பிக்பாஸ் 4 : டாஸ்க் முடிவுகளை வரிசைப்படுத்தும் போது ஆரியுடன் சண்டை போட்ட ரியோ !

பிக்பாஸ்..

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இந்த வாரம் பால் கேட்ச் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கும் டிவி முன்பு இருக்க வேண்டும் என்றும், யார் பெயர் டிவியில் காட்டப்படுகிறதோ, அவர் வேகமாக ஓடிச்சென்று வெளியில் பந்தை பிடிக்க வேண்டும். இதில் போட்டியாளர்கள் தனித்தனியாக பங்கேற்கலாம் என்பதால் எந்த வித பிரச்னையும் எழாது.

இன்னும் சில வாரங்களில் பிக் பாஸ் 4 முடிவு பெற உள்ள நிலையில் போட்டியாளர்களுக்கு மிகவும் கடினமான டாஸ்குகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதிலும் நேற்று தொடங்கிய பால் கேட்ச் டாஸ்க் இரவு முழுவதும் தொடர்ந்து நடந்தது. அதனால் போட்டியாளர்கள் தூங்காமல் கண்விழித்து பந்தை பிடிப்பதற்காக காத்திருந்தனர்.

அதனால் அவர்கள் பகலில் தூங்கிக்கொண்டு இருக்கின்றனர். அதை விமர்சிக்கும் வகையில் தூங்காதே தம்பி தூங்காதே பாடலும் இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் போடப்பட்டு உள்ளது. அதன் பின் பந்தை பிடிக்கும் டாஸ்க் முடிக்கப்பட்டு போட்டியாளர்களுக்கு வேறு ஒரு வில்லங்கமான டாஸ்க் வழங்கப்பட்டது.

இந்த டாஸ்கில் செயல்பட்ட விதத்தின் அடிப்படையில் போட்டியாளர்கள் விவாதித்து ஒன்று முதல் ஒன்பது வரை வரிசைப்படுத்திக்கொள்ள வேண்டும் என கூறப்பட்டது. அதனால் பிரச்சனை எதாவது வருமே என நீங்கள் எதிர்பார்ப்பது போலவே தான் நடந்தது.

சொன்னதை மீண்டும் சொல்ல மாட்டேன் என ரியோ சொல்ல அதற்காக ஆரி அவருடன் வாக்குவாதம் செய்கிறார். இதுக்கு பேரு தான் கார்னர் என ஆரி பற்றி புகார் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றுவிடுகிறார் ரியோ. ஆரி மற்றும் ரியோ இடையே தொடர்ந்து இது போன்ற சண்டைகள் அதிகம் வருவதாக கமெண்ட் செய்து வருகின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள்.

மீண்டும் உயிர் பெற்ற சிலம்பரசன் படம் ! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சிம்பு..

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனில் 25 கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைத்து தன்னுடைய பழைய தோற்றத்திற்கு மாறினார் சிம்பு. சிம்புவின் இந்த மாற்றத்தை பார்த்த ரசிகர்கள் பெரு மகிழ்ச்சியடைந்தனர். தற்போது சிம்பு நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த சுவையூட்டும் செய்தியை கொண்டாடி வருகின்றனர் சிலம்பரசன் ரசிகர்கள்.

கடந்த 2017-ம் ஆண்டு நார்த்தன் இயக்கத்தில் கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் முஃப்டி. போலீசாக ஸ்ரீ முரளி, டான் கதாபாத்திரத்தில் சிவ ராஜ்குமார் மிரட்டியிருப்பர். அதே படத்தினை தான் நம் ஊருக்கு ஏற்றது போல மாற்றி ரெடி செய்தார் இயக்குனர். ஸ்டுடியோ க்ரீன் சார்பில் கே.இ. ஞானவேல் ராஜா தயாரித்த இப்படத்தில் போலீஸ் வேடத்தில் கவுதம் கார்த்திக்கும், ரவுடி ரோலில் சிம்பு நடிக்க ஷூட்டிங் துவங்கியது.

எனினும் சிம்பு சரியாக படப்பிடிப்புக்கு வருவதில்லை, தயாரிப்பு நிறுவனத்துடன் மோதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இணையத்தில் கிளம்பியது. இது போன்ற விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தரமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால், முதலில் படத்தை இயக்கிய நார்த்தன் மாற்றப்பட்டு சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்க உள்ளாராம்.

