லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடையாளப் பெயரோடு கெத்தாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.
சில பிரச்சனைகளால் சினிமா பக்கம் வராமல் இருந்த அவர் தனது இரண்டாவது இன்னிங்ஸில் பட்டய கிளப்பி வருகிறார். அடுத்தடுத்து அவர் நடித்துவரும் படங்கள் அனைத்தும் செம ஹிட்டாகி வருகிறது.
இந்த நிலையில் நயன்தாரா ஒரு விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அதில் அவர் நானும் ரவுடித்தான் படத்திற்காக விருது வாங்கிக்கொண்டு பேசும்போது, நான் ஒருவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
தனுஷிற்கு நானும் ரவுடித்தான் படத்தில் எனது நடிப்பு சுத்தமாக பிடிக்கவில்லை, மன்னித்துவிடுங்கள், அடுத்த முறை சரியாக இருக்கும் என கூறியுள்ளார்.
விமல், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் கன்னிராசி படத்திற்கான தடை நீங்கியதால், நாளை முதல் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னிராசி படத்தின் தடை நீங்கியது… தயாரிப்பாளர் புதிய அறிவிப்பு
கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கன்னி ராசி’. இதில் விமல் கதாநாயகனாகவும், வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார்.
காதல், காமெடி, மற்றும் குடும்ப பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படம் கொரோனா ஊரடங்கிற்கு முன்னதாகவே வெளியாக இருந்தது. தியேட்டர்கள் திறந்தவுடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. பின்னர் ‘மீடியா டைம்ஸ்’ நிறுவனத்திற்கும், கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனர் ஷமீன் இப்ராஹிமுக்கும் விநியோக உரிமையில் பிரச்சனை ஏற்பட்டு தடை வழங்கப்பட்டது.
தற்போது மீடியா டைம்ஸ் நிறுவனத்திற்கும், கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனர் ஷமீன் இப்ராஹிமுக்கும் இடையே சுமூக முடிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கும் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கன்னிராசி திரைப்படம் டிசம்பர் 4ம்தேதி (நாளை) தியேட்டரில் வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
பிரபலங்களின் உ டல மைப்பை சிலர் விமர்சிப்பது வ ழக் கமாக ந ட க்கும் வி ஷய ம் தான். அண்மையில் ஒரு பிரபலத்துக்கு அப்படி ஒரு விஷயம் நடந்துள்ளது.
தொகுப்பாளினி பார்வதி ச மீ ப த்தில் கேரளா செ ன் றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் ச மூ க வ லை தளத்தில் ஷேர் செ ய்து ள்ளார்.
அதைப்பார்த்த சிலர் அவரது உ டல மைப்பை கொ ஞ் சம் மோ ச மாக விமர்சனம் செய்திருக்கிறார். இதனால் கோ பமடைந்த தொகுப்பாளினி பார்வதி அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
ஒரு பெண்ணை அவளாகவே ஏற்றுக்கொள்ள முடியாதா, போங்கடா டேய் என பதிவு செய்திருக்கிறார்.
People, Stop Body shaming. Thick thighs are natural for a women. Udanae.. Rambhaaa.
Thirumalai Nayakkar Thoooon. Aunty material.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவராகிய வரலட்சுமி சரத்குமாரின் டுவிட்டர் மட்டும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இது குறித்து அவர் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் ஒரு அறிக்கையை வரலட்சுமி வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டுகள் திடீரென நேற்று இரவு முதல் ஹாக்கிங் செய்யப்பட்டுள்ளது
இது குறித்து சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனங்களிடம் புகார் அளித்துள்ளேன். இந்த புகாருக்கு சில தினங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எனது கணக்குகள் மீட்கபடும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்
எனவே இன்னும் சில தினங்களுக்கு எனது கணக்கில் இருந்து வரும் பதிவுகளுக்கு ரசிகர்கள் யாரும் பதில் அளிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். எனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் மீட்கப்பட்டவுடன் ரசிகர்களுக்கு தகவல் அளிக்கின்றேன். எனக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி’ என வரலட்சுமி சரத்குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்
எல்லா வேடங்களிலும் கனகச்சிதமாக பொருந்த கூடிய நடிகர் என்றால் அது நம்ம CHIYAAN விக்ரம் தான், ஆனால் கடந்த 10 வருடங்களாக இவரது படங்கள் எல்லாம் கொஞ்சம் சுமார் தான்.
மிகவும் சர்வ சாதாரணமாக படங்களையும், கதைகளையும் தேர்வு செய்து வருகிறார் விக்ரம். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் கோப்ரா படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
விக்ரம், தொடர்ந்து ஒரு ஆறு ஏழு தோல்விப் படங்கள் கொடுத்தால்கூட தற்போது 5 புது படங்களில் நடித்து வருகிறார். அவர் கைவசம் கோப்ரா, துருவ நட்சத்திரம், மகாவீர் கர்ணன்,பொன்னியின் செல்வன், கார்த்திக் சுப்புராஜ் படம் போன்ற படங்களும் உள்ளது.
