இது முறையல்ல: அர்ச்சனாவின் மகளிடம் கேள்வியால் துளைக்கும் நெட்டிசன்கள்!

அர்ச்சனா மகள்…

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று முன்தினம் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் அர்ச்சனா வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அர்ச்சனாவின் 13 வயது மகளிடம் நெட்டிசன்கள் மு றையற்ற கே ள்வி கே ட் டது க டும் அ தி ர் ச்சியை ஏ ற் படுத்தியுள்ளது

அர்ச்சனாவின் மகள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தன்னுடைய அம்மாவை மிஸ் செய்வதாகவும் 70 நாட்களாக தன்னுடைய அம்மாவை பிரிந்து இருப்பதாகவும் பதிவு செய்திருந்தார்.

இதற்கு நெட்டிசன்கள் ’உங்கள் அம்மா இந்த வாரம் எவிக்ட் ஆகிவிட்டார், நீங்கள் இனிமேல் அவரை மிஸ் செய்ய மாட்டீர்கள் என்று ஒரு நெட்டிசனும், அன்பு ஜெயிக்கும்ன்னு நம்புரியா? இதை உங்க அம்மா கிட்ட கேளு’ என்று ஒருவரும், ‘கவலைப்படாத ஞாயிறு அன்று உங்கள் அம்மா வீட்டுக்கு வந்திருவாங்க என்று ஒருவரும், இன்னொரு நெட்டிசன் ’கடவுள் இருக்கான் குமாரு’ என்றும் கமெண்ட் செ ய்திருந்தனர்.

கடந்த சனிக்கிழமை அன்று ஆரி சேவ் செய்யப்பட்டார் என்று கமல்ஹாசன் கூறியதை அடுத்து க டு ப்பான அர்ச்சனா, இடைவேளையின்போது ரம்யா, பாலாஜி, ஷிவானி ஆகியோர்களிடம்

’கடவுள் இருக்கானா குமாரு’ என அர்ச்சனா ஆரி சேவ் செய்யப்பட்டது குறித்து விரக்தியுடன் கேள்வி கேட்டிருந்தார் என்பதும் இதனை கு த் திக்காட்டும் வகையில் அர்ச்சனா எவிக்ட் செய்யப்பட்டதும், ‘கடவுள் இருக்கான் குமாரு’ என நெட்டிசன்கள் அர்ச்சனாவை கிண்டல் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இருப்பினும் அர்ச்சனா மகளிடம் மு றையற்ற கேள்விகள் கேட்டு கி ண்டல் செய்து வரும் நெட்டிசன்களுக்கு ஒருசிலர் க ண் டனம் தெ ரிவித்துள்ளனர்.

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா நடந்து கொ ண்டதற்கு அவருடைய மகளிடம் இவ்வாறு கேள்வி கேட்பது எந்த விதத்தில் நியாயம் இல்லை என்றும், அவருடைய மகள் என்ன பாவம் செய்தார் என்றும் இதுபோன்ற முறையற்ற கேள்விகள் கேட்பதை இனிமேலாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்றும் பதிவு செய்து வருகின்றனர்.

க ட் டளையிட்டால் தே ர் த லில் போ ட் டியிடுவேன் – காயத்ரி ரகுராம்!

காயத்ரி ரகுராம்…

க ட் சி மே லி டம் க ட் டளையிட்டால் நான் தே ர் தலில் போ ட்டியிடுவேன் என்று நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் கூறியிருக்கிறார்.

ம றைந்த டான்ஸ் மாஸ்டர் ரகுராமின் மகள், காயத்ரி ரகுராம். இவரும் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிப் படங்களுக்கு நடனம் அமைத்திருக்கிறார்.

சார்லி சாப்ளின் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, பரசுராம், விசில், வை ராஜா வை, யாதுமாகி நின்றாய் உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். இப்போது அவர் நடித்துக்கொண்டே, டான்ஸ் மாஸ்டராகவும் பணிபுரிந்து வருகிறார்.

காயத்ரி ரகுராம் பா.ஜ ன தா க ட் சி யில் உ று ப் பினராக இருந்து வருகிறார். வருகிற ச ட் ட ச பை தே ர் தலில், பா.ஜ ன தா வுக்காக பி ர சா ரம் செ ய் ய மு டி வு செ ய் து இ ரு க் கி றார். இ துபற்றி அவர் கூறியதாவது:-

“வ ருகிற தே ர் தலில் பா.ஜ ன தா க ட் சி யி ன் வெ ற் றிக்காக த மிழ்நாடு மு ழுவதும் நான் பி ர சா ரம் செ ய் வேன். இ ந் தத் தே ர் தலில் பா.ஜ ன தா அ மோக வெ ற் றி பெ றும்.

