பூமி படத்தின் வந்தே மாதரம் பாடல் லிரிக் வீடியோ வெளியீடு !

பூமி…

ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி கடந்த வருடத்தின் சூப்பர்ஹிட் வெற்றியடைந்த திரைப்படம் கோமாளி..அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தை இயக்கியிருந்தார்.காஜல் அகர்வால் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார். யோகி பாபு,கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.இந்த படம் 100 நாட்களை கடந்து பெரிய வெற்றியை பெற்றது.

வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.காஜல் அகர்வால்,சம்யுக்தா ஹேக்டே இந்த படத்தின் ஹீரோயின்களாக நடித்து அசத்தியிருந்தனர்.ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.இவரது இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பயங்கர ஹிட் அடித்திருந்தது.

இதனை தொடர்ந்து பூமி,ஜனகனமன,பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பூமி ஜெயம் ரவி நடித்து வரும் 25ஆவது படமாகும்.இந்த படத்தை ரோமியோ ஜூலியட்,போகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய லக்ஷ்மன் இயக்கியுள்ளார்.டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.Home Movie Makers இந்த படத்தை தயாரித்துள்ளனர்.நிதி அகர்வால் இந்த படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் டீஸர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் மே 1அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது.இந்த படம் OTT தளத்தில் வெளியாகும் என்றும் செய்திகள் வருகின்றன,இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று தெரிகிறது.

இந்த படத்தின் பாடல்கள் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.தற்போது இந்த படத்தின் வந்தே மாதரம் என்ற பாடலின் லிரிக் வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இனிமேல் அப்படி செய்ய மாட்டேன் – நடிகரின் தி டீர் முடிவு!

நடிகரின் திடீர் முடிவு…

பல படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் த ற் போது தி டீ ர் மு டிவு ஒ ன்றை எ டுத்துள்ளாராம்.

தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் வில்லனாக நடித்த நடிகர், கொரோனா ஊரடங்கின் போது வேலையில்லாமல், பசி பட்டினியால் தி ண்டாடிய பலருக்கு உதவிகளை செய்தாராம்.

அவரது உதவி நடவடிக்கைக்காக அவருக்கு பலரும் பாராட்டி பல விருதுகளை கொடுத்தார்களாம்.

இந்நிலையில், இனிமேல் திரைப்படங்களில் வில்லனாக நடிக்க மாட்டேன் எனவும், ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அவர் அறிவித்துள்ளாராம்.

‘அந்தாதூன்’ ரீமேக்கில் இணைந்த பிரபல நடிகர்! இசையமைப்பாளரும் அறிவிப்பு!

அந்தாதூன்..

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ’அந்தாதூன்’ படத்தை தமிழில் ரீமேக் செய்ய பிரபல தயாரிப்பாளரும் நடிகர் பிரசாந்தின் தந்தையுமான தியாகராஜன் திட்டமிட்டிருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

பிரசாந்த் நடிப்பில் ’பொன்மகள்வந்தாள்’ இயக்குனர் பெடரிக் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்த படத்தில் தபு நடித்த கேரக்டரில் சிம்ரன் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தது.

இந்த நிலையில் தற்போது அந்தாதூன்’ ரீமேக்கில் நவரச நாயகன் கார்த்திக் இணைந்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு ‘தானா சேர்ந்த கூட்டம்’ மற்றும் ‘மிஸ்டர் சந்திரமெளலி’ ஆகிய படங்களில் நடித்த கார்த்தி, கடந்த ஆண்டு வெளியான ‘தேவ்’ படத்திலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் ‘அந்தாதூன்’ படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்ப்பிடத்தக்கது

மீண்டும் இணையும் ‘சிவா மனசுல சக்தி’ கூட்டணி?

ஜீவா – ராஜேஷ்…

‘சிவா மனசுல சக்தி’ என்கிற ஹிட் படத்தை கொடுத்த ஜீவா – ராஜேஷ் கூட்டணி, தற்போது மீண்டும் இணைய உள்ளதாம்.

ஜீவா நடிப்பில் 2009-ம் ஆண்டு வெளியான சிவா மனசுல சக்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜேஷ். குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படமாக வெளியாகி இருந்த இதில் ஜீவா, சந்தானம் இணைந்து நடித்திருந்த காமெடி காட்சிகள் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன.ஜீவாவுக்கு இப்படம் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதையடுத்து பெரிய பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தன.

இந்நிலையில், நடிகர் ஜீவா – இயக்குனர் ராஜேஷ் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் கதையை சிவா மனசுல சக்தி பட பாணியில் ராஜேஷ் அமைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்தில் காமெடியனாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இப்படம் குறித்த அறிவிப்பை பொங்கலையொட்டி வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். நடிகர் ஜீவா தற்போது மேதாவி, களத்தில் சந்திப்போம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சூப்பர் ஹிட் படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்கும் சித்தார்த்!

