பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற ஹரிஷ் கல்யாண் நடிப்பில் இயக்குனர் எலான் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்திற்கு யுவன்சங்கர்ராஜா இசையமைக்க உள்ளார் என்பதையும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று ரஜினி பிறந்த நாளில் வெளியாகவிருப்பதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளையொட்டி இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாவதால், இந்த படத்தின் டைட்டில் ரஜினி படத்தின் டைட்டிலாகவோ அல்லது
அவரது பஞ்ச் வசனமே டைட்டில் ஆகவோ இருக்கலாம் என்பதும் இதுகுறித்து யுவன்சங்கர்ராஜா தனது சமூக வலைத்தளத்தில் ஒரு புதிரையும் போட்டார் என்பதையும் நேற்றுமுன்தினம் பார்த்தோம்.
இந்த நிலையில் சற்றுமுன் யுவனின் புதிருக்கான விடையாக இந்த படத்தின் டைட்டில் ‘ஸ்டார்’ என்று வைக்கப்பட்டுள்ளது. ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு எழிலரசு ஒளிப்பதிவும், பிரசன்னா ஜிகே படத்தொகுப்பு பணியும் செய்யவுள்ளனர்.
ஹரிஷ் கல்யாண் ஏற்கனவே நடித்து வெற்றி பெற்ற ‘பியார் பிரேமா காதல்’ டீம் மீண்டும் இணைந்துள்ளதை அடுத்து மீண்டுமொரு வெற்றி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மாஸ்டர் படத்திற்கு பின் தற்போது தளபதி விஜய் நடிக்கவிற்கும் படம் தளபதி 65. சர்கார் படத்திற்கு பிறகு தளபதி 65யை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள நெல்சன் திலீப்குமார் தளபதி 65 படத்தை இயக்கியுள்ளார். மேலும் அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றுமுன்தினம் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தளபதி 65 படத்தின் கதாநாயகி குறித்து தகவல் வெளியாகவில்லை.
இந்நிலையில் தளபதி 65 படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனாவிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடித்தி வருகிறார்களாம்.
மேலும் இது நடந்தால் இப்படத்தின் மூலம் நடிகர் விஜயுடன் முதன் முறையாக ஜோடி போட்டு நடிக்கிறார், நடிகை ரஷ்மிகா மந்தனா.
பொறுத்திருந்து பார்ப்போம் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவருகிறதா? என்று..
வித்தியாசமாக படம் எடுப்பது தற்போது அதிகமாகி இருக்கிறது. இயக்குனர் பார்த்திபன் ஒத்த செருப்பு படத்தை அவர் ஒருவர் மட்டுமே நடித்து இயக்கினார்.
இது பல விருதுகளை வென்றது. அடுத்து அவர் ஒரே ஷாட்டில் ஒரு படத்தை எடுக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். ஒரு ஷாட்டில் படம் எடுப்பது புதிதல்ல. அகடம் என்ற படம் தான் முதன் முதலாக ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது. அதன்பிறகு பல படங்கள் வெளிவந்தது.
இப்போது விமல் நடிக்கும் படம் ஒன்றை ஒரே ஷாட்டில் எடுக்கிறார்கள். கழுகு 2 படத்தை தொடர்ந்து மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவடிவேலன் தயாரிக்கிறார்.
நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. 1 பந்து 4 ரன் 1 விக்கெட் பட இயக்குனர் வீரா இந்த படத்தை இயக்குகிறார். நேற்று முன்தினம் இதன் பூஜை நடந்தது. வரும் ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்குகிறது.
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல படங்களில் க்ளாமர் குயின் என்று புகழப்படும் நடிகையாக 80 களில் கொடிக்கட்டி பறந்த நடிகை சில்க் ஸ்மிதா.
ச ர்ச்சையாக அமைந்து ம ரணம் சினிமாத்துறைக்கே அதிர்ச்சியாக அமைந்தது. தற்போது அவரின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கவிருக்கிற பிரபல தயாரிப்பு நிறுவனம்.
அதற்காக சில்க்காக நடிக்க இயக்குநர் தெலுங்கு நடிகை அனுசுயாவை தேர்வு செய்தனர். அதற்கு நான் அப்படத்தில் நடிக்கவில்லை என்று அனுசுயா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தான் எந்த ஒரு பயோபிக் படத்திலும் சில்க் ஸ்மிதாவாக நடிக்கவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தத் தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் இவங்கள போட்ட 10 பொருத்தமும் பக்காவா இருக்கும் என ரசிகர்கள் மாளவிகா மோகன் அல்லது ரம்யா பாண்டியன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த சமூகவலைத்தளங்கள் என்பது கடல் போன்றது நீந்த தெரிந்தவர்கள் நீந்தலாம், மீன் பிடிக்க தெரிந்தவர்கள் மீன் பிடிக்கலாம். முத்து குளிக்க தெரிந்தவர்கள் முத்தும் எடுக்கலாம். ஆனால், எதுவுமே தெரியாமல் வந்தால் ஆளை சுருட்டி உள்ளே இழுத்து சுறாக்களுக்கு இரையாக்கி விடும் இந்த சமூக வலைத்தளங்கள். இதற்கு எடுத்துக்காட்டாக பல சம்பவங்களை நாம் பார்த்து வருகிறோம்.
இணையத்தில் சிக்கி சின்னா பின்னமானவர்களையும் பார்த்துள்ளோம். மேலும், லட்சம், கோடி என சம்பாதிக்கும் நபர்களையும் பார்த்து வருகிறோம். ஆனால், இங்கே நீச்சல் தெரிந்தும் நீந்த முடியாமல் சிக்கிய இளம் நடிகரை பற்றி தான் பார்க்க போகிறோம்.
இவர் கடந்த வருடம் தான் திருமணம் செய்து கொண்டவர் என்பது கூடுதல் தகவல். என்னதான் திருமணம் ஆனாலும் தன்னுடைய பழைய லவ்தீக வாழ்கையில் இருந்து வெளியே வர முடியாமல் தற்போது கையும் களவுமாக சிக்கிக்கொண்டார். ஆனால், இந்த மேட்டரை அவரது மனைவி கண்டுபிடித்த விஷயம் தான் டிடெக்டிவ் ரேஞ்சுக்கு இருக்கின்றது. சமீப காலமாக சின்னத்திரை வட்டாரத்தில் இது போன்ற கள்ள காதல் விவகாரங்கள் அதிக அளவில் அடிபடுகின்றது.
அந்த லிஸ்டில் தன்னை தானே வம்படியாக வந்து இணைத்துக்கொண்டிருக்கிறார் இந்த பேய்த்தனமான நடிகர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பர்களுடன் கோவா சென்று வருவதாக சொல்லி விட்டு கிளம்பியுள்ளார் நடிகர். இதனை நம்பி அனுப்பி வைத்துள்ளார் அவரது மனைவி. இந்நிலையில், கணவருக்கும் அந்த திருமணம் ஆகாத தொகுப்பாளினிக்கும் இருக்கும் தொடர்பு குறித்து சில தகவல்கள் வந்துள்ளது.
இது குறித்து, கணவரிடம் எதுவும் கேட்காமல் அமைதியாக இருந்து இந்த விஷயத்தை உறுதி செய்ய நினைத்து சில வேலைகளை செய்துள்ளார். முதல் வேலையாக அந்த தொகுப்பாளினியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர முடிவு செய்து தேடிய போது இவரது இன்ஸ்டா முகவரியை முன்னரே ப்ளாக் செய்து வைத்துள்ளார் அந்த தொகுப்பாளினி என்பது தெரிய வந்துள்ளது.
இதனால், சந்தேகம் அதிகரிக்கவே வேறொரு இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து அவரை பின் தொடர செய்துள்ளார். இந்த முதல் முயற்சியே அவருக்கு சந்தேகத்தை பூர்த்தி செய்து வைத்து விட்டது. போக்கிரி படத்தில் வரும் பாடி சோடா கணக்காக மண்டை மேல் இருந்த கொண்டையை மறந்து விட்டார் அந்த நடிகர். ஆம், அவர் வீட்டை விட்டு சென்ற மறு நாள் தொகுப்பாளினி கொடைக்கானலில் இருந்து ஒரு புகைப்படத்தை அப்லோட் செய்துள்ளார்.
அவர்கள் தங்கியிருந்த அறைக்கு வெளியே நின்றபடி ஒரு செல்ஃபி புகைப்படத்தை அப்லோட் செய்துள்ளார் தொகுப்பாளினி. அதில், அந்த நடிகரின் செருப்பு தெரிவதை கவனிக்காமல் அப்படியே அப்லோட் செய்து விட்டார்.
இதனை பார்த்த நடிகரின் மனைவிக்கு தூக்கி வாரிப்போட்டுள்ளது. அப்போதும், அதனை நம்பாமல் அவருடைய நம்பருக்கு போன் செய்துள்ளார். நாட் ரீச்ச்சபில் குரல் தமிழிலேயே ஒலித்துள்ளது. ஏதாவது டெக்னிக்கல் குறைபாடு இருக்கலாம் என்று விட்டு விட்டார். ஆனால், அடுத்த நாள் அந்த நடிகை அப்லோட் செய்த புகைப்படத்தில் அந்த நடிகரின் கார் தெரிவதை கவனிக்காமல் ஒரு சில செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அம்புட்டு தான் நடிகரை தொடர்புகொள்வதற்கு பதிலாக அந்த தொகுப்பாளினியை தொடர்பு கொண்டு கிழி கிழி என கிழித்துள்ளார். தோழி என்று வீடு வரை விட்டதற்கு நல்ல பரிசு கொடுதுருக்க என ஏகத்துக்கும் டோஸ் விட்டுள்ளார்.
அவ்வளவு தான் அடுத்த பத்தாவது மணி நேரத்தில் வீட்டிற்கு வந்துள்ளார் நடிகர். இந்த விவகாரம் சின்னத்திரை வட்டாரத்தில் புகைச்சலை கிளப்பி விட்டுள்ளது.
இசையமைப்பாளராக இருந்து தமிழ் சினிமாவின் ஆஸ்தான ஹீரோவாக மாறியுள்ளவர் ஜீ.வி.பிரகாஷ் குமார்.இவர் நடிப்பில் சிவப்பு மஞ்சள் பச்சை படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து வெளியான 100% காதல் படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை அடுத்து 4g,ஜெயில்,காதலிக்க யாருமில்லை,காதலை தேடி நித்யானந்தா,பேச்சுலர்,
இவர் அடுத்ததாக நடித்து வரும் பேச்சுலர் படத்தை புதுமுக இயக்குனர் சதிஷ் செல்வகுமார் இயக்குகிறார்.Axess பிலிம் பேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகின்றனர்.
இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்ப்பையும்,பரபரப்பையும் உண்டாக்கியது. பிரபல மாடல் திவ்யா பாரதி இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங் அரசு அனுமதி அளித்ததை அடுத்து தொடங்கி நிறைவு பெற்றது.படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.
இந்த படத்தின் ஆடியோ உரிமையை பிரபல ஆடியோ நிறுவனமான திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்ற அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டனர்.
இந்த படத்தின் முதல் பாடல் காதல் கண்மணி டிசம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என்று ஜீ.வி.பிரகாஷ் அறிவித்திருந்தார்.தற்போது இந்த பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.இந்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன்.இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் இவர் ஹீரோவாக Ala Vaikunthapuramulo என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி பொங்கலையொட்டி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
பூஜா ஹெக்டே,நிவேதா பெத்துராஜ் இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தனர்.பட்டி தொட்டி எங்கும் இந்த படம் வசூல் மழை ஈட்டியது.
தபு,ஜெயராம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.Haarika Hassine Creations மற்றும் கீதா ஆர்ட்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்திருந்தனர்.இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் பாடல்கள் மொழிகளை தாண்டி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான புட்டபொம்மா பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.இந்த பாடலுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் டிக்டாக் செய்யும் அளவிற்கு இந்த பாடல் பிரபலமாக இருந்தது.யூடியூப்பில் இந்த படத்தின் பாடல்கள் பல சாதனைகளை நிகழ்த்தி வருகின்றன.
இந்த படம் டிவியில் ஒளிபரப்பட்டு TRP-யிலும் அசத்தல் சாதனையை நிகழ்த்தியது.இந்த படம் தமிழில் வைகுண்டபுரம் என்ற பெயரில் டப் செய்யப்படும் இந்த படம் வரும் டிசம்பர் 13ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ளது.பலரது இதயங்களை கவர்ந்த இந்த படம் , தற்போது மேலுமொரு மாஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
OTT தளங்களில் ஒன்றான Netflix தளத்தில் அதிகம் இந்த வருடத்தில் பார்க்கப்பட்ட தென்னிந்திய படமாக அசத்தல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.இதனை அல்லு அர்ஜுன் ரசிகர்கள் கோலாகலமாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
சின்னத்திரையில் தெய்வமகள் என்ற தொடரின் மூலம் பெண்கள் மற்றும் இளைஞர்களின் இதயத்துடிப்பாக மாறியவர் வாணி போஜன்.சினிமாவில் நடிப்பதே தன்னுடைய இலக்கு என்று தெரிவித்து வந்தார்.