இந்நிலையில் தற்போது கோப்ரா படத்தை பற்றிய Update ஒன்று வந்துள்ளது. இத்திரைப்படத்தின் ஷூட்டிங், இன்று சென்னையில் மீண்டும் தொடங்கியுள்ளது. மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் ஆயுதங்கள் மத்தியில் சியான் உட்க்கர்ந்திருப்பது செம்ம தோரானையாக உள்ளது.
பிக்பாஸ் வீட்டில் இருந்து செம்ம Twist ஆக சம்யுக்தா கடந்த வாரம் வெளியேறினார். போன வாரம் நடந்த நாமினேஷன் படலத்தில் சம்யுக்தா பெயர் வரவில்லை. அதன் பிறகு நம்ம சகுனியான பிக்பாஸ் கொடுத்த டாப்பிள் கார்டை கைப்பற்றிய அனிதா தனக்கு பதிலாக சம்யுக்தாவை நாமினேட் செய்து போட்டியில் திருப்புமுனையை உண்டாக்கினார். இதையடுத்து இந்த லிஸ்டில் ஆரி, பாலாஜி, சனம், சோம், ஜித்தன் ரமேஷ், நிஷா ஆகியோருடன் சம்யுக்தா இணைந்தார்.
இதில், நிஷா அல்லது ரமேஷ் இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. பின், சம்யுக்தா வெளியேறுவதாக கமல் அறிவித்தார்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதன் முறையாக பேட்டியளித்த அவர், ஆரி பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். அவர் கூறும் பொழுது “ஆரி என்னிடம் பேச கூடாத வார்த்தை எல்லாம் பேசி விட்டார். ஒரு பெண்ணை பார்த்து அப்படி கத்தலாமா. கேமரா முன் சென்று என் மீது தவறு இருந்தால் காலில் விழுந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார்.
அது இப்போது தான் தெரியும். ஆனால் அவர் மனதில் அந்த குற்ற உணர்ச்சி இருக்கும் போது ஏன் என்னிடம் வந்து பேசவில்லை. ஆனால் போட்டி முடிந்து வெளியே வந்த பிறகு எனக்கு அவர் மீது எந்த மனவருத்தமும் இல்லை” என்றும் கூறியுள்ளார்.
கேரளாவை சேர்ந்த, SS Music VJ – வும், நடிகையுமான பூஜா ராமச்சந்திரன், ஏற்கனவே தன்னுடன் வேலை பார்த்த Craig என்னும் நபரை காதலித்து திருமணம் செய்து 7 ஆண்டுகள் வரை ஒன்றாக இருந்தார்கள்,
சில பல கருத்து வேறுபாடுகளால் இவருக்கு பிடிக்காமல் போக, உடனே அவரிடமிருந்து விவாகரத்து வாங்கினார். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
தற்போது ஏற்கனவே வேறு ஒரு நடிகைக்கு இரண்டாவது கணவராக இருந்த ஜான் கொக்கனை 2வது திருமணம் செய்துள்ளார், அவருக்கு இது மூன்றாவது திருமணம். இவர்கள் எப்போதும் நெருக்கமாக இருப்பது ஃபோட்டோ போடுவார்கள்.
அந்த வகையில் தற்போது செம்ம செக்சியான உடை ஒன்றை அணிந்துனதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
சூர்யாவின் மௌனம் பேசியதே படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான த்ரிஷா தொடர்ந்து 17 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருக்கிறார்.
17 ஆண்டுகளாக ஹீரோயினாக நடிப்பது சாதாரண விஷயம் அல்ல. மேலும் நடிக்க வந்த புதிதில் இருந்தது போன்றே இன்னும் இளமையாக இருக்கிறார் த்ரிஷா. யோகா தான் அதற்கு காரணம் என்கிறார். லாக்டவுனுக்கு முன்பு த்ரிஷா மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.
அந்த படத்திற்காக அவர் தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்.
நடிகை த்ரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பதாக பல ஆண்டுகளாக பேசப்பட்டது. ஒரு கட்டத்தில் அவர்கள் பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர்கள் காதலை புதுப்பித்துக் கொண்டதாக லாக்டவுன் நேரத்தில் பேச்சு கிளம்பியது. ஆனால் ராணா மிஹீகா பஜாஜை காதலித்து லாக்டவுனின்போது திருமணம் செய்து கொண்டார்.