சித்தார்த்…

வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் சித்தார்த், அடுத்ததாக சூப்பர் ஹிட் படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்க உள்ளாராம்.

சித்தார்த் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘அவள்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிலிந்த் ராவ். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வசூலையும் வாரிக் குவித்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது நயன்தாரா நடிக்கும் ‘நெற்றிக்கண்’ படத்தை மிலிந்த் ராவ் இயக்குகிறார். இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரித்து வருகிறார். விரைவில் இப்படம் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில், மிலிந்த் ராவ் அடுத்ததாக இயக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவள் படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை அவர் எழுதி முடித்துவிட்டாராம்.

முதல் பாகத்தில் நடித்த சித்தார்த் தான் இதிலும் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுந்தர் சி-க்கு வில்லனான ஜெய்?

சுந்தர் சி-ஜெய்…

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் சுந்தர் சி, அடுத்ததாக தயாரிக்கும் புதிய படத்தில் ஜெய் வில்லனாக நடிக்க உள்ளாராம்.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வருபவர் சுந்தர் சி. குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவரான சுந்தர் சி, படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் இவர் தயாரித்த ஹலோ நான் பேய் பேசுறேன், முத்தின கத்திரிக்கா, மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

சமீபத்தில் இவர் தயாரித்த ‘நாங்க ரொம்ப பிஸி’ திரைப்படம் தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டது. சுந்தர் சி.யிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பத்ரி இப்படத்தை இயக்கினார். இவர் ஏற்கனவே வீராப்பு, தம்பிக்கு இந்த ஊரு, தில்லுமுல்லு ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.

இந்நிலையில், சுந்தர் சி அடுத்ததாக தயாரிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தையும் பத்ரி தான் இயக்க உள்ளாராம். அதுமட்டுமின்றி இந்த படத்தில் சுந்தர் சி ஹீரோவாகவும் நடிக்கிறாராம்.

மேலும் இந்த படத்தில் நடிகர் ஜெய் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹீரோவை விட வில்லனுக்கு பவர்புல்லான ரோல் என்பதால் ஜெய் இதில் நடிக்க சம்மதித்ததாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தால் ஒரு கு டும்பமும் ந ன்றாக இ ரு க்காது! முக்கிய பி ரமுகர் அ தி ரடி கு ற் ற ச்சா ட்டு!

பிக்பாஸ்…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ஐ தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார், 70 நாட்களை கடந்த இந்நிகழ்ச்சி ஒன்னும் ஒரு மாதத்தில் 100 வது நாளை எட்டிவிடும்.

இறுதியில் பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போவது யார்? மக்கள் நினைத்தது நடைபெறுமா? அல்லது தீர்ப்புகள் மாற்றி எழுதப்படுமா என பல கேள்விகள் பார்வையாளர்களுக்கு இருக்கிறது.

வார இறுதி நாட்களில் மட்டும் நிகழ்ச்சியில் வரும் கமல்ஹாசன் போட்டியாளர்களுடன் உரையாடுவார். சூசகமாக பேசுவார், அ ர சியல் விச யங்களையும் அவ்வபோது அ ள்ளித்தெளிப்பது பலரும் பார்த்ததே.

பல ச ர் ச் சைகளுக்கு ந டுவே இந்நிகழ்ச்சி சென்று கொ ண் டிருக்கிறது. வார நாட்களில் கமல்ஹாசன் தன் மக்கள் நீதி மய்யம் அ ர சி யல் க ட் சி பணி களில் ஈ டுபட்டு வருகிறார்.

இந்நிலையில் த மி ழக மு த ல மைச்சர் பழனிச்சாமி கமல் தொ குத்து வழங்கும் பிக்பாஸ் நி கழ்ச்சியை பா ர்த்தல் ஒரு கு டு ம்பம் கூட ந ன்றாக இ ரு க்காது, படங்கள், நாடகங்கள் மூலம் குடும்பங்களை அவர் சீ ர ழி க்கிறார் என வி ம ர் சித்துள்ளார்.

“இப்பவும் நீங்க ஹீரோயின் Material தான்” – வனிதா தங்கையான நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரின் லேட்டஸ்ட் Click !

ஸ்ரீதேவி விஜயகுமார்…

நடிகர் விஜயகுமாருக்கு இரண்டு திருமணம் ஆயிற்று. அதில் இவரின் முதல் மனைவியின் பெயர் முத்துக்கண்ணு .

பிறகு நடிகை மஞ்சுளாவுடன் காதல் ஏற்பட்டு, அவருக்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி ஆகியவர்கள்.

