தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார், மீண்டும் பிரபல இயக்குனருடன் இணைய இருப்பதாக கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். இவரது நடிப்பில் சமீபத்தில் டேனி, கன்னிராசி திரைப்படங்கள் வெளியானது. தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காட்டேரி’ திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தில் டிசம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
யாமிருக்க பயமேன், கவலை வேண்டாம் படங்களை இயக்கிய டீகே ‘காட்டேரி’ படத்தை இயக்கியுள்ளார். இதில் வரலட்சுமியுடன் வைபவ், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், ஆத்மிகா, சோனம் பஜ்வா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
இப்படம் குறித்து வரலட்சுமி மாலைமலருக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, காட்டேரி திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. தியேட்டரில் எல்லோரும் ரசிக்கும் விதமாக டீகே இயக்கி இருக்கிறார்.
நான் இந்த படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளமே மிகவும் ஜாலியாக இருந்தது. இயக்குனர் டீகே, கதை சொன்ன விதமும், எடுத்த விதமும் எனக்கு பிடித்தது. டீகே இயக்கும் அடுத்த படத்திலும் நான் நடிப்பேன் என்று கலகலப்பாக கூறினார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ள ஆண்ட்ரியா, அப்படக்குழு மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். மேலும் ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
சில தினங்களுக்கு முன் ஆண்ட்ரியாவின் பிறந்தநாளன்று மாஸ்டர் படக்குழுவினர் ஆண்ட்ரியா-விஜய் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டனர். அதேபோல் மிஷ்கினின் பிசாசு 2 படக்குழுவும் ஆண்ட்ரியாவின் கேரக்டர் போஸ்டரை வெளியிட்டனர்.
இதில் பிசாசு 2 பட போஸ்டரை மட்டும் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ள ஆண்ட்ரியா, மாஸ்டர் படக்குழு வெளியிட்ட புகைப்படத்தை லைக் கூட செய்யவில்லை.
இதனை பார்த்த ரசிகர்கள் மாஸ்டர் படக்குழு மீது ஆண்ட்ரியா அதிருப்தியில் இருக்கிறாரா என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் ஆண்ட்ரியா கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்குத் திரையுலகத்தில் தற்போது பல ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருப்பவர் ராஷ்மிகா மந்தானா. கார்த்தி நடிக்கும் ‘சுல்தான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகிறார்.
விஜய், சூர்யா அடுத்து நடிக்க உள்ள படங்களில் கதாநாயகியாக நடிக்க வைக்க ராஷ்மிகாவிடம் பேசி வருகிறார்கள் என்ற தகவல் வெளியானது. ஆனால், அவரோ பாலிவுட் பக்கம் தாவ முடிவு செய்துவிட்டார்.
ஷாந்தனு பாக்ச்சி இயக்கத்தில் சித்தார்த் மல்கோத்ரா கதாநாயகனாக நடிக்கும் ‘மிஷன் மஜ்னு’ என்ற படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமாக உள்ளார் ராஷ்மிகா.
“நண்பர்களே, உங்களுக்கு ஒரு செய்தி, இதில் பங்கெடுப்பது மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தருகிறது.
ஒரு புதிய பயணம். பாகிஸ்தானுக்குள் ‘ரா’வின் துணிச்சலான மிஷன், நிஜ சம்பவங்களின் தாக்கத்தால் உருவாகும் ‘மிஷன் மஜ்னு’ என தனது டுவிட்டர் பதிவில் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார் ராஷ்மிகா.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய், இவரது நடிப்பில் இறுதியாக பிகில் திரைப்படம் வெளியானது. தற்போது பொங்கலுக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இதனை அடுத்து முருகதாஸ் விஜய் படத்தை இயக்குவார், சுதா கொங்கரா விஜய் படத்தை இயக்குவார், வெற்றிமாறன் விஜய் படத்தை இயக்குவார், அருண் காமராஜ் விஜய் படத்தை இயக்குவார் என பல பெயர்கள் அடிபட்டு வந்தாலும் விஜய் டிக் செய்த டைரக்டர் கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய வளர்ந்து வரும் நெல்சன் அவர்கள்தான்.
