சித்ரா ம ர ண த் திற்கு ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதையும் ஒரு காரணமா?

சித்ரா..

சின்னத்திரை நடிகை சி த்ராவின் த ற் கொ லை க் கு அ வ ரது க ண வர் ஹேமந்த் ஒரு மு க் கிய கா ர ணமாக இ ருக்கலாம் என்று வி சா ர ணை யி ல் தெ ரிய வந்ததை அ டுத்து அ வர் கை து செ ய் ய ப் ப ட்டு சி றை யில் அ டை க் க ப்பட்டுள்ளார்.

இ ந் த நி லை யி ல் சி த் ராவின் ம ர ண த் தி ற் கு மே லும் சி ல ர் கா ர ணமாக இ ரு க்கலாம் எ ன்ற கோ ண த்தில் கா வ ல்து றை யி ன ர் வி சா ர ணை செ ய் து வ ரு கி ன்றனர்.

அ ந் த வ கை யி ல் த ற் போ து பாண்டியன்ஸ்டோர் கதையும் ஒரு கா ரணமா? எ ன்ற தகவல் த ற் போ து பெ ரும் அ தி ர் ச் சி யை ஏ ற்ப டுத்தி உ ள்ள து.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதையில் சித்ராவின் முல்லை கேரக்டருக்கு காதல் காட்சிகளும் நெருக்கமான காட்சிகளும் அதிகம் இருந்ததாகவும், நி ச் ச யதார்த்தத்திற்கு பி ன்னரும் காதல் காட்சிகள்,

நெருக்கமான காட்சிகள் அதிகம் இருப்பதாக ஹேமந்த், சி த் ராவின் தாயாரிடம் பு கா ர் கூ றி ய தாகவும், இ த னை யடுத்து சி த் ராவின் தாயார் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதாசிரியர் பிரியாதம்பியுடன் தொ ட ர்புகொ ண் டு கா தல் கா ட்சிகளை கு றைக்க வே ண் டு கோள் வி டு த்ததாகவும் கூ ற ப் படுகிறது.

ஆனால் முல்லை கேரக்டரின் காதல் கா ட் சிகளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதாசிரியர் மற்றும் தொலைக்காட்சிக் குழுவினர் இதனை க ண் டுகொ ள் ள வி ல் லை என்றும் காதல் காட்சிகள் தொ ட ர்ந்ததாகவும் தெ ரிகிறது.

இதனால் சித்ராவின் கு டு ம்பத்தில் பி ர ச் சனை ஏ ற் ப ட் ட தாகவும் கூ ற ப்படுகிறது முல்லை கேரக்டரின் நெ ருக்கமான காதல் காட்சிகளால் சித்ராவின் குடும்பத்தில் பி ர ச் சனை எ ன தெ ரிந் தும்

கா த ல் கா ட் சிகளை பா ண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் வைத்ததும், சி த்ராவின் த ற் கொ லை க் கு கா ர ண மா? என் ற கோ ண த்தில் த ற் போது வி சா ர ணை ந ட ந்து வ ருகிறது.

மாளவிகா மோகனனுடன் மீண்டும் இணையும் ‘மாஸ்டர்’ நடிகர்!

மாளவிகா மோகனன்…

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நாயகியாக மாளவிகா மோகனனும் நடித்துள்ளார்கள் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் மாளவிகா மோகனன் மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

‘மாஸ்டர்’ படத்தை அடுத்து ஹிந்தியில் ஒரு வெப்தொடரில் மாளவிகா மோகனன் நடிக்க இருப்பதாகவும் இந்த தொடரின் நாயகனாக சாஹித் கபூர் நடிக்க இருப்பதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது இந்த வெப்தொடரில் ஒரு முக்கிய கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. எனவே ‘மாஸ்டர்’ படத்தை அடுத்து மீண்டும் விஜய் சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த தொடர் அமேசான் ஓடிடி தளத்தில் அடுத்த ஆண்டு ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘சூரரை போற்று’ திரைப்படத்திற்கு கிடைத்த சர்வதேச கெளரவம்!

சூரரை போற்று..

சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவான ’சூரரை போற்று’ திரைப்படம் சமீபத்தில் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளி வந்தது என்பதும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியான முதல் மாஸ் நடிகரின் படம் இதுதான் என்பதும் இந்த படம் வசூல் அளவிலும் விமர்சன அளவிலும் சாதனை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏற்கனவே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் தற்போது சர்வதேச அளவில் கெளரவம் பெற்றுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள 78வது கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் ’சூரரை போற்று’ படம் திரையிடப்பட உள்ளதாக சூர்யாவின் 2டி நிறுவனத்தின் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் உலக அளவில் மிகச் சில படங்கள் மட்டுமே திரையிடப்பட உள்ள நிலையில் அதில் சூர்யாவின் ’சூரரை போற்று’ திரைப்படமும் ஒன்று என்பது தமிழ் சினிமா உலகிற்கே ஒரு பெருமைக்குரியதாக கருதப்படுகிறது.

