புத்தாண்டு பிறக்கும் நொடியில் வெளியாகும் டீசர் இதுதான்!

டீசர்…

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தின் டிரைலர் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்றாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் சற்று முன் புத்தாண்டு பிறக்கும் ஜனவரி 1ஆம் தேதி சரியாக நள்ளிரவு 12 மணிக்கு முன்னணி நடிகர் நடித்த திரைப்படம் ஒன்றின் டீசர் வெளியாக இருப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

கடந்த 2015அம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் ’த்ரிஷ்யம்’. இந்த திரைப்படம் தமிழ் உள்பட கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மோகன்லால், மீனா உள்பட கிட்டத்தட்ட ’திரிஷ்யம்’ படத்தின் படக்குழுவினர்கள் இதிலும் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’திரிஷ்யம் 2’ படத்தின் டீஸர் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு 12 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மோகன்லாலின் ரசிகர்கள் அனைவரும் இந்த டீசரை வரவேற்க தற்போது தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னை இயக்குனராக்கிய தயாரிப்பாளரை வில்லனாக்கிய விக்னேஷ் சிவன்!

விக்னேஷ் சிவன்…

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இயக்குனரான விக்னேஷ் சிவன், தன்னை இயக்குனராக அறிமுகம் செய்த தயாரிப்பாளரை வில்லனாக்கி இருக்கிறார்.

சமீபத்தில் வெளியான பாவ கதைகள் இணைய தொடரில் விக்னேஷ் சிவன் இயக்கிய லவ் பண்ணா உட்ரணும் படத்தில் அஞ்சலிக்கு அப்பாவாக நடித்தவர் பதம் குமார். முதல் படம் என்பது தெரியாத அளவுக்கு சிறப்பாக நடித்ததால் தொடர்ந்து வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்கள் இவருக்கு குவிகிறது.

ஆனால் இவர் ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரும் கூட. அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘என் தந்தை வேணு தெலுங்கு சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளர்.

தொடக்கத்தில் ஒளிப்பதிவாளராக இருந்தேன். 3 இந்தி படங்கள் இயக்கினேன். இந்தியில் படம் தயாரித்தபோது ஐஸ்வர்யா ராய் என் படத்தில் தான் நடிப்பதாக இருந்தது.

உலக அழகி போட்டியில் வென்ற பின்னர் ஒரு ஆண்டு ஒப்பந்தத்தில் இருந்ததால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை. பின்னர் தயாரிப்பு, வினியோகத்தில் இறங்கிவிட்டேன். நானி, வாணி கபூர் நடிப்பில் வெளியான ஆகா கல்யாணம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிலம்பரசன், வரலட்சுமி நடித்த போடா போடி படங்கள் என் தயாரிப்பு தான்.

என் தயாரிப்பில் அடுத்து பங்கஜ் திரிபாதி நடிப்பில் இந்தி படம் தொடங்க உள்ளது. நீங்கள் என்னை இயக்குனராக்கினீர்கள். நான் உங்களை நடிகராக்குகிறேன் என்று விக்னேஷ் சிவன் உணர்வுபூர்வமாக சொன்னதால் நடித்தேன். நல்ல பெயர் கிடைத்துள்ளது. நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கவும் திட்டமிட்டுள்ளேன்’. இவ்வாறு அவர் கூறினார்.

பொங்கலுக்கு ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்.. மோதிக்கொள்ளும் முன்னணி நடிகர்கள்..!

திரைப்படங்கள்…

கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதனால் திரைப்படங்கள் பல, ஓடிடியில் வெளியாகி வருகிறது.

சமீபத்தில் தீபாவளிக்கு சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று மற்றும் நயன்தாராவின் நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெற்றி கண்டது.

அந்த வரிசையில் பொங்கல் பண்டிகைக்கு சில முன்னணி நடிகர்களின் படங்களை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

இதுவரை மாதவனின் மாறா, விஷாலின் சக்ரா ஆகிய படங்கள் பொங்கலுக்கு ஓடிடியில் வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சில படங்களும் இந்த போட்டியில் இணைய வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ஓடிடியை தவிர்த்து, தியேட்டரில் மாஸ்டர், ஈஸ்வரன் உள்ளிட்ட படங்கள் வெளியாகும் நிலையில், எந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

பிக்பாஸ் சீசன் 4 சம்யுக்தாவை தேடி வந்த அதிர்ஷ்டம்! பிரபல நடிகருடன்! ஒருவர் அல்ல இருவர்!

