‘மாஸ்டர்’ படத்திற்கு புரமோஷன் செய்த தனுஷ்!

தனுஷ்…

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் விருந்தாக உலகமெங்கும் பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதியை சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் தற்போது புரமோஷன் பணிகளை தொடங்கி உள்ளது என்பதும் விரைவில் இந்த படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’மாஸ்டர்’ படத்தை புரமோஷன் செய்யும் வகையில் நடிகர் தனுஷ் தனது டுவிட்டரில் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாக உள்ளது சினிமா ரசிகர்களுக்கு ஒரு மிகச்சிறந்த செய்தியாகும்.

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்து தியேட்டர் கலாச்சாரத்தை மீண்டும் வளர்க்க ரசிகர்கள் உதவி செய்வார்கள் என்று நம்புகிறேன்.

தியேட்டர் அனுபவம் போல எதுவும் இல்லை என்பதையே அனைவரும் இந்த படத்தை பார்த்து உணர்ந்து கொள்வார்கள். தயவுசெய்து அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து திரையரங்குகளில் ’மாஸ்டர்’ படத்தை பாருங்கள் என்று தனுஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனுஷின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது.

சிம்புவின் அடுத்த படத்தில் இணைந்த ‘இந்தியன் 2’ நாயகி!

சிம்பு…

சிம்புவின் அடுத்த படத்தின் டைட்டில் ’பத்து தல’ என்றும் இந்தப் படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ’முஃப்தி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்றும், இந்தப் படத்தை கிருஷ்ணா என்பவர் இயக்க உள்ளார் என்றும் வெளியான செய்திகளை ஏற்கனவே பார்த்தோம். மேலும் இந்த படத்தில் சிம்புவுடன், கௌதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ உள்பட ஒருசில படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் பிரியாபவானிசங்கர் இணைய உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடிக்க இருப்பதாக இயக்குனர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் தாசில்தார் கேரக்டருக்கு ஒரு தமிழ் பெண்ணை தேடிக் கொண்டிருந்தேன் என்றும், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள தாசில்தார் கேரக்டருக்கு பிரியா பவானி சங்கர் பொருந்துவார் என்று முடிவு செய்தேன் என்றும்,

அவருடைய முந்தைய படங்களை பார்த்தபோது அவருடைய இயற்கையான நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது என்றும், எனவே அவரை இந்த கேரக்டருக்கு தேர்வு செய்தேன் என்றும் இயக்குனர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் தாசில்தார் கேரக்டர் மிகவும் போல்டான, தன்னிச்சையாக முடிவு எடுக்கும் ஒரு கேரக்டர் என்றும் இந்த கேரக்டர் பிரியாவுக்கு நல்ல புகழை பெற்று தரும் என்றும் அவர் மேலும் கூறினார்.

’பத்து தல’ படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து சிம்புவின் கேரக்டருக்கு ஜோடி இல்லை என்றாலும் தமிழ் ரீமேக்கில் அவருக்கு ஜோடி இருக்குமா? அப்படியே இருந்தால் அந்த கேரக்டரில் நடிப்பது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

உங்களால் தான் தகுதியில்லாதவர்கள் வீட்டில் இருக்கின்றார்கள்: ஆரி ரசிகர்களுக்கு அனிதா பதிலடி!

அனிதா…

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராகிய ஆரிக்கு சமூக வலைத்தளத்தில் மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பதும் ஆரியிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை போட்ட போட்டியாளர்களை அவர்கள் ஒவ்வொரு வாரமும் வெளியேறி வருவதாகவும் கூறப்படுகிறது