நாளை 24ம் தேதி படத்தின் தலைப்பை அறிவிக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள். கேப்டன் ஆப் தி ஷிப், அதாவது இயக்குனர் கிருஷ்ணா சிம்புவை எப்படி திரையில் காண்பிப்பார் என்ற ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள்.

சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து உருவான ஈஸ்வரன் திரைப்படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை 7G பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது என்றும், ஓவர்சீஸ் உரிமையை AP இன்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்ற அப்டேட்டை சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் மாதவ் மீடியா கூறியிருந்தது.

இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தின் சென்னை படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார் சிம்பு. சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த வாரம் தொடர்ந்து சிம்பு படம் பற்றிய அப்டேட்டுகள் வந்து கொண்டிருக்கிறது. போடா போடி படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய தகவலும் நம் செவிகளுக்கு எட்டியது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் 4 : பால் கேட்ச் டாஸ்க்கின் புதிய பரிமாணம் ! போட்டியாளர்கள் அசத்தல் !

பிக்பாஸ் சீசன் 4..

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு வித்யாசமான ஒரு டாஸ்க் வழங்கப்பட்டது. வழக்கம் போல இதிலும் பல்வேறு பிரச்சனைகள் இருந்தன. இந்த வாரம் B for Ball, C for Catch என்ற புதிய டாஸ்க் வழங்கப்பட்டது. இதற்காக கார்டனில் ஒரு செட்டப் வைக்கப்பட்டு இருந்தது.

அதில் வரும் பந்துகளை பிடிக்க வேண்டும் என்றும், அதில் 5,10,20 மதிப்பெண்கள் என பந்தின் அளவை பொறுத்து மதிப்பெண் வழங்கப்படும். பந்து கீழே விழுந்துவிட்டால் அதற்கு முதல் சுற்றில் மதிப்பெண் இல்லை. இந்த டாஸ்க் நடக்கும்போது சண்டை வராமல் இருக்க இரண்டு அணிகளும் தங்களுக்கான இடத்தை உறுதி செய்ய நடுவில் ஒரு டேப் ஓட்டினார் பாலாஜி.

கேமை நேர்மையுடன் விளையாட இரண்டு தரப்பினரும் ஒப்புக்கொண்டு விளையாட துவங்கினர். இரண்டு அணிகளும் ஒப்புக்கொண்டு நடுவில் ஒரு மார்க் வைத்து Fair ஆகி விளையாடலாம் என ஆரம்பித்தனர். ஆனால் அதனாலேயே இரண்டு அணிகளுக்கும் நடுவில் பிரச்சனை எழுந்தது. அவர் தள்ளிவிட்டார், இவர் இடித்துவிட்டார் என தொடர்ந்து பஞ்சாயத்து நடந்தது. இரண்டு அணிகளும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லி கொண்டனர்.

முதல் சுற்றில் பந்துகளை நேராக பிடித்தால் மட்டும் தான் பாயிண்ட் என சொல்லப்பட்டது. கீழே விழுந்தால் அதற்கு புள்ளி இல்லை என சொல்லப்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டாவது சுற்று தொடங்கியது. அதில் கீழே விழும் பந்துகளுக்கும் மார்க் என சொல்லப்பட்டது. அதனால் இனி கீழே விழுந்த பந்தை எடுப்பதற்கு சண்டை வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம்போல அவர்களுக்கு உள்ளேயே ஒரு விதியை போட்டுக்கொண்டனர். இப்படி இரண்டு அணிகளும் விளையாடி கொண்டு இருந்த பொது சோம் மற்றும் ஆரி இடையே வாங்குவாதம் வெடித்தது.

அடுத்து புதிய சுற்று தொடங்கியபோது ரெட் பந்துகளை பிடித்தால் அல்லது தொட்டால் அந்த அணியின் மதிப்பெண்கள் பூஜ்யம் ஆக்கப்படும் என விதி போடப்பட்டது. முதல் சிவப்பு பந்தை பாலாஜி தொட்டுவிட்டதனால் அவர் அணியின் மதிப்பெண் பூஜ்ஜியம் ஆக்கப்பட்டது.

