சினிமாவில் பல நடிகைகள் படவாய்ப்புக்காக பல இடங்களில் ஏமாறுவது அவர்களே வெளிப்படையாக கூறினால்தான் உண்டு. அப்படி தற்போது மீ டு மூலம் சில நடிகைகள் தங்களுக்கு நடந்ததை ஓப்பனாக கூறி வருகிறார்கள்.
அதனால் சிறு சர்ச்சை என்றாலே நடிகைகள் உண்மையை உடைத்தும் வருகிறார்கள். அந்தவகையில் மலையாள நடிகையாக முல்லா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதையடுத்து வால்மீகி படத்தில் தமிழில் அறிமுகமாகினார் நடிகை மீரா நந்தன்.
ஐய்யனார், காதலுக்கு மரணமிலை, சூரிய நகரம், சரத்குமாரின் சண்டமருதம் படத்தின் மூலம் நடித்து பிரபலமானார்.
இதையடுத்து, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட படங்களில் நடித்து இணைத்தில் படுமோசமான ஆடையணிந்து மீரா நந்தன் புகைப்படத்தை வெளியிட்டார்.
ஆடையை பற்றி பல கிசுகிசுக்கள் எழுந்ததால் என் ஆடையை பற்றி யாருக்கும் விமர்சிக்க உரிமையில்லை என்று பதிலளித்தார். தற்போது நான் நடிகர் ஒருவரை காதலித்தேன்.
அதன்பின் துபாயில் ரேடியோ ஜாக்கியாக இருந்து சிறப்பாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். சில நாட்கள் காதலால் மன உளைச்சளில் இருந்து மீண்டு வந்தேன் என்றும் குறிப்பிட்டுள்ளார் நடிகை மீரா நந்தன்.
நடிகர் மைக் மோகனை தமிழ் திரையுலகம் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. வெள்ளிவிழா நாயகன் என்கிற பெயரும் அவருக்கு உண்டு. எண்பதுகளில் மோகன், இளையராஜா, கவுண்டமணி செந்தில், கூட்டணி படங்கள் பட்டையை கிளப்பியது. அது ஒரு பொற்காலம்.
அந்த மோகன் சில விஷமிகள் கிளப்பிய வதந்திகளால் வீட்டில் முடங்கிப் போனார். இபோதும் சரியான தருணம் பார்த்துக் கொண்டிருக்கும் இளைஞன் தான் மோகன்.
வயது ஐம்பதை கடந்தாலும் இன்னும் அவர் இருபது வயது பையனாகவே வலம் வருகிறார். மேலும், மோகனுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்தவர் சுரேந்திரன் என்பவர் தானாம். மேலும் ஒரு பேட்டியில் சுரேந்திரன், ‘எனது வாய்சால் தான் மோகன் படங்கள் ஹிட் ஆகின்றன’ என்று கூறி இருந்தாராம். இதனால் மோகனுக்கு ஈகோ பிரச்சனை ஏற்பட்டுவிட்டதாம்.
இதனைத் தொடர்ந்து மோகன் அடுத்தடுத்து மூன்று படங்களுக்கு தன்னுடைய ஒரிஜினல் வாய்ஸில் டப்பிங் கொடுத்தாராம். மேலும் மோகன் கன்னடத்தவர் என்பதால் அவருடைய தமிழ் வாய்ஸ் மக்களிடையே எடுபடவில்லை.
இதனால் மோகன் டப்பிங் வாய்ஸ் கொடுத்த மூன்று படங்களும் அடுத்தடுத்து தோல்வியில் முடிந்தன. இந்த காரணத்தால் தான் மோகன் அவருடைய தமிழ் சினிமாவில் மார்க்கெட்டை இழந்தார்.
சினிமாவில் பல காதல் படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பையும் தோல்வியையும் சந்தித்த படங்கள் இருக்கிறது. ஆனால் சூப்பர் ஹிட் படமாக இருந்து இளைஞர்கள் மத்தியில் அதுவும் 90ஸ் கிட்ஸ்களின் மறக்கமுடியாத படமாக இருந்தது காதலர் தினம் படம் தான்.
