ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய ரித்திகா சிங் !

ரித்திகா சிங்…

தன்னுடைய ரியல் Life-ல் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார்.

அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான Oh My கடவுளே படத்தில் நடித்ததற்காக இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

இந்த படத்தில் வரும் இவரது செல்ல பெயரான நூடுல்ஸ் மண்ட என்பது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள்.

அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், ரசிகர்களோடு Live Chat வந்த ரித்திகாவை ரசிகர் ஒருவர், “இதுவரை பார்க்காத உங்களுடைய உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படத்தை போஸ்ட் பண்ணுங்க” என்று கேட்க

இதனை தொடர்ந்து, இவர் கோட்-ஐ திறந்து விட்டு தன்னுடைய அழகை காட்டியபடி போஸ் கொடுத்து, “இது போன்ற கிளாமர் தான் எனக்கு பிடிக்கும்” என ஒரு போட்டோவை போட்டு ரசிகரின் ஆசையை நிறைவேற்றி உள்ளார்.

ராகுல் பிரீத் சிங் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் ! கிண்டல் செய்யும் ரசிகர்கள் !

ரகுல் பிரீத் சிங்..

அக்கட தேசத்தில் சில இயக்குனர்கள் ரகுலை தேடி வந்த கதை சொல்லி இருந்தார்கள். ஆனால் ஊரடங்கினால், எல்லாம் Total Collapse.பொதுவாகவே நடிகை ரகுல் பரீத் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள்.

2019ம் ஆண்டில் ரகுல் பிரித் சிங் நடித்த தேவ், என்ஜிகே என்ற இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது. அதேபோல் தெலுங்கில் அவர் நடித்த மன்மதுடு-2வும் தோல்வியடைந்து விட்டது.

அதனால் ரகுல் பிரீத் சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார். அதோடு, தமிழில் இந்தியன்-2, அயலான் படங்களில் நடித்து வரும் ரகுல்பிரீத் சிங்கிற்கு, தெலுங்கில் சுத்தமாக படங்கள் இல்லை.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்தவர் தற்போது மார்கெட் இல்லாமல் இருக்கிறார்.

இந்நிலையில், Maldives தீவு சுற்றுலா முடித்து திரும்பியுள்ள ரகுல் தற்போது, தலை முடியை விரித்து போட்டு மாடர்ன் உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” அய்யயோ பேய்” என கிண்டல் செய்கிறார்கள்.

டக்கரான சாதனையை நிகழ்த்திய டாக்டர் பாடல் !

டாக்டர்…

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் கடைசியாக ஹீரோ படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இந்த படத்தை இயக்கியிருந்தார் இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் அயலான் மற்றும் கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங்குமே கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டன.டாக்டர் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தை சிவகார்த்திகேயனின் SK ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.யோகி பாபு,வினய்,டோனி,ஜாரா அர்ச்சனா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தெலுங்கில் கடந்த வருடம் நானி நடித்த கேங் லீடர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான பிரியங்கா மோகன்.இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் மூலம் இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

கொரோனவால் பாதிக்கப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது.இந்த படம் 2021 கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்று தீபாவளியன்று அறிவிக்கப்பட்டது.

குறிப்பாக இந்த படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய செல்லம்மா என்ற பாடல் கடந்த ஜூலை 16ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று சமூகவலைத்தளங்களில் செம வைரல் ஆகி வருகிறது.இந்த பாடலில் அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் போட்ட ஸ்டெப்பை பலரும் ட்ரை செய்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த பாடல் சமீபத்தில் 1 மில்லியன் லைக்குகளை பெற்று சாதனை படைத்திருந்தது.தற்போது இந்த பாடல் 80 மில்லியன் பார்வையாளர்களை பெற்று அசத்தல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.இதனை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

பிரபல சன் டிவி நடிகருக்கு திருமணம் ! குவியும் வாழ்த்துக்கள்

ராகுல் ரவி.துல்கர் சல்மான்..

பிரபல மாடலாக இருந்து மலையாளத்தில் Ponnambili என்ற தொடரின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானவர் ராகுல் ரவி.துல்கர் சல்மான் நடித்த Jomonte Suvisheshangal உள்ளிட்ட சில திரைப்படங்களில் சிறப்பு தோட்டங்களிலும் நடித்து அசதியுள்ளார் ராகுல்.மேலும் சில திரைப்படங்களிலும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

தொகுப்பாளராகவும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அசத்தியுள்ளார் ராகுல்.சன் டிவியில் ஒளிபரப்பான செம ஹிட் தொடர்களில் ஒன்று நந்தினி.ராகுல் ரவி இந்த தொடரின் ஹீரோவாக நடித்திருந்தார்.விறுவிறுப்பாக சென்று வந்த இந்த தொடர் கிட்டத்தட்ட 2 வருடங்கள் கழித்து தனது ஒளிபரப்பை நிறுத்தியது.

