சிகப்பு நிற உடையில் மின்னும் நடிகை ப்ரியா பவானி ஷங்கர், இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

பிரியா பவானி ஷங்கர்…

மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர், அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்து வந்தார்.

சின்னத்திரை சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகை ப்ரியா, இப்போது திரைப்படங்களின் மூலமாகவும் ரசிகர்களிடையே பிரபலமாகி வருகிறார்.

மேலும் தற்போது இவர் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார், ஆம் ஓ மண பெண்ணே, குருதி ஆட்டம், களத்தில் சந்திப்போம் என இவர் நடித்து முடித்துள்ள திரைப்படங்கள் அடுத்த வருடம் வரிசையாக வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது சிகப்பு நிற உடையில் மின்னும் நடிகை ப்ரியா பவானி ஷங்கர் தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது.

ராகவா லாரன்ஸ் படத்தை இயக்கும் பிரபல தயாரிப்பாளர்!

ராகவா லாரன்ஸ்..

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்சயகுமார் நடிப்பில் உருவாகிய ‘லட்சுமி’ என்ற திரைப்படம் கடந்த தீபாவளி அன்று ஓடிடியில் வெளியாகியது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் லாரன்ஸ் தற்போது 5 ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு ராகவா லாரன்ஸின் பிறந்த நாளன்று வெளியாகி ‘ருத்ரன்’ என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திகில் கதையம்சம் கொண்ட படமாக இந்த படம் உருவாகவிருக்கும் நிலையில் இந்த படத்தை அறிமுக இயக்குனர் செல்வா என்பவர் இயக்கவுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது அதில் ஒரு திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த படத்தை தயாரிப்பாளர் கதிரேசனே இயக்கவுள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

பொல்லாதவன், ஆடுகளம், ஜிகிர்தண்டா ஆகிய வெற்றி படங்களை தயாரித்த கதிரேசன், தான் இயக்கும் முதல் படத்தை வெற்றிபடமாக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

முக்கிய இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கவுள்ள மாஸ்டர் பட நடிகர், வெளியான சூப்பர் தகவல் இதோ..!

அர்ஜுன் தாஸ்…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சென்ற வருடம் வெளியான திரைப்படம் கைதி, இப்படம் வெளியாகி 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

மேலும் இப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் அர்ஜுன் தாஸ், தனது முதல் திரைப்படத்திலே ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார்.

அதுமட்டுமின்றி சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அந்தகாரம் திரைப்படம் மிக சிறந்த விமர்சங்களை பெற்று வெற்றியடைந்தது.

அடுத்ததாக தளபதி விஜய்யுடன் இவர் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது நடிகர் அர்ஜுன் தாஸ் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெயில், அங்காடி தெரு உள்ளிட்ட மிக சிறந்த திரைப்படங்களை இயக்கிய இயக்குனருடன் நடிகர் அர்ஜுன் தாஸ் இணைத்துள்ளதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

17ஆம் நூற்றாண்டின் வீரமங்கை கேரக்டரில் நயன்தாரா? வைரலாகும் தகவல்!

நயன்தாரா…

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில ஆண்டுகளாக நாயகிக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களில் அதிகம் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் வீர மங்கை ஒருவரின் கேரக்டரில் அவர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய திரையுலகில் சரித்திர படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது தெரிந்ததே. அந்தவகையில் ஆங்கிலேயருக்கு எதிராக சுதந்திரத்திற்காக போராடிய முதல் தமிழ் வீரமங்கை என்ற பெருமை பெற்ற வேலுநாச்சியார் கேரக்டரில் நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை பிரபல இயக்குனர் சுசி கணேசன் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் வேலுநாச்சியர் கேரக்டரில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

17ஆம் நூற்றாண்டில் சிவகங்கை சீமையை ஆண்ட வேலுநாச்சியார் கல்வி, விளையாட்டு, சிலம்பம், வாள் வீச்சு, ஈட்டி எறிதல், அம்பு எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர் என்பதால் இது குறித்த பயிற்சிகளிலும் நயன்தாரா விரைவில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீரமங்கை வேலுநாச்சியார் கேரக்டரில் நயன்தாரா நடிப்பது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு இந்த படம் மிகப் பெரிய மைல் கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று நிழலின் கருமையில், இன்று தேவதை வெள்ளையில்.. கலக்கும் ஜூலியின் போட்டோஷூட்!

ஜூலி…

பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர்களின் ஒருவரான ஜூலி இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் ஏற்கனவே பெற்றிருந்த புகழை இழந்தாலும்

அதன் பின்னர் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இழந்த புகழை மீண்டும் பெற்றார் என்று சொல்ல வேண்டும்.

மேலும் அவ்வப்போது போட்டோஷூட்களை எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து ரசிகர்களை பரபரப்புக்கு உள்ளாக்கி வருகிறார் என்பதும் அறிந்ததே.

