வீட்டிற்கு வேலைக்கு வந்த பெண்களை..காலில் விழுச்சொல்லி வற்புறுத்திய பாடகர் புஷ்பவனம் குப்புசாமி குடும்பத்தினர்: அதிர்ச்சி தகவல்!!

அனிதா குப்புசாமி…….

பிரபல பாடகரான புஷ்பவனம் குப்புசாமி வீட்டில் ஆர்கானிக் பொருட்கள் தயாரிக்கும் பணியில் இருந்த இரண்டு பெண்களை சம்பள பிரச்சனை காரணமாக காலில் விழும் படி வற்புறுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின், சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பாகிரதி தெருவில் பிரபல நாட்டுப்புற பாடகரான புஷ்பவனம் குப்புசாமி வீடு உள்ளது. இந்த வீட்டின் ஒரு பகுதியில் விஹா என்ற பெயரில் ஆர்கானிக் சோப்பு உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது.

இங்கு மாதம் 8 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு, மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பகுதியைச் சேர்ந்த 18 வயது மற்றும் 17 வயதுடைய சகோதரிகள் வேலை செய்து வந்துள்ளனர்.

வேலை நாட்கள் போக, விடுமுறை நாட்களாக ஞாயிற்றுக் கிழமை வேலை பார்த்தால், தனியாக 300 ரூபாய் சம்பளமாக தரப்படும் என்று கூறப்பட்டதால், இந்த சகோதரிகள் கடந்த ஞாயிற்றுக் கிழமை வேலை செய்துள்ளனர்.

அதன் படி வேலையில் ஈடுபட்ட சகோதரிகளுக்கு மேலாளர் தில்லை என்பவர் 200 ரூபாய் மட்டும் சம்பளமாக கொடுக்க, இதை தட்டி கேட்ட போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதை அடுத்து சகோதரிகள் இருவரையும் மன்னிப்புக் கேட்டுவிட்டு வெளியே செல்லும்படி கூறி வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். பிரச்சனையை தொடர்ந்து அங்கு வந்த சகோதரிகளின் தாயையும் தகாத வார்த்தைகளில் பேசியதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, அனிதா குப்புசாமி, அவரை தன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும்படி கூறியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த பொலிசார் சகோதரிகள் இருவரையும் அவர்களது குடும்பத்தினருடன் அனுப்பி வைத்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VJ சித்து தனது வருங்கால கணவரிடம் பேசிய கடைசி வார்த்தைகள் – வெளியான அதிர்ச்சி தகவல் !

VJ சித்ரா…

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் மக்கள் மனதில் நின்றவர் VJ சித்ரா. 28 வயதாகும் இவர் இன்று அதிகாலை 02.30 மணிக்கு,

ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் நேற்றிரவு ஷூட்டிங் மு டித்துவி ட்டு ஹோட்டல் ரூமிற்கு வந்துள்ளார். தனக்கு நிச்சயம் செய்த ஹேமந்த் ரவி என்பவருடன் சித்ரா ஒன்றாக அந்த ஹோட்டல் அறையில் இருந்துள்ளார்.

இந்நிலையில், ஷூட்டிங் முடித்த அசதியில் இருந்த சித்ரா, ஹேமந்த்திடம் “நான் குளிக்கணும், கொஞ்சம் வெளிய வெயிட் பண்ணுங்க” என்று கூறியுள்ளார். எதோ ஒரு நம்பகத்தன்மை இல்லாமல், வெளியே சென்றார் ஹேமந்த்.

நீண்ட நேரம் ஆனதால் அறையின் கதவை தட்டியதாகவும், கதவை திறக்காததால் ஹோட்டலில் சொல்லி மாற்று சாவியை எடுத்துவந்து திறந்து பார்த்தபோது சித்ரா அங்குள்ள மின்விசிறியில் பு டவை மூலம் தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய் துகொ ண் டதாகவும் ஹேமநாத் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் நசரத் பேட்டையில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் நடந்துள்ளது. இது குறித்து நசரத் பேட்டை போ லீ சார் வி சா ரணை நடத்திவருகின்றனர்.

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தூ.க்.கி.ட்.டு த ற் கொ லை!!

நடிகை சித்ரா..

சின்னத்திரை நடிகை சித்ரா தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வி.ஜே.வாக தனது பயணத்தை தொடங்கிய சித்ரா, பல்வேறு சீரியல்களில் நாயகியாக நடித்துள்ளார்.

சமீபத்தில் இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்து கொண்டுள்ளார். சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்து கொண்டுள்ளார்.

கதவை சித்ரா திறக்காததால் ஹோட்டல் ஊழியரிடம் சொல்லி மாற்று சாவியை எடுத்துவந்து திறந்து பார்த்தபோது சித்ரா அறையில் உள்ள மின்விசிறியில் புடவை மூலம் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்துகொண்டது தெரிவியவந்துள்ளது.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உ டலை மீ ட்டு பி ரேத ப ரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவரது த.ற்.கொ.லை முடிவுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முள்ளை வேடத்தில் நடித்து வந்தவர் சித்ரா. இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம், சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டீவாக இருப்பார்.

இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் விபரீத முடிவு எடுத்திருக்கிறார். நடிகை சித்ராவின் இந்த முடிவு அவரது ரசிகர்கள் இடையே சோ கத்தை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஹீரோ சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி – ராதிகா உருக்கம் !

சரத்குமார்…

“நீ ஏழையா இரு இல்லனா கோழையா இரு, யாரா வேணா இரு, ஆனா என்கிட்ட கொஞ்சம் தள்ளியே இரு…” என்று கொரோனா நமக்கு அறிவுறுத்தும் வகையில் இருக்கிறது நம்ம லட்ச்சனம்.

ஏழை பணக்காரர் என பாகுபாடின்றி என அனைவருமே இந்த வைரஸ் தொற்று பரவுகிறது.

கோலிவுட்டில் விஷால், தமன்னா, நிக்கி கல்ராணி,SPB, விஜயகாந்த் மற்றும் பாலிவுட்டில் அமிதாப், அபிஷேக், ஐஷ்வர்யா ராய், தெலுகு திரைப்பட உலகில், ராஜமௌலி, சிரஞ்சீவி போன்ற பிரபலங்களும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இவர்களை தொடர்ந்து தற்போது நடிகை வரலக்ஷ்மி தந்தையும், ராதிகாவின் கணவரும், நடிகருமான சரத்குமாருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராதிகா அதிகாரப் பூர்வமாக கூறியுள்ளனர்.

இதனால் ட்விட்டர்வாசிகள் சற்று அதிர்ந்து போக, “உடனே அவர் நல்ல மருத்துவர்களிடம் தான் இருக்கிறார். அவரைக் குறித்த அப்டேட்களை அப்போது தருகிறேன்” என்று வாக்குறுதி கொடுத்துள்ளார் ராதிகா.

தமிழ் சினிமாவின் வில்லனாக அறிமுகமாகி வலம் வந்தவர் சரத்குமார், அதன் பின்னர் ஹீரோவாக பட்டையை கிளப்பினார். தற்போது குணசித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடராஜனுக்கு GROUND-ல் வாழ்த்து தெரிவித்த அஜித் ரசிகர்கள் ! சிட்னியில் அமர்க்களம் !

அஜித் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் டாப் 3 இல் இருக்கும் நடிகர் அஜித். இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார். அஜித்துக்கு நடிப்பு மட்டுமின்றி விளையாட்டுத்துறையில் கூட ஆர்வம் அதிகம்.

உதாரணத்திற்கு அவர் கார் ரேஸ் பந்தயத்தில் வல்லவர். அதுபோல் மற்ற விளையாட்டுத் துறையிலும் ஈடுபாடு கொண்டவர். அவரது ரசிகர்கள் பலரும் விளையாட்டுத்துறையில் ஈடுபாடு கொண்டவர்கள்.

இந்நிலையில் தற்போது T20 World Cup நடந்துகொண்டிருக்கும் நேரத்தில், நம்ம ஊரு வீரரான நடராஜன் அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக நடிகர் அஜித்தின் ரசிகர்கள் செய்துள்ள செயல் இணையத்தில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்து பேனர் அடித்து, கிரவுண்டுக்கு அஜித் ரசிகர் ஒருவர் சென்றுள்ளார்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள அந்த ரசிகர், ”எனது வாழ்நாள் கனவு இன்று நிறைவேறி இருக்கிறது.

தல ரசிகர்களின் வாழ்த்துக்களை இந்திய அணிக்கும், நடராஜனுக்கும் நேரடியாக இங்கே கொண்டு வந்து இருக்கிறேன்” என அவர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

பிக்பாஸில் தேம்பி தேம்பி அழுத ஷிவானி- பாலாஜி என்ன செய்தார் தெரியுமா?

ஷிவானி- பாலாஜி….

பிக்பாஸ் 4வது சீசனில் காதலர்கள் என்று ரசிகர்களால் கூறப்படுவது பாலாஜி-ஷிவானி தான். ஆனால் இருவரும் அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறி வருகின்றனர்.

அண்மையில் நிகழ்ச்சிக்கு பார்வையாளர் ஒருவர் கால் செய்து ஷிவானியிடம் உங்களுக்கு அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என்பதால் நாமினேஷனுக்கு வந்தீர்களா என கேட்க அதற்கு அவர் ஆமாம் என்றார்.

அதன்பிறகு ஷிவானி கார்டன் ஏரியாவில் உட்கார்ந்து தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தார்.

இதனை பார்த்த பாலாஜி ஏன் அழுகிறாய், தோக்குறதும் ஜெயிக்குறதும் இங்கதான். நமக்கு லைஃப் வெளிலதான் இருக்கு என்றார். மேலும் ஷிவானி இதுதான் கேம் என ஆறுதல் கூறி அவரை கட்டி அணைத்து ஆறுதல் கூறியுள்ளார்.