என்றாலும் இந்த தொடருக்கும் இந்த தொடரில் நடித்த நடிகர்களுக்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. ராகுல் இந்த தொடரில் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விட்டார்.இந்த தொடர் நிறைவடைந்த பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சாக்லேட் தொடரின் நாயகனாக நடித்து வந்தார்.

சில காரணங்களால் இந்த தொடர் நிறுத்தப்பட்டது.இதனை தொடர்ந்து தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சமீபத்தில் தான் பிரபல மாடலும்,நடிகையுமான லக்ஷ்மி எஸ் நாயரை விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.இன்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்புகைப்படங்களும்,வீடியோக்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம ட்ரெண்ட் அடித்து வருகின்றன.

அந்த நடிகை கிட்ட மனுஷன் போவானா? ஆள விடுங்க சாமி என அலறும் இயக்குனர்கள்.!!

நித்யா மேனன்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் முதல் இளம் இயக்குனர்கள் வரை பிரபல நடிகையை பார்த்து பயப்படும் சம்பவம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமர்சியல் படங்களில் கிளாமர், குத்து பாட்டு, ஹீரோவுடன் ரொமான்ஸ் போன்ற கதைகளை ஓரம்கட்டி கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் நித்யா மேனன்.

இவரது நடிப்பு திறமை கண்டு இந்திய அளவில் உள்ள நடிகர்களே மிரண்டு போயுள்ளனர். மலையாள நாயகியாக இருந்தாலும் தற்போது இந்திய சினிமாவையே ஆட்சி செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.

சமீபகாலமாக தமிழ் இயக்குனர்கள் பலர் நித்யா மேனனை சந்தித்து கதை சொல்ல மறுத்து வருகின்றனர். அதற்குக் காரணம் ஒவ்வொரு இயக்குனர் சொல்லும் கதையிலும் பல்வேறு குறைகளை கண்டறிந்து சுட்டிக் காட்டி வருகிறாராம்.

அதுமட்டுமில்லாமல் ஹீரோவுக்கு இணையான வேடம் தனக்கு இருந்தால் மட்டுமே நடிப்பேன் என ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டாராம். கமர்சியல் இயக்குனர்களை பக்கத்திலேயே சேர்த்துக்கொள்வதில்லையாம் அம்மணி.

அதற்குக் காரணம் தற்போது ஹிந்தியில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருவதால் நித்யா மேனன் இந்த மாதிரி கண்டிஷன் போடுகிறாராம்.

தமிழ் இயக்குனர்களோ, ஏரி உடைந்தால் மீன் ஏரியாவுக்கு வந்துதானே ஆக வேண்டும் என பட வாய்ப்பு குறைந்த பிறகு தமிழ் சினிமாவுக்கு வரும்போது நம்ம பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்துவிட்டார்களாம்.

பிக்பாஸ் 4 : பிக்பாஸ் வீட்டில் சூடுபிடிக்கும் இந்த வார நாமினேஷன் !

பிக்பாஸ் சீசன் 4…

பிக்பாஸ் சீசன் 4 தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. அதனால் ஆட்டம் சூடு பிடித்துள்ளது. அதிலும் போட்டியாளர்கள் பலரும் பல்வேறு விதமான பிரச்சனைகளை தினம்தோறும் உருவாக்கி வருவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நேற்று பிக் பாஸ் வீட்டுக்கு நடிகர் ஜெயம் ரவி வந்து சர்ப்ரைஸ் தந்திருந்தார்.

பிக்பாஸ் வீட்டில் நேற்று அனிதா வெளியேற்றப்பட்டிருந்தார். இந்த வாரம் மொத்தம் ஐந்து போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருந்த நிலையில் இறுதியாக அனிதா மற்றும் ஆஜித் மட்டுமே இறுதி இருவராக இருந்தனர்.

அப்போது அனிதா வெளியேற்றப்படுவதாக கமல் கார்டை காட்டி அறிவித்தார். அனிதா எலிமினேஷன் என அறிவிக்கப்பட்ட பிறகு அவர் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார். மற்றவர்களை போல கண்ணீர் விடாமல் அவர் சற்று மகிழ்ச்சியாகவே தான் வெளியே வந்தார்.