அந்தவகையில் நேற்று கருப்பு உடையில் நிழல் போன்ற புகைப்படங்களை கொண்ட போட்டோஷுட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிழற்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ்களும் கமெண்ட்ஸ்களும் குவிந்தன. இந்த நிலையில் நேற்று கருப்பு உடையில் நிழற்படங்களில் கலக்கிய ஜூலி இன்று

வெள்ளை உடையில் தேவதை போன்ற போட்டோஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படங்களுக்கு வழக்கம்போல் ஜாலியான பாசிட்டிவ் கமெண்ட்ஸ்களும், ஒரு சில கலாய்க்கும் கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு விதை போதும், என்னால புது உலகத்தை உருவாக்க முடியும்: ஜெயம் ரவியின் ‘பூமி’ டிரைலர்!

ஜெயம் ரவியின் ‘பூமி’ டிரைலர்…

பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்!

பிக்பாஸ்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல உள்ளதாக வெளிவந்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி நடித்த ’பூமி’ திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளிவந்தது என்பது தெரிந்ததே.

நேற்று ’பூமி’ படத்தின் டிரைலர் வெளியானது என்பதும் ஜனவரி 14ம் தேதி இந்தப் படம் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கி உள்ள நிலையில் புரமோஷனின் அடுத்த கட்டமாக பிக்பாஸ் வீட்டுக்கு ஜெயம்ரவியை செல்ல உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் ஜெயம் ரவி அங்கு போட்டியாளர்களை சந்தித்து வாழ்த்து கூறுவதோடு தனது ’பூமி’ படத்தின் புரமோஷனையும் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் ஜெயம் ரவி ரசிகர்களுக்கும் பிக்பாஸ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே முதல் சீசனில் இருந்து பல திரைப்படங்களின் புரமோஷன்கள் பிக்பாஸ் வீட்டில் நடந்துள்ளன என்பது தெரிந்ததே.

சிம்புவின் ‘மாநாடு’ படத்தில் இணைந்த பழம்பெரும் குணச்சித்திர நடிகர்: வைரல் புகைப்படம்!

மாநாடு…

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் ஏற்கனவே இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பும் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிம்பு தற்போது சபரிமலை சென்றுள்ளதால் அவர் இல்லாத காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் ஜனவரி முதல் சிம்பு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்தில் நட்சத்திரக் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு பழம்பெரும் குணச்சித்திர நடிகர் இந்த படத்தில் இணைந்துள்ளார். அவர்தான் வாகை சந்திரசேகர்.

’புதிய வார்ப்புகள்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் ’நிழல்கள்’ ’பாலைவனச்சோலை’ ’சிவப்பு மல்லி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த வாகை சந்திரசேகர் ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது ’மாநாடு’ படத்தில் இணைந்துள்ளார்.

வாகை சந்திரசேகர் ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் இருந்து அவர் இந்த படத்தில் ஒரு அரசியல்வாதி கேரக்டரில் நடிப்பதாக தெரிகிறது.

கவர்ச்சி நடிகையின் வாழ்க்கை பயணம் – ஷகிலா விமர்சனம்!

ஷகிலா…

கிராமத்தில் தந்தை, தாய் ஐந்து தங்கைகளுடன் ஏழ்மையாக வாழ்ந்து வருகிறார் ஷகிலா. இந்நிலையில், ஷகிலாவின் தந்தை திடீரென இறந்து விடுகிறார். குடும்ப கஷ்டம் காரணமாக சினிமாவில் ஜூனியர் நடிகையாக சேரும் ஷகிலா விரைவில் முன்னணி நடிகையாக ஆகிறார். ஷகிலா படங்களின் வரவால் முன்னணி நடிகரின் திரைப்படங்கள் பாதிக்கப்படுகிறது.

இதேசமயம் ஊரில் கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கிறது. இதற்கு காரணம் ஷகிலாவின் படங்கள் தான் என்று முன்னணி நடிகர் பங்கஜ் திரிபாதி, வதந்தியை கிளப்பி விடுகிறார். இதனால் மக்கள் போராட்டத்தில் இறங்க, ஷகிலாவின் திரைப்படங்களுக்கு தடை ஏற்படுகிறது. படம் தயாரிக்கவும் தயாரிப்பாளர்கள் மறுக்கிறார்கள்.

பணம் மற்றும் சினிமா வாழ்க்கையை இழக்கும் ஷகிலா, இறுதியில் மீண்டும் சினிமா பயணத்தை தொடங்கினாரா? எப்படி வாழ்க்கையை சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

மலையாளத்தில் கவர்ச்சி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு கதையாக இப்படம் உருவாகியுள்ளது. ஷகிலா எழுதிய புக்கை மையமாக வைத்து, திரைப்படத்திற்காக சில மாறுதல்களை செய்து இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ்.

விறுவிறுப்பாக ஆரம்பிக்கும் திரைக்கதை இறுதியில் மெதுவாக செல்கிறது. பிற்பாதியின் நீளத்தை குறைத்திருக்கலாம். பங்கஜ் திரிபாதிக்கான காட்சிகளை ரசிக்கும்படியாக உருவாக்கி இருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் சிந்திக்க வைக்கிறார்.