அதன் பின் இந்த டாஸ்க் இரவு முழுவதும் நடக்கும் என பிக் பாஸ் அறிவித்ததால் அனைவருக்கும் ஷாக் ஏற்பட்டது. இரண்டு அணியினரும் வெளியில் வந்து படுத்துவிட்டனர். ரியோ டீம் வெளியில் தூங்கி கொண்டு இருந்தபோது பாலாஜி டீம் அங்கு ஜாலியாக பாட்டு பாடி, காமெடி செய்து கலகலப்பாக இருந்தனர்.

இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், தூங்கிக்கொண்டிருந்த சோம் டாஸ்க் வரும் தருணத்தில் ஓடிச் சென்று பந்தை பிடிக்கிறார். LED-யில் போட்டியாளர்களின் பெயர் வந்துகொண்டிருக்க, பந்தை பிடிக்கச்செல்கின்றனர். ரம்யா பந்தை யார் பிடித்தது என்ற புதிய பிரச்சனையும் கிளம்புகிறது.

அப்போது தலைவா: இப்போது வெப் சீரிஸ்: போலீஸ் அதிகாரியாக கலக்கும் அமலா பால்!

அமலா பால்…

இயக்குநர் பவன் குமார் இயக்கத்தில் உருவாகும் பேண்டஸி வெப் சீரிஸ் ஒன்றில் அமலா பால் போலீஸ் அதிகாரியாக முக்கிய ரோலில் நடிக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை அமலா பால். விஜய், தனுஷ், ஆர்யா, ஜெயம் ரவி, சூர்யா, பாபி சிம்ஹா, அரவிந்த் சாமி ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில், கடைசியாக வெளியான படம் ஆடை.

உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல், நடித்த அமலா பாலின் ஆடை படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏராளமான கேமரா மேன்கள் முன்பு ஆடையில்லாமல் நடித்துள்ளார். என்னதான் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், இந்தப் படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது.

நீண்ட நாட்களாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அமலா பாலிற்கு தொடர்ந்து, தனது கிளாமரான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தற்போது அதோ அந்த பறவை போல, ஆடுஜீவிதம், கேடவர், லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது வெப் சீரிஸ் பக்கத்தில் தனது கவனத்தை திருப்பியுள்ளார். ஆம், கன்னடத்தில் பிரபல இயக்குநராக வலம் வரும் பவன் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் குடி யெடமைதே (Kudi Yedamaithe) என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 8 எபிசோடுகள் கொண்ட குடி யெடமைதே என்ற வெப் சீரிஸ் டைம் லூப்பை அடிப்படையாகக் கொண்டது என்று கூறப்படுகிறது.

குடி யெடமைதே என்ற வெப் சீரிஸில் நடிக்கும் அமலா பாலின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதிலும், போலிஸ் கதாபாத்திரத்தில் கலக்கும் அமலா பால் ரசிகர்களை வியக்க வைத்து வருகிறார். இதற்கு முன்னதாக தளபதி விஜய் நடித்த தலைவா படத்தில் போலீஸ் அதிகாரியாக கலக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெப் சீரிஸில் அமலா பால் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து நடிக்கும் ராகுல் விஜய் டெலிவரி பாயாக நடித்துள்ளார். ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வெப் சீரிஸ் பேண்டஸி த்ரில்லராக உருவாக்கப்பட்டுள்ளது.

வரும் ஜனவரி மாதம் படப்பிடிப்பை முடித்து விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்த வெப் சீரிஸ் தவிர இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கும் நெட்பிளிக்ஸ் ஆந்தாலஜி சீரிஸிலும் முக்கிய ரோலில் அமலா பால் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வைரலாக பரவும் பாலாஜியின் Love Album வீடியோ !

பாலாஜி…

பிக்பாஸ் வீட்டில் ஆரி தனித்திறமையுடன் எந்த குரூப்பிலும் இணையாமல் விளையாடி வருவதால் அவருக்கு வீட்டுக்குள்ளேயே எதிரிகள் அதிகமாகி வருகின்றனர்.

அதிலும் பாலாஜி, ரம்யா மற்றும் ஆஜீத்க்கு ஆரி என்று சொன்னால் போதும், உடனே இருக்கிற வேலையை விட்டுவிட்டு ஓடி வருவார்கள்.