இவங்க காதல் பிரிந்ததுக்கு அந்த நெருக்கமான காட்சி தான் காரணமா?

ஜெய்-அஞ்சலி…

சினிமாவுல காதலர்களா சுத்திட்டு இருந்தாங்க ஜெய்-அஞ்சலி. லவ் பண்ணி அப்படியே லிவிங் ரிலேஷன் ஷிப்ல இருந்தாங்க.

ஆனா பாருங்க திடீரென என்ன ஆச்சோ தெரியல ரெண்டு பேரும் பிரிஞ்சு அப்படியே அவங்க சோலிய பாக்க போய்டாங்க.

இப்ப பாத்தா நம்ம ஜெய் அண்ணாத்த ஒரு சீரியல் நடிகையோட படம் நடிக்கும் போது

சில நெருக்கமான காட்சி நடிக்க அப்படியே அவங்களுக்குள்ள லவ்சு உருவாகிடுச்சாம்.

இத தெரிஞ்ச அம்மனி அஞ்சலி லவ் பிரேகப் பண்ணிகிட்டாங்க சொல்றாங்க.

Biggboss வீட்டை விட்டு வெளியே வந்த சனம் மிக உருக்கமாக பேசிய வீடியோ !

சனம்…

சனம் வெளியேற்றம் : மீரா மிதுனின் மோசமான பதிவு !

மீரா மிதுன்…

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 60 நாட்களைக் கடந்து தற்போது விறுவிறுப்பை நோக்கி செல்லத் துவங்கியுள்ளதாகத் தெரிகிறது. நேற்று முந்தினம் யாரும் எதிர்பார்க்காத வகையில் போட்டியிலிருந்து சனம் வெளியேற்றப்பட்டார். மற்ற சிலரைப் போல் ஒரு குரூப்பாகச் செயல்படாமல் தனித்து செயல்பட்டார். சக போட்டியாளர்களான பாலாஜி உள்ளிட்ட சிலர் கடுமையாக அவமானப்படுத்தினாலும் அதையெல்லாம் சமாளித்தார்.

அவருடைய போட்டி மனப்பான்மையைக் கண்டு அவருக்கு நிறைய பேர் ரசிகர்களானார்கள். ஆனால், நேற்று அவர் வெளியாகப் போகிறார் என இரு தினங்களுக்கு முன்பு தெரிய வந்ததுமே பலரும் இதையெல்லாம் வேண்டுமென்றே செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்கள். விஜய் டிவி வேண்டுமென்றே சிலரை வெளியேற்ற முடிவு செய்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவியது.

இதனிடையே, கடந்த பிக் பாஸ் சீசனில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்த மீரா மிதுன், நிகழ்ச்சியிலிருந்து சனம் வெளியேறியது குறித்து, அருவெறுப்புடன் ஒரு பதிவு செய்துள்ளார்.

“ஒரு மகிழ்ச்சியான தருணம் கடைசியில் வந்துவிட்டது. பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியிலிருந்து டுபாக்கூர் வெளியேறிவிட்டார். வெளியில் வந்து டுபாக்கூர் ஷோக்களை செய், வாழ்த்துகள் டுபாக்கூர்.

மேலும், “இந்த பூமியில் தர்ஷன் மிகவும் மகிழ்ச்சியானவராக இருப்பார். அவருடைய முன்னாள் காதலியின் குணம் என்னவென்பது வெளியில் தெரிந்துவிட்டது.

விஜய் டிவி, பிக்பாஸ் நல்ல வேலை செய்தீர்கள். ‘அம்புலி’ நாயகன் சொர்க்கத்திலிருந்து சிரித்துக் கொண்டிருப்பார்,

டுபாக்கூர் எப்போதும் டுபாக்கூர் தான்” என்றும் தரக்குறைவான வார்த்தைகளுடன் சனம் வெளியேறியது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நடிப்பை தாண்டி நடிகர் ரகுவரன் அவர்களே இசையமைத்து பாடிய பாடலை கேட்டுள்ளீர்களா?

ரகுவரன்…

தமிழ் சினிமா மிகவும் மிஸ் செய்யும் நடிகர் என்றால் அது ரகுவரன் அவர்கள் தான். வில்லன் எப்படி இருக்க வேண்டும் என்கிற உதாரணம் அவர்.

இப்போது அவர் நம்முடன் இல்லை என்றாலும் படங்கள் மூலம் நம்முடன் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்.

ஸ்டைலிஷ் வில்லனாக ஜொலித்த இவர் சினிமாவிற்குள் இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்று தான் ஆசைப்பட்டாராம்.

ஆனால் அவரது டிராக் மாறி நடிப்பில் களமிறங்கினார்.

ஆனாலும் ரகுவரன் அவர்கள் தனது ஆசையையும் நிறைவேற்றியிருக்கிறார். ஒரு 6 பாடல்களை இசையமைத்து அவரே பாடியுள்ளார்.