நியூ இயர் 2021 ஸ்பெஷல்: அடுத்த படத்துக்கு பூஜை போட்ட விஷால்!

விஷால்…

விஷால் நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு நேற்று ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு பூஜை போடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில், முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷால். செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். ஆக்‌ஷன் கிங் அர்ஜூனின் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

செல்லமே படத்தைத் தொடர்ந்து, சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை உள்பட பல ஆக்‌ஷன் படங்களில் நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு விஷால் நடிப்பில் ஆக்‌ஷன் படம் வெளியானது.

இந்தப் படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பு பெறவில்லை. தற்போது துப்பறிவாளன் 2 மற்றும் சக்ரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். துப்பறிவாளன் 2 படத்தில் நடிப்பதோடு அந்தப் படத்தை இயக்கவும் செய்துள்ளார்.

இந்த நிலையில், இந்த படங்களைத் தொடர்ந்து விஷால் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, அறிமுக இயக்குநர் து.ப.சரவணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இந்தப் படத்திற்கான பூஜை ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று மிகவும் எளிமையான முறையில் நடந்துள்ளது. இதில், படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக யார் நடிக்கிறார் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஷ்ணுவா இது, நியூஇயரில் அவர் வெளியிட்ட புகைப்படம் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்- அப்படி என்ன போட்டோ தெரியுமா?

விஷ்ணு…

சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் சிலர் எப்போதும் தன்னை பிட்டாக வைத்துக் கொள்ள நிறைய விஷயங்கள் செய்வார்கள்.

உடலை பிட்டாக வைக்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு ஒரு வழியை காட்டியவர் நடிகர் ஆர்யா.

சைக்கிளிங், உடற்பயிற்சி என தான் செய்து அதன் மூலம் ரசிகர்களையும் சில நல்ல விஷயங்களை செய்ய வைத்தார்.

இப்போது நடிகர் விஷ்ணு ஒரு புகைப்படத்தை நியூஇயர் ஸ்பெஷலாக வெளியிட்டார். அதில் அவர் 6 பேக் எல்லாம் வைத்து செம பிட்டாக மாறியுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விஷ்ணுவா இது என வியந்து பார்க்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Vishnu Vishal (@thevishnuvishal)

நிஜ ஜோடியாக மாறும் சீரியல் ஜோடி: ரசிகர்கள் வாழ்த்து!

ரேஷ்மா-மதன்விஜய்…

சீரியல்களில் ஜோடியாக நடித்து அதன்பின் நிஜ ஜோடியாகும் நிகழ்வுகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

சமீபத்தில்கூட ’ராஜா ராணி’ தொடரில் நடித்த கார்த்திக் மற்றும் ஆலியா மானசா ஆகியோர் காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பது தெரிந்தது.

அந்த வகையில் தற்போது மேலும் ஒரு சீரியல் ஜோடி, நிஜ ஜோடியாக மாற உள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்களின் பேராதரவைப் பெற்று ஒளிபரப்பாகி வரும் தொடர் ’பூவே பூச்சூடவா’.

இந்த தொடரின் நாயகியாக நடித்து வரும் ரேஷ்மாவுக்கு இதே தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் மதன்விஜய்க்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதனை இருவருமே புத்தாண்டு பிறந்த நேரத்தில் தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர் என்பதும் விரைவில் திருமணம் என்றும் குறிப்பிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து ரேஷ்மா மற்றும் மதன்விஜய்க்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மன்னிப்பு விவகாரம்: இந்த வாரம் பாலாவுக்கு ஒரு குறும்படம் இருக்கு!

பிக்பாஸ்…

பிக்பாஸ் வீட்டில் நேற்று ஆரி மற்றும் பாலாஜி இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது என்பதும் இந்த வாக்குவாதத்தின் போது பாலாஜியை ஆரி சோம்பேறி என்று ஒரு வார்த்தை கூறி விட்டார் என்பதும் நிகழ்ச்சி பார்த்த அனைவருக்கும் தெரிந்ததே

தன்னை சோம்பேறி என்று கூறியதை அடுத்து பாலா பொங்கி எழுந்தார். என்னை எப்படி நீங்கள் சோம்பேறி என்று கூறலாம்? இந்த வீட்டில் நான் உழைப்பை கொட்டி உள்ளேன்.