குறிப்பாக தாய்மை குறித்து ஆரி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சண்டை போட்ட சம்யுக்தா, ஆரியுடன் நேருக்கு நேர் மோதிய அர்ச்சனா, ஆரியிடம் கோபமாக பேசிய அனிதா ஆகிய மூவரும் அடுத்தடுத்து வெளியேறியதே இதற்கு சான்றாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அனிதா குறித்து ஆரி ரசிகர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். அதில் ’ஆரி ரசிகர்கள் ஒன்றை நினைத்தால் அதை நிறைவேற்றி விடுவார்கள், உங்களை வெளியேற்றியதை போல’ என்று பதிவு செய்திருந்தார். இந்த பதிவிற்கு அனிதா பதிலடி கொடுத்துள்ளார்

ஆரியை எதிர்த்து பேசினால் வெளியே அனுப்புவோம் என்பது வாக்கு செலுத்துபவர்களுக்கு தான் அசிங்கம் என்றும் இது ஆரிக்கே பெருமை இல்லை என்றும், போட்டியில் நன்றாக விளையாடாதவர்களை தான் வெளியேற்ற வேண்டும் என்பதுதான் விதி என்றும் உங்களை போன்றவர்களால் தான் தகுதி இல்லாதவர்கள் இன்னும் வீட்டுக்குள் இருக்கின்றார்கள் என்றும் பதிலடி கொடுத்துள்ளார்

அதேபோல் உங்களுடைய கருத்தை கேட்கும்போது எனக்கு பரிதாபமாக இருக்கிறது என்றும், ஆரி ரசிகர்களின் ஓட்டு எனக்கு வந்ததாக சொல்வதில் எனக்கு பெருமை இல்லை என்றும், எனக்கே எனக்காக ஓட்டுகள் வந்தால் தான் எனக்கு பெருமை என்றும், ஆரி ரசிகர்களின் ஆதரவுடன் இறுதிப்போட்டிக்கு செல்வதைவிட அவரது குற்றங்களை சொல்லிக்காட்டி எனக்கு வாக்களித்தவர்களுக்கு உண்மையாக நடந்து கொள்வதைத்தான் பெருமையாக நான் நினைக்கிறேன் என்றும் அனிதா சம்பத் பதிலடி கொடுத்துள்ளார்

விஜய் சேதுபதி அறிமுகமாகும் பாலிவுட் படம்…. முதல் அப்டேட் வந்தாச்சு!

விஜய் சேதுபதி…

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, பாலிவுட்டில் அறிமுகமாகும் படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வருபவர் விஜய் சேதுபதி. இவர் கைவசம் கடைசி விவசாயி, மாஸ்டர், நவரசா, மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்கள் உள்ளன.

இவர் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் மாநகரம் படத்தின் இந்தி ரீமேக் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்க உள்ளார். இந்நிலையில், இப்படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி வருகிற ஜனவரி 1-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு இப்படத்தின் டைட்டில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராம் டைரக்சனில் நடிக்கும் நிவின்பாலி!

நிவின்பாலி…

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன், மம்முட்டியை வைத்து தான் இயக்கிய பேரன்பு படம் மூலம் ரசிகர்களை நெகிழ வைத்தார் இயக்குனர் ராம்,.

அதேசமயத்தில் அவரது இயக்கத்தில் வெளியான தரமணி படம் வேறுவிதமான களத்தில் இளைஞர்களை மிரள வைத்தது.

இந்தநிலையில் ராம் அடுத்ததாக இயக்கவுள்ள படத்தில், மலையாள முன்னணி நடிகர் நிவின்பாலி நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் ரிச்சி என்கிற படம் மூலம் நிவின்பாலி அறிமுகமானாலும் அந்தப்படம் அவருக்கு வெற்றியையும், தமிழில் வரவேற்பையும் பெற்றுத்தர தவறிவிட்டது.

ரிச்சி, மூத்தோன் ஆகிய படங்களில் நடித்தான் மூலம், வித்தியாசமான கலைப்படைப்புகளில் நடிக்க ஆர்வம் காட்டும் நிவின்பாலி, இயக்குனர் ராம் டைரக்சனில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்றால் அதில் ஆச்சர்யப்பட தேவையில்லை.

தயாரிப்பாளராக மாறுகிறார் சோனு சூட்!

