பழம்பெரும் பாலிவுட் நடிகர் ரிஷிகபூரின் மகன் ரன்பீர் கபூர், மகேஷ் பட்டின் மகள் ஆலியா பட்.
இரு வாரிசுகளும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலில் விழுந்தனர், ரன்பீர் கபூர், கேத்ரினா கைபையும், ஆலியா பட் சித்தார்த்த் மல்கோத்ராவையும் காதலித்தனர்.
இந்த காதல் கடந்து போக பின்னர் வாரிசுகள் இருவரும் காதலித்தனர். பிரமாஸ்திரா படத்தில் இணைந்து நடித்தபோது தான் இருவரும் காதலில் விழுந்தார்கள்.
இருவரும் பொது நிகழ்ச்சிகளுக்கு சேர்ந்தே வந்து சென்றார்கள், பார்ட்டிகளில் ஒன்றாக கலந்து கொண்டார்கள்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரன்பீர் கபூர் வீடு அருகிலேயே ஆலியாபட்டும் சொந்தமாக வீடு வாங்கி குடிசென்றார். ஆனாலும் இருவரும் தங்கள் காதலை வெளிப்படையாக சொல்லவில்லை.
இந்த நிலையில் தற்போது ரன்பீர் கபூர், ஆலியாபட் உடனான தனது காதலையும், கல்யாணத்தையும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
டி,வி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரன்பீர் கபூர் , நிகழ்ச்சி தொகுப்பாளர் திருமணம் குறித்த கேள்வி கேட்டபோது விரைவில் காதலி ஆலியா பட்டை திருமணம் செய்ய இருப்பதாக கூறியுள்ளார்.
பிரபல தொலைக்காட்சியான விஜய்யின் பாரதி கண்ணம்மா என்ற சீரியல் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தமிழில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் TRPல் இரண்டாம் இடத்தில் இந்த சீரியல் உள்ளது. இந்த சீரியலில் சௌந்தர்ய லட்சுமி என்ற பெயரில் ஒரு குட்டிப் பெண் நடிக்கிறார்.
அவர் யார் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது. பிரபல சீரியல் நடிகரான ஷியாமின் இரண்டாவது மகள் தான் இவர்.
இந்த குட்டி குழந்தை இதற்கு முன் சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தில் சின்ன வேடத்தில் நடித்திருக்கிறார்.
அதேபோல் ஷியாமின் முதல் மகள் இதற்கு முன் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்திருக்கிறார், தற்போது செந்தூரப்பூவே என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
விஷால் நடித்து தயாரித்து வரும் ’சக்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை விரைவில் முடித்து இன்னும் ஒரு சில மாதங்களில் வெளியிட விஷால் திட்டமிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’சக்ரா’ படத்தின் பின்னணி இசையை கிட்டத்தட்ட யுவன்சங்கர்ராஜா முடித்து விட்டார் என்றும் அவர் இந்த படத்தில் ஒரு மியூசிக்கல் மேஜிக் செய்துள்ளார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை அமைக்கும் வீடியோ ஒன்றும் இன்று வெளியாகியுள்ளது.
