பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சித்ரா. இவர் கடந்த 9ம் தேதி ஹோட்டல் அறையில் தூ.க்.கு.ப்.போ.ட்டு த.ற்.கொ.லை செ ய் து கொண்டார்.
இ வரது ம ரணம் எ ப்படி ந டந்தது இ தற்கு பின் யா ராவது உ ள்ளார்களா என போலீசார் வி சாரணை ந டத்தி வந்தனர். இந்த நிலையில் ஒரு தகவல் வந்துள்ளது.
அதாவது சித்ராவிற்கு அவரது தாய் மற்றும் கணவர் என இரண்டு தரப்பிலும் வந்த ம ன அ ழுத்தம் கா ரணம் என்றும் ஹேமந்த் கு.டி.த்.து.வி.ட்.டு சித்ராவிடம் த.க.ரா.று செ ய்துள்ளதாகவும் போ லீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சித்ராவின் செல்போனில் உள்ள ஆதாரங்கள், குறுஞ்செய்திகள் அழிக்கப்பட்டுள்ளதால் சைபர் ஆய்வகத்திற்கு சித்ராவின் செல்போன் ஆய்விற்கு அ னுப்பப்பட்டுள்ளது.
தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.
இந்த படத்தை Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.சமீபத்தில் விஜயின் பிறந்தநாளுக்கு ஒரு ஸ்பெஷல் போஸ்ட்டரை மாஸ்டர் படக்குழு வெளியிட்டனர்.இந்த போஸ்டரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.கொரோனா பாதிப்பு குறைந்த பின் இந்த படம் நிச்சயம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டீஸர் வெளியாகி பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. 2 மில்லியன் லைக்குகளை பெற்று இந்த சாதனையை படைக்கும் முதல் தென்னிந்திய படத்தின் டீஸர் என்ற பெருமையை படைத்தது.
தற்போது அதிகம் பார்க்கப்பட்ட தென்னிந்திய பட டீஸர் என்ற பெருமையை மாஸ்டர் டீஸர் பெற்றுள்ளது,இதற்கு முன் இருந்த மெர்சல் பட சாதனையை பின்னுக்கு தள்ளி இந்த சாதனையை படைத்துள்ளது.
உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், ஜானி உள்ளிட்ட பல படங்களின் மூலம் திரை விரும்பிகளை ஈர்த்தவர் இயக்குனர் மகேந்திரன். சினிமா இலக்கணத்தை வகுத்து, சிறந்த இயக்குனராய் திகழ்ந்த இவர் நடிகராகவும் அவதாரம் எடுத்தார். அட்லீ இயக்கத்தில் தெறி படத்தில் தளபதி விஜய்யுடன் சேர்ந்து நடித்தார். பின் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்தார். அவரது படைப்புகளின் மூலம் திரை ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் மகேந்திரன்.
மகேந்திரனின் திரைப் பாதையை பின்பற்றி அவரது மகனான ஜான் மகேந்திரன் இயக்குனரானார். இரண்டு தெலுங்கு படங்களை இயக்கியிருந்தாலும், இவர் இயக்கத்தில் வெளியான சச்சின் திரைப்படம் சினிமா பிரியர்களின் ஃபேவரைட். தளபதி விஜய்யின் திரைப் பயணத்தில் மிக முக்கியமான படம். ஜான் மகேந்திரன் இயக்கியிருந்தார் என்று கூறுவதை விட சச்சின் எனும் பாத்திரத்தை அவ்வளவு அழகாக வடிவமைத்திருப்பார்.
தெறிக்க தெறிக்க மாஸ் வசனங்கள் என்று ஏதும் இல்லாமல், கூலான கிளாஸான செகண்ட் ஹான்ட் புல்லட் அல்லது சைக்கிளில் வலம் வந்திருப்பார் விஜய். மலையரசியின் மனம் மயக்கும் லொகேஷன் மறுபுறம் என விழிகளுக்கு விருந்தளித்திருப்பார் ஜான். அதன் பிறகு ஆணிவேர் என்ற படத்தை இயக்கினார்.
சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ஜான் மகேந்திரனின் ட்வீட்டுகளுக்கு ரசிகர்கள் ஏராளம். அதனால் அவரை பின்தொடருபவர்கள் தாராளம். இந்நிலையில் சுவையூட்டும் செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார் ஜான். அவரது மகன் கெவின் ஆடம்ஸ் விசித்திரன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதிக்கிறார். Publicity designer என்று சொல்லப்படும் திரைப்பட விளம்பர வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். விசித்திரன் படத்தின் விளம்பர போஸ்டர்கள் அனைத்தும் இவர் கைவண்ணத்தில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.
அப்பா மற்றும் தாத்தா இருவரும் புகழ்பெற்ற இயக்குனர்கள், அதனால் வாய்ப்பு எளிது என்ற விஷயம் இருந்தாலும், வடிவமைக்கும் வலி மற்றும் ஆற்றல் கெவினையே சேரும். வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இன்று டாக் ஆஃப் தி டவுனில் இருக்கும் டிசைனர் கெவின் அவர்களை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா. இனி போட்டோஷாப் போர்கள் நடக்கட்டும், இன்டிசைன் மற்றும் இல்லஸ்ட்ரேட்டர் இன்பம் தரட்டும். போஸ்டர்கள் ரசிகர்களின் மனதை ஆளட்டும்.
விசித்திரன் படத்தில் ஆர்.கே சுரேஷ் நடித்துள்ளார். ஜோசப் என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த படம். இயக்குனர் எம் பத்மகுமார் இயக்கி வருகிறார்.இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. 2019 பிப்ரவரியில் இருந்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.ரோஷினி ஹரிப்ரியன் இந்த தொடரின் நாயகியாக நடித்துள்ளார்.அருண் பிரசாத் நாயகனாக நடித்து வரும் இந்த தொடரில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த தொடர் விஜய் டிவியின் TRPயை அல்லும் முக்கிய தொடர்களில் ஒன்று.
ரூபா ஸ்ரீ,அகில்,கண்மணி மனோகரன்,காவ்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.கொரோனா காரணமாக இந்த தொடரின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டு பழைய எபிசொட்கள் தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
இந்த தொடரின் முன்னணி நாயகர்களுக்கென்று சமூகவலைத்தளங்களில் நிறைய ரசிகர் பக்கங்கள்,போட்டோ எடிட்கள்,வீடியோ எடிட்க்கள் என்று ரசிகர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கொரோனா பாதிப்பை தொடர்ந்து இந்த தொடரின் ஒளிபரப்பு ஜூலை 27ஆம் தேதி முதல் தொடங்கியது.விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த தொடரின் 8.30 முதல் 9.30 வரை ஒரு மணி நேரமாக ஒளிபரப்பாகி வருகிறது.தொடரின் புதிய எபிசோடுகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
விறுவிறுப்பான கட்டத்தில் நகர்ந்து வரும் இந்த தொடர் கடந்த வார TRP-யில் சாதனை படைத்தது .அதிகம் பார்க்கப்பட்ட தொடராக இந்த தொடர் இருந்தது.இந்த தொடரை வைத்து குறிப்பாக கண்ணம்மா நடப்பது செம வைரலாக இருந்தது.
தற்போது இந்த தொடர் சிறப்பு தொகுப்பாக வரும் 14ஆம் தேதி மாலை 6-9.30 மணி வரை 3 மணி நேரம் ஒளிபரப்படவுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.
கோலிவுட் திரையுலகில் காதலர்களாக கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வந்து கொண்டிருக்கும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் இவர்களின் திருமண அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகும் ஒரு திரைப்படம் குறித்த அறிவிப்பு ஒன்று கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்பட்டது.
ஆனால் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளி போய்க்கொண்டே இருந்தது.