இந்தநிலையில், காதல் விஷயத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் இருந்து பஞ்சம் இல்லாமல் இருந்து கொண்டே இருக்கிறது. அப்படித்தான் முதல் சீசனில் ஓவியா – ஆரவ். இரண்டாவது சீசனில் மஹத் – யாஷிகா, ஷாரிக் மற்றும் ஐஷ்வர்யா மற்றும் மூன்றாவது சீசனில் கவின் – லாஸ்லியா என பல காதல் கதைகளை பார்த்த மக்கள்,

இந்த சீஸனில் பாலாஜி மற்றும் ஷிவானியின் காதலை பார்க்கிறார்கள். ஆனால் எப்போதாவது ஷிவானி எனக்கு தங்கச்சி மாதிரி என்று சொல்லிவிட்டு இல்லாத சேட்டை எல்லாம் செய்கிறார்கள்.

பாலாஜி Big Boss வருவதற்கு முன்பு, Love Video Album ஒன்றில் நடித்து இருந்தார். அதில் அவர் 90 ML பட நடிகை பொம்முலக்ஷ்மியுடன் ஹாட் ஆக நடித்திருந்த வீடியோ தற்போது செம்ம வைரலாக பரவி வருகிறது.

அய்யப்பனுக்கு மாலை போட்ட சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் ! வா தலைவா ! வா தலைவா !

சிம்பு…

சிம்புனாலே பத்திரிகை காரனுக்கு சந்தோஷம்தான், தமிழ் சினிமாவில் சிறு வயதிலிருந்து இருப்பவர். இவரை சுற்றி எப்போதும் ஒரு வகை ச ர்ச்சை இருந்துக்கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் சிம்பு சமீப காலமாக ஒழுங்காக ஷுட்டிங் வருவதில்லை என பலரும் பு கார் கூறி வந்தனர்.

ஆனால், இப்போது எல்லாமே மாறிவிட்டது. சொல்லப்போனால், இந்த 2020 ஆம் ஆண்டு சிம்புவுக்கு மட்டும் நல்ல ஆண்டாக அமைந்து விட்டது.

இப்போது ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டு செம்ம மாஸாக ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், வெறித்தனமாக Share செய்து வருகின்றனர்.

மறுபுறமோ போட்டோ தான் வருது, படம் வர மாட்டேங்குது என புலம்பி வந்த ரசிகர்களுக்கு வரும் பொங்கலுக்கு முரட்டு தாண்டவ பொங்கல் ஈஸ்வரன் ட்ரீட் காத்து இருக்கிறது.

பாரதி கண்ணம்மா காவியா, முல்லை கதாபாத்திரத்தில் எப்படி இருக்கிறார் என்று பாருங்களேன் !

காவ்யா…

Vj சித்ரா வ ழ.க்கு, கொ.லை.யா, த.ற்.கொ.லை.யா என ஒருபுறம் சென்று கொ.ண்..டிருக்க, பாண்டியன் ஸ்டோர் சீரியல் இனி சித்ராவுக்கு பதிலாக யார் நடிப்பார்கள் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்திருந்தது.

மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் ஶ்ரீவித்யா அவர்கள் இன்ஸ்டாவில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “டிசம்பர் 23ம் தேதி முதல் நடிகை காவ்யா, பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லையாக நடிக்க உள்ளார்.

சித்துவுக்கு Replacement கிடையாது, ஆனால் முல்லை மாற்றப்படலாம், அதனால் காவ்யாவுக்கு ஆதரவு அளியுங்கள். மிஸ் யூ சித்து” என பதிவிட்டு உள்ளார்.

சித்து அளவுக்கு காவ்யாவிற்கு மக்களிடம் ஆதரவும், வரவேற்பும் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

காவியா இதற்கு முன் பாரதி கண்ணமா என்னும் சீரியலில் அறிவுமனி என்னும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றார்.

தன்னுடைய க.வ.ர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் ஹீரோயினுக்கு நிகராக இருப்பவர் காவியா.

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை வெளியிட்ட Video !

ஃபரினா..

தற்போது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் ஃபரினா.

அந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் கண்ணம்மாவை விட இவர் செம சூப்பராக இருப்பதாக ஏகப்பட்ட ரசிகர்கள் இவரைப் பற்றி கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அது தவிர, இவரது நடிப்பும் அந்த சீரியலில் நன்றாக இருப்பதால் அதற்கும் இவர் பாராட்டப்பட்டு வருகிறார்.