சம்யுக்தா…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 4 ல் கடந்த சில நாட்களுக்கு முன் வரை போட்டியாளராக இருந்து வெளியேறியவர் மாடலிங் மற்றும் நடிகை சம்யுக்தா.

இக்காலத்தில் தன்னுடைய மகனை விட்டு பிரிந்திருப்பதை நினைத்து மிகவும் கண் கலங்கினார்.

பிக்பாஸ் வீட்டில் அவரின் மீது போட்டியாளர்கள் அனைவரும் நல்ல மரியாதையும் அன்பும் இருந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியால் அவரை பின் தொடரும் ரசிகர்கள், ரசிகைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தற்போது அவருக்கு தீனதயாளன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளாராம். இதற்காக நடந்த தேர்வில் கலந்து கொண்டாராம்.

விஜய் சேதுபதி மற்றும் துல்கர் சல்மான் இருவரும் இப்படத்தில் நடிக்கிறார்களாம்.

விக்ரம் வேதா ரீமேக்கில் இருந்து வெளியேறிய அமீர்கான்!

அமீர்கான்…

கடந்த 2017-ல் விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் ‘விக்ரம் வேதா’ படம் ரிலீஸானது.. புஷ்கர்-காயத்ரி என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கிய இந்தப்படம் கேங்ஸ்டர் பாணி கதைக்களத்தில் புதுமையாக சொல்லப்பட்டிருந்தது.

அதனால் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பையும் பெற்றது. அதை தொடர்ந்து விக்ரம் வேதாவின் இந்தி ரீமேக்கை ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியில் தயாரிக்கப்போவதாக ஒய் நாட் ஸ்டுடியோ நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப்படத்தின் மூலம் அமீர்கான் மற்றும் சைப் அலி கான் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது.

அறிவிப்பு வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆன நிலையில், இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் துவங்க இருந்தது. ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக படம் மேற்கொண்டு நகரவில்லை.

இந்தநிலையில் தான் இந்தப்படத்தில் இருந்து அமீர்கான் வெளியேறிவிட்டார் என தற்போது அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஒருபக்கம் படத்தின் திரைக்கதை அவருக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதாலும்,

மேலும் இந்த படத்தை தயாரிப்பார்களா என உறுதியில்லாத நிலை இருப்பதாலும் தான், அமீர்கான் இந்தப்படத்தில் இருந்து வெளியேறியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

எஸ்.டி.ஆர் பட நடிகை நிதி அகர்வாலை சுற்றி சூழ்ந்த ரசிகர்கள்.. நடக்க முடியாமல் திணறிய நடிகை.. வீடியோ இதோ..!

நிதி அகர்வால்……

வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் நடிகை நிதி அகர்வால். இவர் தற்போது ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகவுள்ள பூமி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

பூமி படம் மட்டுமின்றி தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து முடித்திருக்கும் ஈஸ்வரன் திரைப்படத்திலும் அவருக்கு கதாநாயகியாக நடிகை நிதி அகர்வால் தான் நடித்துள்ளார்.

இதுமட்டுமின்றி தடம் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள புதிய படத்திற்கும் இவர் தான் கதாநாயகி.

இந்நிலையில் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பில் நடிகை நிதி அகர்வாலை சுற்றி பல ரசிகர்கள் சூழ்ந்து விட்டனர்.

நடக்க முடியாமல் திணறிய நடிகையை காவலர்கள், பத்திரமாக கேரவனுக்கு கொண்டு சேர்த்தனர்.

இதோ அந்த வீடியோ..

ஜாக்பாட் அடிக்கும் சிம்பு: போடா போடி 2 படத்தில் பாலிவுட் நடிகை!!

போடா போடி…….