க ட் சி மே லி ட ம் க ட் ட ளை யி ட் டால் நான் தே ர் த லில் போ ட்டியிடுவேன். வெ ற்றியும் பெ றுவேன். சினிமாவில் பணிபுரிந்து கொ ண் டே அ ர சி யலில் தொ டர்ந்து ஈடுபடுவேன்” இவ்வாறு அவர் கூறினார்.

ஹாலிவுட்டில் அறிமுகமாகும் விஷால் பட நடிகை!

நீது சந்திரா..

விஷால் படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை ஒருவர் ‘நெவர் பேக் டவுன்: ரிவால்ட்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்தி நடிகைகள் பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய், தபு, மல்லிகா ஷெராவத், தீபிகா படுகோனே, சப்னா ஆஸ்மி ஆகியோர் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளனர்.

மறைந்த பிரபல நடிகர் இர்பான்கானும் ஹாலிவுட் படத்தில் வந்தார். தற்போது தனுஷ் தி க்ரே என்ற ஹாலிவுட் படத்தில் கிரிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் ஆகியோருடன் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் நடிகை நீது சந்திராவும் நெவர் பேக் டவுன் படத்தின் நான்காம் பாகமாக உருவாகும் நெவர் பேக் டவுன்: ரிவால்ட் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்த படம் அதிரடி சண்டை காட்சிகளுடன் தயாராகிறது. நீது சந்திரா கராத்தே கற்றவர் என்பதால் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளனர். கெல்லி மார்டிசன் இயக்குகிறார். மைக்கேல் பிஸ்பிங், புரூக் ஜான்சன், ஒலிவியா பாபிகா ஆகியோரும் நடிக்கின்றனர்.

நீது சந்திரா, தமிழில் மாதவன் ஜோடியாக யாவரும் நலம் படத்தில் நடித்து பிரபலமானார். தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், ஆதிபகவன், சேட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

பேய் படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்!

காஜல் அகர்வால்…

யாமிருக்க பயமேன் பட இயக்குனர் டிகே இயக்கும் பேய் படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் கவுதம் கிச்சலு என்கிற தொழிலதிபருடன் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இவர் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா, தமிழில் கமலின் இந்தியன் 2 மற்றும் கல்யாண் இயக்கும் கோஸ்ட்டி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர யாமிருக்க பயமேன் பட இயக்குனர் டிகே இயக்கும் பேய் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்நிலையில், அந்த படத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் அவர் முதன்முறையாக காஜல் அகர்வாலுடன் ஜோடி சேர உள்ளார்.

இதுதவிர மேலும் இரண்டு ஹீரோயின்களும் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ரீமேக் படத்தில் ராணாவுக்கு ஜோடியாகின்றாரா ஐஸ்வர்யா ராஜேஷ்?

ராணா…

மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான படத்தின் ரீமேக்கில் ராணாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. சாஷி இயக்கிய இந்தப் படத்தில் அய்யப்பனாக பிஜூமேனனும், கோஷியாக பிருத்விராஜும் நடித்திருந்தனர்.

இரண்டு அதிகாரிகளின் இடையில் ஏற்படும் ஈகோ மோதலை யதார்த்தமாக எடுத்துக் காட்டியது இந்தத் திரைப்படம். இதனால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இந்தப் படத்திற்கு கிடைத்தது. படம் மிகப்பெரிய வெற்றியையும் அடைந்தது.

இந்தப் படத்தை தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்ய முயற்சி செய்யப்பட்டு வருகிறது. தமிழில் இந்தப் படத்தை ரீமேக் செய்ய, தயாரிப்பாளர் ஆடுகளம் கதிரேசன் உரிமையை வாங்கி வைத்திருக்கிறார். அதே போல் தெலுங்கு ரீமேக்கிற்கான உரிமையை, தயாரிப்பாளர் சூர்யதேவர நாகவம்சி வாங்கியுள்ளார்.

இந்த படத்தில் பிஜூமேனன் நடித்த அய்யப்பன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்க உள்ளார். பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் ராணா நடிக்கிறார்.

இதன்பின் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் என்றால் அது அய்யப்பன் மற்றும் கோஷியின் மனைவிகள் கதாபாத்திரம் தான்.

அதன்படி பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவியிடமும், ராணாவுக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

‘கே.ஜி.எப் 2’ டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

கேஜிஎப்2..