1999 ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் குணால் மற்றும் சோனாலி பிந்த்ரே நடிப்பில் உருவான திரைப்படம் காதலர் தினம். ஏ எம் ரத்னம் தயாரித்திருந்த காதலர் தினம் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை தான் பெரிய முக்கியத்துவம் கொடுத்தது.
இப்படத்தில் நடித்த சோனாலி இதற்கு முன் பாம்பே படத்தில் ஹம்மா ஹம்மா பாடலுக்கு நடனமாடி பிரபலமானார். அதையடுத்து இப்படத்தில் நடித்து இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து வந்தார்.
2002ல் பிரபல பாலிவுட் இயக்குநர் Goldie Behl என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து சில படங்களில் நடித்து வந்த சோனாலி தற்போது 45 வயதாகி ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.
சமீபத்தில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஸ்ரீதிவ்யா, பின்பு அங்கு ஹீரோயினாகவும் நடித்தார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழில் புகழ்பெற்றார். அதன்பிறகு வெள்ளக்காரதுரை, காக்கி சட்டை, இஞ்சி இடுப்பழகி, ஈட்டி, பெங்களூரு நாட்கள், காஷ்மோரா, மாவீரன் கிட்டு, சங்கிலி புங்கிலி கதவதிற உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
ஸ்ரீதிவ்யா நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றிப் படங்கள்தான் அப்படி இருந்தும் திடீரென அவரது கேரியரில் ஒரு தேக்கம் ஏற்பட்டது. 2017க்கு பிறகு அவருக்கு படம் எதுவும் இல்லை. அவர் நடித்து முடித்துள்ள ஒத்தைக்கு ஒத்த படமும் வெளிவரவில்லை.
இந்த நிலையில் இப்போது கவுதம் கார்த்தி ஜோடியாக நடிக்க புதிய படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இதனை பத்ரி வெங்கடேஷ் இயக்குகிறார். இதில் கவுதம் கார்த்திக் வடசென்னை இளைஞனாகவும், ஸ்ரீதிவ்யா பிசியோதெரபிஸ்ட் டாக்டராகவும் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் இந்த மாதம் தொடங்குகிறது. வடசென்னை, கேரளா, ராஜஸ்தான், குஜராத் பகுதிகளில் நடக்கிறது.
பிக் பாஸ் நான்காவது சீசன் தற்போது 60 நாட்களை கடந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. புயல், மழை என்று இருந்தாலும் ஹவுஸ்மேட்ஸ் இயல்பு நிலைக்கு திரும்பி விளையாடி வருகின்றனர். வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்கள் இடையே அதிக பிரச்சனைகள் வருவதற்கு காரணம் குரூப்பிஸம் என்று தொடர்ந்து குற்றச்சாட்டு இருந்து வருவது அனைவருக்கும் தெரிந்தது தான். அப்படி இருப்பதால் பிக் பாஸ் அளிக்கும் டாஸ்குகளில் பல போட்டியாளர்கள் தங்களது கேங்கில் இருக்கும் நபர்களுக்கு ஆதரவாக செயல்படுவது நடக்கிறது. இதனால் சுவாரஸ்யம் குறைவாகவே தெரிகிறது.
கால் சென்டர் டாஸ்கில் சிறப்பாக பேசிய போட்டியாளர்கள் மற்றும் தங்கள் முழு முயற்சியையும் வெளிக்காட்டாமல் இந்த டாஸ்கை மேற்கொண்டவர்கள் என்ற அடிப்படையில் ஒன்றில் இருந்து 13 வரை வரிசைப்படுத்த வேண்டும் என்கிற டாஸ்க் வழங்கப்பட்டது.
பிக் பாஸ் அந்த ரேங்க் வரிசையை அவர்களே பேசி முடிவெடுக்க வேண்டும் என்று கூறியதை அடுத்து போட்டியாளர்கள் அனைவரும் அவர்கள் கருத்தை தெரிவித்து முடிவெடுக்கும் பொழுது வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இப்படியாக வாக்குவாதம் ஆரம்பத்ததிலிருந்தே யாரும் விட்டுக்கொடுக்காமல் அவர்கள் இடத்தை முடிவு செய்து கொண்டு விவாதம் செய்து கொண்டிருக்கும் பொழுதே பாலாஜி, சனம் இடையே மோதல் ஆரம்பித்தது.
பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே சனம் ஷெட்டி-பாலாஜி இடையே சண்டைகள் நடந்தும், அடிக்கடி வம்பிழுப்பதுமாக இருந்து வந்தனர். இந்நிலையில் இந்த வரிசைப்படுத்தும் டாஸ்க்கில் சனம் எனக்கு முதலிடம் தான் வேண்டும் என அடம்பிடித்துக் கொண்டிருக்க, அதைப் பார்த்த பாலாஜி கால் சென்டர் டாஸ்க்கில் கிடைத்த ஒரு வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தாமல் failure ஆன உனக்கு எதுக்கு முதலிடம் 13 வது இடத்துக்கு போய் நில் என கடுப்பாகி கத்திக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் இன்று 61-ம் நாளில் வெளியான முதல் ப்ரோமோவில், ஆரி செய்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்கின்றனர் அனிதா மற்றும் பாலாஜி. சனம் ஷெட்டி சரியாக விளையாடவில்லை, அவருக்கு ஏன் ஆதரவு தரீங்க என்று அனிதா ஆரியிடம் கேட்கிறார். பாலா அருகில் அமர்ந்து இது நியாயமே இல்லை என்று எடுத்துரைக்கிறார். இதனால் அனிதா மற்றும் ஆரி நடுவே பிரச்சனை வெடிக்குமா என்று பார்த்து வருகின்றனர் பிக்பாஸ் பிரியர்கள்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் உலகநாடுகள் அனைத்தும் லாக்டவுனை கடைப்பிடித்தது. இதன் காரணமாக வீட்டிலே முடங்கியிருந்த பிரபலங்கள் வீட்டில் இருந்தே தங்களது திறமையை வெளிப்படுத்த துவங்கினர். உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, டான்ஸ் ஆடுவது, பாடல் பாடுவது என பல வீடியோக்களை பதிவு செய்து வந்தனர். திரைப்பிரபலங்கள் தவிர்த்து கிரிக்கெட் வீரர்களும் சமூக ஊடகங்களில் ஆக்ட்டிவாக இருந்து அப்போது தான்.
அந்த வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தொடர்ச்சியாக டிக்டாக் வீடியோக்களைப் பதிவு செய்து வந்தார். இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு கட்டத்தில் சினிமா நடிகர்களுக்கு நிகராக வார்னரும் சினிமா பாடல்களுக்கு நடனமாடுவது என பிஸியாகியது அனைவரும் அறிந்ததே.
கிரிக்கெட் மைதானத்திலும் இந்திய சினிமா பாடல்கள் வந்தால், அதற்கு சற்றும் தயங்காமல் நடனமாடி ஈர்த்து வருகிறார் வார்னர். சமீபத்தில் கூட மைதானத்தில் ஒலிக்கப்பட்ட புட்ட பொம்மா பாடலுக்கு ஸ்டெப்ஸை போட்டார் வார்னர்.
தற்போது விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் போட்டி தொடரை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது.
இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று கான்பெர்ராவில் நடைபெற்றது. இந்திய அணி வென்றாலும், போட்டியில் வார்னர் இல்லை என்ற வருத்தம் பலருக்கும் இருந்தது. இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்கையில் பந்தை விழுந்து தடுத்த போது வார்னரின் இடுப்பு பகுதியில் காயம் அடைந்து வெளியேறினார்.
காயத்துக்காக சிகிச்சை பெற்று வரும் வார்னர், ஓய்வு எடுக்காமல், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேஸ்-ஆப் மூலம் நடிகர்களின் முகத்தில் தன் முகத்தை மாற்றி வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் சூர்யா நடித்த 24 படத்தின் மாஸான காட்சிக்கு தன் முகத்தை எடிட் செய்து பகிர்ந்துள்ளார் வார்னர். இந்த வீடியோ பதிவு சூர்யா ரசிகர்களை ஈர்த்து வருகிறது. சூர்யா நடித்த ஆத்ரேயா பாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது. தற்போது ஆத்ரேயாவாக அவதாரம் எடுத்துள்ள வார்னருக்கு வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர் சூர்யா ரசிகர்கள்.
