ரஜினி பிறந்த நாளில் டைட்டில்-பர்ஸ்ட்லுக் ஏன்? யுவன் போட்ட புதிர்!

யுவன்சங்கர் ராஜா…

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தான் இசையமைக்கும் திரைப்படம் ஒன்றின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளில் வெளியிட இருப்பதாகவும் அது ஏன் என்பதை கண்டுபிடியுங்கள் என்றும் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற ஹரிஷ் கல்யாண் நடிப்பில் இயக்குனர் எலான் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்திற்கு யுவன்சங்கர்ராஜா இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாக உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளையொட்டி இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாவது ஏன் என்பதை யோசித்து கண்டுபிட்யுங்கள் என்று யுவன் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு புதிரை போட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரஜினி திரைப்படத்தின் டைட்டில் அல்லது அவரது பஞ்ச் வசனமே டைட்டில் ஆக இருக்கலாம் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் இருப்பினும் யுவன்சங்கர்ராஜா போட்ட புதிருக்கு விடை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

த்ரிஷாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி குறித்த தகவல் !

த்ரிஷா..

தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளாக நாயகியாக நடித்து வருபவர் நடிகை த்ரிஷா என்பது தெரிந்ததே. 20 வருடங்கள் ஒரு நடிகை நாயகியாக நடித்து முன்னணி இடத்தில் இருப்பது என்பது சாதாரண விஷயமில்லை. மிகச் சில நடிகைகளுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

த்ரிஷாவுடன் நடித்த நாயகிகள் எல்லாம் தற்போது அம்மா அக்கா அண்ணி வேடங்களில் நடித்து திரையுலகில் இருந்து விலகி வரும் நிலையில் த்ரிஷா இப்போதும் நான்கைந்து படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் த்ரிஷா நடிப்பில் உருவான ’ராங்கி’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் நேற்று வெளியாகியது.

நேற்று மாலை 5.30 மணிக்கு ’ராங்கி’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகவிருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. எம் சரவணன் இயக்கத்தில் ஏஆர் முருகதாஸ் கதையில் உருவாகிய இந்த படத்தில் த்ரிஷாவுடன் அனஸ்வரராஜன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

சி சத்யா இசையில், சக்தி ஒளிப்பதிவில், சுபாரக் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் த்ரிஷாவுக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் த்ரிஷா தற்போது ‘பரமபதம் விளையாட்டு’, ‘கர்ஜனை’, ‘சதுரங்க வேட்டை 2’, சுகர்’, ‘ராம்’, ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

உரியடி விஜயகுமாரின் அடுத்த படம்: இயக்குனராகும் உதவி இயக்குநர்!

விஜயகுமார்…

விஜயகுமார் நடித்த ’உரியடி’ மற்றும் ’உறியடி 2’ ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த இரண்டு படங்களிலும் உதவி இயக்குனராக பணிபுரிந்த அப்பாஸ் என்பவர் தற்போது இயக்குனர் ஆகி உள்ளார் என்பதும் இந்த படத்தில் விஜயகுமார் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 1991 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் நடக்கும் இந்த படத்தில் விஜயகுமாருக்கு வித்தியாசமான கெட்டப்புகள் இருப்பதாகவும், பள்ளி சிறுவன், கல்லூரி மாணவர் முதல் இளைஞர் வரையிலான காலகட்டத்திற்காக அவருக்கு பல கெட்டப்புகள் இந்த படத்தில் உண்டு என்றும்,

இந்த படத்தின் கதைக்கு விஜயகுமார் தான் பொருத்தமாக இருப்பார் என்பதை உறுதி செய்து அவரை தான் தேர்வு செய்ததாகவும் இயக்குனர் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் வரும் மார்ச் மாதம் இந்த படத்தின்

படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த படத்தை தயாரிக்கும் ரியல் குட் பிலிம்ஸ் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

நிஷாவின் டபுள்கேம்: தோலுரித்த நெட்டிசன்களின் குறும்படம்!

பிக்பாஸ்..

பிக்பாஸ் வீட்டில் நேற்று முன்தினம் புதிய மனிதா டாஸ்க்கின் போது அர்ச்சனாவுக்கு பாக்ஸி ரோபோ என பெயர் வைத்தது நான் இல்லை என்றும், நீதான் என்றும் நிஷா, நேற்று முன்தினம் அனிதாவிடம் ஆவேசமாக வாதாடினார். ஆனால் நிஷாவும் ஆரியும் இணைந்துதான் இந்த பெயரை முடிவு செய்தனர் என்பது தற்போது நெட்டிசன்களின் குறும்படம் மூலம் தெரிய வந்துள்ளதால் நிஷாவின் டபுள் கேம் கலைந்துள்ளது.