என்ன மச்சான்? நான் ரொம்ப அழகா? முன்னாள் பிக்பாஸ் நடிகையின் அழகிய வீடியோ!

சாக்ஷி அகர்வால்…

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளரும் நடிகையுமான சாக்ஷி அகர்வால் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவரது மில்லியன்கணக்கான ஃபாலோயர்களால் வைரலாகி வருகிறது என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் சற்றுமுன் அவர் பதிவு செய்துள்ள வீடியோவில் கேப்ஷனாக ’என்ன மச்சான், நான் அழகா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் அந்த வீடியோவில் யுவன் சங்கர் ராஜா இசையில் விஷால் நடித்த ’சமர்’ படத்தில் இடம் பெற்ற ‘அழகோ அழகு அவள் பேரழகு’ என்ற பாடலுக்கு மிக அழகாக நடனமாடி உள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதனை அடுத்து அவர் பதிவு செய்துள்ள இன்னொரு பதிவில், தனிமையில் நிற்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவு செய்து ’நான் தனியாக நிற்கிறேன் என்றால் தனியாக இருக்கிறேன் என்று அர்த்தமல்ல.

எந்த ஒரு விஷயத்தையும் நான் தனியாக கையாளும் அளவுக்கு வலிமையானவர் என்பது பொருள்’ என்றும் பதிவு செய்துள்ளார். சாக்‌ஷி அகர்வாலின் இந்த இரண்டு லேட்டஸ்ட் பதிவுகளும் வைரலாகி வருகின்றன.

மேலும் சாக்‌ஷி அகர்வால் தற்போது ’சிண்ட்ரெல்லா’, ‘டெடி’, ‘ஆயிரம் ஜென்மங்கள்’ ‘அரண்மனை 3’, மற்றும் ‘புரவி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இதில் ‘டெடி’ விரைவில் ரிலீஸாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தாண்டு பிறக்கும் நொடியில் வெளியாகும் டீசர் இதுதான்!

டீசர்…

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தின் டிரைலர் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்றாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் சற்று முன் புத்தாண்டு பிறக்கும் ஜனவரி 1ஆம் தேதி சரியாக நள்ளிரவு 12 மணிக்கு முன்னணி நடிகர் நடித்த திரைப்படம் ஒன்றின் டீசர் வெளியாக இருப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

கடந்த 2015அம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் ’த்ரிஷ்யம்’. இந்த திரைப்படம் தமிழ் உள்பட கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மோகன்லால், மீனா உள்பட கிட்டத்தட்ட ’திரிஷ்யம்’ படத்தின் படக்குழுவினர்கள் இதிலும் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’திரிஷ்யம் 2’ படத்தின் டீஸர் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு 12 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மோகன்லாலின் ரசிகர்கள் அனைவரும் இந்த டீசரை வரவேற்க தற்போது தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னை இயக்குனராக்கிய தயாரிப்பாளரை வில்லனாக்கிய விக்னேஷ் சிவன்!

விக்னேஷ் சிவன்…

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இயக்குனரான விக்னேஷ் சிவன், தன்னை இயக்குனராக அறிமுகம் செய்த தயாரிப்பாளரை வில்லனாக்கி இருக்கிறார்.

சமீபத்தில் வெளியான பாவ கதைகள் இணைய தொடரில் விக்னேஷ் சிவன் இயக்கிய லவ் பண்ணா உட்ரணும் படத்தில் அஞ்சலிக்கு அப்பாவாக நடித்தவர் பதம் குமார். முதல் படம் என்பது தெரியாத அளவுக்கு சிறப்பாக நடித்ததால் தொடர்ந்து வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்கள் இவருக்கு குவிகிறது.

ஆனால் இவர் ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரும் கூட. அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘என் தந்தை வேணு தெலுங்கு சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளர்.

தொடக்கத்தில் ஒளிப்பதிவாளராக இருந்தேன். 3 இந்தி படங்கள் இயக்கினேன். இந்தியில் படம் தயாரித்தபோது ஐஸ்வர்யா ராய் என் படத்தில் தான் நடிப்பதாக இருந்தது.

உலக அழகி போட்டியில் வென்ற பின்னர் ஒரு ஆண்டு ஒப்பந்தத்தில் இருந்ததால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை. பின்னர் தயாரிப்பு, வினியோகத்தில் இறங்கிவிட்டேன். நானி, வாணி கபூர் நடிப்பில் வெளியான ஆகா கல்யாணம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிலம்பரசன், வரலட்சுமி நடித்த போடா போடி படங்கள் என் தயாரிப்பு தான்.

என் தயாரிப்பில் அடுத்து பங்கஜ் திரிபாதி நடிப்பில் இந்தி படம் தொடங்க உள்ளது. நீங்கள் என்னை இயக்குனராக்கினீர்கள். நான் உங்களை நடிகராக்குகிறேன் என்று விக்னேஷ் சிவன் உணர்வுபூர்வமாக சொன்னதால் நடித்தேன். நல்ல பெயர் கிடைத்துள்ளது. நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கவும் திட்டமிட்டுள்ளேன்’. இவ்வாறு அவர் கூறினார்.

