சிண்ட்ரெல்லா படத்தின் ஆலவஞ்சியே பாடல் வீடியோ வெளியானது !

சிண்ட்ரெல்லா…

ராய் லக்ஷ்மி நடிப்பில் வினோ வெங்கடேஷ் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் சிண்ட்ரெல்லா. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அதிகாரப்பூர்வமாக ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தில் சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர், ஆடுகளம் நரேன், மமதி சாரி, கல்லூரி வினோத் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திகில்-திரில்லர்-கற்பனை கதைக் களத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை SSI ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்துக்கு அஸ்வமித்ரா இசையமைத்துள்ளார். ராம்மி இப்படத்திற்கான கேமரா வேலைகளை கவனிக்க லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்னதாகவே வெளியாகியிருந்தது. கடந்த மார்ச் மாதம் படம் வெளியாகும் என்று நினைத்த நேரத்தில் கொரோனாவால் தடைபட்டு போன படங்களில் சிண்ட்ரெல்லா படமும் ஒன்றாக மாறியுள்ளது.

இப்படம் குறித்து பேசிய இப்படத்தின் இயக்குனர் வினோ வெங்கடேஷ். அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், இந்த படம் ராய் லட்சுமி சினிமா வரலாற்றில் அவருக்கு முக்கியமான திரைப்படமாக அமையும். இந்த படத்தில் அவருக்கு மூன்று கதாபாத்திரங்கள். சென்னை மற்றும் சில வனப்பகுதிகளில் கதைக்களம் நகர்வது போல திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் படத்தின் ஆலவஞ்சியே பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், ஜிவி பிரகாஷ் இந்த பாடலை பாடியுள்ளார். கபிலன் வைரமுத்து பாடல் வரிகளை எழுதியுள்ளார். ஹாரர் படத்தில் இப்படி ஒரு இனிமையான பாடலா என்று கமெண்ட் செய்து வருகின்றனர் இணையவாசிகள். அஸ்வமித்ரா இசையமைத்த இந்த பாடலை ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர்.

இந்த படத்தை தொடர்ந்து சாக்ஷி கைவசம் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 3 படமும் உள்ளது. இயக்குனர் SA சந்திரசேகர் இயக்கத்தில் துவங்கியுள்ள புதிய ப்ராஜெக்ட்டில் இணைந்தார் சாக்ஷி.

சமுத்திரக்கனி முக்கிய ரோலில் நடிக்கும் இந்த ப்ராஜெக்ட் வெப் சீரிஸா அல்லது திரைப்படமா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்த ஆண்டு சாக்ஷிக்கு சிறந்த ஆண்டு என்றே கூறலாம். 120 hours என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார்.

வேகமெடுக்கும் RRR பட பணிகள் ! விவரம் இதோ..!

RRR…

தெலுங்கு சினிமாவில் தற்போதைய காலகட்டத்தில் இருபெரும் முன்னணி நாயகர்களாக திகழ்ந்து வருபவர்கள் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் மற்றும் NTR மகன் Jr.NTR.இருவருக்கும் இருபெரும் ரசிகர் பட்டாளங்கள் உள்ளன.

இவர்கள் இருவரும் இணைந்து தற்போது RRR படத்தில் நடித்து வருகின்றனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது. விடுதலை போராட்ட வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தை ராஜமௌலி இயக்கி வருகிறார்.

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து இந்த படத்தை தொடங்கினார் ராஜமௌலி.இந்த படமும் பாகுபலி படத்தினை போல முக்கிய இந்தியா மொழிகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலியா பட்,அஜய் தேவ்கன்,சமுத்திரக்கனி,ஷ்ரேயா என்று பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகிறது.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் இரண்டு அறிமுக டீசர்கள் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த வருட இறுதியில் வெளியாவதாக இருந்த இந்த படம் கொரோனா பாதிப்பு காரணாமாக தள்ளிப்போனது.

கொரோனா பாதிப்பு காரணாமாக தள்ளிப்போன இந்த படத்தின் ஷூட்டிங் அரசு அனுமதியை தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு மேல் நடந்த இந்த படத்தின் ஷூட்டிங் நவம்பர் கடைசியில் நிறைவடைந்தது.