இந்த குறும்படத்தில் அர்ச்சனாவுக்கு பாக்ஸி ரோபோ என பெயர் வைக்கலாம் என அனிதா கூறும்போது ஆரி ‘நான் ஏற்கனவே நிஷாவிடம் சொல்லிட்டேனே அர்ச்சனா பாக்ஸி ரோபோ தான்’ என்று கூறியபோது நிஷாவும் அதை ஆமோதித்தார். மேலும் பாக்ஸி ரோபோ என்பது அர்ச்சனாவுக்கு பொருத்தமாக இருப்பதாக் ஆரி கூறியபோதும் எந்தவிதமான எதிர்ப்பையும் தெரிவிக்காத நிஷா, அதனை ரசித்து கேட்டு கொண்டிருந்தார்.

மேலும் சோம்சேகருக்கு ‘பப்பட் ரோபோ’ என பெயர் வைக்கலாம் என கூறியதும் நிஷா தான். அதேபோல் ரம்யாவுக்கும் சாப்ட் ரோபோ என்றும் ஷிவானிக்கு மேக்கப் ரோபோ என்றும் பெயர் வைத்ததும் நிஷா தான் என்பது அந்த குறும்படத்தில் தெரிய வருகிறது.

ஆக, எல்லோருக்கும் பெயர் வைத்து செய்வதை எல்லாம் தானே செய்துவிட்டு, அதன்பின் நிஷா அனிதாவிடம் சண்டை போட்டது அவருடைய ஃபேவரிட்டிஸம் மற்றும் இரட்டை வேடத்தை வெளிப்படுத்துவதாக இந்த குறும்படம் அமைந்துள்ளது. இந்த குறும்படத்தை கமல்ஹாசன் போட்டு காட்டினால் நிஷாவிடன் இரட்டை வேடம் கலைய வாய்ப்பு உள்ளது. கமல் செய்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மாஸ்டர் படத்திற்காக விஜய் போடும் புதிய திட்டம் !

விஜய்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் விஜய், தற்போது தன்னுடைய மாஸ்டர் படத்திற்காக புதிய திட்டம் போட்டு இருக்கிறார்.

விஜய், தனது அடுத்தப்படத்தை இயக்கும் வாய்ப்பை ‘கோலமாவு கோகிலா’ மற்றும் ‘டாக்டர்’ பட இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்குக் கொடுத்திருக்கிறார்.

‘மாஸ்டர்’ படத்தைப் பெரிதும் எதிர்பார்க்கும் விஜய், அந்தப் படத்திற்காக தன்னால் முடிந்த ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டும் என முழு வீச்சில் இறங்கி இருக்கிறார். இதற்கிடையில், ‘மாஸ்டர்’ படத்தின் ரிலீசுக்காக விஜய் ஒரு திட்டத்தை வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

‘மாஸ்டர்’ படம் எதிர்பார்த்த தேதியில் இருந்து 9 மாதங்கள் தாமதமாக ரிலீஸாக இருப்பதாலும், கொரோனா தாக்கத்தால் தியேட்டருக்கு மக்கள் வர தயங்குவதாலும்,

அதனை சரி செய்ய விரும்பிய விஜய், நீண்ட நாள்களுக்குப் பிறகு தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கவும் தமிழ்நாடு முழுக்க தியேட்டர் விசிட் அடிக்கவும் திட்டமிட்டு இருப்பதாக கூறுகிறார்கள்.

கவுதம் மேனனின் ஆந்தாலஜி படத்தில் சூர்யாவுக்கு ஜோடி யார் தெரியுமா?

பிரயாகா மார்டின்..

கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள நவரசா என்கிற ஆந்தாலஜி படத்தில் பிரபல மலையாள நடிகை ஹீரோயினாக நடித்துள்ளாராம்.

கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் ‘நவரசா’ என்கிற ஆந்தாலஜி படம் உருவாகி வருகிறது. நவரசங்களை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த ஆந்தாலஜி படத்தை 9 இயக்குனர்கள் இயக்குகின்றனர்.

அதில் கவுதம் மேனன் இயக்கும் குறும்படத்தில் சூர்யா நாயகனாக நடித்துள்ளார். இதன்மூலம் வாரணம் ஆயிரம் படத்திற்கு பிறகு சுமார் 12 ஆண்டுகள் கழித்து இவர்கள் இணைந்துள்ளனர்.

இந்த குறும்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இந்த குறும்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மலையாள திரையுலகில் பிசியான நடிகையாக வலம்வரும் பிரயாகா மார்டின் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர் ஏற்கனவே தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பிசாசு படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹீரோ வில்லன் என இரண்டு கேரக்டரிலும் நடிக்கும் இளம் நடிகர்!

