ஜாக்பாட் அடிக்கும் சிம்பு: போடா போடி 2 படத்தில் பாலிவுட் நடிகை!!

போடா போடி…….

சிம்பு நடித்த போடா போடி படத்தின் 2ஆம் பாகம் உருவாக இருப்பதாகவும், அதில் பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாகவும் தயாரிப்பாளர் பதம் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது மஹா, மாநாடு மற்றும் ஈஸ்வரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நிதி அகர்வால் ஆகியோர் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள ஈஸ்வரன் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14 ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்திற்காகவே சிம்பு தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக தோற்றமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது மஹா, ஈஸ்வரன் மற்றும் மாநாடு ஆகிய படங்களைத் தொடர்ந்து, போடா போடி படத்தின் 2ஆம் பாகத்தில் சிம்பு நடிக்க இருக்கிறாராம். இது குறித்து தயாரிப்பாளர் பதம் குமார் கூறுகையில், கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான போடா போடி படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து,

2 ஆம் பாகம் உருவாக இருக்கிறது. இந்தப் படத்திலும் சிம்பு தான் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். போடா போடி 2 படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ரித்திகா பால் நடிக்க இருக்கிறார். அவர், தமிழில் நடிக்கும் முதல் படம் இது. தமிழ் படத்திற்காக ஒரு வருடத்திற்கும் மேலாக பயிற்சியும் மேற்கொண்டுள்ளார். போடா போடி படக்குழுவையே வைத்து அதன் 2ஆம் பாகத்தையும் இயக்க திட்டமிட்டுள்ளேன்.

போடா போடி படத்திற்கு தரண் தரண் நன்றாக இசையமைத்திருந்தார். போடா போடி 2 படத்திற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக கதை யோசித்து வந்ததாகவும், சமீபத்தில் தான் அதற்கான கதை ஓகே ஆனதாகவும் தெரிவித்துள்ளார். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக போடா போடி 2 இருக்க வாய்ப்பில்லை. ஆனால், போடா போடி மற்றும் அதன் 2 ஆம் பாகம் இரண்டையும் இணைக்கும் ஒரு பின் கதை கண்டிப்பாக படத்தில் இருக்கும்.

முதல் பாகம் லண்டனில் படமாக்கப்பட்டது. அதே போன்று போடா போடி 2 படமும் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வரும் 2021 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

புது மாப்பிள்ளையுடன் செல்ஃபி எடுத்த கீர்த்தி சுரேஷ்!

கீர்த்தி சுரேஷ்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இளம் வயதிலேயே தேசிய விருதும் பெற்றுள்ளார். ஆம், மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாவித்திரியாக வாழ்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ஹீரோ கூட இணைந்து பல படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார்.

அண்மையில், இவரது நடிப்பில் பெண்குயின் மற்றும் மிஸ் இந்தியா ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியானது. இதில், பெண்குயின் போதுமான வரவேற்பு பெறவில்லை. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தற்போது குட் லக் சகி, மரக்கர்: அரபிக்கடலின் சிம்ஹம், ராங் தே, சாணி காயிதம், அண்ணாத்த ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில், அவருக்கு தங்கையாக நடிப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், தனது நெருங்கிய நட்பு வட்டத்தினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

அங்கு, புது மாப்பிள்ளை மற்றும் மணப்பெண்ணுடன் இணைந்து டாப் ஆங்கிள் செல்ஃபி எடுத்துள்ளார். தற்போது இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக, வடிவேலுவின் ஹலோ துபாயா என்ற டயலாக் கொண்ட டி-சர்ட்டை அணிந்திருந்த கீர்த்தி சுரேஷின் புகைப்படம் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

The Family Man: போச்சா…இப்போ இவரும் வெப் சீரிஸ் பக்கம் வந்துட்டாரா?

