஜுனா
சிறந்த நடிகர் -நவீன் பாலிஷெட்டி (ஏஜென்ட் சாய் சீனிவாச ஆத்ரேயா)
சிறந்த நடிகை – ராஷ்மிகா மந்தனா (டயர் காம்ரேட்)
சிறந்த இயக்குனர் – சுஜீத் (சாஹோ)
சிறந்த படம் – ஜெர்சி
சிறந்த இசையமைப்பாளர் – எஸ்.தாமன்

கன்னடம்
பன்முகத்தன்மை வாய்ந்த நடிகர் – சிவராஜ்குமார்
சிறந்த நடிகர் – ராக்ஷித் ஷெட்டி (அவனே ஸ்ரீநாம்நாராயணா)
சிறந்த நடிகை – தான்யா ஹோப் (யஜமானா)
சிறந்த இயக்குனர் – ரமேஷ் இந்திரா (பிரிமியர் பத்மினி)
சிறந்த படம் – முகஜ்ஜியா கனசுகலு
சிறந்த இசையமைப்பாளர் – வி.ஹரிகிருஷ்ணா

புதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்!

டி.இமான்…

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் டி.இமான் தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் டி.இமான். இவர் தற்போது ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இசையில் தனித்தன்மையுடன் பெரும் வெற்றியை பெற்றிருக்கும் இமான் திரைப்பயணத்தில் தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கவுள்ளார்.

“DI Productions” எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ளார் டி.இமான். இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக “தேங்க் யூ ஜீஸஸ்” ( Thank You Jesus ) எனும் ஆன்மீக ஆல்பம் உருவாகிறது.

முழுக்க இயேசு கிறிஸ்துவை போற்றும்படி ஆங்கில மொழியில், ஆன்மீக அன்பர்கள் எழுதி, பாடும் இந்த ஆல்பத்தில் 8 பாடல்கள் அடங்கியுள்ளது.

அந்த நடிகைதான் எனக்கு வேணும்! இயக்குநர்களுடன் அடம் பிடிக்கும் நடிகர் ஜெயம் ரவி!

ஜெயம் ரவி..

குறுகிய காலகட்டத்தில் சினிமாவில் பெரிய இடத்தினை பிடிப்பது கடினம். அந்தவரிசையை பிடித்தவர் தான் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமாகி 25 படங்களில் நடித்து வந்து முன்னணி நடிகரானா.

இந்நிலையில் படங்களில் நடிகைகளை தேர்வு செய்வதில் ஜெயம் ரவி இந்த நடிகைதான் வேண்டும் என்று அடம்பிடித்து வருகிறார் என்று பரவலாக பேசப்பட்டடு வருகிறது.

இதுபற்றி ஜெயம் ரவியிடம் கேட்டபோது, ஹீரோயின்கள் விஷயத்தில் நான் தலையிடுவதில்லை என்றும், அது இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் முடிவு எடுப்பதுதான் எனவும் தெளிவாக கூறியுள்ளார். மேலும் கதையை தேர்வு செய்வது மட்டும்தான் என் வேலை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஜெயம்ரவி மீது வேண்டுமென்றே தேவையில்லாமல் ஹீரோயின் சம்பந்தப்பட்ட வதந்தியை கிளப்பியுள்ளது அவருக்கு மன சங்கடத்தை கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது. ஜெயம் நடித்து வரும் பொங்களுக்கு வெளியாக இருக்கும் பூமி படம் ஓடிடி தளமான ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது.

New year அதுவுமா தல ரசிகர்களுக்கு கிடைத்த TREAT ! ஆனா அது வலிமை UPDATE இல்ல !

அஜித்குமார்..

ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் தாதாசாகேப் பால்கே விருது நேற்று அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் தேசிய விருதுக்கு அடுத்து உயரிய விருதாக கருதப்படுகிறது. 2020 ஆம் ஆண்டிற்கான இந்த விருதின் தெற்கு மாநிலங்களுக்கான சிறந்த படங்கள், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் உட்பட விருதுகள் நேற்று வெளியிடப்பட்டது.

