மகதீரா ராம்சரணுக்கு கொரோனா உறுதி – அதிர்ச்சியில் திரையுலகினர்!

ராம் சரண் தேஜா…

தெலுங்கு பட உலகின் இளைய தலைமுறையில் கொடிக்கட்டி பறந்து கொண்டிருப்பவர் ராம் சரண் தேஜா. நடிகர் சிரஞ்சீவியின் மகனான இவர் பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். 2007ஆம் ஆண்டு சிறுத்தா என்ற படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் 2009ல் ராஜமௌலியின் இயக்கத்தில் வெளிவந்த மகதீரா படம் பெரும் வெற்றி பெற்றது.

தெலுங்கு இண்டஸ்ட்ரி மட்டுமன்றி அந்த படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் ரீச் ஆனார். அதன்பின் நாயக், ஆரஞ்சு, எவடு பல படங்களில் நடித்துள்ள ராம்சரண் ரங்கஸ்தலம் படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தினார்.

பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். அடுத்து ராஜமௌலியின் இயக்கத்தில் RRR படத்தில் ஜூனியர் NTR, ஆலியா பட் ஆகியோருடன் இணைந்து நடிக்க உள்ளார். இதனிடையில் கொரோனா பரிசோதனை செய்திருந்த ராம்சரண், தனக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தனக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் தான் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், சீக்கிரம் அதிலிருந்து மீண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தன்னுடன் இருந்தவர்கள் அனைவரையும் பத்திரமாக இருக்க கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார். லண்டனிலிருந்து ஹைதராபாத் வந்தவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வந்த செய்திகளை தொடர்ந்து இந்த செய்தி டோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரையுலகினரும் அவரது ரசிகர்களும் விரைவில் குணமடைந்து திரும்ப வரவேண்டும் என ஆறுதல் கூறி வருகின்றனர்.

ஆரி சும்மா சொன்னது நிஜமான நடந்துடுச்சு – சோம் நாய்க்குட்டிக்கு நடந்த சோகம் !

சோம்சேகர்…

பிக்பாஸ் வீட்டில் புதிதாக அறிமுகம் ஆனவர் சோம் என்கிற சோம்சேகர். இவர் சூரரை போற்று படத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்தார். பிக்பாஸ் வீட்டில் 80 நாட்கள் கடந்து வெற்றிகரமாக விளையாடி கொண்டிருக்கிறார். இவர் தனது வீட்டில் நாய்க்குட்டி வளர்க்கிறார். அதன் பெயர் குட்டு. 2017 ஆம் ஆண்டிலிருந்து குட்டுவை வளர்த்து வருகிறார்.

பிக்பாஸில் வரும் ஒரு டாஸ்கில், சோம் எந்திரனாக நடித்திருந்தார். அப்போது ஆரி, உன் செல்ல குட்டுவை வீட்டில் விட்டு வந்திருக்கிறாய், நீ திரும்ப வீட்டுக்கு போவதற்குள் அதற்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வாய் என கேட்டார்.

டாஸ்கில் எந்திரனாக இருக்கும் சோமை கோபப்படுத்தவும், வருத்தப்பட வைக்கவே அப்படி கேட்டார். இதை அர்ச்சனாவிடம் சொல்லி சோம் வருத்தமடைந்தார். ஆனால் தற்போது சோமின் செல்ல நாயான குட்டு உண்மையாகவே இறந்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த விசயம் சோமிற்கு தெரிந்தால் மிகவும் வருத்தமடைவார். ஏற்கனவே ஹவுஸ்மேட்ஸ் அனைவராலும் கார்னர் செய்யப்படும் ஆரியை, இந்த விசயம் தெரியவந்தால், இன்னும் ஓரங்கட்டப்படுவார் என தெரிகிறது.

அதுதான் தெரியுமே! இன்னும் எதுக்கு அப்டேட்!

மாஸ்டர்..

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து இன்று பிற்பகல் 12.30 மணிக்கு முக்கியமான அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

பிகில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். கைதி படத்தை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும், ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தனு, சஞ்சீவ், நாசர், பிரிகிதா, கௌரி கிஷான் என்று ஏராளமான நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார்.

சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழைத் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மாஸ்டர் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. மாஸ்டர் தமிழ் டைட்டிலை விட மாஸ்டர்: தி விஜய் என்று ஹிந்தியில் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அண்மையில், இந்தப் படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது.

ஏற்கனவே மாஸ்டர் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரயிருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், மாஸ்டர் ரிலீஸ் தேதி குறித்து முக்கியமான அறிவிப்பு இன்று பிற்பகல் 12.30 மணிக்கு வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாஸ்டர் படத்திற்கான டிக்கெட் விற்பனையும் தொடங்கிவிட்டதாக தகவல் வெளியானது. மேலும், இன்னும் பல திரையரங்குகளில் வரும் 7 ஆம் தேதி மாஸ்டர் டிக்கெட் விற்பனை தொடங்கயிருக்கிறது.