இதனை தொடர்ந்து தற்போது மஹாபலேஸ்வர் பகுதியில் இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.

தமிழில் டப் ஆகும் அல்லு அர்ஜுனின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் !

அல்லு அர்ஜுன்…

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன்.இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் இவர் ஹீரோவாக Ala Vaikunthapuramulo என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி பொங்கலையொட்டி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. பூஜா ஹெக்டே,நிவேதா பெத்துராஜ் இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தனர்.பட்டி தொட்டி எங்கும் இந்த படம் வசூல் மழை ஈட்டியது.

தபு,ஜெயராம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.Haarika Hassine Creations மற்றும் கீதா ஆர்ட்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்திருந்தனர்.இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் பாடல்கள் மொழிகளை தாண்டி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான புட்டபொம்மா பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.இந்த பாடலுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் டிக்டாக் செய்யும் அளவிற்கு இந்த பாடல் பிரபலமாக இருந்தது.

யூடியூப்பில் பல சாதனைகளை நிகழ்த்தி வந்த இந்த பாடல் சமீபத்தில் யூடியூபில் தெலுங்கில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ பாடல் என்ற சாதனையை,2 மில்லியன் லைக்குகளை பெற்று தெலுங்கு சினிமாவில் இந்த சாதனையை செய்யும் முதல் வீடியோ பாடல் என்ற பெருமையையும் பெற்றிருந்தது.இந்த படத்தின் பாடல்கள் பல சாதனைகளை நிகழ்த்தி வருகின்றன.

இந்த படம் டிவியில் ஒளிபரப்பட்டு TRP-யிலும் அசத்தல் சாதனையை நிகழ்த்தியது. இந்த படம் தற்போது தமிழில் ஒளிபரப்பாகவுள்ளது.வைகுண்டபுரம் என்ற பெயரில் டப் செய்யப்படும் இந்த படம் வரும் டிசம்பர் 13ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள பாவ கதைகள் படத்தின் ட்ரைலர் இதோ.!

பாவ கதைகள் ட்ரைலர்..

முக்கியத்துவம் இல்லை: நயன்தாரா படத்தில் இருந்து சமந்தா விலகிவிட்டாரா ?

சமந்தா…

நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கும் படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இது இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட். ஒரு ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார்.

இன்னொரு ஹீரோயினாக சமந்தா நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது சமந்தா படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

தனது சொந்த காரணங்களுக்காக படத்தில் இருந்து விலகி கொள்வதாக அவர் விக்னேஷ் சிவனிடம் தெரிவித்து விட்டாராம்.

படத்தின் கதையில் நயன்தாராவை விட முக்கியத்துவம் குறைவாக இருப்பதாலும் செகண்ட் ஹீரோயினாகத்தான் ட்ரீட் பண்ணப்படுவோம் என்று சமந்தா உணர்ந்ததாலும் விலகியதாக கூறப்படுகிறது.

தற்போது சமந்தா விலகிய கேரக்டரில் த்ரிஷா அல்லது கீர்த்தி சுரேசை நடிக்க வைக்க முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது.

பிரபல நடிகருடன் ரொமான்ஸ் இல் கலக்கும் வாணி போஜன்.. ஷாக்காகும் ரசிகர்கள் !

வாணி போஜன்…

தொலைக்காட்சி சீரியல் மூலம் பல நடிகைகள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிஸி நடிகையாக கலக்கி வருகிறார்கள். அந்த வரிசையில் பிரபல தொலைக்காட்சி சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை வாணி போஜன்.

தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் வாணி க்ளாமர் பக்கம் திரும்பி குடும்ப பாங்கான பெண் என்ற பெயரை தக்கவைத்தும் வருகிறார். அதேசமயம் முன்னணி நடிகராக ஆகாமல் தமிழ் சினிமாவில் இருந்து நடித்து வருபவர் நடிகர் ஜெய்.

ஜெய் படங்களில் பெரும்பாலும் டபுள் மீனிங் வசனங்கள், எல்லை மீறிய ரொமான்ஸ் காட்சிகள் என பார்ப்பவர்களை நெளிய வைக்கும் காட்சிகள் அதிகம்.