தெய்வமகள் சீரியல் முடிந்த பிறகு பல பட வாய்ப்புகள் வந்தாலும் சரியான படத்தின் மூலம் அறிமுகமாக வேண்டும் என்று காத்திருந்தார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் தெலுங்கில் இவர் நடித்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து அசோக் செல்வன்,ரித்திகா சிங் நடித்த ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தாலும் இவரது காதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பில் உருவாகி வரும் தமிழ் வெப் சீரிஸ் உட்பட சில வெப் சீரிஸ்களில் வாணி போஜன் நடித்து வருகிறார்.சில படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
வைபவ் ஹீரோவாக நடித்துள்ள லாக்கப் படத்திலும் வாணி போஜன் ஹீரோயினாக நடித்துள்ளார்.நடிகர் நிதின் சத்யா இந்த படத்தை தயாரிக்கிறார்.SG சார்லஸ் இந்த படத்தை இயக்குகிறார்.
வெங்கட் பிரபு,ஈஸ்வரி ராவ்,பூர்ணா என்கிற ஷாம்னா காசிம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தில் வைபவ் போலீசாக நடித்துள்ளார்.இந்த படம் நேரடியாக OTT-யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து பர்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆதவ் கண்ணதாசன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் வாணி போஜன் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தின் டைட்டில் லுக் சமீபத்தில் வெளியானது.இந்த படத்திற்கு தாழ்திறவா என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த டைட்டில் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஜெய் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவாகி வந்த ட்ரிபிள்ஸ் வெப் சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த வெப் சீரிஸின் சோக பாடல் வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த பாடலுக்கு ஜெய் இசையமைத்துள்ளார்.
தமிழ் படங்களில் வில்லனாக நம் அனைவருக்கும் நன்கு தெரிந்தவர் பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் சோனு சூட்.
கள்ளழகர், ஒஸ்தி, சந்திரமுகி, அருந்ததி என பல படங்களில் இவரை நாம் பார்த்திருப்போம். அண்மையில் ஆசியவில் டாப் 50 பிரபலங்களில் முதல் இடம் பெற்றார்.
சினிமாவை தாண்டி பல நல்ல உதவிகளை செய்து சேவையாற்றி வரும் அவர் கொரோனா காலத்தில் ஏழைகளுக்கு நிறைய நன்மைகள் செய்து வந்தார். புலம் பெயர் தொழிலாளர்களை வாகனத்தில் அனுப்பி வைத்தார்.
வெளிநாடுகளில் சிக்கிய மாணவர்களை விமானத்தில் அழைத்து வந்தார். 3 லட்சம் தொழிலாளர்களுக்கு வைப்பு நிதி, காப்பீடு, வேலை வாய்ப்பு ஆகியவற்றையும் செய்துகொடுத்தார்.
இதற்காக அவர் தன் பெரிலும் தன் மனைவில் பெயரிலும் இரண்டு கடைகள் மற்றும் வீடுகள் என்று 8 சொத்துக்களை வங்கியில் ரூ 10 கோடிக்கு அடமானம் வைத்துள்ளாராம். அவரின் இந்த செயல் பலரையும் ஆச்சரய்ப்படுத்தியுள்ளது.
கடந்த 2000ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ, ஹீரோயின்களாக இருந்தவர்கள் பிரசாந்த் மற்றும் சிம்ரன் என்பது தெரிந்ததே.
‘கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி ,பார்த்தேன் ரசித்தேன் ஆகிய திரைப்படங்களில் இருவரும் இணைந்து நடித்தார்கள் என்பதும் அந்த படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 2000ம் ஆண்டு ’பார்த்தேன் ரசித்தேன்’ திரைப்படத்தில் பிரசாந்த் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்த நிலையில் 20 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் ஒரே படத்தில் இணைத்து நடிக்க உள்ளனர்.
பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ’அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தில் பிரசாந்த் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் வந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் தபு நடித்த கேரக்டரில் சிம்ரன் நடிக்க உள்ளார். இதுகுறித்து சிம்ரன் கூறியபோதும் ’நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பிரசாந்த் உடன் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
இந்த படத்தில் தபுவின் கேரக்டர் படம் முழுவதும் வரும் வலிமையான கேரக்டர். அந்த கேரக்டரில் நான் தமிழில் நடிப்பது எனக்கு மிகுந்த சந்தோசம்’என்று கூறினார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தின் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தேர்வு நடைபெற்று வருவதாகவும் இயக்குனர் ஜெஜெ ஃபெட்ரிக் தெரிவித்துள்ளார்.