தற்போது அதிகம் பேட்டி கொடுக்காத விஜய் ஒரு காலத்தில் இவர் பேட்டி கொடுக்காத சேனல்களே இருக்காது. இந்த நிலையில் Industryக்கு வந்த புதிதில் ஒரு முன்னணி சேனலில் கொடுத்த பேட்டி ஒன்றில், அவரது முந்தைய காதலை பற்றி பல சுவாரஸ்ய விஷயங்களை கூறினார்.
அதில், “நான் 8ஆம் வகுப்பு படிக்கும் பொழுது ஒரு பெண்ணை காதலித்தேன். அதன்பின் 12ஆம் வகுப்பிலும், கல்லூரியிலும் காதலித்தேன். எனக்கு காதல் தோல்விகள் இருக்கிறது”
இவ்வளவு கூறிய அவர் அந்த பெண்களின் பெயரை கூற மறுத்துவிட்டார். இதற்கிடையில் சினிமா துறைக்கு வந்த புதிதில் நடிகை சங்கவியை காதலித்தார் தளபதி என்பது கூடுதல் தகவல்.
மஹா படம் குறித்து நடிகை ஹன்சிகா மோத்வானி முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.
தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்தார். ஹோம்லி லுக்கில் வந்த ஹன்சிகா நாள்டைவில் கிளாமர் லுக்கிற்கு மாறி ரசிகர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டார்.
மாப்பிள்ளை படத்தைத் தொடர்ந்து, வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, பிரியாணி, மான் கராத்தே, அரண்மனை, ரோமியோ ஜூலியட், புலி, வாலு, மனிதன், போகன், குலேபகாவலி, துப்பாக்கி முனை, 100 என்று வரிசையாக தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
தற்போது மஹா என்ற படத்தில் நடித்துள்ளார். யுஆர் ஜமீல் இயக்கத்தில், எட்ஸெட்ரா எண்டர்டெயிமென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வாலு படத்திற்குப் பிறகு சிம்பு மற்றும் ஹன்சிகா இருவரும் இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
சிம்பு சிறப்புத் தோற்றத்தில் அதுவும் பைலட்டாக நடித்துள்ளார். மேலும், ஸ்ரீகாந்த், தம்பி ராமய்யா, சனம் ஷெட்டி ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். கொரோனா லாக்டவுன் காரணமாக இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
அதன் பின்னர், படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு அனைத்து காட்சிகளை விறுவிறுப்பாக எடுத்து முடித்துவிட்டது. தற்போது படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இது குறித்து ஹன்சிகா டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இது என்னுடைய 50ஆவது படம் மஹா.
இப்படத்தில், என்னுடைய தனித்துவமான பயணம் இது. இதயப்பூர்வமாகவும், ஆத்மார்த்தமாகவும் என்னுடன் நடித்த சக நடிகர்கள், படக்குழுவினர், தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இப்படம் உருவாகும் விதம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
போஸ்ட் புரோடக்ஷன் பணிகளைத் தொடர்ந்து மஹா படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஹா படம் கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
மஹா படத்திற்குப் பிறகு ஹன்சிகாவிற்கு எந்தப் படமும் கைவசம் இல்லை. முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகா தற்போது வாய்ப்பில்லாமல், தினந்தோறும் தனது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருவதில் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
Its been a phenomenal journey with my 50th film #Maha. I thank my crew, co-stars, producer for investing their heart and soul into the film. Postproduction work is in full swing and I am extremely happy with the way it’s shaping up. @malikstreams@MathiyalaganV9@dir_URJameel
வரும் 31 ஆம் தேதி தனது அ ர சி யல் க ட் சி குறித்து அறிவிக்க உள்ள நிலையில், அண்ணாத்த படத்திற்காக ரஜினிகாந்த் அதிக நேரம் பணியாற்றி வருகிறார் என்று தகவல் வெளிவந்துள்ளது. சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் சூப்பர் படம் அண்ணாத்த.
ரஜினிகாந்த் மற்றும் சிறுத்தை சிவா இருவரும் இணையும் முதல் படம் அண்ணாத்த என்பதால், இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே அதிக எ திர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி ஆகியோர் உள்பட பலர் நடிக்கின்றனர்.