விஜய் சேதுபதி…

மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி நடிகை ஷாகித் கபூருடன் இணைந்து வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த், கமல் ஹாசன் வரிசையில் வருடத்திற்கு அதிக படங்களில் நடித்து வெளியிடும் நடிகர்களின் பட்டியலில் தற்போது விஜய் சேதுபதி முதலிடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில், பேட்ட, சூப்பர் டீலக்ஸ், சிந்துபாத், மார்கோனி மதை, சைரா நரசிம்ம ரெட்டி, சங்கத்தமிழன் என்று வரிசையாக 6 படங்கள் வெளியானது.

இந்த 2020 ஆம் ஆண்டில், விஜய் சேதுபதி நடிப்பில் ஓ மை கடவுளே, க/பெ. ரணசிங்கம் ஆகிய இரு படங்கள் மட்டுமே இதுவரை வெளியாகியுள்ளது. கொரோனா லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், மற்ற படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாஸ்டர், உப்பெனா, கடைசி விவசாயி ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

இந்தப் படங்களைத் தொடர்ந்து, நவரசா, மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், லால் சிங் சத்தா, துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல், கொரோனா குமார், அண்ணபெல்லே சுப்ரமணியம், 19 (1)(a) என்று வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது முதல் முறையாக வெப் சீரிஸ் பக்கமும் தனது கவனத்தை திருப்பியுள்ளார். ஆம், ஷாகித் கபூர் உடன் இணைந்து தி பேமிலி மேன் என்ற வெப் சீரிஸை இயக்கிய இயக்குநர் ராஜ் நிடிமோரு மற்றும் கிருஷ்ணா டிகே இயக்கத்தில் இன்னும் டைட்டில் வைக்கப்படாத வெப் சீரிஸில் நடிக்க இருக்கின்ரனர். தி பேமிலி மேன் என்ற வெப் சீரிஸ் ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி வந்த தி பேமிலி மேன் என்ற வெப் சீரிஸின் முதல் சீசனில் நடிகர் மனோஜ் பாஜ்பாய் மற்றும் பிரியாமணி ஐயர் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியான இந்த சீரிஸ்க்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது தி பேமிலி மேன் என்ற வெப் தொடரின் 2 ஆம் பாகம் உருவாகியுள்ளது. இதில், மனோஜ் பாஜ்பாய் உடன் இணைந்து நடிகை சமந்தா நடித்துள்ளார். இந்த தொடர் வரும் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், தி பேமிலி மேன் இயக்குநர் உடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் ஷாகித் கபூர் ஆகிய இருவரும் முதல் முறையாக வெப் சீரிஸில் நடிக்க இருக்கின்றனர். வரும் ஜனவரி மாதம் மும்பை மற்றும் கோவா ஆகிய பகுதிகளில் இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக விஜய் சேதுபதி மற்றும் ரெஜினா கஸாண்ட்ரா இருவரும் இணைந்து ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் குறுந்தொடர் ஒன்றில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் ஆரவ் தந்தை மாரடைப்பால் தி டீர் ம ரணம் – ரசிகர்கள் இரங்கல் !

ஆரவ் தந்தை…

ஆரவ் முன்னாடி, ஓ காதல் கண்மணி, சைத்தான் போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்சசியில் கலந்துகொ ண்டு வெற்றியும் பெற்றார் . இந்த நிகழ்ச்சியில் கலந்து கொ ண்டு ஓவியாவுடன் காதல் சர்ச்சைகளில் சிக்கியதன் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர்.

அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் மூலம் பிரபலமான ஆரவ் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது ராஜபீமா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நரேஷ் சம்பத் இயக்கும் இந்த திரைப்படத்தில் ஆரவிற்கு ஜோடியாக ஆஷிமா நர்வால் நடித்து வருகிறார். மேலும் அவர்களுடன் நாசர், கேஎஸ் ரவிக்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இத்தனை நாட்கள் சேர்ந்திருந்த ஆரவ், ஓவியா இப்போது பிரிந்துவிட்டார்கள். சமீபத்தில் வேறு நடிகையின் கழுத்தில் தாலி கட்டி விட்டார் நம்ம பிக் பாஸ் சீசன் 1 வின்னர் ஆரவ். இவர் மணந்துகொண்ட பெண் யார் என்றால், ஜோஷுவா இமை போல் காக்க படத்தில் கதாநாயகி ஆக நடிக்கும் ராஹே. இவரின் கல்யாணத்திற்கு சினேகன், ஆர்த்தி, காயத்ரி ரகுராம், பிந்துமாதவி, சுஜா, ஹரிஷ் கல்யாண் என முக்கால்வாசி பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் ஆரவ்வின் தந்தை உ ட ல்ந ல கு றை பா டு மற்றும் மா ர டைப்பு காரணமாக உ யி ரிழந்துள்ளார். இவருடைய உடல் அவரின் சொந்த ஊரான நாகர்கோவிலில் இன்று மாலை அ டக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