இதற்கிடையில், கொரோனா காரணமாக ஒரு இருக்கை விட்டு ஒரு இருக்கையில் மட்டுமே ரசிகர்கள் அமர்ந்து படம் பார்க்கின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் இன்று திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதியன்று மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் செய்யப்படும் என படக்குழுவினர் எங்களிடம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளதாக கூறினார்.

ஜனவரி 1 முதல் 100% பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என ஏற்கனவே முதல்வரிடம் மனு அளித்துள்ளோம். 100% பாவையாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என மீண்டும் ஒருமுறை முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறோம் என்று கூறியவர் , அனைத்து ஓ.டி.டி தளங்களும் விஜய்யிடம் போட்டி போட்டு மாஸ்டர் படத்தை கேட்டனர். ஆனால் விஜய் தீர்க்கமான முடிவு எடுத்து திரையரங்கில் வெளியீடு செய்கிறார். அவரை போலவே அனைத்து நடிகர்களும் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுல்தான் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு?

சுல்தான்…

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சுல்தான் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனாவால் தியேட்டர்கள் பல மாதங்களாக மூடப்பட்டு தற்போது மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. ஆனாலும் தியேட்டர்களில் கூட்டம் குறைவாக இருப்பதால் காலை, பகல் காட்சிகளை ரத்து செய்து வருகிறார்கள். சில தியேட்டர்களை மூடியும் வைத்துள்ளனர்.

சூர்யாவின் சூரரைப் போற்று, விஜய் சேதுபதி நடித்த க.பெ. ரணசிங்கம், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன், ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின், வரலட்சுமியின் டேனி உள்ளிட்ட படங்கள் தியேட்டருக்கு பதிலாக ஓ.டி.டி.யில் வந்தன.

ஜெயம் ரவி நடித்துள்ள பூமி படம் பொங்கலுக்கு ஓ.டி.டி.யில் வெளியாகிறது. பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சுல்தான் படத்தை பொங்கலுக்கு தியேட்டரில் வெளியிட திட்டமிட்டனர்.

ஆனால் மாஸ்டர், ஈஸ்வரன் படங்களுக்கு திரையரங்குகளை ஒதுக்கி விட்டதால் சுல்தான் படமும் ஓ.டி.டியில் வருகிறது என்று தகவல் பரவியது. இதனை படக்குழுவினர் மறுத்தனர். சுல்தான் படத்தின் ரிலீசை ஏப்ரல் மாதத்துக்கு தள்ளி வைக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

ஈஸ்வரன் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட தமன்!

ஈஸ்வரன்…

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடித்துள்ள ‘ஈஸ்வரன்’ படத்தின் முக்கிய அப்டேட்டை இசையமைப்பாளர் தமன் வெளியிட்டுள்ளார்.

சிம்புவின் 46-வது படத்தை சுசீந்திரன் இயக்கி உள்ளார். இப்படத்துக்கு ஈஸ்வரன் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்துக்காக சிம்பு தனது உடல் எடையை 30 கிலோ வரை குறைத்திருந்தார்.

கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டது. தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படம் குறித்த முக்கிய அப்டேட்டை இசையமைப்பாளர் தமன் வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படத்தின் இசையமைப்பு பணி முடிவடைந்துவிட்டதாக கூறியுள்ள அவர்,

தன்மீது நம்பிக்கை வைத்து பக்கபலமாக இருந்த சிம்பு மற்றும் சுசீந்திரனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தான் பணியாற்றியதிலேயே வேகமாக முடிக்கப்பட்ட இரண்டாவது படம் இது என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன் பிசினஸ்மேன் என்கிற தெலுங்கு படத்தின் பணிகளை 2 மாதத்தில் முடித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

பூலோகம் இயக்குனருடன் மீண்டும் இணையும் ஜெயம்ரவி!

ஜெயம்ரவி…

ஜெயம்ரவி நடித்துள்ள பூமி படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஓடிடி தளத்தில் வெளிவருகிறது. அடுத்து அவர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறார்.

இன்னும் ஒரு சில நாட்களே ஜெயம்ரவியின் போர்ஷன் படமாக்கப்பட வேண்டியது இருக்கிறது. அதை முடித்து விட்டு அஹ்மத் இயக்கத்தில் உருவாகும் ஜன கண மன படத்தை முடித்து கொடுக்கிறார்.

இதுதவிர ஜெயம்ரவி, ஸ்கிரீன் சீன் நிறுவனத்துக்கு தொடர்ச்சியாக 3 படங்களில் நடித்துக் கொடுக்க ஒப்பந்தமாகி உள்ளார். படத்தின் கதை, இயக்குனர்கள், உடன் நடிப்பவர்கள் அத்தனை சாய்சும் ஜெயரம் ரவியுடையது தான்.