வழக்கமாக அனைத்து போட்டியாளரும் வெளியேறும் முன் உண்டியலை உடைத்து அதில் இருக்கும் காயின்களை எடுத்து மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும். ஆனால் அனிதா அந்த காயின்களை ஏற்கனவே எடுத்து கையில் வைத்திருந்தார். அந்த உண்டியலை மற்ற பொருட்களுடன் கொடுத்தனுப்பிவிடுங்கள் என ஏற்கனவே அவர் சொல்லி வைத்திருந்தார்.

வெளியே வந்து அவர் காயின்களை கொடுத்தனுப்பிய பிறகு பிக் பாஸ் அனிதா விதியை பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் ஏற்றுக்கொள்வதாக இல்லை. இதுவரை அனைத்து விதிகளையும் சரியாக பின்பற்றினீர்கள். அதே போல வெளியே போகும் போதும் கடைபிடிப்பீகள் என நினைக்கிறேன் என பிக் பாஸ் அவரை கண்டித்தாலும் அவர் கேட்கவில்லை.

இறுதியில் கேப்டன் பாலாஜி இதை செய்தே ஆக வேண்டும் என பிக் பாஸ் கூறிய பிறகு அவர் உள்ளே சென்று உண்டியலை எடுத்து வந்து உடைத்தார். அதில் இருக்கும் படம் உடையாதவாரு நான் உடைத்து தருகிறேன் என் ஆவரே உடைத்து கொடுத்தார்.

இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் இந்த வார நாமினேஷன் நடைபெறுகிறது. ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஷிவானி, கேபி மற்றும் ஆஜீத்தை டார்கெட் செய்கின்றனர். காரணம் டாஸ்க்கில் குறைவான பங்களிப்பு இருந்ததாக தெரிவித்தனர். ஆரி இந்த வார தலைவர் என்பதால் அவரை நாமினேட் செய்ய முடியாது என பிக்பாஸ் தெரிவித்தார். பிறகு வந்த ரியோ ரம்யா பாண்டியனை நாமினேட் செய்தார். இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் எப்படி பட்ட டாஸ்க் வழங்கப்படுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ரொமான்ஸில் அப்பாவை மிஞ்சும் ஸ்ருதிஹாசன்.. பிரபல நடிகருடன் வெளிவந்த நெருக்கமான லிரிக் வீடியோ !

ஸ்ருதிஹாசன்…

என்னதான் சினிமா பின்புலத்துடன் உள்ளே நுழைந்தாலும், தனக்கான அடையாளத்தை பெற பெரிதும் முயற்சி செய்தவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன். முதலில் பாடகியாக அறிமுகமான ஸ்ருதிஹாசன் ‘ஏழாம் அறிவு’ படத்தின் மூலம் கதாநாயகியாக கோலிவுட்டில் கால்பதித்தார்.

மேலும் சொல்லிக்கொள்ளும் வகையில் எந்த ஒரு படவாய்ப்பும் தமிழில் கிடைக்காததால், பாலிவுட், இசை நிகழ்ச்சிகள் என செய்து வந்தார்.

இதற்கிடையே ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க தொடங்கிய ஸ்ருதிஹாசன், அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் ஸ்ருதி தற்போது தெலுங்கு நடிகரான கோபிசந்த் உடன் இணைந்து ‘கிராக்’ படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் ‘கிராக்’ படத்திலிருந்து ஒரு பாடலின் லிரிக் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்தப் வீடியோவின் மூலம் இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன் தாறுமாறான ரொமான்ஸில் ஈடுபட்டுள்ளது போல் தெரிகிறது.

அதாவது கோபிசந்த் கதாநாயகனாக நடிக்கும் கிராக் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளாராம். மேலும் இந்த படத்தில் இருந்து ‘கோரமீசம் போலீசோட’ என்ற பாடலின் லிரிக் வீடியோ இணையத்தில் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இந்தப் பாடலை ரம்யா பெஹாரா பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த வீடியோ முழுவதும் ஸ்ருதிஹாசன் பயங்கர ரொமான்ஸில் ஈடுபட்டுள்ளார். அதோடு, ஸ்ருதிஹாசனின் ரொமான்ஸை பார்த்த பலர் வாயடைத்துப் போய் நிற்கின்றனராம்.

மேலும் அந்தப் பாடலின் லிரிக் வீடியோ இதோ:

நயன்தாராவின் வளர்ச்சிக்கு இதுதான் முக்கிய காரணம்: ‘மாஸ்டர்’ நடிகையின் சர்ச்சை கருத்து!