இந்த வீட்டில் யாரும் சோம்பேறி இல்லை, அனைவருமே உழைப்பே சிந்தி உள்ளார்கள். உடனடியாக நீங்கள் சோம்பேறி என்ற வார்த்தையை வாபஸ் பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார்

அதன் பின் ஆரி தனது தவறை உணர்ந்து ‘சோம்பேறி என்ற வார்த்தையை நான் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்’ என்றும் ’அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் சில நிமிடங்கள் கழித்து மீண்டும் ஆரி மற்றும் பாலா இடையே மோதல் வெடித்தது.

அப்போதும் பாலா, சோம்பேறி குறித்து தன்னை கூறியதற்கு கண்டனம் தெரிவித்து ஆவேசமாக பேசினார். சோம்பேறி என்ற வார்த்தையை நீங்கள் கூறியதற்கு என்னிடம் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்’ என்று அவர் தெரிவித்தார்.

அப்போது ஆரி ’ஏற்கனவே நான் உன்னிடம் மன்னிப்பு கேட்டு விட்டேன்’ என்று கூறியபோது ’மன்னிப்பு எல்லாம் கேட்கவில்லை, வாபஸ் வாங்குவதாக மட்டும்தான் கூறினீர்கள், நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று கூறினார்.

இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு பதிலாக அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் குறும்படம் போட்டு வரும் நெட்டிசன்கள், பாலாவிடம் ஆரி மன்னிப்பு கேட்ட வீடியோவையும் குறும்படமாக வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். இந்த குறும்படத்தை இன்று அல்லது நாளை கமல்ஹாசனும் பாலாஜிக்கு போட்டுக் காண்பிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

இரண்டே வார்த்தை: விஜய்யின் டுவிட்டுக்கு ஆயிரக்கணக்கில் குவியும் லைக்ஸ்கள்!

தளபதி விஜய்…

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன

சிம்புவின் ’ஈஸ்வரன்’ திரைப்படமும் பொங்கல் தினத்தில் வெளியானாலும், தமிழகத்தில் பெரும்பாலான திரையரங்குகளில் ’மாஸ்டர்’ தான் வெளியாக உள்ளது

என்பதும் சுமார் 700 முதல் 800 திரையரங்குகளில் ’மாஸ்டர்’ வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளத்திலும் இந்த படம் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் நேற்று தளபதி விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் இரண்டு வார்த்தைகளில் ’மாஸ்டர்’ படம் குறித்த டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

#MasterFilm @TwitterIndia ஆகிய இரண்டு வார்த்தைகள் மட்டுமே விஜய்யால் பதிவு செய்யப்பட்ட இந்த ட்விட்டிற்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள், கமெண்ட்ஸ்கள், ரீடுவிட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரசாந்தின் ‘அந்தாதூன்’ ரீமேக் பட டைட்டில் அறிவிப்பு!

பிரசாந்த்…

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ’அந்தாதூன்’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த் நடிக்க உள்ளார் என்றும் இந்த படத்தின் முக்கிய வேடத்தில் சிம்ரன் மற்றும் கார்த்திக் ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் ஏற்கனவே வெளிவந்த செய்திகளை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் ’அந்தகன்’ என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு டைட்டில் போஸ்டரும் வெளியாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகவுள்ள இந்த படத்தை ஜேஜே பெடரிக் இயக்க உள்ளார்.