இதில் முதல் மனைவிக்கு பிறந்த அருண் விஜய், தன்னுடைய தந்தையின் இரண்டாவது மனைவிக்கு

பிறந்த மகள்களை தனது சொந்த சகோதரிகளாக தான் பார்த்துக் கொ ண்டார்.

இதில் ஸ்ரீதேவி விஜயகுமார், தித்திக்குதே, பிரியமான தோழி, தேவதையை கண்டேன் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர்.

எப்பொழுதும் குடும்பப்பெண்ணாக நடிக்கும் இவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை வலைத்தளத்தில் கண்டு ரசிகர்கள் “இப்பவும் நீங்க ஹீரோயின் Material தான்” என்று உருகி வருகிறார்கள்.

“பீட்டர் பாலுக்கு பிறகு வேறு ஒருவரை காதலிக்கிறாரா வனிதா ?” முடியலடா யப்பா !

வனிதா…

வனிதாவுக்கு, பீட்டர் பாலுக்கும் திருமணம் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. அதன் பிறகு சில வாரங்களுக்கு முன் அவர்கள் பிரிந்துவிட்டார்கள், வனிதா பீட்டரை அடித்து துரத்திவிட்டார் என்றெல்லாம் செய்திகள் பரவ, உடனே வனிதா தான் பீட்டர் பாலை பிரிந்ததை ஒற்றுகொண்டார்.

பிறகு, அவர் மீண்டும் பீட்டர் பாலோடு சென்ற போவதாக செய்திகள் பரவ, அதிர்ந்து போன வனிதா, “என் வாழ்க்கையில் யாருமே என்னை நிராகரித்ததில்லை. நான்தான் யாரையாவது நிராகரித்திருப்பேன்.

தயவுசெய்து உங்கள் கற்பனைகளை நிறுத்துங்கள். இனி நேர்மறைச் சிந்தனையுடன் என் பயணம் தொடரும்” என்று ஒரு சமயத்தில் கூறினார்.

இந்த நிலையில் வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “மீண்டும் காதலில் விழுந்தேன், இப்போது சந்தோஷமா?” என்று நடிகை உமா ரியாஸ்கானுக்கு டேக் செய்து உள்ளார்.

இதனை அடுத்து வனிதாவுக்கு மீண்டும் காதல் வந்து விட்டதா? என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஏலியனுடன் கூட்டணி சேரும் அவன் – இவன் கதாநாயகர்கள் – Enemy படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

ஆர்யா – விஷால்…

ரெண்டு பெரிய நடிகர்கள் சேர்ந்து நடிக்கிற படங்கள்னா ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பும், ஒரு குதூகலமும் இருக்கும். அதுவே அந்த ரெண்டு பேரும் நண்பர்களா இருந்தா, இன்னும் வேற லெவல் தானே. ஏற்கனவே பாலா இயக்கத்துல அவன் – இவன் படத்துல நடிச்ச ஆர்யா – விஷால் தான் இன்னொரு படத்துலயும் நடிக்க போறாங்க.

அழுக்கும் பரட்டையுமா நடிச்ச இந்த ரெண்டு பேரும், இப்போ பெரிய துப்பாக்கி, ஃபிட்டான டிரெஸ்னு அமர்க்களமா இருக்க போறாங்க. இந்த படத்துக்கு எனிமி (Enemy), அப்படினு தலைப்பு வச்சிருக்காங்க.

படத்தோட போஸ்டரையும் இன்னைக்கு வெளியிட்டிருக்காங்க. அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படத்தின் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் தான் இந்த படத்தை இயக்குகிறார். சூப்பர் டீலக்ஸ் படத்துல ஏலியனா நடிச்ச மிர்னாலினி தான் படத்தின் கதாநாயகி. படத்தோட இசையமைப்பாளர், நம்ம ஒஸ்தி மாமே ’தமன்’.

அருவி படத்த வெட்டி ஒட்டுன ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தொகுப்பாளராகவும், ராஜசேகர் ஒளிப்பதிவும் பண்றாங்க. இந்த படத்துல சண்டை காட்சிகளுக்கு தான் அதிக முக்கியத்துவம் இருக்கதால அந்த பகுதிகளுக்கு மட்டும் ரவி வர்மா ஒளிப்பதிவு பண்ண இருக்கிறார்.

”Enemy-க்காக காத்திருக்கிறேன்” என்று ஆர்யாவும், ”அன்புள்ள Enemy ஆர்யா, நீ இனிமே என் நண்பன் கிடையாது. முதல் தாக்குதலுக்காக 22ஆம் தேதி வரைக்கும் காத்திரு, உன்னோட மோசமான எதிரி நான்தான்-னு காட்றேன்” அப்படினு விஷாலும் ட்வீட் செய்து Enemy படத்தின் போஸ்டரை பகிர்ந்து வருகின்றனர்.