இந்திய சினிமா உலகில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் சூர்யா. திரைக்கு பின்னாலும் ஹீரோவாக திகழும் சூர்யா பல மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியானது.
இதைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படம் வாடிவாசல். பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் சூர்யா 40 படத்திற்கான பணிகளும் போய் கொண்டிருக்கிறது.
அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் எஃப்.ஐ.ஆர். இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். கருணாகரன் மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில், அஷ்வந்தின் இசையில் உருவாகும் எஃப்.ஐ.ஆர் படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார்.
இந்த படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் யார் இந்த இர்ஃபான் அஹ்மத் என்ற ப்ரோமோ வீடியோவை வெளியிட்டது படக்குழு. இதனைத்தொடர்ந்து மீண்டும் எஃப்.ஐ.ஆர் படத்தின் பணிகளுக்கு திரும்பவுள்ளதாக சில நாட்களுக்கு முன் பதிவு செய்திருந்தார்.
சமீபத்தில் எஃப்.ஐ.ஆர் பட டப்பிங் பணிகள் ஆரம்பமானது. முறையான பாதுகாப்புடன் இந்த டப்பிங் பணிகள் நடந்தது. படமாக்கப்பட்ட காட்சிகள் வரை தனது டப்பிங்கை நிறைவு செய்தார் விஷ்ணு. லாக்டவுனுக்கு முன்பு எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகளும் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் லாக்டவுனுக்கு பிறகு FIR படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் படக்குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். இயக்குனர் கவுரவ் படத்தில் போலீஸ் ரோலில் நடிக்கிறார்.
விஷ்ணு விஷால் மற்றும் கவுரவ் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இரவு நேர ஷூட்டிங் முழுமூச்சில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஷ்ணு பகிரும் புகைப்படம் ரசிகர்களின் ஆவலை தூண்டுகிறது. இந்த படத்தை தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் காடன்.
ராணா முதன்மை கேரக்டரில் நடிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகி வருகிறது. காடன் திரைப்படம் 2021-ம் ஆண்டு பொங்கல் நாளன்று வெளியாகும் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. விஷ்ணு விஷால் நடிப்பில் மோகன்தாஸ் படத்தின் டைட்டில் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படத்தை முரளி கார்த்திக் இயக்க, விஷ்ணு விஷால் தயாரிக்கவிருக்கிறார்.
விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் க.பெ ரணசிங்கம். ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து டாக்டர், அயலான், டிக்கிலோனா உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்து வருகிறது கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம்.
இந்தப் படங்களின் வரிசையில் தங்களுடைய புதிய படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது. அறிமுக இயக்குநர் தாமரை செல்வன் இயக்கத்தில் பார்வதி நாயர் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ரூபம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
இசையமைப்பாளராக ஜிப்ரான், ஒளிப்பதிவாளராக சுதர்சன் ஸ்ரீனிவாசன், எடிட்டராக சரத்குமார், கலை இயக்குநராக கோபி, சண்டை இயக்குநராக பீட்டர் ஹெய்ன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
2021-ம் ஆண்டு ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கி, சென்னையிலேயே முழுப் படத்தையும் படமாக்கப் படக்குழு முடிவு செய்துள்ளது. சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் பாணியில் ரூபம் படம் தயாராகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
2012-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பாப்பின்ஸ் படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். தமிழில் தல அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தொடர்ந்து உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் போன்ற படங்களில் நடித்தார்.
இவர் ஹாரர் படத்தில் நடித்திருப்பது ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. பார்வதி கைவசம் ஆலம்பனா திரைப்படம் உள்ளது. தமிழ், கன்னடம், மலையாளம் என அசத்தி வரும் பார்வதி பாலிவுட் படமான 83 படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.