த ற்கொ லைக்கு முன்னர் பல மணி நேரம் மாமனாருடன் பேசிய சித்ரா : அழிக்கப்பட்ட ஆதாரம் மீட்கப்பட்டது எப்படி?

நடிகை சித்ரா..

சித்ரா உ யிரிழப்பதற்கு முன்னர் பல மணி நேரம் மாமனாருடன் போனில் பேசியுள்ள நிலையில் அந்த ஆடியோ ஆதாரங்கள் தொடர்பில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ராவின் த.ற்.கொ.லை விவகாரத்தில் நாளுக்கு நாள் புதிய தகவல்கள் வெளியாகி வருகிறது. கடந்த 9ஆம் திகதி சித்ரா தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய.தை பார்த்ததும் ஹேமந்த்தும், விடுதி ஊழியர்களும் அ திர்ச்சியில் உ றைந்திருக்கின்றனர்.

உடனடியாக சித்ராவை ஹேமந்தும் விடுதி ஊழியரும் சேர்ந்து கீழே இறக்கி முதலுதவி அளித்திருக்கின்றனர். பின்னர் ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து சித்ராவைப் பரிசோதித்த பிறகுதான் அவர் உ யிரிழந்தது தெரியவந்திருக்கிறது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிசார் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் கூறுகையில், சித்ரா ஹேமந்த் ஆகியோரின் செல்போன்களைப் ப றிமுதல் செய்து விசாரித்தோம். சைபர் கிரைம் பொலிசாரின் உதவியோடு, அந்த இரண்டு செல்போன்களிலிருந்து சில தகவல்கள் கிடைத்தன.

அதில் சித்ராவும் ஹேமந்த்தின் அப்பாவான ரவிச்சந்திரன் பேசிய ஆடியோ எங்களுக்குக் கிடைத்தது. போனில் இருந்து அது அ ழிக்கப்பட்ட நிலையிலேயே சைபர் கிரைம் மூலம் மீ ட்டெடுத்தோம். இருவரும் வெகுநேரம் பேசியிருக்கின்றனர்.

அதில்தான் சித்ரா, ஹேமந்த் தொடர்பான முக்கியத் தகவல்களைக் கூறியிருந்தார். அந்த ஆடியோ அடிப்படையில் விசாரித்த பிறகுதான் ஹேமந்த், சம்பவத்தன்று என்ன நடந்தது என்பதைச் சொல்லத் தொடங்கினார்.

அறைக்கு வந்த பிறகு சித்ராவைப் பார்த்து ஹேமந்த் கூறிய வார்த்தைகள் அவரைக் க டும் ம னவே தனையில் தள்ளியிருக்கின்றன. அதன் பிறகுதான் சித்ரா, த.ற்.கொ.லை மு டிவை எடுத்திருக்கிறார் என கூறியுள்ளார்.

 

சென்சேஷனல் ஹிட்டான மலையாள திரைப்படத்தின் ரீமேக்கில் நடிகை நயன்தாரா! படத்தின் கதை என்ன தெரியுமா?

நயன்தாரா…

இயக்குனர் ரோஷன் ஆண்ட்ருஸ் இயக்கத்தில் நடிகை மஞ்சு வாரியர் நடிப்பில் சென்ற வருடம் வெளியான திரைப்படம் ப்ரதி பூவன்கோழி, இப்படம் மலையாளத்தில் பெரிய ஹிட்டானது.

பேருந்தில் பயணத்தின் போது தன்னை தோட்ட ஒருவனை தேடி பழிவாங்குவதே இப்படத்தின் கதையாகும்,

நல்ல விமர்சங்களை பெற்ற இப்படத்தை தமிழிலும் ஹிந்தியிலும் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஹிந்தியில் இப்படத்தின் ரீமேக் உரிமத்தை போனி கபூர் கைப்பற்றியுள்ளார், பாலிவுட் முன்னணி நடிகையை இப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தமிழில் இப்படத்தின் ரீமேக் உரிமத்தை யார் கைப்பற்றியுள்ளார்கள் என தெரியவில்லை, ஆனால் இப்படத்தில் நடிகை நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சி செய்து வருதாகவும் கூறப்படுகிறது.

விஷாலுக்கு ஜோடியாகும் டிக் டாக் பிரபலம் – யார் தெரியுமா?

விஷால்…

செல்லமே படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் விஷால்.இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்து திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தார்.

சண்டை கோழி, திமிரு, சத்யம், அவன் இவன், இரும்பு திரை, துப்பறிவாளன் உள்ளிட்ட படங்கள் நடிகர் விஷாலுக்கு மாபெரும் வெற்றியை தேடி தந்தது.

மேலும் விஷால் தற்போது சக்ரா, துப்பறிவாளன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் சக்ரா படத்தின் டீஸர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில் இப்படங்களுக்கு பிறகு ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் நடிக்கவிருக்கும் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிக் டாக் பிரபலம் மிருணாளினி ரவி நடிக்க இருக்கிறாராம்.

13 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த ‘காதல்’ ஜோடி…. வைரலாகும் புகைப்படம்!

காதல் ஜோடி..

ஷங்கர் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பிடித்துள்ளது. இதனால், இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் ஷங்கர். படங்களை தயாரிப்பதிலும் அவர் ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்தவகையில் அவர் முதல்முதலாக தயாரித்த படம் காதல். கடந்த 2004-ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக அப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

பாலாஜி சக்திவேல் இயக்கி இருந்த இப்படத்தில் பரத், சந்தியா இருவரும் காதல் ஜோடிகளாக நடித்திருந்தனர். இப்படத்தில் இவர்களது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இதையடுத்து இவர்கள் இருவரும் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான கூடல்நகர் படத்தில் ஜோடியாக நடித்தனர்.

இந்நிலையில், பரத்தும் சந்தியாவும் 13 ஆண்டுகளுக்கு பின் சந்தித்துள்ளனர். அப்போது இருவரும் ஒன்றாக எடுத்த செல்பி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தனுஷ் – செல்வராகவன் இணையும் புதிய படம் – முதல் அப்டேட் வெளியானது !

தனுஷ் – செல்வராகவன்…

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள புதிய படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் செல்வராகவன். இதையடுத்து, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் ஆகிய படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி இருக்கிறார் செல்வராகவன்.

கடைசியாக சூர்யாவை வைத்து என்ஜிகே படத்தை இயக்கிய செல்வராகவன், அடுத்ததாக தனுஷை வைத்து படம் இயக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இதனை அவரே சமீபத்தில் டுவிட்டர் பதிவு மூலம் உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில், அப்படம் குறித்த முக்கிய அப்டேட்டை அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி கேமரா அருகில் நிற்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ள செல்வராகவன், ஆரம்பகட்ட பணிகளை தொடங்கிவிட்டதாக கூறி உள்ளார்.

மேலும் இதன் படப்பிடிப்பு அடுத்தாண்டு மார்ச் மாதம் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் நயன்தாரா!

நயன்தாரா…

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறாராம்.

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் நயன்தாரா தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம்வருபவர் நயன்தாரா, இவர் கைவசம் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண் போன்ற படங்கள் உள்ளனர். இதில் மிலிந்த் ராவ் இயக்கும் நெற்றிக்கண் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. இதன் படப்பிடிப்பை ஒரு மாதத்தில் முடிக்க வேண்டும் என ரஜினி திட்டமிட்டுள்ளதால், படக்குழுவினர் அனைவரும் ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளனர். நயன்தாராவும் இதற்காக ஐதராபாத் சென்றுள்ளார்.

அதேபோல் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பும் ஐதராபாத்தில் நடந்து வருவதால், அந்த படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறாராம்.

இந்த இரண்டு படங்களுக்கு ஒரே சமயத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளதால் நயன்தாரா இங்கும் அங்குமாக சென்று நடித்து வருகிறாராம்.

மிஷ்கின் படத்தில் பாடிய சூப்பர் சிங்கர் பிரபலம் !

சூப்பர் சிங்கர் பிரபலம்..

சைக்கோ படத்தை அடுத்து மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தில் சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பாடகி ஒருவர் பாடி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் மிஷ்கின். இவர் சைக்கோ படத்திற்குப் பிறகு பிசாசு 2 படத்தை இயக்க இருப்பதாக அறிவித்தார்.

