ஸ்ருதிஹாசன்…
என்னதான் சினிமா பின்புலத்துடன் உள்ளே நுழைந்தாலும், தனக்கான அடையாளத்தை பெற பெரிதும் முயற்சி செய்தவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன். முதலில் பாடகியாக அறிமுகமான ஸ்ருதிஹாசன் ‘ஏழாம் அறிவு’ படத்தின் மூலம் கதாநாயகியாக கோலிவுட்டில் கால்பதித்தார்.
மேலும் சொல்லிக்கொள்ளும் வகையில் எந்த ஒரு படவாய்ப்பும் தமிழில் கிடைக்காததால், பாலிவுட், இசை நிகழ்ச்சிகள் என செய்து வந்தார்.
இதற்கிடையே ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க தொடங்கிய ஸ்ருதிஹாசன், அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.
அந்த வகையில் ஸ்ருதி தற்போது தெலுங்கு நடிகரான கோபிசந்த் உடன் இணைந்து ‘கிராக்’ படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் ‘கிராக்’ படத்திலிருந்து ஒரு பாடலின் லிரிக் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்தப் வீடியோவின் மூலம் இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன் தாறுமாறான ரொமான்ஸில் ஈடுபட்டுள்ளது போல் தெரிகிறது.
அதாவது கோபிசந்த் கதாநாயகனாக நடிக்கும் கிராக் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளாராம். மேலும் இந்த படத்தில் இருந்து ‘கோரமீசம் போலீசோட’ என்ற பாடலின் லிரிக் வீடியோ இணையத்தில் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இந்தப் பாடலை ரம்யா பெஹாரா பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த வீடியோ முழுவதும் ஸ்ருதிஹாசன் பயங்கர ரொமான்ஸில் ஈடுபட்டுள்ளார். அதோடு, ஸ்ருதிஹாசனின் ரொமான்ஸை பார்த்த பலர் வாயடைத்துப் போய் நிற்கின்றனராம்.
மேலும் அந்தப் பாடலின் லிரிக் வீடியோ இதோ: