ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி, எந்த கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் தெரியுமா?

தலைவி..

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகை கங்கனா ரனாத் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் தலைவி.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக உருவாகும் இப்படத்தில்

ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரனாத், எம்.ஜி.ஆர் ஆக அரவிந்த் சாமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது நடிகர் சமுத்திரக்கனியும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளாராம். ஆம் இது குறித்த அவரின் பதிவில், இப்படத்தில் தனக்கான படப்பிடிப்பை முடித்து விட்டதாகவும்.

இப்படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் படக்குழுவினர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் சமுத்திரக்கனி. மேலும் இப்படத்தில் அவர் RM வீரப்பன் கதாபாரத்தில் நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

விக்ரம் படத்தில் நடிகர் கமலை வில்லனாக மிரட்ட களமிறங்கும் முன்னணி நடிகர், வெளியான சூப்பர் தகவல்..!

விக்ரம்…

நடிகர் கமல் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர், இவரின் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உண்டு.

கடைசியாக இவர் நடிப்பில் விஸ்வரூபம் 2 திரைப்படம் வெளியாகியிருந்தது, அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வந்தார். ஆனால் தற்போதுவரை இப்படம் குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

இவர் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குனர் லோகேஷ் நடிகர் கமலின் தீவிர ரசிகர் என்பதால் மிக பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நடிகர் கமலின் பிறந்தநாள் அன்று விக்ரம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகி இருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு செம மாஸ்ஸாக நடிகர் கமலை காண்பித்துள்ளதால். இந்த டீசர் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் விக்ரம் படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கவுள்ளார் ஒரு முக்கிய நடிகர், ஆம் மலையாளத்தில் முன்னணி நடிகராக திகழும் ஃபகத் பாசில் தான் அப்படத்தில் அவருக்கு வில்லனாக நடித்து ரசிகர்களை மிரட்ட வருகிறார்.

மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

காதலை வெறுக்கும் விமலுக்கு எப்படி திருமணம் நடந்தது? – கன்னி ராசி விமர்சனம் !

கன்னி ராசி…

கன்னி ராசிக்காரரான பாண்டியராஜன் தென்காசியில் வசித்து வருகிறார். இவர் காதலித்து திருமணம் செய்கிறார். இவருக்கு நான்கு ஆண்குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் பிறக்கின்றன. இவர்கள் அனைவருக்கும் காதல் திருமணம் தான் செய்துவைக்க வேண்டும் என்கிற முனைப்போடு இருக்கிறார் பாண்டியராஜன்.

தந்தையின் ஆசைப்படி அவருடைய மூன்று பசங்களும், அவருடைய பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். கடைக்குட்டியான விமலுக்கு காதல்னாலே பிடிக்காது. இதனால் கல்யாணமே பண்ணாமல் இருக்கிறார். விமலுக்கு எப்படி கல்யாணம் நடக்கிறது? அது காதல் திருமணமா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.

நாயகன் விமல் நேர்த்தியாக நடித்துள்ளார். இப்படத்தில் ஜெமினி கணேசன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொதுவாக ஜெமினி கணேசன் என்றால் காதல் மன்னன் என்பார்கள்.

ஆனால் இந்த படத்தில் நாயகனோ காதலே வேண்டாம் என்று அடம்பிடிக்கிறார். நாயகி வரலட்சுமி, போலீஸ் அதிகாரியின் மகளாக நடித்துள்ளார். கொடுத்த வேடத்தை கச்சிதமாக செய்துள்ளார்.

மேலும் இப்படத்தில் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகிபாபு, காளி வெங்கட் என மிகப்பெரிய காமெடி பட்டாளமே உள்ளது. இத்தனை பேர் இருந்தும் ஒன்றிரண்டு இடங்களில் தான் காமெடி ஒர்க் அவுட் ஆகியுள்ளது. பல இடங்களில் காமெடி கைகொடுக்காதது படத்திற்கு பின்னடைவு.

கதை, திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள இயக்குனர் முத்துக்குமரன், குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படங்களை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல திறமையான நடிகர்களை படத்தில் நடிக்க வைத்துள்ளார்.

ஆனால் அவர்களது திறமைக்கு ஏற்ற வேடம் படத்தில் இல்லை என்பது கவலை அளிக்கிறது. விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். செல்வக்குமாரின் நேர்த்தியான ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சிடுகின்றன.

மொத்தத்தில் ‘கன்னி ராசி’ கலகலப்பில்லை.

சன் பிக்சர்ஸ் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி? பிரபல இயக்குனருடன் பேச்சுவார்த்தை !

விஜய் சேதுபதி…

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ’ரஜினிமுருகன்’ போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் பொன்ராம். இவர் தற்போது ’எம்ஜிஆர் மகன்’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.

சசிகுமார் ஹீரோவாக நடித்துள்ள இந்த படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பொன்ராம் இயக்கும் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்த ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்து விட்டதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணத்த’ படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம், தளபதி விஜய் நடிக்க உள்ள ’தளபதி 65’ திரைப்படத்தையும், சூர்யா-பாண்டிராஜ் இணையும் திரைப்படத்தையும், தனுஷ் நடிக்கும் ஒரு திரைப்படத்தையும் தயாரிக்கவுள்ளது.

அந்த வகையில் தற்போது விஜய் சேதுபதி படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

“ராம், நீ வேணும் டா செல்லம்” பட நடிகை கஜாலா இப்போ எப்படி இருக்காங்க பார்த்தா… வியர்த்து ஊத்தும் !

கஜாலா…

கடந்த 2002-ம் ஆண்டு ‘ஏழுமலை’ படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக அறிமுகமானவர் தான் நடிகை “கஜாலா”. அதற்கடுத்து ‘யுனிவர்சிட்டி’, ‘ஜோர்’, ‘ராம்’, ‘மதராசி’, ‘நீ வேணும்டா செல்லம்’, ‘எம்டன் மகன்’, ‘ராமன் தேடிய சீதை’ ஆகிய படங்களில் நடித்தவர்.

திடீரென்று காணாமல் போன கஜாலா படிக்கப் போய் இருப்பதாக தகவல் வந்தது.

தற்போது நீண்ட கேப் ஆனதால் விட்டுப்போன FAME -ஐ மீண்டும் பெற திரைத்துறைக்கு வர முடிவெடுத்துள்ளார்.

அதற்கான யுக்த்தியாக போட்டோஷூட் என்பதை நன்கு அறிந்து கொண்டு அதை கையாண்டுள்ளார்.

பிகினி, ஸ்லீவ்லெஸ், மாடர்ன் டிரஸ் என மாறி மாறி பல உடைகளில் போட்டோ ஷூட் செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இதைப் பார்த்த நம்ம ரசிகர்கள் ” அக்கா, அம்மா ரோலுக்கு ஏன் இவ்வளவு பில்டப்?” என்று கேட்கிறார்கள்.

ஒன்று சேர்ந்த ஆரி பாலாஜி – மிட்சர் சாப்பிடும் ஷிவானி !

ஆரி – பாலாஜி..

நேற்று முன்தினம் அனிதா அல்லது நிஷா வெளியே செல்வார்கள் என நினைத்து கொண்டிருக்கையில், Twist ஆக குறைவான ஓட்டுகள் பதிவான காரணத்தினால் சனம் வெளியே வந்துவிட்டார்.

மேலும் அவர் Big Boss வீட்டுக்கு வந்த நாள் முதல் எல்லோரிடமும் சண்டை போட்டு வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டு வெளியே சென்று விட்டார். அந்த வகையில் அவர் வீட்டை விட்டு வெளியே போவதில் ஷோவுக்கு எந்த அளவுக்கு பலத்தை சேர்க்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு அர்ச்சனாவின் விளையாட்டு தற்போது தான் ஆரிக்கு புரிந்துள்ளது. நேற்று வெளியான மூன்றாவது புரமோவில் .

“நான் உனக்கு சொல்லும் விஷயம் என்ன வென்றால் உனக்கு ஷிவானி மேல் அன்பு இருக்கிறது. ஓகே ஆனால் அந்த அன்பால் கேம் கெட்டுவிடக்கூடாது. ஆனால் கேமை ஒழுங்காக விளையாடாமல் ஒருத்தர் மேல ஒருத்தர் அன்பு செலுத்தி விளையாடுகிறார்கள்” என்று அர்ச்சனா குரூப்பை கூறினார்.

இதற்கு பாலாஜி கூறிய போது “உங்களுக்கும் எனக்கும் ஒரு லெவலுக்கு மேல் பேச ஆள் இருக்காது. அதன் பிறகு தனியாக புலம்ப வேண்டியதுதான்” என்று கூற, இதனை அடுத்து ஆரி, “உனக்காவது ஷிவானி இருக்கா, எனக்கு யார் இருக்காங்க?” என்று கேட்க,

உடனே பாலா, ” கவலைப்படாதீர்கள் இன்னும் கொஞ்ச நாட்களில் ஷிவானியையும் பேக் பண்ணி அனுப்பி விடுவார்கள்” என்று ஒன்றிணையும்

நேரத்தில் ஷிவானி உண்மையிலேயே மிச்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

என்னது அந்த ரஜினி பட டைட்டிலுக்கு ஒரு கோடி கொடுத்தாரா ராகவா லாரன்ஸ் ? என்ன படம்னா ?

ரஜினி…

ரஜினி நடித்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் வெற்றி நடைபோட்ட சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் நடிக்கப் போவதாகவும் அந்த படத்தின் முதல் பாகத்தை இயக்கிய பி வாசு அவர்கள் இயக்கப் போவதாகவும் தன்னுடைய அதிர்ஷ்டமான தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரிக்கப் போவதாகவும், அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் ஜோதிகாவின் கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிக்கலாம் என கூறப்படுகிறது.

இதில் ஆச்சரியப்படும் தகவல் என்னவென்றால், சந்திரமுகி படத்தில் சிம்ரன் தான் கமிட் ஆகி நடித்தார். ஆனால் அவர் அந்த சமயத்தில் கர்ப்பம் ஆகி விட்டதால் இந்த படத்தில் இருந்து விலகிக்கொண்டார்.

முக்கியமான விஷயம் என்ன என்றால், சந்திரமுகி படத்தை சிவாஜி பிலிம்ஸ் தயாரித்திருந்த நிலையில் சந்திரமுகி டைட்டிலுக்கு மட்டும் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்களாம்.

இதுவரை பழைய பட டைட்டிலுக்கு இவ்வளவு விலை கொடுத்ததில்லை என்று டிரேடிங் வட்டாரம் சொல்கிறார்கள்.

சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்படும் வாணிபோஜனின் புகைப்படங்கள் !

வாணி போஜன்..

முன்பெல்லாம் சினிமாவில் நடித்து முடித்து, வாய்ப்புகள் குறையும் போது சின்னத்திரைக்குள் நுழைவதை வழக்கமாக வைத்திருந்தார்கள் நடிகைகள். ஆனால் இப்போது முதலில் சீரியலில் அறிமுகமாகி,

பின் சரியான வாய்ப்புகள் அமையும் போது சினிமாவில் நுழையும் ட்ரெண்ட் உருவாகியுள்ளது. ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைகிற பாக்கியம் எல்லோருக்கும் வாய்த்துவிடாது. சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்பட்ட வாணி போஜனுக்கு அது வாய்த்திருக்கிறது.

அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது. இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன்.

சென்னையில் செட்டில் ஆகி ஏர் ஹோஸ்டஸாக பணியில் சேர்ந்தார். பின்னர் மாடலிங்கில் கால் பதித்தார். அடுத்து, டி.வி. சீரியல் இப்போது படங்கள் என பிசியாக இருக்கும் இவர் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு தருவார்.

இந்நிலையில், தன்னுடைய தொப்புள் தெரிய கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் வாணி போஜன். இதை பார்த்த ரசிகர்கள், ” நெய் ஜிலேபி” என வர்ணித்து வருகிறார்கள்.

நான் கடவுள் ஆர்யாவைப்போல் முடி வளர்த்த சிலம்பரசன் ! தெறிக்கவிடும் சிம்புவின் Photoshoot !

சிம்பு…

சில வருடங்களுக்கு முன், சிம்பு குண்டாக இருந்ததால் அவரின் ரசிகர்கள் மிகவும் வருத்தமடைந்தார்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்துள்ளார்.

இதை தொடர்ந்து சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஈஸ்வரன் படத்தில் நடிப்பதற்கு முன்பு சிலம்பரசன் தனது உடம்பை நன்றாக குறைத்து, நான் கடவுள் ஆர்யாவைப்போல் தாடி, மீசை, முடி என வளர்த்து செம்ம ஸ்டைலாக போட்டோ ஷூட் செய்துள்ளார்.

தற்போது அந்தப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சிலம்பரசன். இதனை பார்த்த ரசிகர்கள், “வெ றித்தனம் ஏத்துற த லைவா” என்று கமெண்ட் அ டித்து வருகிறார்கள்.

குருதி ஆட்டம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் குறித்த சிறப்பு தகவல் !

குருதி ஆட்டம்…

திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் அதர்வா. முன்னணி நடிகர் முரளியின் மகன் என்ற அடையாளம் இருந்தாலும், தனது திரைப்பயணத்தில் அயராத உழைப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராக வளர்ந்துள்ளார்.

கடைசியாக 2019-ல் இவர் நடித்த 100 படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து ஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்கில் சித்தார்த் நடித்த வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குருதி ஆட்டம். 8 தோட்டாக்கள் படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கும் குருதி ஆட்டம் படத்தில் அதர்வா ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். ராக்போர்ட் என்டேர்டைன்மெண்ட் டி.முருகானந்தம் இந்த படத்தை தயாரித்துள்ளார். ராதிகா,ராதாரவி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ரிலீஸ் சில காரணங்களால் தள்ளிப்போனது. சமீபத்தில் இந்த படத்தின் டப்பிங் வேலைகளை தொடர்ந்தனர் படக்குழுவினர். இதனால் படம் குறித்த அப்டேட் ஏதாவது கிடைக்காதா என்ற ஆவலில் இருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் குறித்த அறிவிப்பு வெளியானது. இம்மாதம் டிசம்பர் 8-ம் தேதி ஃபர்ஸ்ட் லுக்கும், வருகிற 11-ம் தேதி டீஸரும் வெளியாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது.

அதர்வா நடிப்பில் இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தள்ளி போகாதே. தெலுங்கில் வெளியாகி ஹிட்டான நின்னு கோரி படத்தின் தமிழ் ரீமேக்காகும். அதர்வாவிற்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். முக்கிய ரோலில் அமிதாஷ் பிரதான் நடித்துள்ளார். மசாலா பிக்ஸ் மற்றும் எம்.கே.ஆர்.பி புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.