இந்த நிலையில் நேற்று ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் பூஜை நடைபெற்று உள்ளது. நேற்றைய பூஜையில் இயக்குனர் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் லலித் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நயன்தாரா வேறொரு படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் அவர் பூஜையில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதால் விஜய்சேதுபதி, நயன்தாரா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட சனம் ஷெட்டி தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இதில் கடந்த வாரம் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டார். ரசிகர்களின் ஆதரவு இருந்தும் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில், சனம் ஷெட்டி மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏனெனில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சனம் ஷெட்டி, இன்னும் தனது சொந்த வீட்டிற்கு செல்லவில்லையாம். அவர் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆதலால், யாரும் எதிர்பாராத வகையில் சனம் ஷெட்டி விரைவில் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக செல்ல வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சீசனில் வனிதா வெளியேற்றப்பட்ட ஒரு சில தினங்களில் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்தார். அந்த வகையில் தற்போது சனம் ஷெட்டியும் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார் ஒரு படத்தில் டூப் இல்லாமல் சண்டை போட்டு இருக்கிறார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ”போடா போடி” திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் நடிகை வரலட்சுமி.
அதிரடி கதாபாத்திரங்கள், ரிஸ்க்கான காட்சிகள் என துணிச்சலாக எடுத்து நடிக்கும் திறமையான நடிகை வரலட்சுமி.
இதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழிகளிலும் இவருக்கு பட வாய்ப்புகள் வருகிறது.
வரலட்சுமியின் கைவசம் தற்போது காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ், யானை, சேசிங், ஆகிய தமிழ் திரைப்படங்கள் உள்ளன.
தெலுங்கிலும் இவருக்கு நந்தி, கிராக் ஆகிய படங்களும் கன்னடத்தில் ரணம் என மொத்தம் ஒன்பது படங்கள் உள்ளன. மேலும் இவரது நடிப்பில் சேசிங் திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது இந்த படத்தில் வரலட்சுமி ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
கே வீரக்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிகள் அனைத்திற்கும் நடிகை வரலட்சுமி டூப் போடாமலேயே நடித்து தன் திறமையை காட்டியுள்ளார்.
மூன்று வில்லன்கள் உள்ள இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
நடிகை ரகுல் பிரீத் சிங், நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும் அவருடன் திருமண ஏற்பாடுகள் நடப்பதாகவும் கூறப்படும் நிலையில், அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழில் கார்த்தி ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், சூர்யாவுடன் என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் ரகுல் பிரீத் சிங்.
இவர் தற்போது கமலுடன் இந்தியன் 2, சிவகார்த்திகேயனுடன் அயலான் போன்ற படங்களில் நடித்து வருகிறார். போ.தை.ப் பொ.ரு.ள் வ.ழ.க்கில் அ.வ.ர் ஆ.ஜ.ரா.கி வா.க்.கு.மூ.ல.ம் அ.ளி.த்.த.து ப.ர.ப.ர.ப்பானது.
இந்நிலையில் நடிகை ரகுல் பிரீத் சிங், நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும், அவருடன் திருமண ஏற்பாடுகள் நடப்பதாகவும் வலைத்தளத்தில் தகவல் ப.ரவியது.
இதற்கு பதிலளித்துள்ள ரகுல் பிரீத் சிங், “நான் நடிகரை காதலிப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை. எனக்கு திருமண ஏற்பாடுகளும் நடக்கவில்லை. நான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. தனியாகத் தான் இருக்கிறேன்.
எனக்கு எப்போது திருமணம் நடந்தாலும் அது பெரிய கொண்டாட்டமாக இருக்கும்” என்றார். மேலும் “தமிழ், தெலுங்கு, இந்தியில் கைநிறைய படங்கள் வைத்து நடித்து வருகிறேன். இந்த படங்கள் அடுத்த வருடம் திரைக்கு வரும்” என்றார்.
பிரபல நடிகராக இருக்கும் ஆர்யாவின் பிறந்தநாளுக்கு நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல் சிறப்பு பரிசு கொடுத்துள்ளார்.
ஆர்யா பிறந்தநாளுக்கு கமல் கொடுத்த சிறப்பு பரிசு பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் ’சார்பாட்டா பரம்பரை’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது.
சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய வைரலானது.
இந்த நிலையில் தற்போது கமல்ஹாசன் ஆர்யாவை நேரில் அழைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இன்று (டிசம்பர் 11) ஆர்யாவுக்கு பிறந்தநாள் என்பதால், கமல் பாராட்டி இருப்பது, பிறந்தநாள் பரிசு என்று ஆர்யா கூறியிருக்கிறார்.