இப்படத்திற்கான பூஜை நேற்று போடப்பட்டது. இந்நிலையில் இப்படத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான பிரியங்கா ஒரு அற்புதமான பாடலைப் பாடி இருப்பதாக மிஸ்கின் கூறியிருக்கிறார்.

பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கார்த்திக் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

C/O காதல் படத்தின் ட்ரைலர் வெளியானது!

C/O காதல் ட்ரைலர்…

தனுஷின் இந்திப் பட படப்பிடிப்பு துவங்கியது!

தனுஷ்…

நடிகர் தனுஷை கடந்த 2013ல் வெளியான ராஞ்சனா படம் மூலம் பாலிவுட்டுக்கு அழைத்துச் சென்றவர் தயாரிப்பாளரும், இயக்குனருமான ஆனந்த் எல்.ராய். அந்த படத்தை தொடர்ந்து தற்போது ஏழு வருடங்களுக்கு பிறகு மீண்டும் ‘அட்ரங்கி ரே’ என்கிற படத்தில் மீண்டும் தனுஷ் ஆனந்த் எல்.ராய் இணைந்துள்ளனர்.

இது தனுஷ் நடிக்கும் மூன்றாவது இந்தி படம் ஆகும். அதுமட்டுமல்ல பாலிவுட் முன்னணி நடிகர் அக்சய் குமாரும் இந்த படத்தில் தனுஷுடன் இணைந்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக சாரா அலிகான் நடிக்கிறார் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் 1ஆம் தேதி துவங்கிய நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக இடையிலேயே நிறுத்தப்பட்டது. ஸ்காட்லாந்தில் நடைபெற்று வந்த பெல்பாட்டம் படப்பிடிப்பில் நடித்து வந்த அக்சய் குமார், சமீபத்தில் மும்பை திரும்பிய நிலையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது.

படப்பிடிப்பு தளத்தில் தனுஷ் உடன் நடித்தவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் நடித்ததற்காக வெட்கப்படுகிறேன்?.. நயன்தாராவிற்கு நடந்தது இதுதானா?

நயன்தாரா…

தென்னிந்திய சினிமாவில் தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க பல நடிகைகள் போராடி வருகிறார்கள். அந்தவகையில் கடந்த 14 ஆண்டுகளாக தன் நடிப்பு திறமையாக் தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன் தாரா.

நடிகைகள் சிலர் கவர்ச்சியாக இருக்க மாட்டார்கள், கவர்ச்சி காட்டும் சில நடிகைகள் சரியாக நடிக்க மாட்டார்கள். நயன் தனது திரை மற்றும் சொந்த வாழ்வில் பல துயரங்களை கடந்து வந்தும் கூட, இந்த மூன்றிலுமே டாப் கியரில் கொடி கட்டி பறக்கிறார்.

சோசியல் மீடியா பக்கமே வராமல் இருந்த நயன்தாரா, தற்போது சமூல வலைத்தளங்களில் செம்ம ஆக்டீவாக இருக்கிறார். காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டிற்கு எங்கு போனாலும் சரி, கோவில், கோவிலாக ஆன்மீக பயணம் போனாலும் சரி சுட, சுட செல்ஃபி எடுத்து சோசியல் மீடியாவில் பதிவேற்றி விடுகிறார்.

தற்போது விளம்பர படங்களில் நடித்து வரும் நயன்தாரா. அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாவில் பதிவேற்றி ரசிகர்களை பித்துபிடிக்க வைக்கிறார். இப்படி பிஸியாக இருக்கும் நயன்தாராவிடம் பிரபல இணையதளம் நடத்திய பேட்டி ஒன்றில் இந்த படத்தில் நடித்ததற்காக நான் வெட்கப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

கொலையுதிர் காலம் படத்தில் நடித்ததை நினைத்து மிகவும் வெட்கப்படுவதாகவும், அந்த படத்தின் ஸ்க்ரிப்டை கூட கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்டது தான் அதற்கு காரணம் என்றும் கூறியுள்ளார் நயன்தாரா.