யுவன்ஷங்கர் ராஜா பின்னணி இசையை கம்போஸ் செய்யும் காட்சிகள் அந்த வீடியோவில் ஒரு சில வினாடிகளே உள்ள நிலையில் இந்த வீடியோவில் உள்ள இசையிலிருந்து இந்த படத்தில் யுவன் எந்த அளவுக்கு பெஸ்ட் பின்னணி இசையை கொடுத்து இருப்பார் என்றும் அறிய முடிகிறது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விஷால், ஷராதா ஸ்ரீநாத், ரெஜினா, சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை எம்எஸ் ஆனந்தன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் தியாகு படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வருகின்றனர் என்பதும் விரைவில் இருவரும் திருமணம் செய்ய உள்ளனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். இதுகுறித்த புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அலங்கரிக்கப்பட்ட அறை ஒன்றில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நயன்தாரா அட்டகாசமான கவர்ச்சி உடையில் இருக்கும் இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்து வரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி நடித்த ’விக்ரம் வேதா’ என்ற திரைப்படம் 2017 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதியின் திரையுலக வாழ்வில் பெற்ற மிகப்பெரிய வெற்றி இந்த படம்தான் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் இந்த படம் கடந்த சில வாரங்களாக ஹிந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்தன. ஹிந்தியில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த தேர்வுகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாதவன் நடித்த போலீஸ் கேரக்டரில் சயிப் அலிகான் நடிக்க இருப்பதாகவும், விஜய் சேதுபதி நடித்த கேங்க்ஸ்டர் கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும் ஷ்ராதா ஸ்ரீநாத், கதிர், வரலட்சுமி உள்பட மற்ற கேரக்டர்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் தமிழில் இந்த படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி தான் ஹிந்தியில் இயக்க உள்ளனர் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடுமையான போட்டியாளர்களில் ஒருவராக இருந்த அர்ச்சனா கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே. டாஸ்குகள் உள்பட அனைத்திலும் ஈடுபாட்டுடன் அவர் இருந்தாலும் அவர் பைனல் வரை செல்லாததற்கு முக்கிய காரணம் அன்பு குரூப் ஆரம்பித்ததே என்றும் அன்பு என்ற ஸ்டாட்டர்ஜியை வைத்து அவர் மற்ற போட்டியாளர்களை டார்கெட் செய்ததாகவும், ஒருசில போட்டியாளர்களின் தனித்தன்மை வெளியே தெரியாமல் இருப்பதற்கு காரணமாக இருந்தார் என்பதும் பலரது குற்றச்சாட்டாக உள்ளது
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியை முதலில் இருந்து அனைத்து எபிசோடுகளையும் பார்த்த அர்ச்சனா அதில் ரசிகர்களின் ஒரு சில கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
அவ்வாறு ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும்போது ’ஐயோ வேண்டாம் சாமி.. நான் இப்போது எனது வீடு என்ற சொர்க்கத்தில் இருக்கிறேன்’ என்று பதில் சொல்கிறார். இந்த பதிலுக்கு ரசிகரின் கேள்வி என்னவெனில், ‘நீங்கள் எப்போது மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக செல்வீர்கள்? என்பது தான்.
மேலும் இன்னொரு ரசிகர் ’ஆரி தான் டைட்டில் வின்னர்’ என்று கூறியபோது ’நன்றி நானும் அதையே விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார். மேலும் தந்தை இறந்தது குறித்த வாக்குவாதத்தில் அர்ச்சனா மற்றும் நிஷா இருவரும் ’சாரி அப்பா’ என்று அப்பாவிடம் விண்ணை நோக்கிக் கூறிய புகைப்படத்தை பதிவு செய்து கிண்டலாக கமெண்ட் பதிவு செய்த ஒருவருக்கு, ‘என்னுடைய தந்தையின் இழப்பு உங்களுக்கு கிண்டலா? என் தந்தை மேலே இருந்து உங்களுக்கு ஆசிர்வாதம் செய்வார்’ என்று கூறினார்.
மேலும் வெளியில் வந்தும் அன்பு குரூப் மீண்டும் இணைந்துள்ளது என்றும், அர்ச்சனா என்பவர் மீது நான் தனிப்பட்ட மதிப்பு வைத்திருந்தேன் என்றும் ஆனால் பிக்பாஸ் வீட்டில் அவரது விளையாட்டை பார்த்து நான் அவரை ரொம்ப வெறுக்கிறேன் என்றும் ஒரு ரசிகர் கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த அர்ச்சனா ’உங்கள் கருத்துக்கு நன்றி, ஆனால் அதே நேரத்தில் வெறும் 67 மணி நேரத்தில் என்னுடைய கேரக்டரை நீங்கள் எப்படி முடிவு செய்யலாம்? என்று கூறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் ஜீ டிவியிலேயே அர்ச்சனா இருந்திருக்கலாம் என்று கூறிய ரசிகர் ஒருவருக்கு பதிலளித்த அர்ச்சனா ’எப்போதும் நான் எடுத்த முடிவில் இருந்து பின் வாங்கியது இல்லை என்றும் நான் இப்போதும் சரியான முடிவைத்தான் எடுத்து இருக்கின்றேன் என்று கூறியுள்ளார்.