நாடு முழுவதும் தா க் க த்தை ஏ ற்படுத்திய கொரோனாவுக்கு முன்னதாகவே அண்ணாத்த படத்தை 40 சதவிகிதம் முடித்துவிட்டனர். வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் க ட் சி தொ ட ங்கி அ ர சி ய லில் மு ழு வீ ச் சில் ஈடுபட இருப்பதால், அதற்கு முன்னதாக அண்ணாத்த படத்தில் தனது காட்சிகள் முழுவதையும் படமாக்கிவிட வேண்டும் என்று படக்குழுவினரை அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் நடக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அவருடன் இணைந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் கலந்து கொண்டுள்ளார். தொடர்ந்து நடிகைகள் மீனா மற்றும் குஷ்பு ஆகியோரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றுள்ளனர்.
ரஜினியின் மனைவியாக நயன்தாராவும், சகோதரியாக கீர்த்தி சுரேஷும் நடிப்பதாக கூறப்படுகிறது. தினந்தோறும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து 14 மணி நேரம் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் பங்கேற்று வருவதால், ஏற்கனவே திட்டமிட்டதை விட படு வேகமாக ஒவ்வொரு காட்சிகளும் படமாக்கப்பட்டுவருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், வரும் 30 ஆம் தேதி சென்னை திரும்பும் ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்தபடி 31 ஆம் தேதி அ ர சி யல் க ட் சி கு றித்து அறிவிப்பு வெளியிடுகிறார். அதன் பிறகு மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு தனது காட்சிகளை முடிக்க திட்டமிட்டுள்ளார்.
பொங்கல் பண்டிகையை முடித்த பிறகு, அரசியல் கட்சி, பெயர், கொள்கைகள் குறித்து அறிவித்துவிட்டு முழுவீச்சில் தனது அ ர சி ய ல் ப ய ணத்தை ரஜினிகாந்த் மேற்கொள்வார் என்று எ திர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு கேரள எல்லையில் அமைந்துள்ள அட்டப்பாடியில் பிரபல மலையாள சினிமா இயக்குனர் ஷாநவாஸ் மூளைச்சாவு அடைந்தார்.
மலையாள சினிமாவில் எடிட்டராக கால் பதித்தவர் ஷாநவாஸ். ஏராளமான மலையாள சினிமாவில் எடிட்டராக பணிபுரிந்த இவர், கடந்த சில வருடங்களுக்கு முன் முதன்முதலாக கரி என்ற படத்தை இயக்கினார்.
இந்தப் படம் தோல்வியடைந்தாலும் சினிமா விமர்சகர்களின் ஆதரவு கிடைத்தது. இந்நிலையில் பிரபல நடிகர் ஜெயசூர்யாவை நாயகனாக வைத்து சூபியும் சுஜாதயும் என்ற பெயரில் ஒரு படத்தை இவர் இயக்கினார்.
இந்த சமயத்தில் தான் கொரோனா பரவல் காரணமாக லாக் டவுன் அமலுக்கு வந்தது. இதையடுத்து இந்த படத்தை ஓடிடியில் வெளியிடத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு மலையாள சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் க டு ம் எ தி ர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் அந்த எ தி ர்ப்பையும் மீ றி இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் இந்தப் படத்தின் இயக்குனர் ஷாநவாஸ் தனது அடுத்த படத்திற்காகக் கதை எழுதும் பணியில் தீ வி ரமாக ஈடுபட்டிருந்தார்.
இதற்காக பாலக்காடு அருகே உள்ள அட்டப்பாடி என்ற இடத்தில் இவர் தங்கியிருந்தார். கடந்த சனிக்கிழமை இரவு தி டீ ர் மா ர டை ப்பு ஏ ற்பட்டது. இதையடுத்து அவரை உடனடியாக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்குத் தீ வி ர சி கிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை 9 மணியளவில் இயக்குனர் ஷாநவாஸ் மூளைச்சா வு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கும்பகோணத்தில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் சந்தானம்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அதன் பிறகு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, சக்கபோடு போடு ராஜா, ஏ1, டகால்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அண்மையில், சந்தானம் நடிப்பில் பிஸ்கோத் படம் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் டிக்கிலோனா படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் சந்தானத்துடன் இணைந்து ஹர்பஜன் சிங், அனாகா, ஷெரின் காஞ்ச்வாலா, யோகி பாபு, ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, முனீஷ்காந்த், ராஜேந்திரன், ஷா ரா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். விரைவில் டிக்கிலோனா படம் திரைக்கு வரயிருக்கிறது.
