சின்னத்திரையில் பொதுவாக இந்தியில் ஒளிபரப்பான தொடர்கள் தான் மொழிமாற்றம் செய்யப்பட்டு அல்லது ரீமேக் செய்யப்பட்டு தமிழில் ஒளிபரப்பாகி வந்தது. முதன்முறையாக பாண்டியன் ஸ்டோர் தொடர் இந்தியில் ரீமேக் ஆகிறது.
2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விஜய் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கிய இந்தத் தொடர் இதுவரை 525 எபிசோடுகளை முடித்துள்ளது. தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற ஆனந்தம், வானத்தைப்போல திரைப்படத்தை தழுவி இந்த சீரியலின் கதை வசனத்தை பிரியா தம்பி எழுதியுள்ளார் சிவ சேகர் இயக்குகிறார் கிரண் இசை அமைக்கிறார் .
இதில் ஸ்டாலின், சுஜாதா வெங்கட்ராகவன், ஹேமா ராஜ்குமார் உள்பட பலர் நடிக்கிறார்கள் முல்லை கேரக்டரில் நடித்து வந்த சித்ரா த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டதை தொடர்ந்து அவருக்கு பதிலாக பாரதி கண்ணம்மா தொடரில் நடித்த காவியா நடிக்கிறார்.
முழுக்க முழுக்க கூட்டுக்குடும்பம் சகோதர பாசத்தை அடிப்படையாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் தொடர். பாண்டியன் ஸ்டோர் உருக உருக சென்டிமெண்ட் கலந்த கதை என்பதால் பெண்களால் அதிகம் விரும்பப்படும் தொடராகவும் இருக்கிறது.
இந்தியைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 தொடங்கி 80 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. கடந்த வாரத்தில் அனிதா வெளியேறினார்.
இவ்வாரம் யார் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம், இதற்கிடையில் ஷிவானியின் அம்மா, பாலாஜியின் நண்பர் என உள்ளே வருகிறார்கள். சுவாரசியமாக காட்சிகள் செல்கின்றன.
பிக்பாஸ் என்றால் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது தானே. ஹிந்தி பிக்பாஸ் பற்றி சொல்ல வேண்டாம். ஒரே ரகளை தான். நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்க பிக்பாஸ் சீசன் 14 தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் நடிகைகளான Jasmin Bhasin மற்றும் Rakhi Sawan இருவரும் அண்மையில் challenger ஆக உள்ளே நுழைந்தனர்.
சமையல் செய்யும் இடத்தில் கவர்ச்சி நடிகையான ராக்கி இந்த காஃபிய பத்தி யாராவது பேசினா விபத்தை சந்திப்பாங்க என கூற அருகில் Aly Goni என்ற போட்டியாளரும் இருக்கிறார்.
.அப்போது அவர் ராக்கி எப்படி இது போல சொல்லலாம் என கேட்கிறார். உடன் ராக்கி மற்றும் ஜாஸ்மின் ஆகியோர் வாக்குவாதம் செய்ய, ஜாஸ்மின் வாத்து மண்டையை எடுத்து ராக்கி தலையில் திணிக்க, ராக்கி என்னுடைய மூக்கு என அலறுகிறார்.
மேலும் மேஜையில் தன்னை தானே தலையில் முட்டி அழுகிறார். இந்த வீடியோ இதோ!
தெலுங்கு பட உலகின் இளைய தலைமுறையில் கொடிக்கட்டி பறந்து கொண்டிருப்பவர் ராம் சரண் தேஜா. நடிகர் சிரஞ்சீவியின் மகனான இவர் பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். 2007ஆம் ஆண்டு சிறுத்தா என்ற படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் 2009ல் ராஜமௌலியின் இயக்கத்தில் வெளிவந்த மகதீரா படம் பெரும் வெற்றி பெற்றது.
தெலுங்கு இண்டஸ்ட்ரி மட்டுமன்றி அந்த படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் ரீச் ஆனார். அதன்பின் நாயக், ஆரஞ்சு, எவடு பல படங்களில் நடித்துள்ள ராம்சரண் ரங்கஸ்தலம் படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தினார்.
பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். அடுத்து ராஜமௌலியின் இயக்கத்தில் RRR படத்தில் ஜூனியர் NTR, ஆலியா பட் ஆகியோருடன் இணைந்து நடிக்க உள்ளார். இதனிடையில் கொரோனா பரிசோதனை செய்திருந்த ராம்சரண், தனக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தனக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் தான் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், சீக்கிரம் அதிலிருந்து மீண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தன்னுடன் இருந்தவர்கள் அனைவரையும் பத்திரமாக இருக்க கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார். லண்டனிலிருந்து ஹைதராபாத் வந்தவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வந்த செய்திகளை தொடர்ந்து இந்த செய்தி டோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரையுலகினரும் அவரது ரசிகர்களும் விரைவில் குணமடைந்து திரும்ப வரவேண்டும் என ஆறுதல் கூறி வருகின்றனர்.
Request all that have been around me in the past couple of days to get tested.
More updates on my recovery soon. pic.twitter.com/lkZ86Z8lTF
பிக்பாஸ் வீட்டில் புதிதாக அறிமுகம் ஆனவர் சோம் என்கிற சோம்சேகர். இவர் சூரரை போற்று படத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்தார். பிக்பாஸ் வீட்டில் 80 நாட்கள் கடந்து வெற்றிகரமாக விளையாடி கொண்டிருக்கிறார். இவர் தனது வீட்டில் நாய்க்குட்டி வளர்க்கிறார். அதன் பெயர் குட்டு. 2017 ஆம் ஆண்டிலிருந்து குட்டுவை வளர்த்து வருகிறார்.
பிக்பாஸில் வரும் ஒரு டாஸ்கில், சோம் எந்திரனாக நடித்திருந்தார். அப்போது ஆரி, உன் செல்ல குட்டுவை வீட்டில் விட்டு வந்திருக்கிறாய், நீ திரும்ப வீட்டுக்கு போவதற்குள் அதற்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வாய் என கேட்டார்.
டாஸ்கில் எந்திரனாக இருக்கும் சோமை கோபப்படுத்தவும், வருத்தப்பட வைக்கவே அப்படி கேட்டார். இதை அர்ச்சனாவிடம் சொல்லி சோம் வருத்தமடைந்தார். ஆனால் தற்போது சோமின் செல்ல நாயான குட்டு உண்மையாகவே இறந்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த விசயம் சோமிற்கு தெரிந்தால் மிகவும் வருத்தமடைவார். ஏற்கனவே ஹவுஸ்மேட்ஸ் அனைவராலும் கார்னர் செய்யப்படும் ஆரியை, இந்த விசயம் தெரியவந்தால், இன்னும் ஓரங்கட்டப்படுவார் என தெரிகிறது.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து இன்று பிற்பகல் 12.30 மணிக்கு முக்கியமான அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
பிகில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். கைதி படத்தை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும், ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தனு, சஞ்சீவ், நாசர், பிரிகிதா, கௌரி கிஷான் என்று ஏராளமான நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார்.
சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழைத் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மாஸ்டர் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. மாஸ்டர் தமிழ் டைட்டிலை விட மாஸ்டர்: தி விஜய் என்று ஹிந்தியில் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அண்மையில், இந்தப் படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது.
ஏற்கனவே மாஸ்டர் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரயிருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், மாஸ்டர் ரிலீஸ் தேதி குறித்து முக்கியமான அறிவிப்பு இன்று பிற்பகல் 12.30 மணிக்கு வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாஸ்டர் படத்திற்கான டிக்கெட் விற்பனையும் தொடங்கிவிட்டதாக தகவல் வெளியானது. மேலும், இன்னும் பல திரையரங்குகளில் வரும் 7 ஆம் தேதி மாஸ்டர் டிக்கெட் விற்பனை தொடங்கயிருக்கிறது.
இதற்கிடையில், கொரோனா காரணமாக ஒரு இருக்கை விட்டு ஒரு இருக்கையில் மட்டுமே ரசிகர்கள் அமர்ந்து படம் பார்க்கின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் இன்று திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதியன்று மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் செய்யப்படும் என படக்குழுவினர் எங்களிடம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளதாக கூறினார்.