கௌதம் கார்த்திக்…

தமிழ் சினிமாவின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான கௌதம் கார்த்திக் ஹீரோ வில்லன் என இரண்டு கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அறிமுக இயக்குனர் தக்ஷிணாமூர்த்தி ராமர் என்பவர் இயக்கவுள்ள படத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிக்க உள்ளார்.

மதுரையை பின்புலமாகக் கொண்ட திரைப்படங்கள் பல வந்திருந்தாலும் இந்த படம் முற்றிலும் வித்தியாசமானது என்று இயக்குனர் தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.

முதல் முறையாக இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடிக்க இருக்கும் கௌதமுக்கு இரண்டுமே கேரக்டர்களுமே வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்று இயக்குனர் கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் ரொமான்ஸ் காட்சிகளே இல்லை என்றும் இருப்பினும் பிரபல நடிகை ஒருவர் வலிமையான கேரக்டர் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் அது மட்டுமின்றி 80களில் ஹீரோவாக இருந்த ஒருவரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தளபதி 65 டைட்டில் டீசர் இந்த படத்தின் காப்பியா..? கடுப்பான ரசிகர்கள்..!

தளபதி 65…

நடிகர் விஜய் தனது 65வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகிவிட்டது.

மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க போகிறார் என, நேற்று வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வீடியோவில் தெரிவித்துவிட்டர்கள்.

இந்நிலையில் தளபதி 65 படத்தின் அறிவிப்பிற்காக ஒரு வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இதில் கலாநிதி மாறன், நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் நெல்சன் தீலிப் குமார் ஆகியோர் இருந்தார்கள்.

இவர்களின் சந்திப்பிற்கு பிறகு மாஸான பிஜிஎம்-முடன் டீசர் போல் வீடியோ ஒன்று தளபதி 65 என்ற ஒர்க்கிங் டைட்டிலை அறிவிக்கிறது.

இதில் இடம்பெற்றுள்ள துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் காட்சிகள் சில வாரங்களுக்கு முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகவிருக்கும் விக்ரம் பட டைட்டில் டீசரை போலவே இருக்கிறது.

இதனால் தளபதி 65 படத்தின் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, இந்த டைட்டில் வீடியோ காப்பி என்ற சர்ச்சை கிளம்பிவிட்டது.

அதர்வா நடிக்கும் குருதி ஆட்டம் படத்தின் டீசர்..!

குருதி ஆட்டம் டீசர்..

சோம் & நிஷா Double Eviction-ஆல் இந்த வாரம் வெளிய வரப்போறாங்களா? அதிர்ச்சி தகவல் !

சோம் & நிஷா..

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா, ரியோ, சோம், நிஷா, கேபி, ரமேஷ் என குரூப் ஆக இருக்கும் இவர்களின் Gang-இன் பெயர் “Love Bed Gang”. இந்த குரூப் தனித்திறமை உடன் விளையாடும் போட்டியாளர்களை வெளியேற்றி விளையாடுவார்கள்.

கடந்த வாரங்களில் வெளியேற்றப்பட்ட சுசித்ரா, சுரேஷ், சனம் ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் தனித்தன்மையுடன் விளையாடி வந்தார்கள். அவர்களை டார்கெட் பண்ணி Nominate செய்து வெளியேற்றி விட்டார்கள்.

இவர்களுக்கு எப்பவுமே ஆரி தான் முதல் டார்கெட். எல்லா வாரமும் ஆரியை நாமினேட் செய்து கொண்டிருப்பார்கள். இந்த ஷோ மூலமாக வெளியே சில ரசிகர்கள் இருப்பதால் ஆரி தப்பித்து விடுகிறார். இந்த வாரம் எதிர்பார்த்தபடி ஆரி மற்றும் அனிதா டார்கெட் செய்யப்பட்டு ஜெயிலுக்கு அனுப்பினார்கள்.

ஆனால் மக்கள் Love Bed Gang-இல் இருந்து இரண்டு பேரை வெளியே அனுப்ப முடிவு செய்துள்ளார்கள் போல. இந்த வாரம் Double சுவாரஸ்யம் ஆக Double Eviction இருக்க வாய்ப்புகள் அதிகம், அதிலும் நிஷா மற்றும் சோம் கம்மி வோட்டுகள் வாங்கியதாக கருதி அவர்களை வெளியே அனுப்ப முடிவு செய்துள்ளார்கள்.

ஆக இன்று என்ன சமாச்சாரம் என்று தெள்ள தெளிவாக தெரிந்துவிடும்.