அதே போல் தான் தற்போது ஜெய் மற்றும் வாணி போஜன் நடித்திருக்கும் டிரிபிள்ஸ் என்ற வெப்சீரிஸ் தொடர் உருவாகி உள்ளது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த வாணி போஜன் பெரிய அளவில் ரசிகர்களை கவரும் கதாபாத்திரங்களில் இதுவரை நடிக்கவில்லை.

இந்நிலையில் ஹாட்ஸ்டார் தளத்திற்காக ஜெய் மற்றும் வாணிபோஜன் இருவரும் இணைந்து ட்ரிபிள்ஸ் என்ற வெப்சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளனர். இதில் இருவரும் ரொமான்ஸ் காட்சிகளில் பின்னி பெடல் எடுத்துள்ளனர். வருகிற டிசம்பர் 11ஆம் தேதி டிரிபிள்ஸ் வெப்சீரிஸ் வெளியாக உள்ளது.

அந்த நடிகரா எப்படி வேண்டுமானாலும் நடிக்க தயார்! வெறியில் இருக்கும் நடிகை தமன்னா !

தமன்னா…

குறுகிய காலக்கட்டத்தில் சினிமாவில் முன்னனி நடிகையாக வளம் வந்து பிஸி நடிகையாக முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்தவர் நடிகை தமன்னா. கேடி படத்தின் மூலம் ஆரம்பித்த தமன்னா சில படங்களிலேயே நடித்து பிரபலமானார்.

சமீபத்தில் கொரானா வைரஸால் பாதித்து அதிலிருந்து மீண்டு வந்தார். ஆனால் தமன்னா படம் என்றாலே நடிகர்கள் பயப்பட்டு வேறு நடிகையை பாருங்கள் என்று கூறிவிடுகிறார்களாம்.

இதன் காரணமாக எப்படி வேண்டுமானாலும் நடிக்க அதிலும் நெருக்கமாக லிப்லாக் காட்சிகளில் கூட நடிக்க தயாராகிவிட்டாராம். இதனால், சோகமாக இருக்கும் தமன்னா சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய விருப்பமான நடிகர் பற்றி பேட்டி அளித்துள்ளார்.

தமன்னாவுக்கு மிகவும் பிடித்த நடிகர் ரித்திக் ரோஷனாம். அவர் படம் என்றால் பிகினி காட்சி என்றாலும் ப டுக்கையறை காட்சி என்றாலும் ஏன் லி ப் டு லிப் மு த்தக்காட்சியில் கூட நடிக்க தயார் என குறிப்பிட்டுள்ளார்.

இதைப் பார்த்தால் படவாய்ப்பு கேட்கிற மாதிரி தெரியவில்லையே என ரசிகர்கள் இ ரட்டை அர்த்த கமெண்ட்டுகளை அள்ளி தெளித்து வருகின்றனர்.

தொகுப்பாளினி பாவானாவின் ஆசைக்கு நடிகர் நெத்தியடி பதிலடி..!

தொகுப்பாளினி பாவானா…

விஜய் டிவி தொகுப்பாளினியாக உள்ள பாவனா, பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியான “வார்” படத்தைப் பார்த்து மிகவும் வியந்து போனதாக கடந்த ஆண்டு கூறினார்.

இதன்பேரில், ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்ட பாவனா பாலகிருஷ்ணன், ஹிருத்திக் ரோஷன் அவசியம் விந்து தானம் செய்ய வேண்டும், என்றும் வலியுறுத்தியிருந்தார்.

அவரது பதிவை ரசிகர்கள் பலரும் கேலி, கிண்டல் செய்தனர். ஹிருத்திக் ரோஷனை விந்து தானம் செய்ய சொல்வதன் மர்மம் என்ன..? என்றும் சிலர் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த விசயம் தற்போது சமூக ஊடகங்களில் டிரெண்டிங் ஆனது. டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரும், கிரிக்கெட் வர்ணனையாளருமாக பணியாற்றுபவர் பாவனா.

இவர், நடிகர் ஹிருத்திக் ரோஷன் விந்தணு தானம் செய்ய வேண்டும் என்று கூறி பரபரப்ப்பு ஏற்படுத்தியுள்ளார்.

அவர் நடிப்பில் வெளியான வார் படம் பற்றி விமர்சனம் செய்திருக்கும் பாவனா பாலகிருஷ்ணன் தனது டிவிட்டர் பக்கத்தில் பரபரப்பும், குசும்பும கலந்த மெசேஜ் ஒன்றை வெளியிட்டார்.

அதில்,’வார் படத்தை பார்க்கும் ஆண்கள் அதில் இடம்பெற்றிருக்கும் ஆக்‌ஷன் காட்சி, கார் சேசிங் மற்றும் ஹாலிவுட் படத்துக்க இணையான சண்டை காட்சிகளுக்காக படத்தை ரசிப்பார்கள். இப்படம் பெண்களுக்கு பிடிக்க இரண்டு காரணங்கள் உள்ளது.

அதில் நடித்திருக்கும் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராப். இருவரும் அவ்வளவு கவர்ச்சியாக இருக்கிறார்கள்.

ஹிருத்திக் இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும். அவர் தனது விந்தணுவை தானம் செய்ய முன்வர வேண்டும்’ என கடந்த வருடம் தெரிவித்திருந்தார்.

இது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் ஹிர்திக் ரோஷனிடம் கேள்வி எழுப்பிய போது, ” வேற எதாவது உருப்படியான கேள்வியை கேளுங்கள்” என்று சிரித்தபடியே நெத்தியடி கூறியுள்ளார்.

“ஜனவரியில் கட்சி துவக்கம்” – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த் !

ரஜினிகாந்த்…

எல்லா படத்திலும் துப்பாக்கி எடுத்து புல்லட் கணக்கின்றி எதிரிகளை சுட்டுத் தள்ளுவதும், கத்தியை எடுத்து குத்திக் கிழிப்பதுமாக நடித்துவிட்டு,

தற்போது காந்தி போல் அகிம்சை வழியாக செல்ல வேண்டும் என ரியலில் சொல்வது அந்த சூப்பர்ஸ்டாரின் டபுள் ஸ்டாண்டர்ட் மனநிலையை காட்டுவதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கிழித்துத் தொங்க விட்டு வருகின்றனர்.

நா அரசியலுக்கு வருவது உறுதி ! நா இன்னும் முழுமையான அரசியல்வாதியா ஆகல ! அட என்னையா இந்த ஆளு மாத்தி மாத்தி பேசுறாரு ! என நெட்டிசன்கள் குழம்பி வந்தனர்.

சூப்பர்ஸ்டாரின் படங்கள் ரிலீசாகும் போது வீர வசனங்கள் பேசுவதும், பின்னர் மெளன சாமி ஆகிடுவதுமாக பல காலம் தனது காலத்தை தள்ளி வந்த ரஜினிகாந்த், இன்று எல்லோரின் கேள்விகளுக்கும் பதில் அளித்துவிட்டார்.

நேற்று ட்விட்டரில், “ஜனவரியில் கட்சி துவக்கம், டிசம்பர் 31ஆம் தேதி அது குறித்த அறிவிப்பு” என்று Caption போட்டுள்ளார். கீழே, “வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் பேராதரவு பெற்று, வெற்றி பெற்று,

தமிழகத்தில் நேர்மையான நாணயமான ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம், அற்புதம் அதிசயம் நடக்கும்” நேற்று பகிரங்கமாக தனது அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் பலரது கேள்விகளுக்கு பதில் கிடைத்த சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யின் என்ட்ரி இப்படி தான் இருக்கும்.. மாஸ்டர் பிரபலம் கூறிய மாஸ் தகவல்!!

மாஸ்டர்……

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளியாக காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் மாஸ்டர்.

வெற்றி இயக்குனர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.

மாஸ்டர் படத்தில் நடித்துள்ள பல நடிகர், நடிகைகள் படத்தின் சில விஷயங்களை நமக்கு, நேரலை மூலமாக தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ள நடிகர் அருண் என்பவர் படத்தை பற்றியும், விஜய்யின் என்ட்ரி காட்சியை பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார்.

இதில் ” மாஸ்டர் படத்தில் விஜய்யின் என்ட்ரி சீன் மற்றும் வாத்தி கம்மிங் பாடல் செம மாஸாக களைகட்டும் ” என்று கூறியுள்ளார் நடிகர் அருண்.