சிம்பு நடித்த போடா போடி படத்தின் 2ஆம் பாகம் உருவாக இருப்பதாகவும், அதில் பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாகவும் தயாரிப்பாளர் பதம் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது மஹா, மாநாடு மற்றும் ஈஸ்வரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நிதி அகர்வால் ஆகியோர் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள ஈஸ்வரன் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14 ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்திற்காகவே சிம்பு தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக தோற்றமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது மஹா, ஈஸ்வரன் மற்றும் மாநாடு ஆகிய படங்களைத் தொடர்ந்து, போடா போடி படத்தின் 2ஆம் பாகத்தில் சிம்பு நடிக்க இருக்கிறாராம். இது குறித்து தயாரிப்பாளர் பதம் குமார் கூறுகையில், கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான போடா போடி படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து,

2 ஆம் பாகம் உருவாக இருக்கிறது. இந்தப் படத்திலும் சிம்பு தான் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். போடா போடி 2 படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ரித்திகா பால் நடிக்க இருக்கிறார். அவர், தமிழில் நடிக்கும் முதல் படம் இது. தமிழ் படத்திற்காக ஒரு வருடத்திற்கும் மேலாக பயிற்சியும் மேற்கொண்டுள்ளார். போடா போடி படக்குழுவையே வைத்து அதன் 2ஆம் பாகத்தையும் இயக்க திட்டமிட்டுள்ளேன்.

போடா போடி படத்திற்கு தரண் தரண் நன்றாக இசையமைத்திருந்தார். போடா போடி 2 படத்திற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக கதை யோசித்து வந்ததாகவும், சமீபத்தில் தான் அதற்கான கதை ஓகே ஆனதாகவும் தெரிவித்துள்ளார். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக போடா போடி 2 இருக்க வாய்ப்பில்லை. ஆனால், போடா போடி மற்றும் அதன் 2 ஆம் பாகம் இரண்டையும் இணைக்கும் ஒரு பின் கதை கண்டிப்பாக படத்தில் இருக்கும்.

முதல் பாகம் லண்டனில் படமாக்கப்பட்டது. அதே போன்று போடா போடி 2 படமும் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வரும் 2021 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

புது மாப்பிள்ளையுடன் செல்ஃபி எடுத்த கீர்த்தி சுரேஷ்!

கீர்த்தி சுரேஷ்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இளம் வயதிலேயே தேசிய விருதும் பெற்றுள்ளார். ஆம், மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாவித்திரியாக வாழ்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ஹீரோ கூட இணைந்து பல படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார்.

அண்மையில், இவரது நடிப்பில் பெண்குயின் மற்றும் மிஸ் இந்தியா ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியானது. இதில், பெண்குயின் போதுமான வரவேற்பு பெறவில்லை. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தற்போது குட் லக் சகி, மரக்கர்: அரபிக்கடலின் சிம்ஹம், ராங் தே, சாணி காயிதம், அண்ணாத்த ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில், அவருக்கு தங்கையாக நடிப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், தனது நெருங்கிய நட்பு வட்டத்தினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

அங்கு, புது மாப்பிள்ளை மற்றும் மணப்பெண்ணுடன் இணைந்து டாப் ஆங்கிள் செல்ஃபி எடுத்துள்ளார். தற்போது இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக, வடிவேலுவின் ஹலோ துபாயா என்ற டயலாக் கொண்ட டி-சர்ட்டை அணிந்திருந்த கீர்த்தி சுரேஷின் புகைப்படம் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

The Family Man: போச்சா…இப்போ இவரும் வெப் சீரிஸ் பக்கம் வந்துட்டாரா?

விஜய் சேதுபதி…

மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி நடிகை ஷாகித் கபூருடன் இணைந்து வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த், கமல் ஹாசன் வரிசையில் வருடத்திற்கு அதிக படங்களில் நடித்து வெளியிடும் நடிகர்களின் பட்டியலில் தற்போது விஜய் சேதுபதி முதலிடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில், பேட்ட, சூப்பர் டீலக்ஸ், சிந்துபாத், மார்கோனி மதை, சைரா நரசிம்ம ரெட்டி, சங்கத்தமிழன் என்று வரிசையாக 6 படங்கள் வெளியானது.