சோனு சூட்….

இந்த கொரோனா காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட பலருக்கும், பலவிதமான உதவிகளை செய்ததில், பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட், மக்கள் மத்தியில் நிஜமான ஹீரோவாக மாறிவிட்டார்.

இதை தொடர்ந்து அவர் ஏற்கனவே வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டு நடித்து வரும் படங்களில் கூட அவரது இமேஜ் கெட்டுவிட கூடாது என, காட்சிகளில் மாற்றம் செய்து வருகிறார்கள். சிரஞ்சீவியுடன் சோனு சூட் நடித்துவரும் ஆச்சார்யா படத்தில் கூட அப்படி ஒரு மாற்றம் சமீபத்தில் நடந்தது..

இன்னொரு பக்கம் சோனு சூட்டை கதையின் நாயகனாகவும், கதையை தாங்கிப்பிடிக்கும் குணச்சித்திர நடிகராகவும் முன்வைத்து சில இயக்குனர்கள் கதைகளை உருவாக்கி வருகிறார்கள்.

இந்தநிலையில் இனி வில்லனாக நடிக்க மாட்டேன் என சோனு சூட்டும் அறிவித்துள்ளார். மேலும் தானும் ஒரு தயாரிப்பாளராக மாறி, படங்களை தயாரிக்கப்போவதாக தற்போது அறிவித்துள்ளார் சோனு சூட்.

இதுபற்றி அவர் கூறும்போது, “அடுத்தமுறை எனது படத்தில் நடிகர் -தயாரிப்பாளர் என்கிற அடைமொழியுடன் வருவேன் என நம்பலாம்.. மக்களை உற்சாகப்படுத்துகின்ற விதமான, எனக்கு நம்பிக்கை தரும் கதைகளை, நான் எதிர்பார்க்கிறேன்” என கூறியுள்ளார்.

பி ர பல நடிகர் ம களுக்கு தி ரும ணம் முடிந்தது..!! யாருன்னு பாத்தா நீங்களே ஷா க் ஆகிடுவிங்க..!!வெளியான அ ழகான தி ருமண புகைப்படங்கள்..!!

ரமேஷ் அரவிந்த்..

நடிகர் ரமேஷ் அரவிந்த் ஒரு இந்திய நடிகர், இயக்குனர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொ குப் பாளர், தி ரைக் கதை எழுத்தாளர், ஊக்கமளிக்கும் பேச்சாளர் மற்றும் எழு த்தா ளர் ஆவர். ரமேஷ் அரவிந்த் 34 ஆண்டுகளுக்கும் மேலாக பொ ழுது போக்கு து றையில் பணியாற்றி வருகிறார். மேலும் ஆறு மொழிகளில் ப டைப் புகளைக் கொண்டுள்ளார்.

140 க்கும் மேற்பட்ட திரை ப்பட ங்களில் நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் கன்னடத்தில் பணியாற்றியுள்ளார். மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி படங்களிலும் தோ ன்றி னார் என்பது குறிப்படத்தக்கது. சிவாஜி சூரத்கல், புஷ்பக விமனா, ராம ஷாமா பாமா, சத்தி லீலவதி, டூயட், அமெரிக்கா அமெரிக்கா, துட்டா முட்டா, நம்மூரா மந்தாரா ஹூவ், ஓ மல்லிகே, அப்தாமித்ரா, உல்டா பால்டா, ஹூமலே, முங்கராமி மாகுராசின் என்ற பல படகளியில் நடித்துள்ளார்.

அவர் தனது தொழில் வா ழ்க் கையில் பல விருதுகளைப் பெற்றார் மற்றும் பரி ந்துரை க்கப் பட்டார். இதில் சிறந்த நடிகருக்கான இரண்டு பிலிம்பேர் விருதுகளும், சிறந்த நடிகருக்கான கர்நாடக மாநில விருதுகளும், ஹூமாலில் அவரது தி ரைக் கதை க்காக சிறந்த கதையும், உதய டிவி மற்றும் சுவர்ணா டிவி விருதுகளும் அடங்கும்.