சீயான் விக்ரம் நடித்து வரும் ‘கோப்ரா’ படத்தின் அப்டேட்களை விக்ரமின் ரசிகர்கள் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்கள் மூலம் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று சற்றுமுன் கிறிஸ்துமஸ் விருந்தாக ‘கோப்ரா’ படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது
ஏற்கனவே ‘கோப்ரா’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் 8 கெட்டப்புகளில் வித்தியாசமான தோற்றங்களில் சீயான் விக்ரம் இருந்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள இரண்டாவது லுக்கில் உடலின் ஒரு பகுதி எழுத்துக்கள் போலவும் மற்றொரு பகுதி மனித உடல் போலவும் இருக்கும் வித்தியாசமான ஸ்டில் வெளியாகி உள்ளது. இந்த ஸ்டில் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது
விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கும் இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மான் அவர்கள் இசையமைத்துள்ள இந்த படத்தை அஜய்ஞானமுத்து இயக்கியுள்ளார்
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கும் ஆரி, தமிழில் உருவாகும் முதல் இலுமினாட்டி படத்தில் நடிக்கிறார்.
கமல் தொகுத்து வழங்கி வரும் ‘பிக் பாஸ்’ 4-ல் போட்டியாளராக இருக்கிறார் நடிகர் ஆரி. அவருக்கு ஆதரவு, எதிர்ப்பு என ஒரே சேர சமூக வலைதளத்தில் எதிரொலித்து வருகிறது. இதனிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி நடித்து வரும் பகவான் படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அம்மன்யா மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் பகவான் படத்தில் ஆரி அர்ஜுனன், பூஜிதா பொன்னாடா, ஆடுகளம் நரேன், யோக் ஜேபி, ஜெகன், முருகதாஸ், டெல்லிகணேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். காளிங்கன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தின் 80% படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து ஆரி திரும்பியவுடன், இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. தமிழில் உருவாகும் முதல் இலுமினாட்டி படம் என்று படக்குழு தெரிவித்துள்ளது. தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
எனிமி படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்து வரும் ஆர்யா, அடுத்ததாக பிரபல நடிகரின் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளாராம்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் வில்லனாக நடிக்க முதலில் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருந்தார். பின்னர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் விலகினார்.
இதையடுத்து அந்த கதாபாத்திரத்தில் மாதவன் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதை அவர் திட்டவட்டமாக மறுத்தார்.
இந்நிலையில், புஷ்பா படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் ஆர்யா ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா தயாரிக்கும் குழந்தைகள் படத்தில் நடிக்க உள்ள அருண் விஜய் மகனுக்கு கூத்துப்பட்டறையில் ஒரு மாத காலம் பயிற்சி அளிக்கப்பட்டதாம்.
நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தரமான குடும்ப படங்களை தயாரித்து வருகிறது. இந்தப்பட நிறுவனம் அடுத்து குழந்தைகள் படத்தை தயாரிக்கிறது. இதில், நடிகர் விஜய குமாரின் பேரனும், நடிகர் அருண் விஜய்யின் மகனுமான ஆர்னவ் விஜய் கதை நாயகனாக நடிக்கிறான்.
அவனுக்கு 9 வயது ஆகிறது. 3-ம் வகுப்பு படிக்கிறான். சூர்யா தயாரிக்க, சரோவ் சண்முகம் இயக்குகிறார். படத்தை பற்றி அவர் கூறியதாவது: “தமிழ் சினிமாவை பொறுத்தவரை குழந்தைகள் படம் மிக அரிதாகவே தயாரிக்கப்படுகின்றன.
சூர்யாவின் 2டி நிறுவனம் அழகான கருத்துள்ள படங்களையே தயாரித்து வருகிறது. அந்த வகையில், இது குடும்பங்கள் ரசிக்கும் படமாக இருக்கும். ஆர்னவ் விஜய்யை திரையுலகுக்கு அறிமுகம் செய்வதில், மகிழ்ச்சி அடைகிறேன். இது, என் மனதுக்கு நெருக்கமான படம்.
ஒரு சிறுவனுக்கும், அவனது நாய்க்குட்டிக்கும் இடையே உள்ள அழகான உறவை வெளிப்படுத்தும் படமாக இருக்கும்.மொத்த கதையும் ஊட்டி பின்னணியில் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. படத்தில் நடிப்பதற்காக ஆர்னவ் விஜய்க்கு கூத்துப்பட்டறையில், ஒரு மாத காலம் பயிற்சி அளிக்கப்பட்டது”. இவ்வாறு அவர் கூறினார்.