இதனால் கடந்த சில மாதங்களாக தீவிரமாக கதை கேட்டு வந்தார். கிட்டத்தட்ட 60 கதைகள் கேட்டதில் பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் சொன்ன கதைக்கு ஓகே சொல்லியுள்ளார்.

பூலோகம் படத்தில் ஜெயம் ரவியுடன் த்ரிஷா, ஹாலிவுட் நடிகர் நாதன் ஜோன்ஸ் நடித்தனர். வடசென்னையில் நடக்கும் குத்துச் சண்டையை மையமாக கொண்ட கதை.

இப்போது மீண்டும் கல்யாணும், ஜெயம் ரவியும் இணைகிறார்கள். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. இது பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ஆக்ஷன் படம்.

சித்ராவின் நினைவாக இருந்த அந்த ஒன்றையும் மாற்றிய சீரியல் குழு!

சித்ரா…

சீரியல் நடிகை சித்ராவின் த.ற்.கொ.லை பல்வேறு ச.ர்.ச்.சை.களை உருவாக்கி வருகிறது.

சித்ரா மிகவும் தைரியமானவர் அவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.ள வே.ண்.டிய அவசியல் இல்லை என சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கூறி வருவதால், சித்ராவின் த.ற்.கொ.லை ம.ர்.ம ம.ர.ண.மாக பா.ர்.க்கப்படுகிறது.

இதையடுத்து, சித்ராவின் த.ற்.கொ.லை.யை தொ.ட.ர்.ந்.து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவருக்கு பதிலாக காவியா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அவரோடு சேர்த்து சித்ராவின் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்து வந்த டப்பிங் ஆர்டிஸ்ட்டையும் சீரியல் குழு மாற்றியுள்ளது.

இதனால், முல்லை ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர். சித்ராவின் நினைவாக இருந்தது அந்த ஒரு குரல் மட்டும் தான் இப்போது அதையும் மாற்றி விட்டீர்களே என சீரியல் குழுவை ரசிகர்கள் தி.ட்.டி தீ.ர்.த்து வருகின்றனர்.

இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் வீட்டில் நேர்ந்த மரணம்- கடும் வருத்தத்தில் குடும்பம்!

ஏ.ஆர். ரகுமான்…

கொரோனா காரணமாக பிரபலங்கள் யாரையும் வெளியே காண முடியவில்லை.

அதிலும் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானை அவ்வளவாக வெளியே காண முடியாது,

கடந்த சில மாதங்களாக சுத்தமாக அவர் ரசிகர்கள் பார்வையில் படவில்லை.

ஒரே ஒரு பாடல் நிகழ்ச்சியில் மட்டும் வீடியோ மூலம் வந்தார்.

தற்போது அவரது வீட்டில் ஒரு சோ கம் ச ம் பவம் நடந்துள்ளது.

அதாவது ரகுமானின் தாயார் கரீமா பேகம் அவர்கள் நேற்று காலை உடல்நலக் குறைவால் இ ற ந்துள்ளார்.

நடிகர் யோகிபாபுவின் வீட்டுக்கு வந்த புதுவரவு: குவியும் வாழ்த்துக்கள்!

யோகிபாபு…

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் யோகிபாபுவுக்கும் மஞ்சு பார்கவி என்ற பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது.

யோகிபாபுவின் குலதெய்வம் கோவிலில் நடைபெற்ற இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் யோகிபாவுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளதாக சற்றுமுன் செய்திகள் வெளிவந்துள்ளது. நடிகரும் இயக்குனருமான மனோபாலா இதனை தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

இதனையடுத்து யோகிபாபுவுக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

யோகிபாபுவின் வீட்டுக்கு வந்த புதுவரவுக்கு வாழ்த்துக்கள் என ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வயதான நடிகருடன் நடிக்க கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கும் நடிகை!

நடிகை…

தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் நடிகை ஒருவர், வயதான நடிகருடன் நடிக்க கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கிறாராம்.

தமிழ்நாட்டை சேர்ந்த அழகிய நடிகை, அக்கட தேசத்தில் அறிமுகமாகி பின்னர் தமிழுக்கு வந்தாராம்.

இங்கு படங்கள் கைகொடுக்காததால் டோலிவுட் பக்கம் சென்ற அந்த நடிகை அங்கு பிசியான நடிகையாகிவிட்டாராம். தற்போது அவருக்கு ஒரு ரீமேக் பட வாய்ப்பு தேடி வந்துள்ளதாம்.

அந்த படத்தில் வயதான நடிகருக்கு ஜோடியாக நடிக்க அவரை அணுகினார்களாம். நடிக்க ஓகே சொன்ன அந்த நடிகை ரூ.2 கோடி சம்பளம் கேட்டு அதிர்ச்சி கொடுத்தாராம்.

கேட்ட சம்பளத்தை கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்வதா? அல்லது வேறு கதாநாயகியை தேர்வு செய்வதா? என்று படக்குழுவினர் ஆலோசிக்கிறார்களாம்.