அதில் சிறந்த நடிகருக்கான விருதை அசுரன் படத்தில் நடித்ததற்காக தனுஷ் வென்றிருக்கிறார்.

சிறந்த நடிகைக்கான விருது ராட்சசி படத்தில் நடித்த ஜோதிகாவிற்கும், சிறந்த இயக்குனருக்கான விருது ஒத்த செருப்பு படத்தை இயக்கி நடித்த பார்த்திபனுக்கும், சிறந்த இசை அமைப்பாளருக்கான விருது அனிருத்திற்கும் கிடைத்துள்ளது.

சிறந்த படத்திற்கான விருதை டூலட் (Tolet) படம் தட்டிச் சென்றது. பல்துறை (Most versatile) நடிகருக்கான விருதை அஜித்குமார் வென்றிருக்கிறார்.

இதனால் சந்தோஷத்தில் இருக்கும் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் விருது பெற்று அனைவரையும் வாழ்த்தி வருகின்றனர்.

தனுஷ் நடிப்பில் உருவாகும் ஆயிரத்தில் ஒருவன் 2 – வெளியான பிரமாண்ட அறிவிப்பு !

ஆயிரத்தில் ஒருவன் 2…

கொரோனா காலகட்டத்தில் தியேட்டர்கள் 50 சதவீத இருக்கைகள் உடன் மட்டுமே திறக்கப்பட வேண்டும் என்ற விதிமுறையால் புது படத்தை வெளியிட யாரும் முன்வரவில்லை.

ஆனால் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்தை தமிழகத்தில் ஒரு சில தியேட்டர்களில் மட்டுமே வெளியிட்டார்கள்.

ஆனால் எதிர்பாராத அளவு எல்லாமே ஹவுஸ்ஃபுல் ஷோவாக ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே ரசிகர்களின் வரவேற்பால் ஷோவின் எண்ணிக்கையை திரையரங்கு உரிமையாளர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் கூட்டமும் தியேட்டர்களில் அலைமோதுகிறது.

இந்த சந்தோஷமான செய்தி இன்னொரு குஷியான செய்தியை கொண்டு வந்திருக்கிறது. ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் இயக்குமாறு ரசிகர்கள் அளவில்லா வேண்டுகோள் விடுத்ததை அடுத்து நான் இரண்டாம் பாகம் வெளிவரும் என ஒரு போஸ்டரை ட்விட்டரில் வெளியீட்டு தனுஷை டேக் செய்திருந்தார் செல்வராகவன்.

அதை ரீட்டுவிட் செய்துள்ள தனுஷ், “பிரம்மாண்டம். செல்வராகவனின் கனவு திரைப்படம் இதன் Pre production வேலைகள் முடிக்கவே ஒரு வருடம் ஆகும். எனவே காத்திருப்பு அதிகமாக இருக்கும் ஆனால் அந்த காத்திருப்பிற்கு அர்த்தம் சேர்க்கும் வகையில் இருக்கும், ஆயிரத்தில் ஒருவன் 2 (AO II) .

இளவரசன் 2024 ஆம் ஆண்டு மீண்டும் வருவான்” என ட்வீட் செய்துள்ளார். ஏற்கனவே ஆயிரத்தில் ஒருவன் படத்தின் முதல் பாகத்தை இன்று திரையரங்கில் பார்த்து வந்த இதனைப் பார்த்து ஏக குஷியில் இருக்கிறார்கள். இவ்வாறாக 2021 அமோகமாக ஆரம்பித்தது.

அனிகா வெளியிட்ட புகைப்படம் ! கலாய்க்கும் ரசிகர்கள்!!

அனிகா…

2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.

அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார்.

தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா.

தற்போது நடிகை அனிகா மேலாடையை கீழே விழும் அளவுக்கு அணிந்து கொண்டு மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் “ஐயயோ இன்னும் கொஞ்ச நேரத்துல, மொத்தமும் தெரிஞ்சிரும் போகலையே” என்று கலாய்க்கிறார்கள்.