இந்த 2020 ஆம் ஆண்டில், விஜய் சேதுபதி நடிப்பில் ஓ மை கடவுளே, க/பெ. ரணசிங்கம் ஆகிய இரு படங்கள் மட்டுமே இதுவரை வெளியாகியுள்ளது. கொரோனா லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், மற்ற படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாஸ்டர், உப்பெனா, கடைசி விவசாயி ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

இந்தப் படங்களைத் தொடர்ந்து, நவரசா, மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், லால் சிங் சத்தா, துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல், கொரோனா குமார், அண்ணபெல்லே சுப்ரமணியம், 19 (1)(a) என்று வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது முதல் முறையாக வெப் சீரிஸ் பக்கமும் தனது கவனத்தை திருப்பியுள்ளார். ஆம், ஷாகித் கபூர் உடன் இணைந்து தி பேமிலி மேன் என்ற வெப் சீரிஸை இயக்கிய இயக்குநர் ராஜ் நிடிமோரு மற்றும் கிருஷ்ணா டிகே இயக்கத்தில் இன்னும் டைட்டில் வைக்கப்படாத வெப் சீரிஸில் நடிக்க இருக்கின்ரனர். தி பேமிலி மேன் என்ற வெப் சீரிஸ் ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி வந்த தி பேமிலி மேன் என்ற வெப் சீரிஸின் முதல் சீசனில் நடிகர் மனோஜ் பாஜ்பாய் மற்றும் பிரியாமணி ஐயர் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியான இந்த சீரிஸ்க்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது தி பேமிலி மேன் என்ற வெப் தொடரின் 2 ஆம் பாகம் உருவாகியுள்ளது. இதில், மனோஜ் பாஜ்பாய் உடன் இணைந்து நடிகை சமந்தா நடித்துள்ளார். இந்த தொடர் வரும் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், தி பேமிலி மேன் இயக்குநர் உடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் ஷாகித் கபூர் ஆகிய இருவரும் முதல் முறையாக வெப் சீரிஸில் நடிக்க இருக்கின்றனர். வரும் ஜனவரி மாதம் மும்பை மற்றும் கோவா ஆகிய பகுதிகளில் இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக விஜய் சேதுபதி மற்றும் ரெஜினா கஸாண்ட்ரா இருவரும் இணைந்து ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் குறுந்தொடர் ஒன்றில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் ஆரவ் தந்தை மாரடைப்பால் தி டீர் ம ரணம் – ரசிகர்கள் இரங்கல் !

ஆரவ் தந்தை…

ஆரவ் முன்னாடி, ஓ காதல் கண்மணி, சைத்தான் போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்சசியில் கலந்துகொ ண்டு வெற்றியும் பெற்றார் . இந்த நிகழ்ச்சியில் கலந்து கொ ண்டு ஓவியாவுடன் காதல் சர்ச்சைகளில் சிக்கியதன் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர்.

அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் மூலம் பிரபலமான ஆரவ் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது ராஜபீமா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நரேஷ் சம்பத் இயக்கும் இந்த திரைப்படத்தில் ஆரவிற்கு ஜோடியாக ஆஷிமா நர்வால் நடித்து வருகிறார். மேலும் அவர்களுடன் நாசர், கேஎஸ் ரவிக்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இத்தனை நாட்கள் சேர்ந்திருந்த ஆரவ், ஓவியா இப்போது பிரிந்துவிட்டார்கள். சமீபத்தில் வேறு நடிகையின் கழுத்தில் தாலி கட்டி விட்டார் நம்ம பிக் பாஸ் சீசன் 1 வின்னர் ஆரவ். இவர் மணந்துகொண்ட பெண் யார் என்றால், ஜோஷுவா இமை போல் காக்க படத்தில் கதாநாயகி ஆக நடிக்கும் ராஹே. இவரின் கல்யாணத்திற்கு சினேகன், ஆர்த்தி, காயத்ரி ரகுராம், பிந்துமாதவி, சுஜா, ஹரிஷ் கல்யாண் என முக்கால்வாசி பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் ஆரவ்வின் தந்தை உ ட ல்ந ல கு றை பா டு மற்றும் மா ர டைப்பு காரணமாக உ யி ரிழந்துள்ளார். இவருடைய உடல் அவரின் சொந்த ஊரான நாகர்கோவிலில் இன்று மாலை அ டக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.