இவர் ஏற்கனவே ஜோதிகா நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஓடிடியில் வெளியான ’பொன்மகள் வந்தாள்’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும், இந்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும் என டைட்டில் போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் சூப்பர்ஹிட்டான இந்த படம் கோலிவுட்டிலும் ஹிட்டாகுமா? இதன்மூலம் பிரசாந்துக்கு ஒரு திருப்புமுனை தமிழ் திரையுலகில் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த வாரம் வெளியேறுவது இவரா? ஆரி ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

பிக்பாஸ் சீசன் 4…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் தற்போது வீட்டில் எட்டு போட்டியாளர்கள் உள்ளனர். இன்னும் இறுதிப் போட்டிக்கு இரண்டு வாரங்கள் மட்டுமே இருப்பதால் அதற்குள் நான்கு போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் இந்த வாரமும் அடுத்த வாரமும் டபுள் எவிக்சன் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்த வாரம் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்றவர் ஆஜித் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. எனவே இந்த வாரம் ஆஜித் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

ஆரியை கடுமையாக விமர்சனம் செய்பவர்கள், அவரிடம் சண்டை போட்டவர்கள் ஆரி ஆதரவாளர்களால் வெளியேற்றப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் இந்த வாரம் ஆரியை விமர்சனம் செய்த ரம்யாவை வெளியேற்ற ஆரி ரசிகர்கள் தீவிர முயற்சி செய்தனர்.

இதனை ரம்யாவின் சகோதரரும் மறைமுகமாக ரம்யாவிடம் தெரிவித்தார். ஆனால் இந்த வாரம் ரம்யா தப்பியது ஆரி ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருக்கலாம். ஒருவேளை டபுள் எவிக்சன் இருந்தால் அதில் ரம்யா சிக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்!

நர்சிங் யாதவ்…

ரஜினியுடன் பாட்ஷா படத்திலும் விஜயுடன் குருவி படத்திலும் நடித்த நடிகர் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர், நர்சிங் யாதவ். தமிழ், தெலுங்கு, இந்தி என சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ராம்கோபால் வர்மாவின் அனைத்து படங்களிலும் பார்க்கலாம்.

தமிழில், ரஜினியின் சூப்பர் ஹிட் படமான பாட்ஷா, ஹரி இயக்கத்தில் விஷால், ஸ்ருதிஹாசன் நடித்த பூஜை, சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ராஜபாட்டை,

சக்தி, ரம்யா நம்பீசன் நடித்த ஆட்டநாயகன், பிரபு சாலமன் இயக்கத்தில் சார்மி நடித்த லாடம், விஜய், த்ரிஷா நடித்த குருவி உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த நர்சிங் யாதவ், அதற்கான சிகிச்சையை பெற்று வந்தார்.

இந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நர்சிங்கின் மரணத்திற்கு ரசிகர்களும், திரையுலகினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

‘திரிஷ்யம் 2’ நேரடியாக ஓடிடி-யில் வெளியாகின்றதா? – மோகன்லால் அறிவிப்பு!

திரிஷ்யம் 2….

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் திரிஷ்யம். பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை கொலை செய்த மகளை காப்பாற்ற போராடும் தந்தை பற்றிய கதை. ரூ.5 கோடி செலவில் உருவான இந்த படம் ரூ.75 கோடி வசூல் குவித்தது.

இதன் வெற்றி இந்தியா முழுவதும் அனைத்து மொழி திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்தது. திரிஷ்யம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் கமல்ஹாசன், கவுதமி ஆகியோர் நடித்தனர். இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் சீன மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

தற்போது 7 வருடங்களுக்கு பிறகு திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தை ஜீத்து ஜோசப் இயக்கி உள்ளார். இதிலும் மோகன்லாலே ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மீனா நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டீசரை வெளியிட்ட மோகன்லால்.

இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளார். அதன்படி இப்படத்தை விரைவில் அமேசான் பிரைமில் வெளியிட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னணி நடிகர் ஒருவரின் படம் ஓடிடி-யில் வெளியாக உள்ளது மலையாள திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

துருவ் விக்ரம் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

துருவ் விக்ரம்….

வர்மா படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் நடிக்க இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வருபவர் துருவ் விக்ரம்.

வர்மா படத்திற்கு பிறகு யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்று அடிக்கடி செய்திகள் வெளியாகி வந்தது.

சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது.

இதற்கு இருவருமே மறுப்பு தெரிவிக்காமல் இருந்ததால், இந்தக் கூட்டணி இணைவது உறுதிப்படுத்தப்பட்டது.