காதலுக்கு மரியாதை படத்தில் விஜய் வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த பிரபல நடிகர் தானா?- மிஸ் பண்ணிட்டாரே!

காதலுக்கு மரியாதை..

விஜய்யின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஹிட்டை தேடிக் கொடுத்த படம் காதலுக்கு மரியாதை.

ஃபாஸில் இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து ஷாலினி நாயகியாக நடித்திருந்தார்.

படம் வெளியாகி 23 வருடங்கள் ஆன நிலையில் வழக்கம் போல் ரசிகர்கள் பல டாக்குகள் கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.

படத்தில் முதலில் நடிக்க வைக்க இயக்குனர் அப்பாஸை தான் அணுகியுள்ளார், அந்நேரம் அவரது மேனேஜரால் கால்ஷீட்டில் பிரச்சனை வர பின்பே படம் விஜய்யிடம் சென்றுள்ளது.

இந்த தகவல் கேட்ட ரசிகர்கள் அப்பாஸ் மிஸ் பண்ணிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

டானும் டாக்டரும் இணைந்து மிரட்டும்… தேவதாஸ் விமர்சனம்!

தேவதாஸ்….

மருத்துவ படிப்பில் கோல்டு மெடல் வாங்கிய நானி, மருத்துவமனையில் வேலை பார்க்கிறார். அங்கு இருக்கும் டீனுக்கும் நானிக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால், அங்கிருந்து வெளியே வந்து சின்னதாக கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார்.

மறுபக்கம், தாதாவாக இருக்கும் சரத்குமார் சிறுவயதில் நாகார்ஜூனாவை எடுத்து வளர்க்கிறார். இவர் சில காரணங்களால், ஊருக்கு வெளியே வளர்ந்து பெரிய ஆளாக மாறி டானாக இருக்கிறார். இந்நிலையில், உள்ளூர் தாதாக்கள் சரத்குமாரை கொன்று விடுகிறார்கள். இதனால் கோபமடையும் நாகார்ஜூனா, உள்ளூர் தாதாக்களை கொல்ல ஊருக்குள் வருகிறார்.

அப்போது எதிர்பாராதவிதமாக காயங்கள் ஏற்பட, நானியின் மருத்துவமனையில் சிகிச்சைக்கு செல்கிறார். நாகார்ஜூனாவை பற்றி தெரிந்துக் கொள்ளும் நானி, அவரை மாற்ற முயற்சி செய்கிறார். இறுதியில் நாகார்ஜூனா, தனது தந்தை சரத்குமாரை கொன்றவர்களை கண்டுபிடுத்து கொன்றாரா? நாகார்ஜூனாவின் மனதை நானி மாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் டானாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் நாகார்ஜூனா. இவருடைய அலட்டல் இல்லாத நடிப்பு ரசிக்க வைக்கிறது. டாக்டராக வரும் நானி ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடித்திருக்கிறார். சரத்குமார் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகிகளாக வரும் அகன்ஷா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.

தெலுங்கில் வெளியான தேவதாஸ் திரைப்படம் தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. டானும் டாக்டரும் இணைந்தால் எப்படி இருக்கும் என்பதை ரசிகர்கள் ரசிக்கும் விதமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீராம் ஆதித்யா. தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு டப் செய்திருக்கிறார்கள். மணி சர்மா இசையில் பாடல்கள் கேட்கும் தாளம் போட வைக்கிறது. சம்டத்தின் ஒளிப்பதிவு சிறப்பு.
மொத்தத்தில் ‘தேவதாஸ்’ மாஸ்.