முன்னதாக த்ரிஷாவுக்கும், தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் திருமணத்திற்க பிறகு படங்களில் நடிக்கக் கூடாது என்று வருண் மணியன் கூறியதால் அவரை பிரிந்தார் த்ரிஷா. சினிமா தான் எனக்கு உயிர், கடைசி மூச்சு இருக்கும் வரை நடித்துக் கொண்டே இருப்பேன் என்றார் த்ரிஷா.
இந்நிலையில் திருமண திட்டம் குறித்து த்ரிஷா கூறியிருப்பதாவது, என்னை முழுமையாக புரிந்து கொள்பவரை தான் நான் திருமணம் செய்து கொள்வேன். என் திருமணம் கண்டிப்பாக காதல் திருமணம் தான். என்னை புரிந்து கொள்ளும் நபரை நான் சந்திக்கும்போது தான் திருமணம். அது வரை சிங்கிளாக தான் இருப்பேன்.
மனதுக்கு பிடித்த நபரை நான் சந்திக்காமல் போய்விட்டால், கடைசி வரை சிங்கிளாக இருக்கவும் தயார் என்றார்.மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய் பச்சன், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். பொன்னியின் செல்வன் நாவல் ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.
முன்னதாக லாக்டவுன் நேரத்தில் த்ரிஷாவும், சிம்புவும் நடித்த கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மணிரத்னம் இயக்கிய பாம்பே படத்தில் ஹம்மா ஹம்மா என்கிற ஒற்றை பாடலில் ஆடியதன் மூலம் தமிழ் பசங்களுக்கு அறிமுகமானவர் சோனாலி பிந்த்ரே. பிறகு ‘காதலர் தினம்’ படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இன்னமும் ரசிகர்களுக்கு ரோஜா என்றால் நடிகை ரோஜா, மணிரத்னத்தின் ரோஜாவிற்கு பிறகு நம்ம சோனாலிதான் நினைவிற்கு வரும். இன்று வரை ‘காதலர் தினம்’ பாடல்கள் ரசிகர்களிடையே மிகப் பிரபலம்.
இவர் ஏராளமான ஹிந்தி படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார். பின், பிரபு சாலமன் இயக்கத்தில் அர்ஜூனுடன் ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். கடந்த 2018 ஆம் வருடம் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டார்.
வெறும் 30 சதவீதம் மட்டுமே பிழைக்க வாய்ப்பிருப்பதாக அப்போது மருத்துவர்கள் கூறியதாக அவர் தெரிவித்திருந்தார்.
ஆனாலும் தன் தன்னம்பிக்கை காரணமாக கேன்சர் பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு வந்துள்ளார். இதுகுறித்து அவர் அவ்வப்போது Motivation பதிவுகளை எழுதி வருகிறார்.
இந்நிலையில், என்னுடைய ஹேர் ஸ்டைல் எப்படி இருக்கிறதோ.. அதை பொருத்து தான் என்னுடைய மூடு இருக்கும்..
என்று வாசகம் பதிந்த டீ சர்ட்டை அணிந்த படி போஸ் கொடுத்துள்ளார்.
பொங்கலுக்கு மாஸ்டர் வெளியாவது பற்றி தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியுள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா நடைபெற்றது. புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் முரளி தலைமையிலான நிர்வாகிகளுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு வெற்றி சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.
மாஸ்டர் ரிலீசுக்கு முன் கொரோனாவே இருக்காது – அமைச்சர் கடம்பூர்ராஜூ | TN Minister Kadambur Raju Talks about vijay master movie– News18 Tamil
இந்த கூட்டத்தின் போது அமைச்சரிடம் உள்ளாட்சி வரியை ரத்து செய்வது, சிறிய பட்ஜெட் படங்களுக்கான பிரத்யேக காட்சிகளை ஒதுக்குவது, திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தொடர்பான கோரிக்கையை நிர்வாகிகள் முன்வைத்தனர்,.
பின்னர் அமைச்சர் கடம்பூர் நிகழ்ச்சியில் பேசியதாவது, மாஸ்டர் படம் வெளியாக வேண்டும் என்பதற்காக தியேட்டருக்கு மக்கள் எண்ணிக்கை அதிகரிக்க கோரிக்கை வைத்துள்ளீர்கள். ஆனால் வரும் மாஸ்டர் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே கொரோனா இல்லாத தமிழகம் உருவாகும் என தெரிவித்தார்.
தமிழக அரசின் விதிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றினால் டிசம்பர் மாதமே கொரோனா தமிழகத்தை விட்டு ஓடிவிடும் என்றும், ஒரு ஸ்கிரீன் கொண்ட பெரிய திரையரங்குகளை பல ஸ்கிரீன் கொண்ட சின்ன திரையரங்குகளாக மாற்ற அரசு ஒப்புதல் அளிக்கும் உத்தரவு விரைவில் வர உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.