அவர் BHIVE பணியிடம், சைக்கிள் அகர்பாட்டிஸ், டர்போ ஸ்டீல் மற்றும் விட்வத் மொபைல் பயன்பாட்டின் பிராண்ட் தூதராகவும் உள்ளார். ஜீ கன்னடத்தில் நான்கு வெற்றிகரமான சீசன்களைக் கொண்ட வீக்கெண்ட் வித் ரமேஷ் நி கழ்ச் சியின் தொ குப்பா ளராக உள்ளார்.

மேலும் ஹூ வாண்ட்ஸ் டு பி மில்லியனரின் கன்னட பதிப்பான கன்னடட கோட்டியதிபதியின் சீசன் 3 ஐ தொ குத்து வழ ங்கி னார்.நடிகர் ரமேஷ் அரவிந்த் பெங்களூரு பல்கலைக்கழகத்தின் யு.வி.சி.இ.யில் பொறியியல் இள ங்கலை பட்டம் பெற்றவர்.

அரவிந்திற்கு நான்கு உ டன் பிறப் புகள் உள்ளனர். அவர் அர் ச்ச னாவை ம ணந் தார். அவர்களுக்கு ஒரு மகள் (நிஹாரிகா) மற்றும் மகன் (அர்ஜுன்) உள்ளனர். இவர் தமிழ் சினிமாவிற்கு மனதில் உறுதி வேண்டும் என்ற தி ரைப்ப டத்தின் மூ லம் அ றிமுக மானார்.

அதனை தொடர்ந்து இவர் தமிழில் ஏராளமான திரை ப்படங் களில் நடித்து வந்தார்.இவர் குறிப்பாக பஞ்சதந்திரம், சதிலீலாவதி, ஜோடி, ரிதம், டூயட் உள்ளிட்ட தி ரைப்ப டங்கள் ரசி கர்க ளிடையே மிகவும் பி ர ப லம். கடைசியாக இவர் கமல் நடிப்பில் வெளியான உத்தம வில்லன் தி ரைப் படத்தில், ஒரு சிறிய க தாபா த்திர த்தில் வந்து நடித்து போனார்.

இந்நிலையில் இன்று அவரின் மகள் நிஹாரிகாவுக்கு அக்ஷய் என்பவருடன் தி ரும ண மாகி உள்ளதாக புகைப்படத்துடன் அறி வித்து ள்ளார் நடிகர் ரமேஷ் அரவிந்த் அவர்கள். இதனை பார்த்த ரசிகர்கள் அவர்களை வாழ்த்தி உள்ளார்கள்..

விஜய்யின் மகன்! குட்டி விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படம்! தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம்!

சஞ்சீவ்…

சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் சினிமாத்துறையில் நடிக்க வருவது வழக்கமான ஒன்றே. அதிலும் ஒரு சிலரே தங்கள் கடினமான உழைப்பாலும், முயற்சியாலும் நிலைத்து நிற்கிறார்கள்.

அவரின் புகழ் இன்னும் தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இவ்வளவு ஏன் நடிகர் விஜய்யும் இந்த விசயத்தில் ஒரு நல்ல எடுத்துக்காட்டு எனலாம்.

குழந்தை நட்சத்திரமாக 6 படங்களில் நடித்து அப்பாவின் இயக்கத்திலேயே ஹீரோவாக சினிமாவில் அறிமுகமாகி கடும் விமர்சனங்களுக்கு இடையில் தொடர்ந்து போராடி தற்போது அவர் உச்சம் அடைந்துவிட்டார்.

இந்நிலையில் அவரின் மகன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. வெளிநாட்டில் படிக்கும் அவரின் மகன் சஞ்சீவ் குறும்படம் இயக்குவதிலும் ஆர்வம் காட்டி வருகிறாராம். தற்போது அவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

மனமுடைந்து போன குஷ்பூ! இதுக்குமுன்னால அது ஒன்னுமேயில்ல! உருக்கத்துடன் வெளியிட்ட பதிவு!