ஜனவரி 1 முதல் 100% பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என ஏற்கனவே முதல்வரிடம் மனு அளித்துள்ளோம். 100% பாவையாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என மீண்டும் ஒருமுறை முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறோம் என்று கூறியவர் , அனைத்து ஓ.டி.டி தளங்களும் விஜய்யிடம் போட்டி போட்டு மாஸ்டர் படத்தை கேட்டனர். ஆனால் விஜய் தீர்க்கமான முடிவு எடுத்து திரையரங்கில் வெளியீடு செய்கிறார். அவரை போலவே அனைத்து நடிகர்களும் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சுல்தான் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனாவால் தியேட்டர்கள் பல மாதங்களாக மூடப்பட்டு தற்போது மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. ஆனாலும் தியேட்டர்களில் கூட்டம் குறைவாக இருப்பதால் காலை, பகல் காட்சிகளை ரத்து செய்து வருகிறார்கள். சில தியேட்டர்களை மூடியும் வைத்துள்ளனர்.
சூர்யாவின் சூரரைப் போற்று, விஜய் சேதுபதி நடித்த க.பெ. ரணசிங்கம், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன், ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின், வரலட்சுமியின் டேனி உள்ளிட்ட படங்கள் தியேட்டருக்கு பதிலாக ஓ.டி.டி.யில் வந்தன.
ஜெயம் ரவி நடித்துள்ள பூமி படம் பொங்கலுக்கு ஓ.டி.டி.யில் வெளியாகிறது. பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சுல்தான் படத்தை பொங்கலுக்கு தியேட்டரில் வெளியிட திட்டமிட்டனர்.
ஆனால் மாஸ்டர், ஈஸ்வரன் படங்களுக்கு திரையரங்குகளை ஒதுக்கி விட்டதால் சுல்தான் படமும் ஓ.டி.டியில் வருகிறது என்று தகவல் பரவியது. இதனை படக்குழுவினர் மறுத்தனர். சுல்தான் படத்தின் ரிலீசை ஏப்ரல் மாதத்துக்கு தள்ளி வைக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடித்துள்ள ‘ஈஸ்வரன்’ படத்தின் முக்கிய அப்டேட்டை இசையமைப்பாளர் தமன் வெளியிட்டுள்ளார்.
சிம்புவின் 46-வது படத்தை சுசீந்திரன் இயக்கி உள்ளார். இப்படத்துக்கு ஈஸ்வரன் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்துக்காக சிம்பு தனது உடல் எடையை 30 கிலோ வரை குறைத்திருந்தார்.
கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டது. தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இப்படம் குறித்த முக்கிய அப்டேட்டை இசையமைப்பாளர் தமன் வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படத்தின் இசையமைப்பு பணி முடிவடைந்துவிட்டதாக கூறியுள்ள அவர்,
தன்மீது நம்பிக்கை வைத்து பக்கபலமாக இருந்த சிம்பு மற்றும் சுசீந்திரனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தான் பணியாற்றியதிலேயே வேகமாக முடிக்கப்பட்ட இரண்டாவது படம் இது என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன் பிசினஸ்மேன் என்கிற தெலுங்கு படத்தின் பணிகளை 2 மாதத்தில் முடித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜெயம்ரவி நடித்துள்ள பூமி படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஓடிடி தளத்தில் வெளிவருகிறது. அடுத்து அவர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறார்.
இன்னும் ஒரு சில நாட்களே ஜெயம்ரவியின் போர்ஷன் படமாக்கப்பட வேண்டியது இருக்கிறது. அதை முடித்து விட்டு அஹ்மத் இயக்கத்தில் உருவாகும் ஜன கண மன படத்தை முடித்து கொடுக்கிறார்.
இதுதவிர ஜெயம்ரவி, ஸ்கிரீன் சீன் நிறுவனத்துக்கு தொடர்ச்சியாக 3 படங்களில் நடித்துக் கொடுக்க ஒப்பந்தமாகி உள்ளார். படத்தின் கதை, இயக்குனர்கள், உடன் நடிப்பவர்கள் அத்தனை சாய்சும் ஜெயரம் ரவியுடையது தான்.
இதனால் கடந்த சில மாதங்களாக தீவிரமாக கதை கேட்டு வந்தார். கிட்டத்தட்ட 60 கதைகள் கேட்டதில் பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் சொன்ன கதைக்கு ஓகே சொல்லியுள்ளார்.
பூலோகம் படத்தில் ஜெயம் ரவியுடன் த்ரிஷா, ஹாலிவுட் நடிகர் நாதன் ஜோன்ஸ் நடித்தனர். வடசென்னையில் நடக்கும் குத்துச் சண்டையை மையமாக கொண்ட கதை.
இப்போது மீண்டும் கல்யாணும், ஜெயம் ரவியும் இணைகிறார்கள். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. இது பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ஆக்ஷன் படம்.