நயன்தாரா….

நடிகை நயன்தாராவின் அபாரமான வளர்ச்சிக்கு இது ஒன்று தான் காரணம் என விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்த நடிகை சர்ச்சைக்குரிய கருத்து ஒன்று தெரிவித்துள்ளது நயன்தாரா ரசிகர்களை ஆத்திரமடையச் செய்துள்ளது.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ‘மாஸ்டர்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஆண்ட்ரியா நயன்தாரா குறித்து கூறிய போது ’ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நயன்தாரா நடித்ததே

அவரது வளர்ச்சிக்கு காரணம் என்றும், ஆனால் நான் என்னுடைய படங்களில் சிறந்த கதைகள் இருக்கிறதா என்பதை மட்டுமே பார்ப்பேன் என்றும், கதைக்கு தேவை என்றால் மட்டுமே நான் நெருக்கமாக நடித்து வருகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களுடன் நடித்ததால் தான் நயன்தாராவின் வளர்ச்சி அபாரமாக உள்ளது என்று ஆண்ட்ரியா தெரிவித்த சர்ச்சை கருத்து நயன்தாரா ரசிகர்களை கோபப்படுத்தி உள்ளது.

ரஜினி, விஜய், அஜீத்துடன் நடித்த பல நடிகைகள் தற்போது திரை உலகை விட்டு காணாமல் போயுள்ள நிலையில் நயன்தாராவின் வெற்றிக்கு இது ஒன்றை மட்டுமே காரணமாக ஆண்ட்ரியா குறிப்பிட்டுள்ளது தவறு என்று நயன்தாரா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்

மேலும் ஆண்ட்ரியாவும் கமல், அஜித், விஜய், விஷால், சரத்குமார், தனுஷ் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து உள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்: மருத்துவர்கள் தெரிவித்த 2 முக்கிய அறிவுரைகள்!

ரஜினிகாந்த்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவருக்கு ஏற்பட்ட ரத்த அழுத்த மாறுபாடு பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நேற்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்பல்லோ மருத்துவமனை ரஜினி உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 25ஆம் தேதி ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு தேவையான பரிசோதனைகள் செய்யப்பட்டன. தற்போது அவரது ரத்த அழுத்தம் சீராக உள்ளது. மேலும் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.

ஆனால் அதே நேரத்தில் அவருக்கு சில அறிவுறுத்தல்கள் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு வாரம் அவர் முழுவதுமாக முழு ஓய்வு எடுக்க வேண்டும். அவரது இரத்த அழுத்தம் அவ்வப்போது பரிசோதனை செய்யப்பட வேண்டும். மேலும் கோவிட் தொற்று ஏற்படும் எந்த செயலிலும் அவர் ஈடுபடக்கூடாது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரும் 31ஆம் தேதி ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மருத்துவர்களின் இந்த ஆலோசனைக்கு பின் அவர் திட்டமிட்டபடி அரசியல் அறிவிப்பை வெளியிடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

காஜல் அகர்வாலை அடுத்து மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்ற பிரபல நடிகை!

நிஹாரிகா…

பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் கௌதம் என்ற மும்பை தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றார் என்பது தெரிந்ததே.

அவர் மாலத்தீவில் இருந்து ஹனிமூன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார் என்பதும் அந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரர் மகள் நிஹாரிகாவுக்கு சமீபத்தில் சைதன்யா என்ற பொறியாளருடன் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திருமணம் உதய்பூரில் உள்ள ஆடம்பர அரண்மனை ஹோட்டலில் கோலாகலமாக டிசம்பர் 9ஆம் தேதி நடந்தது என்பதும் பல திரையுலக பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் ஹைதராபாத்தில் ரிசப்ஷன் நடந்த நிலையில் தற்போது இந்த தம்பதிகள் வெளிநாட்டிற்கு ஹனிமூன் சென்றுள்ளனர்.

நடிகை நிஹாரிகா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மாலத்தீவுக்கு கணவர் சைதன்யாவுடன் ஹனிமூன் சென்றுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் காஜல் போலவே நிஹாரிகாவும் மாலத்தீவில் இருந்தபடியே அழகழகான புகைப்படங்களையும் பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாலத்தீவுக்கு காஜல் அகர்வால் ஹனிமூனுக்கு சென்ற பின்னர் பல தமிழ் நடிகைகள் மாலத்தீவுக்கு சென்ற நிலையில் தற்போது லேட்டஸ்டாக தேனிலவை கொண்டாட நிஹாரிகாவும் மாலத்தீவை தேர்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.