நடிகை குஷ்பூ…

நடிகை குஷ்பூ அ ர சியல், சினிமா என பிசியாக இருக்கிறார். சிவா இயக்கத்தில் சூப்பர்ட் ஸ்டார் ரஜினி, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் என பலர் நடிக்கும் நடிகை குஷ்பூவும் இணைந்துள்ளார்.

அண்மையில் கா ங் கி ரஸ் க ட் சியில் இ ருந்து வி ல கி பா ஜ க வில் இணைந்து குஷ்பூ பல விசயங்கள் குறித்து பேசினார். ரஜினியின் அ ர சி யலில் வருகை ஆர்வத்துடன் எதிர்பார்த்தவர்களில் அவரும் ஒருவர்.

ரஜினியின் அ ர சி யல் வருகை குறித்து அவர் அன்புள்ள ரஜினி சார், ஒரு வழியாக நீங்கள் அ ர சியலில் இ ற ங்குகிறீர்கள் என்பதை அறிந்ததில் மகிழ்ச்சி. உங்கள் புதிய பாத்திரத்துக்கு வாழ்த்துகள். உங்கள் முழு முயற்சியை இதில் காட்டுவீர்கள் என்று எனக்கு உறுதியாகத் தெரியும் என வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ரஜினி உடல் நிலை காரணத்தால் கட்சி தொடங்கவில்லை. அரசியலுக்கு வரமுடியவில்லை. என்னை மன்னியுங்கள் என கூறியுள்ளார்.

இதனால் பலரும் தங்களது கருத்தை தெரிவிக்கும் வேளையில் குஷ்பூ டிவிட்டரில் அன்புள்ள ரஜினிகாந்த் சார், உங்களுடைய முடிவு அனைத்து தமிழர்களின் இதயங்களையும் உடைத்துவிட்டது. ஆனால் உங்களுடைய ஆரோக்யம் மற்றும் உடல்நலத்திற்கு முன்பு வேறெதுவும் பெரிதல்ல என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

உங்களுடைய நலம்விரும்பியாக, ஒரு தோழியாக உங்களுடைய முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். நீங்கள் எனக்கு விலைமதிப்பற்ற, மிக முக்கியமான ஒருவர். நன்றாக மகிழ்ச்சியாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.

எல்லா பொருட்களையும் இளையராஜாவிடம் ஒப்படைத்த பிரசாத் ஸ்டூடியோ!

இளையராஜா…

சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் இருந்த இளையராஜாவிற்கு சொந்தமான அனைத்து பொருட்களும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன.

சென்னை வடபழனியில் உள்ள சாலிகிராமத்தின் பிரசாத் ஸ்டூடியோவில் தான் இளையராஜா கடந்த 35 ஆண்டுகளாக பாடல்கள் ஒலிப்பதிவு, பின்னணி இசை என்று அனைத்து பணிகளையும் செய்து வந்துள்ளார்.

பிரசாத் ஸ்டூடியோ, இளையராஜாவின் மற்றொரு வீடாகவும் இருந்துள்ளது. பாடல் ஒலிப்பதிவு கூடத்துடன் இளையராஜாவிற்கு என்று பிரத்யேகமாக 5 அறைகளும் இருந்துள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரசாத் ஸ்டூடியோவிற்கு வாடகை கொடுப்பது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இடத்தை காலி செய்ய வேண்டும் என்று பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து ஸ்டூடியோ நிர்வாகத்திடன் மீது இளையராஜா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, தனது அறையை மட்டும் பூட்டிய அவர் அதன் பிறகு அங்கு செல்லவில்லை.

இந்த நிலையில், நீதிமன்றம் நியமித்த ஆணையர்களின் முன்னிலையில் இளையராஜாவுக்கு சொந்தமான அனைத்து பொருட்களும் அவரது தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.