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், சஞ்சய் தத் நடிப்பில் உருவாகி வரும் கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

2018-ஆம் ஆண்டு வெளியான படம் கேஜிஎப். இதில் நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படம் இந்தியளவில் பெரிய ஹிட் அடித்து, நடிகர் யாஷுக்கு பரவலான ரசிகர்களை உருவாக்கித் தந்தது.

இப்படத்தை இயக்கியவர் பிரசாந்த் நீல். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார் பிரசாந்த் நீல்.

இப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார். இதன் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் முடிவடைந்தது. அப்போது படம் குறித்த முக்கிய அறிவிப்பு டிசம்பர் 21-ந் தேதி வெளியிடப்படும் என இயக்குனர் பிரசாந்த் நீல் தெரிவித்திருந்தார்.

அதன்படி, கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. வருகிற ஜனவரி 8-ந் தேதி காலை 10.18 மணிக்கு கே.ஜி.எப் 2 பட டீசர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படக்குழுவின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

மீண்டும் இணையும் ‘பரியேறும் பெருமாள்’ ஜோடி?

கதிர் – ஆனந்தி..

பரியேறும் பெருமாள் படத்தில் ஜோடியாக நடித்த கதிர் – ஆனந்தி, விரைவில் புதிய படத்தில் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளார்களாம்.

அட்டக்கத்தி, மெட்ராஸ், காலா, கபாலி என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் பா.இரஞ்சித்.

இவர் தயாரிப்பாளராக அறிமுகமான படம் ‘பரியேறும் பெருமாள்’. மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. பல்வேறு விருதுகளையும் வென்றது.

இதில் கதிர் நாயகனாகவும், ஆனந்தி நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இப்படத்தில் இவர்களின் நடிப்பு பெரிதும் பாரட்டப்பட்டது. இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருந்தது படத்திற்கு பலமாக அமைந்தது.

இந்நிலையில், அவர்கள் இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளார்களாம். இப்படத்தை இளம் இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜயின் ஆஸ்தான இயக்குனரின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயனா ? இனி கையிலியே பிடிக்கமுடியாதே..!

சிவகார்த்திகேயன்..

சிவகார்த்திகேயனை வளர்ந்து வரும் நடிகர் என்று கூறிக் கொண்டிருந்த திரையுலகம் ரஜினி-கமல், அஜித்-விஜய், சிம்பு-தனுஷ் வரிசையில் சிவகார்த்திகேயன்-விஜய் சேதுபதியை சேர்த்து அவரை பெரிய நடிகர் லிஸ்டில் சேர்த்து விட்டது.

தனக்கென குழந்தைகள் உட்பட ஃபேமிலி ஆடியன்ஸை தன் பக்கம் ஈர்க்க செய்ததே இதற்கு காரணம்.

அதுமட்டுமில்லாமல் விஜய்யின் வழி செல்கிறார் என கூற்றுக்கு உண்மை சேர்க்கும் வகையில் ஏ ஆர் முருகதாஸ் விஜய்க்காக எழுதப்பட்ட ஸ்கிரிப்ட்டில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதியின் 65 அவது திரைப்படத்தை இயக்கவிருந்த முருகதாஸ் ஒரு சில பிரச்சினைகளால் படத்தில் இருந்து விலகினார். அதனால் இந்த வாய்ப்பு கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சனுக்கு கிடைத்தது.

இதனால் பழம் நழுவி பாலில் விழுந்தது போல விஜய்க்காக எழுதப்பட்ட ஸ்கிரிப்டில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பது பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் புத்தாண்டு அன்று அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பவன் கல்யாண் படத்தில் இணைந்த ராணா டகுபதி ! வீடியோ வைரல் !

ராணா டகுபதி…

பிருத்விராஜ், பிஜு மேனன் நடித்து மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான திரைப்படம், அய்யப்பனும் கோஷியும். மறைந்த இயக்குனர் சச்சி இயக்கி இருந்த இந்தப் படம் திரை ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்தது. பிருத்விராஜ் முன்னாள் ராணுவ வீரராகவும் பிஜூ மேனன் சப் இன்ஸ்பெக்டராகவும் நடித்திருந்தனர். ரஞ்சித், கவுரி நந்தா, அன்னா ராஜன், அணில் நெடுமங்காடு உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் ஓடிக் கொண்டிருந்தபோதுதான் கொரோனா பரவல் தீவிரமடைந்தது.

அதிகாரப் பின்னணி கொண்ட ஒருவனுக்கும் ஆதிவாசிப் பகுதியைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டருக்குமான ஈகோ மோதல்தான் படத்தின் கதை. படத்தை எவ்வளவு இயல்பாக கொடுக்க முடியுமோ, அவ்வளவு யதார்த்தமாக எடுத்திருந்தார்கள். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை, தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் வாங்கியுள்ளார். இவர், பொல்லாதவன், ஆடுகளம், ஜிகிர்தண்டா உட்பட சில படங்களைத் தயாரித்தவர்.