பொங்கலுக்கு ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்.. மோதிக்கொள்ளும் முன்னணி நடிகர்கள்..!

திரைப்படங்கள்…

கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதனால் திரைப்படங்கள் பல, ஓடிடியில் வெளியாகி வருகிறது.

சமீபத்தில் தீபாவளிக்கு சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று மற்றும் நயன்தாராவின் நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெற்றி கண்டது.

அந்த வரிசையில் பொங்கல் பண்டிகைக்கு சில முன்னணி நடிகர்களின் படங்களை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

இதுவரை மாதவனின் மாறா, விஷாலின் சக்ரா ஆகிய படங்கள் பொங்கலுக்கு ஓடிடியில் வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சில படங்களும் இந்த போட்டியில் இணைய வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ஓடிடியை தவிர்த்து, தியேட்டரில் மாஸ்டர், ஈஸ்வரன் உள்ளிட்ட படங்கள் வெளியாகும் நிலையில், எந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

பிக்பாஸ் சீசன் 4 சம்யுக்தாவை தேடி வந்த அதிர்ஷ்டம்! பிரபல நடிகருடன்! ஒருவர் அல்ல இருவர்!

சம்யுக்தா…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 4 ல் கடந்த சில நாட்களுக்கு முன் வரை போட்டியாளராக இருந்து வெளியேறியவர் மாடலிங் மற்றும் நடிகை சம்யுக்தா.

இக்காலத்தில் தன்னுடைய மகனை விட்டு பிரிந்திருப்பதை நினைத்து மிகவும் கண் கலங்கினார்.

பிக்பாஸ் வீட்டில் அவரின் மீது போட்டியாளர்கள் அனைவரும் நல்ல மரியாதையும் அன்பும் இருந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியால் அவரை பின் தொடரும் ரசிகர்கள், ரசிகைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தற்போது அவருக்கு தீனதயாளன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளாராம். இதற்காக நடந்த தேர்வில் கலந்து கொண்டாராம்.

விஜய் சேதுபதி மற்றும் துல்கர் சல்மான் இருவரும் இப்படத்தில் நடிக்கிறார்களாம்.

விக்ரம் வேதா ரீமேக்கில் இருந்து வெளியேறிய அமீர்கான்!

அமீர்கான்…

கடந்த 2017-ல் விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் ‘விக்ரம் வேதா’ படம் ரிலீஸானது.. புஷ்கர்-காயத்ரி என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கிய இந்தப்படம் கேங்ஸ்டர் பாணி கதைக்களத்தில் புதுமையாக சொல்லப்பட்டிருந்தது.

அதனால் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பையும் பெற்றது. அதை தொடர்ந்து விக்ரம் வேதாவின் இந்தி ரீமேக்கை ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியில் தயாரிக்கப்போவதாக ஒய் நாட் ஸ்டுடியோ நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப்படத்தின் மூலம் அமீர்கான் மற்றும் சைப் அலி கான் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது.

அறிவிப்பு வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆன நிலையில், இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் துவங்க இருந்தது. ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக படம் மேற்கொண்டு நகரவில்லை.

இந்தநிலையில் தான் இந்தப்படத்தில் இருந்து அமீர்கான் வெளியேறிவிட்டார் என தற்போது அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஒருபக்கம் படத்தின் திரைக்கதை அவருக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதாலும்,

மேலும் இந்த படத்தை தயாரிப்பார்களா என உறுதியில்லாத நிலை இருப்பதாலும் தான், அமீர்கான் இந்தப்படத்தில் இருந்து வெளியேறியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

எஸ்.டி.ஆர் பட நடிகை நிதி அகர்வாலை சுற்றி சூழ்ந்த ரசிகர்கள்.. நடக்க முடியாமல் திணறிய நடிகை.. வீடியோ இதோ..!

நிதி அகர்வால்……

வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் நடிகை நிதி அகர்வால். இவர் தற்போது ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகவுள்ள பூமி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

பூமி படம் மட்டுமின்றி தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து முடித்திருக்கும் ஈஸ்வரன் திரைப்படத்திலும் அவருக்கு கதாநாயகியாக நடிகை நிதி அகர்வால் தான் நடித்துள்ளார்.

இதுமட்டுமின்றி தடம் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள புதிய படத்திற்கும் இவர் தான் கதாநாயகி.

இந்நிலையில் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பில் நடிகை நிதி அகர்வாலை சுற்றி பல ரசிகர்கள் சூழ்ந்து விட்டனர்.

நடக்க முடியாமல் திணறிய நடிகையை காவலர்கள், பத்திரமாக கேரவனுக்கு கொண்டு சேர்த்தனர்.

இதோ அந்த வீடியோ..