இதே போன்று பாரிஸ் ஜெயராஜ் படமும் திரைக்கு வர தயாராகியுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சந்தானம் அறிமுக இயக்குநர் ஆர் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று கும்பகோணத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அப்பாவுக்கும், மகனுக்கும் உள்ள உறவை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்படுகிறது.
மேலும், அரசியல் சார்ந்த சில டுவிஸ்டுகளும் இந்தப் படத்தில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. எம் எஸ் பாஸ்கர் சந்தானத்தின் அப்பாவாக நடிக்கிறார். புதுமுக நடிகை இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். சாம் சி எஸ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
கும்பகோணம், திருச்சி, சென்னை ஆகிய பகுதிகளில் இந்தப் படம் படமாக்கப்படுகிறது. இந்தப் படம் குறித்து இயக்குநர் ஸ்ரீனிவாசன் கூறுகையில், சந்தானம் தான் இந்தக் கதைக்கு கச்சிதமாக பொருந்தியிருந்தார். காமெடி கலந்த படமாக இருந்தாலும், அப்பாவுக்கும், மகனுக்கும் இடையில் நடக்கும் கதை எனினும், ரசிகர்களிடையே உணர்ச்சி ரீதியான தொடர்பை கொண்டிருக்கும் என்று கூறியுள்ளார்.
மிலந்த் ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள நெற்றிக்கண் படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தையும் விக்னேஷ் சிவன் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வருகிறார். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து, இதர நடிகர்கள் நடித்த நல்ல படங்களையும் வாங்கி வெளியிட விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி முடிவு செய்துள்ளது.
முதலில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ராக்கி படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து யுவன் இசையமைப்பில் உருவாகியுள்ள கூழாங்கல் படத்தின் உரிமையைக் கைப்பற்றியுள்ளது விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி. இது தொடர்பாக விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
மிக அரிதான ஒரு நாள்தான். ஒரு படைப்பைப் பார்த்து வியந்து, நாம் இருக்கும் துறையை நினைத்துப் பெருமைகொள்ளும் எண்ணம் தோன்றும். அப்படி ஒரு நாளாக, இறுதிக்கட்டப் பணிகளில் இருந்த கூழாங்கல் எனும் திரைப்படத்தைப் பார்த்தபோது தோன்றியது. கூழாங்கல் பி.எஸ்.வினோத்ராஜின் முதல் படம். தலைப்பைப் போலவே படம் மிக எளிமையாக இருந்தாலும், அது எங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது.
முழுக்க முழுக்க திறமையான புதுக் குழுவினராலும் நடிகர்களாலும் இயக்குனராலும் உருவான இத்திரைப்படத்தைப் பார்த்து பாராட்டுகளோடு மட்டும் நிற்காமல், தன்னுடைய பின்னணி இசையால் கூழாங்கல்லின் ஆன்மாவை மீட்டெடுத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. இப்படத்தின் மூலமாக எங்களுக்குக் கிடைத்த திரை அனுபவத்தை நம் மக்கள் அனைவருக்கும் வழங்குவது மட்டுமல்லாது, சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கொண்டு செல்வது என முடிவு செய்து இப்படத்தின் முழு தயாரிப்பைப் பொறுப்பேற்றுள்ளோம்.
உங்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் இத்திரைப்படத்தை உங்களுக்காக வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இவ்வாறு ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், கூழாங்கல் படத்தின் உரிமையைக் கைப்பற்றியிருப்பது தொடர்பாக விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிஎஸ் வினோத் ராஜ் இயக்கிய இந்தத் தரமான படத்தைத் தயாரித்ததில் மகிழ்ச்சி.
நயன்தாரா, தனித்துவமான கதைகளைத் தேர்ந்தெடுத்து, தயாரித்து, வழங்க வேண்டும் என்கிற உங்கள் எண்ணம் எனக்கு மகிழ்ச்சியையும், ஆர்வத்தையும் தருகிறது. திரைப்பட விழாக்களில் நமக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கட்டும். நன்றி யுவன் சார் என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் நிழல் என்ற மலையாள படத்தின் படப்பிடிப்பை முடித்த நயன்தாரா, தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்த பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடிக்கும் காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறார் விக்னேஷ் சிவன்.
Happy to have Produced this Gem of a movie made by @PsVinothraj 😇😇#Nayanthara your selection of unique stories to produce & present makes me feel happy & excited 😌🥳🥳😇