தமிழ் ரீமேக்கில் நடிகர் சசிகுமார் ஒரு கேரக்டரில் நடிக்கிறார். மற்றொரு கேரக்டரில் நடிப்பவர் முடிவாகவில்லை என்று தயாரிப்பாலர் கதிரேசன் கூறியிருந்தார். இந்நிலையில் தெலுங்கு ரீமேக் உரிமையை, சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெற்றிருக்கிறது. இதில் பவன் கல்யாண் மற்றும் ராணா நடிப்பது உறுதியாகி இருக்கிறது.

பிருத்விராஜ் கேரக்டரில் ராணாவும், பிஜு மேனன் கேரக்டரில் பவன் கல்யாணும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சாகர் சந்திரா படத்தை இயக்குகிறார். இவர் இதற்கு முன், அப்பட்லோ ஒகடுண்டவடு என்ற படத்தை இயக்கி இருந்தார். தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பிரசாத் முரெல்லா ஒளிப்பதிவு செய்கிறார். நவின் நூலி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

இந்நிலையில் படக்குழுவினர் ராணா டகுபதியை வரவேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இரண்டு உச்ச நட்சத்திரங்கள் ஒரே படத்தில் நடிப்பதை காண ஆவலில் உள்ளனர் திரை விரும்பிகள். வக்கீல் சாப் படத்திற்கு பவன் கல்யாண் நடிக்கும் இந்த படத்தில் நடிப்பதால் குஷியில் உள்ளனர் அவரது ரசிகர்கள்.

ராணா கைவசம் காடன் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகியுள்ளது. ராணாவுடன் இணைந்து விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஈராஸ் நிறுவனம் தயாரித்த இந்த படம் பொங்கல் 2021-ல் திரைக்கு வருகிறது.

ஆண்ட்ரியா பிறந்தநாளில் வெளியான பிசாசு 2 பட போஸ்டர் !

பிசாசு 2….

சைக்கோ படத்தின் வெற்றியை தொடர்ந்து மிஷ்கின் இயக்கி வரும் திரைப்படம் பிசாசு 2. இப்படத்தின் பணிகள் பூஜையுடன் இம்மாதம் தொடங்கியது. ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் இப்படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

பிரபல இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா மீண்டும் களமிறங்க, சிவா சாந்தகுமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கின்றார். சவரக்கத்தி பட புகழ் நடிகை பூர்ணாவும் இந்த படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2014-ல் வெளியான திரைப்படம் பிசாசு. இயக்குனர் பாலா தயாரித்த இப்படத்தில் நாகா, பிரயகா மார்ட்டின், ராதாரவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வழக்கமான பேய் படத்தைப் போல் அல்லாமல், அதனுள் காதல், சென்டிமென்ட் என உணர்வுப்பூர்வமான காட்சிகளை நிரப்பினார். மிஷ்கினின் தனித்துவமான உருவாக்கப் பாணியில் இருந்த அப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதனால் பிசாசு 2 படமும் எதிர்பார்ப்பில் உள்ளது. சமீபத்தில் படப்பிடிப்புக்கு பிரம்மாண்டமான செட் வேலைகள் திண்டுக்கல்லில் துவங்கியது. இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா உடன் கம்போசிங்கில் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். பாடலாசிரியர் கபிலன் படத்திற்கு இரண்டு பாடல்கள் எழுதியுள்ளாராம். பிசாசு 2 படத்திற்கான பாடல் பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் இப்படத்தின் நாயகி ஆண்ட்ரியாவுக்கு இயக்குனர் மிஷ்கின் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். பிசாசு 2 படத்தில் இடம்பெறும் ஆண்ட்ரியாவின் தோற்றத்தை நள்ளிரவு வெளியிட்ட மிஷ்கின், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் ஆண்ட்ரியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆண்ட்ரியாவின் கேரக்டர் லுக் போஸ்டரை பார்த்த ரசிகர்கள். 80களில் வரும் ஆங்கிலோ இந்திய பெண் ரோலில் ஆண்ட்ரியா நடிக்கக்கூடும் என்று யூகித்து கமெண்ட் செய்து வருகின்றனர். மாஸ்டர் படத்தில் ஆண்ட்ரியாவின் நடிப்பை காண ஆவலாக உள்ளனர் ரசிகர்கள். அமேசான் ப்ரைம் வழங்கிய புத்தம் புது காலை ஆந்தாலஜியிலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஆண்ட்ரியா.