ஷகிலா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரிச்சா சத்தாவின் நடிப்பு அதிகம் எடுபடவில்லை. கிளைமாக்ஸ் காட்சியில் நடிப்பையும், ஒரு சில காட்சிகளில் மட்டும் அழகையும் ரசிக்க முடிகிறது. முன்னணி நடிகராக சலீம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பங்கஜ் திரிபாதியின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். அளவான நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெறுகிறார்.

கதாபாத்திரத்திற்கு சிறந்த தேர்வு. மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். வீர சம்ர்த் மற்றும் மீட் ப்ரோஸ் ஆகியோரின் பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. சந்தோஷ் ராய் பதாஜேயின் ஒளிப்பதிவு அருமை.

மொத்தத்தில் ‘ஷகிலா’ சுவாரஸ்யம் குறைவு.

கணவருடன் சேராமலேயே கர்ப்பமாகும் பெண் – ஒரு பக்க கதை விமர்சனம்!

ஒரு பக்க கதை…

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படம் மூலம் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையில் அசாதாரண சூழ்நிலை ஏற்படும் போது, சுற்றியுள்ள உலகம் அதை எவ்வாறு உணர்கிறது என்பதையும் அதன் மூலம் ஏற்படும் சவால்களையும் சுவாரசியமாக சொல்லி கவனம் ஈர்த்தவர் பாலாஜி தரணிதரன்.

ஒரு பக்க கதை படத்திலும் அதேபோன்ற களத்தை ஆனால் வித்தியாசமான கதையுடன் கொடுத்து அசத்தி இருக்கிறார். படம் தொடங்கும்போதே ஸ்ரீமத் பாகவத புராண கதையுடன் தொடங்குகிறது. அதிலேயே படத்தின் மையக்கருவை விளக்கிவிடுகிறார்.

நடுத்தர வர்க்க குடும்பங்களை சேர்ந்த இளைஞர்கள் காளிதாஸ் ஜெயராமும் மேகா ஆகாசும். இருவரும் பள்ளிக்காலத்தில் இருந்தே நண்பர்கள். காதலர்களாகவும் மாறுகிறார்கள். இருவரது காதலையும் அவர்களது குடும்பங்கள் ஏற்றுக்கொள்கின்றன. காளிதாஸ் அரியர்களை முடித்துவிட்டு வேலைக்கு சேர்ந்ததும் திருமணம் செய்துவைப்பதாக உறுதி கூறுகிறார்கள்.

இந்நிலையில் மேகா ஆகாஷ் கர்ப்பமாகிறார். காளிதாசுடன் இணையாமலேயே மேகா ஆகாஷ் கர்ப்பமானது எப்படி? இது அறிவியலா? ஆன்மீகமா? மூட நம்பிக்கையா? இன்னும் பல கேள்விகளுக்கு சுவாரசியமாக பதில் தருகிறது படம்.

சற்று பிசகினாலும் ஆபாசமாகி விடும் ஒரு கதைக்களத்தை கையில் எடுத்து அதில் சிறிதுகூட ஆபாசம் இல்லாமல் குடும்பத்துடன் பார்த்து சிரித்து ரசிக்கும் படமாக இயக்குனர் பாலாஜி தரணிதரன் கொடுத்து இருக்கிறார். படம் தொடங்கியது முதல் இறுதிக்காட்சி வரை நம்மை படத்துடன் பின்னி பிணைத்து ரசிக்க வைக்கிறார். முக்கிய காட்சிகளை வசனங்கள் இல்லாமல் காட்சிமொழி மூலம் உணர்த்தும்போது பாலாஜியின் திறமை பளிச்சிடுகிறது.

மேகா ஆகாஷ் கர்ப்பமானதை வீட்டில் சொல்லும் காட்சி அதற்கு உதாரணம்.
காளிதாஸ் ஜெயராமும் மேகா ஆகாசும் பாலாஜி தரணிதரனின் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர். எந்த காட்சியிலும் நடிகர்களாக தெரியவே இல்லை. இரு தரப்பு பெற்றோர்களும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு பொருந்துகிறார்கள். கடவுளாக மாறும் அந்த குழந்தையும் சிறப்பான நடிப்பு.

கோவிந்த் வசந்தாவின் இசை படத்துக்கு விறுவிறுப்பை கூட்டி இருக்கிறது. பிரேம்குமாரின் ஒளிப்பதிவும் படத்துக்கு வண்ணம் கூட்டியுள்ளது. பாலாஜி தரணிதரனுடன் இணைந்து திரைக்கதை, வசனம் எழுதிய மரியாவும் பாராட்டப்பட வேண்டியவர்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் எப்போது பார்த்தாலும் சிரித்து ரசிக்க வைக்கும் படம். அதே போன்ற ஒரு அற்புத படைப்பை ஒரு பக்க கதை மூலம் கொடுத்து மீண்டும் தன்னை அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் பாலாஜி தரணிதரன்.
மொத்தத்தில் ‘ஒரு பக்க கதை’ சுவாரஸ்யம்.