மேலும் இவர் சமூக வலைதளப் பக்கங்கள் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Hot video ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

அர்ச்சனாவிடம் அனிதா ரகசியமாக பேசியது என்ன? ஆரி சொல்ல வந்தது இதைத்தானா? கசிந்த வீடியோ!

அனிதா…

நேற்றுமுன்தினம் டாஸ்க் ஒன்றில் ஷிவானி ஆரியிடம் டிமோட்டிவேஷன் குறித்த ஒரு கேள்வி கேட்டபோது, அனிதா குறித்தும் அவரது கணவர் மற்றும் பெற்றோர் குறித்தும் ஆரி பேசிக் கொண்டிருந்தார். அப்போது இடைமறித்த அனிதா ’பிக்பாஸ் வீட்டில் விளையாடுபவர் நான் தான் என்றும், என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்கள், ஆனால் எனது அப்பா அம்மா மற்றும் கணவரை பற்றி பேசவேண்டாம் என்று கூறினார்

அனிதா அவ்வளவு தூரம் எதிர்ப்பு தெரிவித்தும் ஆரி அதற்கு விளக்கமளித்தார். இதை நானாகச் சொல்லவில்லை நீங்கள் சொன்ன ஒரு விஷயம்தான், அர்ச்சனாவிடம் நீங்கள் சொன்ன ஒரு விஷயத்தை தான் நான் இப்போது கூறுகிறேன் என்று ஆரி கூற,

அதனை ஒப்புக் கொள்ளாமல் அனிதா கொஞ்சம் கோபமாகவே கத்தி எனது பெற்றோர் மற்றும் கணவரை பற்றி பேசாதீர்கள் என்று மீண்டும் மீண்டும் கூறினார், இதனை அடுத்து ரம்யா, பாலா, ரியோ உள்பட பலர் அனிதாவுக்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து ஆரி தனது பேச்சை நிறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஆரி சொல்ல வந்தது என்ன என்பது குறித்த வீடியோ ஒன்று தற்போது கசிந்துள்ளது. அந்த வீடியோவில் அர்ச்சனாவின் மேல் படுத்துக்கொண்டு அழுது கொண்டே அனிதா கூறும்போது ’நான் நிறைய இந்த வீட்டில் சண்டை போட்டு விட்டேன், என்னுடைய அப்பா அம்மா ரொம்ப ஃபீல் பண்ணுவாங்க.

நீ ஏன் சண்டை போட்ட என்ற என்னுடைய வீட்டில் என்னை திட்டுவார்கள். சும்மாவே எங்க அப்பா யாரையும் காயப்படுத்த கூடாது என்று சொல்லுவார். ஆனால் நான் சண்டை போட்டதை பார்த்ததும் கண்டிப்பாக என்னை திட்டுவார் என்று அழுது கொண்டே கூறினார். அப்போது அர்ச்சனா அவரை கட்டிப்பிடித்துக்கொண்டு ஆறுதல் கூறுகிறார்

இந்த காட்சியை பார்த்துவிட்டு ஆரி, அனிதாவுக்கு டிமோட்டிவேஷன் இருக்கின்றது என்பதை கூற வந்தார் என்பதும் ஆனால் அவரை பேச விடாமல் அனிதா தடுத்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸில் இந்த வாரம் நாமினேட் ஆன போட்டியாளர்கள்.. அப்போ பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போவது இவர் தானா?

பிக் பாஸ்…

ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற சரியான காரணத்துடன், போட்டியாளர்களை நாமினேட் செய்ய சொல்வார் பிக் பாஸ்.

அந்த வகையில் இந்த வாரம் கொஞ்சம் மாறுபட்ட வகையில் ஓபன் நாமினேஷன் அனைவரின் முன்னாள் நடைபெற்றது. இதில் அஜீத், ஆரி, அனிதா, காபி, ஷிவானி என 5 போட்டியாளர்கள் இந்த வாரம் எவிக்ஷனுக்கு நாமினேட் ஆகியுள்ளனர்.

இதில் மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகள் பெற்று ஷிவானி வெளியேற பெரிதும் வாய்ப்புகள் அதிகம் என்று சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

பொறுத்திருந்து பார்ப்போம் வாரத்தின் இறுதி எபிசோடில் என்ன நடக்கிறது என்று.