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான அசுரன்!

அசுரன்…

இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) கடந்த 1952ம் ஆண்டு முதல் எல்லா ஆண்டுகளும் நடத்தப்பட்டு வருகிறது.

மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டு வரும் இந்த விழா, இந்த ஆண்டு கோவாவில் வரும் நவம்பர் மாதம் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சர்வதேச கோவா திரைப்பட விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் 2021ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது இந்த திரைப்பட விழாவில் தேர்வான படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் தேர்வாகியுள்ளார். அதுபோல் தேன் என்ற தமிழ் படமும் தேர்வாகியுள்ளது.

அண்ணாத்த படக்குழுவுக்கு வேண்டுகோள் விடுத்த ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த்…

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் அண்ணாத்த. நயன்தாரா, கீர்த்திசுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, சதீஷ் ஆகியோர் ரஜினியுடன் நடித்துவருகிறார்கள். கொரோனாவுக்கு முன்பாக முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்தனர்.

கொரோனாவுக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்குவதில் சிக்கல் இருந்தது. ஏற்கெனவே 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், மீதம் இருக்கும் 40 சதவீத படப்பிடிப்பு தற்போது நடந்துவருகிறது.

ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடக்கிறது. படக்குழுவினருக்கு ரஜினி ஒரு வேண்டுகோள் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படப்பிடிப்பை விரைவில் முடித்துவிட்டு, ஜனவரி 10க்குள் அவருடைய டப்பிங் பணிகளையும் முடித்துவிட வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதன்பின் கட்சி பணிகளில் ஈடுபட திட்டமிட்டு இருப்பதால் இந்த வேண்டுகோளை வைத்துள்ளார் என்கிறார்கள்.

பிரேமம் இயக்குனரின் இயக்கத்தில் நடிகை நயன்தாரா.. கதாநாயகன் யார் தெரியுமா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நயன்தாரா..

நிவின் பாலி மற்றும் சாய் பல்லவி, மடோனா, அனுப்பமா உள்ளிட்டோர் நடிப்பில், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம்.

இப்படத்திற்கு பிறகு தற்போது வரை அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை.

இந்நிலையில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகவும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியகியுள்ளது.

‘பாட்டு’ என தலைப்பை கொண்ட இப்படத்தில் நயன்தாராவிற்கு ஜோடியாக மலையாள நடிகர் பாஹத் பாசில் நடிக்கவுள்ளார் என அறிவித்துள்ளனர்.

திடீரென்று பெயரை மாற்றிய தீபிகா படுகோனே!

தீபிகா படுகோன்…

நடிகை தீபிகா படுகோன் இந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். தமிழில் ரஜினிகாந்த் நடித்த அனிமேஷன் மோஷன் கேப்சர் படமான கோச்சடையான் படத்தில் நடித்தார்.

இந்தி திரையுலகத்தில் கமர்ஷியல் நாயகியாக மட்டுமல்லாமல் தன்னை ஒரு நடிப்பு திறன் மிக்க கதாபாத்திரங்களிலும் ஈடுபடுத்திக் கொண்டு நடித்து வருகிறார் தீபிகா.

இவர் பாஜிராவ் மஸ்தானி என்ற படத்தில் ரன்வீர் சிங்குடன் இணைந்து நடித்தார். இப்படத்தில் முஸ்லிம் மன்னரின் பெண்ணான தீபிகா இந்து மன்னர் பாஜிராவை காதலித்து அவருக்கு ஒரு குழந்தையும் பெறும் கதாபாத்திரத்தில் நடித்தார்.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இதனை கொண்டாடும் விதமாக தீபிகா படுகோனே என்ற தனது டிவிட்டர் சமூக வலைதள பக்கத்தையே தன் பெயருக்கு பதிலாக மஸ்தானி என்ற தனது பட கதாபாத்திரத்தின் பெயரை குறிப்பிட்டு மாற்றி இருக்கிறார்.